பிக்பாஸ் 5 தமிழ் | Day 21 | Review | ’அபிஷேக் எதிர்பார்க்காததை, எதிரில் நிறுத்திய மக்களின் முடிவுகள்’
பிக்பாஸ் 5 தமிழின் இருபத்தி ஒன்றாம் நாளிற்கு உரிய, முழுமையான காட்சிகளை, எழுத்துக்களின் வடிவில் சுவாரஸ்யம் கூட்டி, தொகுத்து தந்திருக்கிறோம். முழுமையாக படித்து, எழுத்துக்களின் மூலம், காட்சிகளை கண்முன் நிறுத்தி இன்பமுறுங்கள்.
வாத்தியார் & ஹவுஸ்மேட்ஸ் உரையாடல்:
கம்பீர தோரணையுடனும், வசீகர முகத்துடனும், புன் சிரிப்புடனும் என்ட்ரி கொடுக்கும் வாத்தியார் கமல் ஹாசன் அவர்களின் உரையுடன் துவங்குகிறது 21-ஆம் நாளிற்குரிய எபிசோடு. அடுத்ததாக அகம் டிவி வழியே அகத்திற்குள் நுழைகிறார் வாத்தியார். சிபியின் தலைமை எப்படி இருந்தது என்ற கேள்விக்கு கைதட்டலுடன் பதில் தந்து விடுகின்றனர் ஹவுஸ்மேட்ஸ். ’ராஜூவை நாமினேசனுக்கு அனுப்பி பரிசோதிக்கவே சிபி தலைவர் ஆக்கப்பட்டாரா’ என்ற வாத்தியாரின் நெத்தியடி கேள்விக்கு, அபிஷேக் அவராகவே வந்து பதில் சொன்னது, அவர் அவரையே மாட்டிக் கொடுத்து போல இருந்தது. ஆல்சோ பிரியங்காவின் ரியாக்சனும் ‘ஆத்தி நம்மள தான் சொல்றாரு போல’ என்ற அளவிற்கு இருந்தது. உணர்வுகளை வெளிப்படுத்த வைக்க வேண்டும் என்ற டாஸ்க்கிலும் இசையின் இறுக்கமான கதைகளில் இருந்து குறிப்புகளை எடுத்து நகைப்பிற்காக கூறியது போல நடந்து கொண்ட அபினய், அபிஷேக், வருணுக்கும் தன் வார்த்தைகளால் சூடு போட்டார் வாத்தியார். ‘என்ன அண்ணாச்சி, திங்கள் கிழமைக்கு அப்புறம் எல்லாரும் குழுவாகிடுவாங்கன்னு சொன்னீங்க, எனக்கு அப்புடி ஏதும் தெரிலயே’ என்ற வாத்தியாரின் கேள்விக்கு தனக்கே உரிய பாணியில் பதில் கொடுத்தார் அண்ணாச்சி. ‘இந்த லிவிங் ஏரியால மட்டும் தான் சார் அப்புடி தெரியும், இத தாண்டுன உடனே அப்புடி அப்புடியே கலைஞ்சு போயிடுவோம் சார்’ என்றார் அண்ணாச்சி. அது என்னவோ கரெக்டு தான். ராஜூவின் மிமிக்ரிக்கு நம்மைப்போலவே வாத்தியாரிடமும் இருந்து கைத்தட்டல்களும் பாராட்டுகளும் வருகிறது. வாத்தியார் நகல்கிறார். காட்சி இல்லத்திற்குள் புகுகிறது.
தாமரையிடம், ‘என் நாணயத்த எடுத்துட்டான், யாரையும் நம்பாத, என் பேர கேட்டு வந்தாலும் நாணயத்த கொடுத்துடாத’ என்று நிரூப்பை குத்தி குத்தி காண்பித்து பேசிக் கொண்டு இருக்கிறார் பிரியங்கா. அதை விடுவோம் ஆனால் இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் அவரை காப்பாற்ற உபயோகிக்கப் போகிறேன்,இவரைக் காப்பாற்ற உபயோகிக்க போகிறேன், அபிஷேக்கை காப்பாற்ற உபயோகிக்க போகிறேன் என்று சொன்னவர்கள் எல்லாம் நாணயத்தின் மதிப்பு தெரிந்தவுடன் மொத்தமாய் பதுக்கி வைத்துவிட்டார்கள் சொன்ன வார்த்தைகளையும் சரி, நாணயத்தையும் சரி. அதைவிடுவோம் அடுத்த காட்சிக்கு வருவோம். தனக்கு பிக்பாஸ் இல்லத்திற்குள் கிடைக்காத சிக்கன் பீஸ்க்காகவும், தூக்கத்திற்காவும் ’எங்கம்மா அப்போவே சொல்லிச்சு’ என்ற வார்த்தைகளால் பிக்பாஸ்சை காமெடியாக வஞ்சித்துக் கொண்டு இருக்கிறார் பிரியங்கா. மறுபடியும் வாத்தியாரின் வருகை. அதே அகம் டிவி வழியே அகத்திற்குள். சமையல் டீமாக தாமரை எப்படி செயல்படுகிறார் என்பதற்கு சூப்பர் என்ற பதிகளே எல்லா உதடுகளும் உச்சரித்தன. ’நாணய விளையாட்டில் யார் யார் நேர்மையற்ற விளையாட்டை விளையாடினார்கள்’ என்ற கேள்வியை நிரூப்பிடம் முன் வைக்கிறார் வாத்தியார். ‘நானே பிரியங்காவோட நாணயத்த தான் என் பேருக்கு மாத்தி விளையாண்டேன் ஆனா அது அவளுக்கே தெரியாது. நான் எனக்காக விளையாண்டேன். அவ்வளவு தான்’ என்று போட்டுடைத்தார் நிரூப். பக்கத்தில் இதைக் கேட்டு கொண்டு இருந்த பிரியங்காவின் முகம் சற்றே ’சந்திரமுகியாக மாறிய ஜோதிகா முகம்’ போல சென்று கொண்டு இருந்தது. அத்துடன் அந்த காட்சி அகன்றது. அடுத்ததாக எலிமினேசன் காட்சிகள்.
பிரியங்கா வெர்சஸ் நிரூப் நாணய பிரச்சினை:
எலிமினேசன் காட்சிகள்:
நாணயத்தை வைத்து காப்பாற்ற முயற்சி:
’அபிஷேக் இல்லத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்’ என்று வாத்தியார் அறிவித்ததும் இல்லத்திற்குள் அமைதி சூழ்ந்தது. பிரியங்காவின் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக கொட்டியது. பவ்னியும், நிரூப்பும் நாணயத்தை வைத்து காப்பாற்ற முயன்றனர். நிரூப் பேச்சால் சொன்னாலும் நாணயத்தை அவர் கையிலே எடுக்கவில்லை. ஆனால் பவ்னி கையோடு எடுத்து வந்து அபிஷேக்கின் கைகளில் கொடுத்தார். ஆனாலும் பிக்பாஸ் ’நாணயத்தை நீங்கள் அறிவிப்பு வரும் போதே உபயோகிக்க முடியும்’ என்று அறிவித்து விட்டார். அதனால் எந்த திருப்பமும் இல்லாமல் அபிஷேக் வெளியேறுவது உறுதியானது.
வாத்தியார் மேடையில் அபிஷேக்:
அபிஷேக்கினுடைய 20 நாளின் இல்ல வாழ்வியல் குறும்படமாக ஒளிபரப்பப்படுகிறது. மற்றவர்களின் தனித்தன்மையை மறைத்தது, எல்லா இடத்திலும் தன்னுடைய ஒப்பினியனை புகுத்தியது இந்த இரண்டு தவறு மட்டுமே அவரை வெளியேற்றியது. மற்றபடி ஒரு சிறந்த போட்டியாளர் தான். அவர் ஈசியா போயிடுவார். இனிமே நமக்கு தான் கன்டன்ட்க்கு பஞ்சம். ஏன்டா வெளியேத்துனீங்க பாவிங்களா! கடைசியில் வாத்தியாரின் வாழ்த்துக்களுடன் விடைபெற்றார் அபிஷேக். அத்துடன் வாத்தியாரும் காட்சியில் இருந்து விடைபெற்றார். இனி காட்சிகள் இல்லத்திற்குள்ளே செல்கிறது.
அபிஷேக் எலிமினேசனுக்கு பிறகு இல்லத்தின் நிலைமை:
‘ஒருத்தங்களுக்கு ஒருத்தங்கள பிடிக்காம போயிட்டுன்னா அவங்க என்ன செஞ்சாலும் பிடிக்காமலே போயிடும்’ சிபி சொன்ன அந்த வார்த்த உண்மையிலும் உண்மை, அபிஷேக் விஷயத்துல அது நடந்திருக்கான்ன நெறயவே நடந்திருக்கு. பொதுவெளியில உள்ள வெறுப்பும் அவர் மேல காட்டப்பட்டிருக்குன்னு கண்டிப்பா சொல்லியே ஆகனும். ஆனா அது மட்டும் தான் காரணமான்னா இல்லன்னு தான் சொல்லனும். அவரோட டாமினேசன் ரொம்ப அதிகமா இருந்திச்சு எல்லார்கிட்டையும் அவரோட ஒபினியன புகுத்த ஆரம்பிச்சிட்டார். இன்புளுயன்ஸ் என்பது இல்லத்தில் சொல்லப்பட்ட பெரும்பாலான காரணம். ’முதலாவதாக நீ தான் சேவ் ஆயிருக்க, அதுனால மக்களுக்காக நீ இன்னும் நல்லா விளையாடனும்’ என்று நிரூப் தாமரையிடம் சொல்கிறார். ‘அதான் சாமி இந்த மூளைல வேல செய்றது தான் பிரச்சின, ஆனா மத்த வேல சண்ட போட சொன்ன போடுவேன் கட்டிக்கிட்டு உருள சொன்னா கூட உருண்டுடுவேன்’ என்ற தாமரையின் வெள்ளந்தியான வார்த்தையில் அதுவரை உம்மென்று இருந்த பிரியங்காவும் சிரித்து விடுகிறார். ஒரு வழியாக சூழல் மாறுகிறது. அழுகை குறைகிறது. மெல்ல மெல்ல இல்லத்தின் நிலைமை நார்மலுக்கு திரும்ப முயற்சிக்கிறது. அத்தோடு எபிசோடும் நிறைவடைகிறது.
“ எதிர்பாராததை எதிர் பாருங்கள் என்பது நமக்கு மட்டும் அல்ல போல, போட்டியாளர்களுக்கும் சேர்த்து தானாம். அபிஷேக்குக்கு அவர் எதிர்பாராத எலிமினேசனை கொடுத்திருக்கிறது சமூகத்தின் வாக்கு, எதிர் பாராததை எதிர்பாருங்கள் என்று மக்களும் போட்டியாளர்களிடம் கூக்குரலிடுகின்றனர் “