பிக்பாஸ் 5 தமிழ் | Day 25 | Promo 1 | ’இல்லத்திற்குள் அந்நியன் பாணியில் சுற்றித்திரியும் இசைவாணி’
பிக்பாஸ் 5 தமிழின் இருபத்தி ஐந்தாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
இசைவாணி தன்னை தானே தனிமைப் படுத்திக் கொண்டு, தானே தனிமைப்பட்டுள்ளதாக பீல் பண்ணிக் கொண்டிருப்பதில் என்ன பயனோ தெரியவில்லை. யாரும் சொன்னத கேக்க மாட்டுறாங்க, எல்லாரும் என்ன ஒதுக்குறாங்க என்ற பீலிங்கை அவரே அவருக்குள் உருவாக்கி கொள்கிறார்.
“ பொதுவாகவே எல்லோரும் அவரிடம் நார்மலாக தான் பேசுகிறார்கள். சாப்டியா என்ற வார்த்தைய கூட மற்றவரிடம் கேட்பதை விட அவரிடம் தான் அதிகமாக கேட்கிறார்கள். இந்த நிலையில் அவர் அப்படி யோசிப்பது தான் ஏனோ “