பிக்பாஸ் 5 தமிழ் | Day 49 | Promo 2 | ’இந்த வீட்ல நான் வாய் பேசனுமா இல்ல பேச கூடாதுங்களா சார்?’
Bigg Boss 5 Tamil Day 49 Promo 2 Is Out
பிக்பாஸ் 5 தமிழின் நாற்பத்து ஒன்பதாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
ராஜூவிடம் இரண்டு கப்புகளை கொடுத்து வழக்கம் போல இந்த வீட்டில் பிரளயத்தை உண்டாக்க கமல் அவர்கள் முயற்சிக்கிறார். அதில் நேர்மறையான விருது வரிசையில் அண்ணாச்சியிடம் ஒரு கப் போய் சேர்கிறது. எதிர்மறையான விருது வரிசையில் தாமரையிடம் ஒரு கப் போய் சேர்கிறது. அப்புறம் என்ன விவாதம் தான்.
“ ஒன்றும் தெரியாதது போல இல்லத்திற்குள் நுழைந்ததும் இன்னொசன்ஸ்க்கு பெயர் கொண்டவராய் தெரிந்த தாமரை, தற்போதெல்லாம் எல்லாவற்றையும் போட்டுடைக்கும் தாமரையாக வலம் வருகிறார் “