பிக்பாஸ் 5 தமிழ் | Day 5 | Review |’என்ன யாரும் வந்து கொல்ல மாட்டாங்களா’ பவ்னி ரெட்டியின் மனதை துளைக்கும் உருக்கம்!

Bigg Boss 5 Tamil Day 5 Review In Tamil

Bigg Boss 5 Tamil Day 5 Review In Tamil

பிக்பாஸ் 5 தமிழின், ஐந்தாம் நாளிற்கு உரிய சுவாரஸ்யமான நிகழ்வுகளை, முழுமையான ஒரு தொகுப்பாக இங்கு காண்போம்.

நான்காம் நாள் இரவில் இருந்து துவங்குகிறது இன்றைய எபிசோடு, ’லேடியோ பியூட்டிபுல் லேடியோ…’ என்ற சாங் இயாக்கியின் குரலில் ஒலிக்க, அதற்கு வால்க்கிங் மூமண்ட் கொடுத்து அசத்துகிறார் தாமரைச் செல்வி. ’நீங்க சொல்றதெல்லாம் நான் செய்யுறேன்ல, நான் சொல்ற மாறி நீங்க எல்லாரும் என் நாடகத்துல நடிச்சு காட்டனும்’ என்று ஏதாவது வேலை சொன்னால், குழந்தைகள் அந்த வேலையை முடித்து விட்டு முறையீடுகள் வேண்டிக் கொள்ளுமே, அது போல வெள்ளந்தியாக முறையீடு செய்கிறார் தாமரைச்செல்வி.

அதற்கு பின் 90 கிட்ஸ் விளையாடும் திருடன் போலீஸ் கேம் போல, நிரூப் ‘மாபியா’ என்னும் கேமை ஹவுஸ்குள் துவங்கி வைக்கிறார். இரவு 1:30 வரை கேம் நீளுகிறது. கேம் கலைந்ததும் அந்த கேமின் சுவாரஸ்யங்களை சொல்லி சொல்லி சிரிக்கிறார் தாமரைச் செல்வி. கேமில் பிரியங்கா விளையாடிய விதம் நமீதாவை ஏதோ ஒரு விதத்தில் பாதித்திருக்கும் போல. அதை சொல்லி சொல்லி தாமரை சிரித்ததாலேனோ அது நமீதாவை கடுப்பேற்றியிருக்கிறது. ‘நீ எனக்காக அழுத அந்த ரெண்டு சொட்டு கண்ணீருக்காக இன்னைக்கு உன்ன சிரிக்க விடுறேன், நாளைக்கு உன்ன அழுவ விடுறேன் பாரு, நோட் பண்ணிக்கோ பர்ஸ்ட் நானும் நீயும் தான் இந்த ஹவுஸ்குள்ள சண்ட போடுறோம்னு’ தாமரைச்செல்வியிடம் சவால் விடுகிறார் நமீதா. சாதாரண கேம்ல ஆரம்பிச்ச சின்ன சலசலப்பு இப்ப சண்டைய நோக்கி போகுது.

அதற்கு பிறகு அனைவரும் பெட் ரூமுக்கு செல்கின்றனர். தாமரைச் செல்வி அங்கு சென்றும் சிரிப்பை விட வில்லை. அந்த சிரிப்பு நமீதாவை மென் மேலும் கடுப்பேற்றுகிறது. தாமரை பேச்சு வழக்கில் பேசிய ஏதோ ஒரு சில வார்த்தைகளும் நமீதாவை காயப்படுத்தி இருக்கும் போல, ’நீ எல்லாரையும் மயக்குற, அந்த மாறி மயக்க சொல்லி கொடு’ என்று எப்போதா தாமரை, நமீதாவை நோக்கி சொல்லி இருப்பார் போல, அது எல்லாம் இந்த பிரச்சினையில் அங்கு விஸ்வ ரூபம் எடுக்கிறது. அந்த நிலையிலேயே கடுமையான சொற்களை, தாமரைச் செல்வியை நோக்கி அள்ளி விட்டு எச்சரித்து விடுகிறார் நமீதா. தாமரையும் கண்கலங்கி விடுகிறார். சிறுது நேரம் பதட்டம். நிரூப்பும் பிரியங்காவும் இணைந்து, தாமரை மற்றும் நமீதாவின் அருகில் உட்கார்ந்து சமாதானம் பேசுகின்றனர். ‘நாம இதுவே கிடையாது. ஜாலியா இருப்போம் சும்மா சில் பண்ணுங்கப்பா’ என்று பேசி முடிக்கிறார் பிரியங்கா. அத்தோடு நான்காம் நாள் காட்சிகள் எபிசோடில் நிறைவடைகிறது.

‘எட்டனா இருந்தா எட்டு ஊரும் என் பாட்ட கேக்கும், பத்தனா இருந்தா பத்து ஊரும் என் பாட்ட பாடும்’ என்ற வடிவேலுவின் கலக்கலான பாட்டுடன் பிக்பாஸ் ஹவுஸ் இனிதே விடிகிறது. நைட் நடந்த அத்தனை ரணகளத்தையும் தூங்குற மாறியே கேட்டுகிட்டு இருந்திருப்பார் போல ராஜூ. ‘சண்ட போட்டு அடிச்சு உருளுவீங்கன்னு பாத்தா, தூங்கிட்டீங்க.. இன்னிக்கு ஏதாச்சு நடக்குமா’ன்னு ஆவலோடு கேக்குறாரு தாமரைச்செல்விகிட்ட. விட்டா ராஜு இம்சை அரசன் வடிவேலு மாறி ‘மண்டை உடைக்கும் மைதானம்’னு ஒன்னு பிக்பாஸ்குள்ள ஆரம்பிச்சு எல்லாரையும் அதுல சண்ட போட விடுவாறு போல. அவ்ளோ ஆசை….!

இதற்கு பின் அண்ணாச்சி, தாமரையிடம் நடந்ததை கேட்டு அறிந்து கொண்டு, நமீதாவை சமரசம் பேச அழைக்கிறார். நமீதாவோ சமரசத்திற்கு இடம் கொடுக்கவில்லை நகர்ந்து சென்று விட்டார். பொதுவாகவே ’நம்ம ஊரு பேச்சு வழக்கு சிலருக்கு தவறாய் போய் சேரும், நீங்க பேசுனதும் தப்பில்ல, அவங்க அத புரிஞ்சிகிட்டதும் தப்பில்ல’ என்று தாமரைக்கு ஆறுதல் கூறி முடிக்கிறார் அண்ணாச்சி. இந்த சீன் முடிஞ்சதும் இன்னொரு பக்கம் அபிஷேக் அண்ணாச்சிகிட்ட ‘நமீதா என் தங்கச்சி, இசை என் தங்கச்சி, ஸ்ருதி என் கிளாஸ் மேட், நாடியா என் அக்கா,பவ்னி என் அக்கா’ன்னு உறவு முறை சொல்லிட்டு இருந்தாரு. ஹப்பாடா…! கடைசியா பவ்னிய அக்கான்னு ஒத்துகிட்டாரு அபிஷேக்.

அதற்கப்புறம் நம்ம அண்ணாச்சியின் இமிட்டேட்டிங் காமெடி அரங்கேறுகிறது. ஹவுஸ் மேட்ஸ் ஒவ்வொருவரையாக இமிட்டேட் செய்து ஹவுஸ்சை சிரிப்பினில் அதிரச் செய்கிறார். அதில் ராஜுவை இமிட்டேட் செய்த விதம் தான் ஹைலைட். ஒட்டு மொத்தமாக ஒரு வித பரபரப்புடன் நகர்ந்து கொண்டு இருந்த ஹவுஸ்சிற்குள்ளும் எபிசோடுக்குள்ளும் சிரிப்பை விதைத்து விட்டார். பவ்னி ரெட்டிய இன்னிக்கு தான் ரெண்டு மூனு சீன்லயாவது கண்ணுல காமிக்கிறாங்க. இல்லன்னா டெய்லி அவங்க எப்படா வருவாங்க எப்படா பேசுவாங்கன்னு நம்மல தேட விடுவாங்க.
பிரியங்காவின் ’கொசு கடிச்சு வீங்கீருச்சு காமெடி’ அதுல என்ன இருக்கு. அதுல ஒன்னும் இல்ல. அது காமெடியும் இல்ல. சரி அவங்களாவது சிரிச்சிக்கட்டும்.

அதற்கு பின்னர் மறுபடியும் ‘ஒரு கதை சொல்லட்டுமா’ டாஸ்க் துவங்குகிறது.இந்த முறை இயாக்கி தனது கதையை சொல்ல பிக்பாஸ்சால் அழைக்கப்படுகிறார். ரிலேசன்சிப் பிரச்சின, 8 வருசமா அம்மா அப்பா கூட கான்டாக்ட் இல்ல, தான் தேந்தெடுத்த இன்டஸ்ட்ரிலயும் பிரச்சின, இதையெல்லாம் கடந்து ஒரு பெண் ரேப்பரா தான் ஜெயிச்சத பத்தி ரொம்பவே அருமையா சொன்னாங்க. ‘நாங்க பறக்கனும்னு நினைக்கிறோம், நீங்க எங்களுக்கு சிறகுகள் கொடுக்க வேணாம், அத எங்களுக்கு உருவாக்கிக்க தெரியும், அந்த சிறகுகள நீங்க உடைக்காம மட்டும் இருங்கன்னு’ எல்லாரும் யோசிக்கிற மாறி ஒரு கருத்த முன் வச்சிட்டு அவரோட கதைய முடிக்கிறாங்க. ஒட்டு மொத்தமா அவங்களோட கதைக்கு ஹவுஸ்மேட்ஸ் 14 லைக், 1 ஹார்ட், 2 டிஸ்லைக்ஸ் கொடுத்திருக்காங்க.

’அழாத, நான் வேணா உன்ன அடாப்ட் பண்ணிக்கிறேன், நீ உழைச்சிட்டு வந்து எனக்கு ரூபா மட்டும் கொண்டு போடு’ன்னு பவ்னி இயாக்கி கிட்ட காமெடியா சொல்லிட்டு இருக்காங்க. ‘ தாமரை உடனே போட்டி போடுறாங்க என்னயும் தத்தெடுத்துக்கோமான்னு ‘ஆஹ்ன் முடியாது முடியாது உன்ன எடுத்துக்கிட்டா நீ சோறு சோறுன்னு கேப்பன்னு’ பவ்னி கலாய்ச்சு விட்டுறாங்க. ஹய்யோ பவ்னி காமெடி பண்ணிடுச்சு டோய். அந்த பக்கம் நிரூப் அம்மி கல்ல வச்சு எக்சர்சைஸ் பண்ணிட்டு இருக்காரு . நிரூப், அந்த அம்மி கல்ல தூக்கி அவரு நெஞ்சுல வைக்க சொல்லுறாரு. அக்‌ஷாரா தூக்கி வைக்க போறாங்க. உடனே தாமரைச் செல்வி அக்கா ’யப்பா என் புள்ள போச்சே, தங்க புள்ள பாவம் என் முருகா’ன்னு அவரு எக்சர்சைஸ் பண்ணுறத பாத்துட்டு இவங்க பதறி கிட்டு இருக்காங்க. எவ்வளவு வெள்ளந்தியா இருக்காங்க. முதல் முறையா இப்புடி ஒருத்தர பிக்பாஸ் ஹவுஸ்குள்ள பாக்குறோம்.

ஒரு பக்கம் இயாக்கி தன்னுடைய அப்பா அம்மா பத்தியும் அவங்களால அவங்க பட கஸ்டத்த பத்தியும் ஸ்ருதிகிட்ட அழுதுக்கிட்டே சொல்லிட்டு இருக்காங்க. ஸ்ருதி அவங்கள அவங்களோட வார்த்தைகளால தேத்திக்கிட்டு இருக்காங்க. இன்னொரு பக்கம் தாமரை அக்கா ஏதோ திருவிழாக்கு வந்து கூடுன மாறி ‘எங்க வீட்டுக்கு வரனும், நீங்க அந்த பாப்பா, அந்த பாப்பா’ன்னு எல்லாரையும் பவ்னி ரெட்டிகிட்ட சொல்லி அழைச்சிட்டு இருக்காங்க. பொதுவா கிராமத்துல வளர்ந்து வாழ்ந்த சூழல்ல உள்ளவங்களுக்கு தாமரை அக்காவோட பேச்சு மொழில அப்படியே அவங்க அம்மாவ பாக்கலாம்.

பாட்டு படிச்சே ஹவுஸ்குள்ள ஸ்கோர் பண்ணுறாங்க சின்ன பொன்னு அக்கா, ’ ஐ லைக் நெத்திலி பிஸ்சு, ஐ லவ் ஜார்ஸ் புஷ்சு, டோண்ட் வொரி அல்போன்சு, ஐயம் யுவர் ஜில்போன்சு’ன்னு தெறிக்க விட்டாங்க அக்கா. ராஜு இசையமைக்க, இசை வாணியும், சின்ன பொன்னு அக்காவும் பாட மத்த ஹவுஸ்மேட்ஸ்லா அத நம்மள மாறி ரசிச்சு கேட்டுக்கிட்டு இருக்காங்க. இன்னொரு பக்கம் பவ்னி ரெட்டி, தாமரைச்செல்வி அக்காக்கு மேக்கப் ஆளைய மாத்திக்கிட்டு இருக்காங்க.

அதற்கு பின் மீண்டும் டாஸ்க் தொடங்குகிறது. இந்த முறை பவ்னி ரெட்டி அவரது கதையை எடுத்துரைக்கிறார். தான் இன்டஸ்ட்ரிக்குள் நுழைந்த விதம், தனது காதல் கதை, பெற்றோரின் எதிர்ப்பில் கல்யாணம், சின்ன பிரச்சினை, கணவரின் விபரீத முடிவு, அவப்பெயர், தவிப்பு அதற்கு பின் வாழ்க்கை உள்ளுக்குள் கதறிக்கொண்டு, உயிரை அமைதிப்படுத்திக்கொண்டு அவரின் உதடுகளில் இருந்து வந்த மெல்லிய வார்த்தைகள் ஹவுஸ்மேட்ஸ் அத்தனை பேரையுமே நிலைகுலைய வைத்தது. அவன் போனதுக்கப்புறம் ‘என்ன யாரும் கொல்லமாட்டாங்களா’ன்னு தான் எனக்கு தோணிச்சு அவரு சொன்னப்போ அப்படியே எல்லாரு கண்ணுலையும் கண்ணீர் வந்திடுச்சு. ’எத்தனவாட்டி கீழ விழுந்தாலும், என்னவொரு மீனிங் இருக்குமோ தெரியாது, But Come Strong’னு பவ்னி சொன்னதும் கைதட்டல்கள் வாங்குறாங்க. இந்த பிக்பாஸ் தளம் அவங்கள ஸ்ட்ராங் ஆக்கனும்னு நாமளும் கூட வேண்டிக்கலாம். ஒட்டு மொத்தமா பவ்னிக்கு 5 லைக், 12 ஹார்ட் ஹவுஸ் மேட்ஸ்கிட்ட இருந்து கிடைச்சுது.

அதுக்கப்புறம் மறுபடியும் தாமரை-நமீதா பஞ்சாயத்து கொஞ்ச நேரம் ஓடுது. பிரியங்கா-அண்ணாச்சி போன் கன்வர்சேசன் காமெடி செம்ம, இதுவரைக்கும் ஐந்து நாள் முடிந்திருக்கு, இதுல பிரியங்காவும் அண்ணாச்சியும் நல்லாவே ஸ்கோர் பண்ணியிருக்காங்க. இன்னமும் பண்ணுவாங்க பாக்கலாம். எல்லாரும் தூங்கிட்டு இருக்கும் போது அதிகாலைல நமீதா தாமரைய எழுப்பு நான் உங்கள மன்னிச்சிட்டேன், என்ன உங்க தங்கச்சியா ஏத்துகோங்கன்னு அவங்க ரெண்டு பேருக்கும் இடைல இருந்த சின்ன மனஸ்தாபத்தை முடிச்சிகிட்டாங்க. இவ்வளவு சீக்கிரம் நமீதா இறங்கி வருவாங்கன்னு யாரும் நினைக்கல, வந்துட்டாங்க, தாமரை ஹேப்பி அண்ணாச்சி, எபிசோடும் முடிஞ்சிடுச்சி.

“ ஹைலைட்ஸ் : சண்டை, அழுகை, சிரிப்பு, மன்னிப்பு, இரக்கம் என்று எல்லாத்தையும் காட்டியிருக்கு இந்த ஐந்தாம் நாள் எபிசோடு “

About Author