பிக்பாஸ் 5 தமிழின் அறுபத்து ஆறாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
’வெற்றிக் கொடி கட்டு 2’ இரண்டாவது டாஸ்க் அறிமுகம் செய்யப்படுகிறது. பஸ்சர் அடித்ததுமே இல்லத்திற்குள் தள்ளு முள்ளு ஆரம்பித்து விடுகிறது. தள்ளு முள்ளு வந்ததற்கு பின் என்ன நடக்கும் சண்டை தானே. இந்த முறை யாரும் எதிர்பாராத விதமாய் அது தாமரை வெர்சஸ் அபிநய். மீதி சண்டையை எபிசோடில் பார்க்கலாம்.
“ சண்டையின் போது தாமரை அபிநய் நோக்கி எழுப்பும் கனீர் குரல், ஒரு நிமிடம் பிக்பாஸ் இல்லத்தையே அதிர வைத்து விடுகிறது. இந்த குழாயடி சண்டை, அபிநய்க்கு என்னவோ நிச்சயம் புதிதாக தான் இருக்கும் “