பிக்பாஸ் 5 தமிழ் | Day 72 | Promo 2 | ‘தாமரையும் பிரியங்காவும் மறுபடியும் சண்டைய ஆரம்பிச்சாச்சு’
பிக்பாஸ் 5 தமிழின் எழுபத்து இரண்டாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
தாமரையும் பிரியங்காவும், திங்கள் கிழமை சண்டை போட்டுக் கொண்டு வெள்ளிக்கிழமை சமாதானம் ஆகிக் கொள்வதை வழக்கம் ஆக வைத்து இருக்கின்றனர். இதோ டாஸ்க்கில் சண்டையை ஆரம்பித்து ஆகிற்று. இனி வழக்கம் போல எப்போது சமாதானம் பேசுவார்கள் என்று தான் தெரியவில்லை.
“ தாமரை விடும் சவுண்டுக்கு அவருக்கு மைக்கே தேவை இல்லை போல, சென்னையில் செட் இருந்தாலும் நேரடியாக தமிழ்நாட்டிற்கே கேக்கும் அளவுக்கு கனீர் என்று பேசுகிறார். பார்க்கலாம் இந்த சண்டை எங்கு போய் முடிகிறது என்று “