பிக்பாஸ் 5 தமிழ் | Day 76 | Promo 1 | ‘இல்லத்திற்குள் நடந்த சச்சரவுகள் இன்று பேசி தீர்க்கப்படுமா?’
பிக்பாஸ் 5 தமிழின் எழுபத்து ஆறாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
இல்லத்திற்குள் நடந்த சச்சரவுகள், சண்டைகள், குழப்பங்கள், கோழி மூட்டும் செயல்கள் என்று யாவினை போட்டு உடைத்து பஞ்சாயத்து பேச வார்த்தை என்னும் பிரம்பெடுத்து வாத்தியாராக வருகிறார் நமது கமல்ஹாசன் அவர்கள். இன்று பேசப்படும் பஞ்சாயத்துகளை ஒளிபரப்பாக இருக்கும் எபிசோடுகளில் கண்டு களிப்போம்.
“ யார் வெளியேறப்போகிறார்கள் என்று ஓரளவுக்கு ஊர்ஜிதமாய் யோசித்து வைத்து வாக்கும் அளித்து மக்கள் தெளிவு கொண்டாலும் கூட சில சமயம் அது பொய்த்து விடுகிறது. பார்க்கலாம் இந்த வாரமாவது உண்மை எழுகிறதா என்பதை! “