பிக்பாஸ் 5 தமிழ் | Day 8 | Review | பிக்பாஸ்சால் ஒன்றானோம், நாமினேசனால் ரெண்டானோம்!
பிக்பாஸ் 5 தமிழின் எட்டாம் நாளிற்கு உரிய, சுவாரஸ்யமான நிகழ்வுகளை இங்கு ஒரு தொகுப்பாக காண்போம்.
’வலி மாமே வலிப், புளி மாங்கா புளிப், வலி மாமே வலிப், புளி மாங்கா புளிப்’ என்ற பாரிஸ் ஜெயராஜ் படத்தின் பாடலுடனும், ஹவுஸ்மேட்டின் மரண குத்துடனும் இனிதே விடிகிறது பிக்பாஸ் ஹவுஸ். அபிஷேக் நிரூப் மாதிரி நடந்து காட்டவா, ராஜு மாறி பண்ணி காட்டவான்னு எதையாச்சு பண்ணி ஹவுஸ்குள்ள ஸ்கோர் பண்ணலாம்னு பாக்குறாரு பட் முடில. ‘அபிஷேக் மைக்க ஒழுங்கா மாட்டுங்கன்னு’ பிக்பாஸ்கிட்ட வார்னிங் தான் வாங்குனாரு. சினிமா பையன் பிக்பாஸ் ஹவுஸ்சிற்குள் அசிங்கப்பட்டான்னு பிரியங்கா ஒரு பஞ்ச் சொல்லி முடிக்கிறதுக்குள்ள ‘பிரியங்கா உங்க மைக்கயும் ஒழுங்கா மாட்டுங்கன்னு’ அவங்களுக்கு ஒரு வார்னிங் கொடுத்து அவங்களையும் அசிங்க படுத்திடுறாரு பிக்பாஸ்.
அதற்கு பின் பவ்னி, இசைவாணி கன்வர்சேசன் ஓடுது. ‘எனக்கு ஒரு சில குரூப்ஸ் தெரியுது. நா போய் உட்கார்ந்தா கூட, பேசினா கூட, இக்னோர் பண்ணிட்டு போயிடுறாங்க. அவங்க தெரிஞ்சு பண்றாங்களா, இல்ல தெரியாம பண்ணுறாங்களான்னு தெரில’னு ஒரு கருத்த முன் வைக்கிறாங்க. இசையும் ஆமா எனக்கும் இங்க குரூப்பிசம் இருக்குற மாறி தெரியுதுன்னு பவ்னியோட கருத்த ஆமோதிக்கிறாங்க. பட் ஹவுஸ்மேட்ஸ் அவங்க வேற எதையோ நெனச்சிட்டு பீல் பண்ணிக்கிட்டு இருக்காங்க போலன்னு அவங்களுக்கு ஆறுதல் சொல்ல ‘பவ்னி பவ்னினு’ சமையல் பண்ற இடத்துல இருந்து கத்தி கூப்பிடுறாங்க. இதுக்கு இடைல இயாக்கியும் வந்து ’ஆமா இங்க டீம் டீம்மா தான் இருக்காங்க நாமலா தான் போய் எல்லார்கிட்டயும் பேசனும்னு’ அவங்களும் இங்க குரூப் இருக்குறத ஒத்துக்குறாங்க. எதுவானாலும் இன்னும் கொஞ்ச நாள் பொறுத்து பாக்கலாம்.
தாமரைக்கு நாம சரியா இருக்கோமோ இல்லையாங்கிறதே தெரில போல. இந்த ஒரு வாரம் அவங்க அவங்களாவே தான் இருந்தாங்க. ஆனா இந்த வீட்டுக்குள்ள இப்டி தான் இருக்கனும்னு, அவங்க அவங்க பேசுறத பார்த்து ரொம்ப குழம்பி இருப்பாங்க போல. அவங்க அவங்களோட பிம்பத்த உடைச்சிட்டு மத்தவங்க மாறி இருக்கனுமோனு ஒரு சிந்தனைக்குள்ள போயிட்டாங்க. அண்ணாச்சிகிட்ட சொல்லி பொலம்பிக்கிட்டு இருந்தாங்க. அண்ணாச்சி ஒன்னே ஒன்னு தான் சொன்னாரு ‘நீ இவ்ளோ தான் கரெக்டா தாம்மா இருந்த, நீ பண்ண விஷயம் உனக்கு எதும் தப்புன்னு தோனி இருக்கா, இல்லல்ல, அப்புறம் என்ன, அப்புடியே இரும்மான்னு’ தன்னுடைய சரியான கருத்த சொல்லி முடிக்கிறாரு. ஆனாலும் தாமரைக்கு குழப்பம் விடல. அண்ணாச்சியின் பூச்சு மருந்து காமெடி, தேங்கா உடைக்கிற காமெடிக்குலாம், பாவம் அந்த பிக்பாஸ் தரை தான் பிரியங்கா கிட்ட வாரியலடி வாங்குது. யார் மொக்க ஜோக் அடிச்சாலும் அது தான் வாரியலடி வாங்கனுமா சோ சேட்.
ஹவுஸ் மேட்ஸ் எல்லாரையும் வழி நடத்த தலைவர்னு ஒரு பொறுப்பு அத தேர்ந்தெடுக்க ‘ராஜாவுக்கு ராஜா நான் தான்’னு டாஸ்க் ஒன்னையும் பிக்பாஸ் அனவுன்ஸ் பண்ணுறாரு. பெருசா டாஸ்க்ல ஒன்னும் இல்ல. எல்லாருக்கும் ஒரு பலூன் கொடுத்திருப்பாங்க. அத அவங்க இடுப்புல கட்டிக்கனும். வெளில உள்ள கார்டன் ஏரியால அமைக்கப்பட்டிருக்குற தூண்ல ஒரு ஊசி வச்சிருப்பாங்க, அப்புறம் உள்ள லிவிங் ஏரியால அமைக்கப்பட்டிருக்குற ஒரு தூண் மாறி வச்சு அதுல ஒரு ஊசி வச்சு இருப்பாங்க. பெல் அடிச்சதும் யாராச்சு அந்த ஊசிய எடுத்து ஹவுஸ் மேட்ஸ்சோட பலூன உடைக்கனும் ஒருத்தர் ஒன்னு தான் உடைக்கனும். இப்ப ஒரு தடவ பெல் அடிச்சதும் யாராச்சு ரெண்டு பேர் அந்த ஊசிய எடுப்பாங்கன்னு வச்சுக்குவோமே ஆளுக்கு ஒரு பலூன தான் உடைக்கனும். உடைபட்ட பலூன கட்டிருக்கிறவங்க போட்டிய விட்டு வெளியேறிடுவாங்க. யாரு கடைசி வரைக்கும் பலூனோட இருக்காங்களோ அவங்க தான் இந்த டாஸ்க்ல வின்னர் மற்றும் தலைவர். அவ்ளோ தான் டாஸ்க்.
டாஸ்க் ஆரம்பிக்குது, முதல் பெல் அடிக்குது, லிவிங் ஏரியால ஊசிய அக்ஷாரா எடுத்துறாங்க, கார்டன் ஏரியால உள்ள ஊசிய அபினய் எடுத்துடுறாரு. உள்ள கிட்ட தட்ட ஒரு ஓடி பிடிச்சு விளையாடுற விளையாட்டு அரங்கேறுது. அபினய் இசையோட பலூன உடைச்சிடுறாரு, அக்ஷாரா அண்ணாச்சியோட பலூன உடைச்சிடுறாங்க. முதல் ரவுண்டுல இசை மற்றும் அண்ணாச்சி காலி. ரெண்டாவது பெல் அடிக்குது. ரெண்டாவது டைமும் அபினய், அக்ஷாராவே எடுக்குறாங்க. இந்த டைம் அபினவ் இயாக்கிய டார்கெட் பண்ணனும்னு நெனைச்சு அவர் பலூன அவரே உடைச்சிகிறாரு. அக்ஷாரா கைல ஊசி இருக்குறது கூட தெரியாமா அசால்ட்டா நின்னு சிபி பலூனும் உடைபடுது. ஆக மொத்தம் ரெண்டாவது ரவுண்ட்ல சிபி, அபினய் காலி. மூனாவது பெல் அடிக்குது. மூனாவது டைம் நிரூப்பும், இயாக்கியும் எடுக்குறாங்க, நிரூப் இந்த டைம் அக்ஷாரா பலூன காலி பண்ணிடுறாரு, இயாக்கி, ராஜூவோட பலூன காலி பண்ணிடுறாங்க. மூனாவது ரவுண்ட்ல அக்ஷாரா, ராஜு காலி.
நான்காவது பெல் அடிக்குது, கார்டன் ஏரியால அபிஷேக் ஊசிய எடுக்குறாரு, இயாக்கி பலூன காலி பண்ணிடுறாரு, லிவிங் ஏரியால நிரூப் ஊசி எடுக்குறாரு, வருண் பலூன உடைக்கிறதுக்கு நிரூப் துரத்துராரு ஆனா வருணோட பலூன் அவர் ஓடும் போது அதுவாவே உடைஞ்சிடுது. நிரூப் கடைசில சுருதியோட பலூன உடைச்சிடுறாரு. ஆக மொத்தம் நாலாவது ரவுண்ட்ல வருண், இயாக்கி, சுருதின்னு மூனு பேர் காலி. ஐந்தாவது பெல் அடிக்குது. கார்டன்ல அபிஷேக் ஊசிய எடுக்குறாரு, ஏதோ நாடியாவ காப்பாத்துற மாறி அபிஷேக் பெல் அடிக்கிறதுக்கு முன்னாடி வரைக்கும் ஆயிரம் அட்வைஸ் பண்ணிட்டு, நாடியாவையே கடைசில காலி பண்ணிடுறாரு. லிவிங் ரூம்ல இந்த டைமும் நிரூப் தான் ஊசிய எடுக்குறாரு. இந்த டைம் கார்டன் ஏரியாவுக்கே வந்து அபிஷேக்க காலி பண்ணிடுறாரு. ஹ்ம்கும் இது தான் கர்மா போல.
ஆறாவது பெல் அடிக்குது, ஒரு ஊசிய நிரூப் எடுக்குறாரு. இன்னொன்ன கேம்லயே இல்லாத அபினய் எடுக்குறாரு. நிரூப் இந்த டைம் பிரியங்காவ காலி பண்ணிடுறாரு. கேம்ல பலூன் உடைஞ்சவங்க எடுக்க கூடாதுன்னு ரூல் இல்லயேன்னு அபினய் எல்லார்கிட்டயும் முறையிடுறாரு. கொஞ்ச நேரம் நிரூப்-அபினய் காரசார வாக்குவாதம், அதுக்கப்புறம் அண்ணாச்சி-வருண்-நிரூப் வாக்குவாதம்னு கடைசில அபினய் எடுத்த இடத்துலயே ஊசிய கொண்டு வச்சிடுறாரு. அதுக்கப்புறம் அந்த ஊசிய சின்ன பொண்ணு அக்கா எடுத்துடுறாங்க. அவங்களால ஓட முடில டைமும் முடிஞ்சிடுது. ஏழாவது டைம் பெல் அடிக்குது. இந்த டைமும் நிரூப், சின்ன பொண்ணு அக்கா ஊசி எடுக்குறாங்க, நிரூப் மதுவோட பலூன காலி பண்ணிடுறாரு. சின்ன பொண்ணு அக்கா யாரையும் இந்த டைமும் காலி பண்ணல.
எட்டாவது டைம் பெல் அடிக்குது. இந்த டைம் தாமரை அக்காட்ட ஒரு ஊசி, சின்ன பொண்ணு அக்காட்ட ஒரு ஊசி. தாமரை அக்காகும் சின்ன பொண்ணு அக்காவும் அடிச்சிப்பாங்கன்னு பாத்தா, தாமரை அக்கா நிரூப்ப அசால்ட்டா காலி பண்ணிடுது. இந்த டைம் ஒன்பதாவது டைம் பெல் அடிக்குது தாமரை அக்கா கைல ஊசி, தாமரை அக்கா சின்ன பொண்ணு அக்காவ மெதுவா டார்கெட் பண்ணிகிட்டே போனாங்க எந்த தள்ளு முள்ளும் இல்லாம. கடைசில சின்ன பொண்ணு அக்கா பலூன் அதுவாவே உடைஞ்சிடுது. கடைசில டாஸ்க்கோட வின்னர் தாமரை செல்வி. வின்னர் மட்டும் இல்ல இந்த வாரம் முழுக்க தாமரை தான் ஹவுஸ்க்கு தலைவர் அவர் தான். ‘வாழ்த்துக்கள் தாமரை, நீங்கள் தான் இந்த பிக்பாஸ் ஹவுஸ்சின் முதல் தலைவர்’ னு பிக்பாஸ் தன்னோட வாழ்த்த சொல்லி முடிக்கிறாரு. ஆக மொத்தம் தாமரைய இந்த வாரம் யாரும் எவிக்சன் பிராசஸ்க்கு நாமினேட் செய்ய முடியாது. பி.கு: பவ்னியின் பலூன் தானாகவே உடைந்து விட்டது
சின்ன பொண்ணு அக்கா ‘அந்த பொண்ணு வேற மாறி நடந்துக்குது அதுனால நானே தான் என் பலூன உடைச்சிக்கிட்டேன்னு’ பிரியங்காகிட்ட சொல்லிக்கிட்டு இருக்காங்க. உண்மையா சொல்லலும்னா அவங்களால கேம்ல சர்வைவ் பண்ணுறதும் கஸ்டம் தான், அதையும் அவங்க ஒத்துக்கனும். தாமரை அக்காவோ தலைவர்னா என்னென்ன பண்ணனும்னு கூட தெரியாம சாதாரணமா பேசிட்டு இருக்காங்க. அக்ஷாரா ’இனிமே வீட்ல ஏதாச்சு கம்பிளைண்ட் வந்துச்சுன்னா உங்கள தான் கா திட்டுவாங்க’ன்னு தாமரை கிட்ட சொல்றாங்க. தாமரை ’நானே கிராமத்து பொண்ணு நானே தான் எல்லா வேலையும் பாத்துடுவனே அப்புறம் எப்புடி கம்ப்ளைண்ட் வரும்’ன்னு வெள்ளந்தியா பதில் சொல்றாங்க. ’நான் தான் விட்டுக் கொடுத்தேன்’னு சின்ன பொண்ணு அக்காக்கும், தாமரை அக்காக்கும் ஒரு வாக்குவாதம் நடக்குது. இது தேவையில்லாதது தான். அதுக்கு அப்புறம் எல்லாருக்கும் நிரூப் தான் உடலளவுலையும் சரி மனதளவுலையும் சரி ஒரு ஸ்ட்ராங்கஸ்ட் போட்டியாளர்னு புரிஞ்சிருக்கும் போல. இனி வரும் நாள்ல எல்லாரும் அவர டார்கெட் பண்ணுவாங்கன்னு தோனுது.
அடுத்ததாக நாமினேசன் பிராசஸ் தொடங்குது. நாமினேசன் ஆரம்பிக்கும் போது போட்டியாளர்கள், நாமினேசன் பத்தி உரையாட கூடாது, கேப்டன நாமினேட் பண்ண முடியாது, கன்பசன் ரூம்க்கு வந்து உங்கள நீங்க நல்லவங்கன்னு ப்ரூவ் பண்ணிக்க வேணாம்னு எப்போதும் போல ரூல்ஸ் எல்லாம் சொல்லி முடிக்கிறாரு பிக்பாஸ். பிக்பாஸ் 5 ல முதல் ஆளா கன்ப்சன் ரூம்க்கு உள்ள நுழையிறாங்க அக்ஷாரா. ஒவ்வொருவரும் இரண்டு நபர்கள் சரியான காரணத்துடன் எவிக்சன் பிராசஸ்காக தேர்வு செய்யனும்னு பிக்பாஸ், ஹவுஸ்சோட ரூல் எல்லாம் சொல்லி முடிக்கிறாரு. நாமினேசன் பிராசஸ் தொடங்குது.
அக்ஷாரா:
முதல் நாமினேசன்: இசை வாணி, காரணம் அவங்க கொஞ்சம் Fakeஆஹ் இருகுற மாறி பீல் பண்றேன்.
இரண்டாம் நாமினேசன்: தாமரை அக்காவ தான் இருந்தாங்க அவங்கள நாமினேட் பண்ண முடிலங்கிறதுனால, சுருதிய நாமினேட் பண்றேன். அவங்களுக்கும் எனக்கு Good Vibe இல்ல.
அபிஷேக்:
முதல் நாமினேசன்: நாடியா, ஷோ பத்தி நெறய தெரிஞ்சிக்கிட்டு தன்ன கண்ட்ரோல் பண்ணிக்கிட்டு உள்ள இருக்காங்க. அவங்களுக்குள்ள ஒரு அடக்க முடியாத கோபம் இருக்கு. அதுனால ஹவுஸ்ல இருக்கிறவங்களுக்கும் சரி அவங்களுக்கும் சரி ஒரு பெரிய பிரச்சின வரும்னு நினைக்கிறேன்.
இரண்டாம் நாமினேசன்: அக்ஷாரா, அவங்க ஒரு கன்பியூஸ்டு பெர்சன், அவங்களால குழுவாவும் இருக்க முடில தனியாவும் செயல்பட முடில.
அபினய்:
முதல் நாமினேசன்: இசை வாணி, எல்லார் கூடயும் அவங்களால மிங்கிள் ஆக முடில’
இரண்டாம் நாமினேசன்: ராஜு, ஒரு நல்ல போட்டியாளர். அவர் இருந்தா எனக்கு அதிக போட்டி இருக்கும்னு தோனுது.
பிரியங்கா:
முதல் நாமினேசன்: அக்ஷாரா, டாஸ்க்ல டிஸ்லைக் வாங்கினதுக்காக அவங்களோட பிகேவியர்ல கொஞ்சம் சேஞ்ச் ஆனிச்சு.
இரண்டாம் நாமினேசன்: இயாக்கி, அவங்களுக்குனு ஒரு குரூப் பார்ம் பண்ணிக்கிறாங்க, இன்வால்மெண்டும் இன்னும் வேணும் அவங்ககிட்ட.
சின்ன பொண்ணு:
முதல் நாமினேசன்: இசைவாணி, வந்த போ இருந்த மாறி இல்ல, முதல்ல மாறி நல்லா என்கிட்ட பேசுறதும் இல்லை
இரண்டாம் நாமினேசன்: அண்ணாச்சி, இசைக்கு சொன்ன அதே ரீசன் தான் அண்ணாச்சிக்கும் சொல்லி இருக்காங்க.
வருண்:
முதல் நாமினேசன்: இசை வாணி, சில சமயம் தெரியாம சில வார்த்தைகள விட்டுறாங்க, அத அவங்க தவிர்த்தா நல்லா இருக்கும்
இரண்டாம் நாமினேசன்: சின்ன பொண்ணு, இன்னும் நெறய அவங்க பேசனும்னு நெனைக்கிறேன்
இசை வாணி:
முதல் நாமினேசன்: சின்ன பொண்ணு அக்கா, பாடும் போது கஸ்டபடுற மாறி ஒரு வார்த்தைய விட்டுட்டாங்க,
இரண்டாம் நாமினேசன்: அண்ணாச்சி, அவரும் நான் பாடும் போது இர்ரிட்டேட் பண்ற மாறி விஷயங்கள பண்ணுனாரு
சிபி:
முதல் நாமினேசன்: அண்ணாச்சி, யாரையும் எதையுமே பண்ண விடக்கூடாது தான் தான், தான் மட்டும் தான்னு நெனைக்கிற குணம்
இரண்டாம் நாமினேசன்: இசைவாணி, Fakeஆஹ் இருக்குற மாறி தோணுது.
அண்ணாச்சி:
முதல் நாமினேசன்: அபினய், கேம் விளையாண்ட விதம், தான் தான் வரனும்ங்கிற எண்ணம்.
இரண்டாம் நாமினேசன்: சிபி, யாரையும் மதிக்காத குணம்.
மதுமிதா:
முதல் நாமினேசன்: இசைவாணி,பேச ட்ரை பண்ணேன் பேசல அவங்க, அந்த கண்டுக்காத குணம்
இரண்டாம் நாமினேசன்: நிரூப், வலிமையான போட்டியாளர்ங்கிறதுனால மட்டும்.
சுருதி:
முதல் நாமினேசன்: அக்ஷாரா, அவங்க கூட ஒரு கனெக்டிவிட்டி ஏற்படுத்திக்க முடில.
இரண்டாம் நாமினேசன்: நிரூப், வலிமையான போட்டியாளர்ங்கிறதுனால மட்டும்.
நிரூப்:
முதல் நாமினேசன்: அபினய், கேம் ரூல மீறினது.
இரண்டாம் நாமினேசன்: வருண். சேம் ரீசன் கேம் ரூல மீறி பேசிய விதம்.
இயாக்கி:
முதல் நாமினேசன்: அபிஷேக் ராஜா, ஸ்ட்ரேட்டஜியோடவே கிளம்பி வந்திருக்காரி, ஸ்ட்ராங்க்
கன்டஸ்டன்ட்.
இரண்டாம் நாமினேசன்: நிரூப், வலிமையான போட்டியாளர்ங்கிறதுனால மட்டும்.
ராஜு:
முதல் நாமினேசன்: அபினய், தலைவர் போட்டியின் போது அண்ணாச்சியிடம் பேசிய விதம்.
இரண்டாம் நாமினேசன்: பிரியங்கா, என்னோட போட்டியாளர நினைச்சிக்கிறேன் அதுனால மட்டும்.
நாடியா:
முதல் நாமினேசன்: நிரூப், வலிமையான போட்டியாளர்ங்கிறதுனால மட்டும்.
இரண்டாம் நாமினேசன்: அண்ணாச்சி, அவரோட காமெடி சில சமயம் சிலர கஸ்டபடுத்துது.
பவ்னி ரெட்டி:
முதல் நாமினேசன்: நிரூப், எங்களுக்குள்ள ஒரு கனெக்டிவிட்டி இல்ல. பேசவும் ட்ரை பண்ணல.
இரண்டாம் நாமினேசன்: சிபி, அவர் கூட எந்த கனெக்சனும் இல்லாத ஒரு பீல்.
தாமரைச் செல்வி:
முதல் நாமினேசன்: சின்ன பொண்ணு, மத்தவங்க கிட்ட அவங்க காட்டுற பாசம் என்கிட்ட இல்ல.
இரண்டாம் நாமினேசன்: மதுமிதா, வாடி போடின்னு நார்மலா சொன்னா கூட கோச்சிக்கிறாங்க. எங்க ஊருலலாம் அப்புடித்தான் கூப்பிடுவாங்கன்னு சொன்னதுக்கு, கூப்பிடுறவங்கள செருப்பால அடிக்கனும்னு சொல்லிடுச்சி. அது கஷ்டமாயிடுச்சு.
ஒரு வழியா நாமினேசன் பிராசஸ் முடிஞ்சுது. எவிக்சன் பிராசஸ்க்கு மொத்தமா தேர்வானவர்கள்
நாடியா- 1 Vote, ராஜு- 1 Vote, இயாக்கி- 1 Vote, நிரூப்- 5 Vote, சுருதி- 1 Vote, மதுமிதா- 1 Vote, அண்ணாச்சி- 4 Vote, சிபி- 2 Vote, இசைவாணி- 6 Vote, வருண்- 1 Vote, சின்ன பொண்ணு- 3 Vote, பிரியங்கா- 1 Vote, அபினய்- 3 Vote, அபிஷேக்- 1 Vote, அக்ஷாரா- 3 Vote.
இதில் பவ்னியின் பெயரை மட்டும் தான் யாரும் சொல்லவில்லை.
தாமரைச்செல்வியின் தலைவி உரை தொடங்குது. எல்லாருமே தமிழ்ல மட்டும் தான் பேசனும். ஆஹா மொத ரூலே நல்லாருக்கே, அப்புறம் மைக் எப்போவும் போட்டே இருக்கனும். பகல்ல யாரும் தூங்க கூடாதுன்னு ரூல் எல்லாம் சொல்லி முடிக்கிறாங்க. அப்புறம் அணிகள் தேர்வு நடக்குது. சமையல் அணி: நிரூப், அபினய், ராஜு, பவ்னி, சுருதி. வெசல் வாஷிங் அணி: நாடியா, இசைவாணி, பிரியங்கா, அண்ணாச்சி. பாத்ரூம் க்ளீனிங் அணி: இயாக்கி, மதுமிதா, சிபி. ஹவுஸ் கீப்பிங்: அபிஷேக், வருண், சின்ன பொண்ணு. அணி தேர்வும் ஒரு வழியா முடியுது.
இசைவாணி, மதுமிதா கன்வர்சேசன் கொஞ்ச நேரம் ஓடுது. ரெண்டு பேருக்கு இடையிலான புரிதல் பத்தி கொஞ்ச நேரம் பேசிக்கிறாங்க. அதுக்கப்புறம் கொஞ்ச நேரம் சமையல்,சமையலறை கன்வர்சேசன்னு கொஞ்ச நேரம் நீளுது. பிரியங்கா, அபிஷேக், சின்ன பொண்ணு கனவர்சேசன் கொஞ்ச நேரம் போகுது. பவ்னிய உண்மைலயே இக்னோர் பண்றாங்களான்னு தெரில. ஆனா அவங்க எல்லார்கிட்டயும் கனெக்டிவிட்டில இருக்கனும்னு ஆசை படுறாங்க போல. அவங்க தனிமையா பீல் பண்றாங்கன்னு மட்டும் புரியுது.
”ஹைலைட்ஸ்: தலைவராக யாரும் எதிர் பார்க்காத தாமரைச் செல்வி, போட்டியாளர்கள் அனைவரும் கண்டு வியக்கும் போட்டியாளராக நிரூப், நாமினேசன்ஸ், குட்டி குட்டி வாக்குவாதம். ஆக மொத்தம் இப்ப தான் களம் கொஞ்சம் கொஞ்சமா சூடு பிடிக்க ஆரம்பிக்குது. சீக்கிரம் குளிர் காயுற மாறி எரிய ஆரம்பிக்கும். அப்ப குளிர் காயலாம் இப்போதைக்கு வேடிக்கை மட்டும் பார்ப்போம்.”