பிக்பாஸ் 5 தமிழ் | Day 99 | Promo 2 | ‘உங்க யார் மனசுலயாவது இடம் பிடிச்சு இருந்தா அதுவே பெரிய சந்தோசம்’
![Bigg Boss 5 Tamil Day 99 Promo 2 Is Out](https://i0.wp.com/idamporul.com/wp-content/uploads/2022/01/Bigg-Boss-5-Tamil-Day-99-Promo-2-Is-Out.png?fit=640%2C308&ssl=1)
Bigg Boss 5 Tamil Day 99 Promo 2 Is Out
பிக்பாஸ் 5 தமிழின் தொண்ணூற்று ஒன்பதாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
ராஜூ கோல்டன் மைக் மூலம் தனது உரையாடலைத் துவங்குகிறார். ஒரு நெருக்கமான உரையாடல் தான் அது. என்னை ஜெயிக்க வையுங்கள் என்ற வார்த்தைகளை உபயோகிக்காமல் உங்களில் ஒருவனாய் அண்ணனாய், தம்பியாய் என்னை பாருங்கள் என்று ராஜு சொன்ன விதம் நிச்சயம் அனைவர் மனதையும் உருக்கியது.
“ ஒரு நகைச்சுவை மனிதனுக்கு பின்னால் புன்னகைகள் மட்டும் இருக்காது. வலிகளும், ஆயிரம் போராட்டங்களும் நிச்சயம் இருக்கும் என்பதை உணர்த்தியவர் தான் ராஜூ “