பிக்பாஸ் தமிழ் 7 போட்டியாளர்கள் யார் யார் என்ற தகவல் கசிந்தது!

Bigg Boss 7 Tamil Contestants Name Is Out Idamporul

Bigg Boss 7 Tamil Contestants Name Is Out Idamporul

பிக்பாஸ் தமிழ் 7 போட்டியாளர்கள் யார் யார் என்ற தகவல்கள் நம்ப தகுந்த வட்டாரங்களிடம் இருந்து கிடைத்து இருக்கிறது.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி குறித்த இரண்டு புரோமோக்களை ஏற்கனவே டெலிவிசன் வெளியிட்டு இருக்கிறது. யார் யார் போட்டியாளர்கள், கமல்ஹாசன் சொல்லும் அந்த இரண்டு வீடு என்பது எப்படி சாத்தியம் என்ற எதிர்பார்ப்புகள் எல்லாம் ரசிகர்களை இப்போதே தொற்றிக் கொண்டு இருக்கிறது.

நடிகை சோனியா அகர்வால், தர்ஷா குப்தா, கோவை பெண் டிரைவர் ஷர்மிலி, தொகுப்பாளர் ரக்‌ஷன், காக்கா முட்டை விக்னேஷ், நடன இயக்குநர் ஸ்ரீதர், விஜே பார்வதி, நடிகை ரேகா நாயர் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் இந்த பிக்பாஸ் சீசனில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பாடகி மற்றும் குக் வித் கோமாளி ஷிவாங்கியும் கலந்து கொள்ள வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

“ ஆக மொத்தம் இந்த பிக்பாஸ்சில் அதகளத்திற்கு பஞ்சம் இருக்காது என்பது போட்டியாளர்களை பார்க்கும் போதே தெரிகிறது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author