வெளியானது பிக்பாஸ் தமிழ் சீசன் 7 அப்டேட்!

Bigg Boss 7 Tamil Update Is Out Idamporul

Bigg Boss 7 Tamil Update Is Out Idamporul

நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 7-க்கான அப்டேட் வெளியாகி இருக்கிறது.

நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 தொடருக்கான முன்னெடுப்பு வேலைகள் நடந்து வருகிறது. ஒரு குட்டி டீசர் ஒன்றையும் டெலிவிஷன் குழு வெளியிட்டு இருக்கிறது. இந்த முறை மைக் செட் ஸ்ரீ ராம், ஹரிஜா, மதன் கவுரி, இட்ஸ் பிரஷாந்த் போன்ற யூடியூபர்களையும், சுனிதா, ஷிவாங்கி போன்ற குக் வித் கோமாளி பிரபலங்களையும் பிக்பாஸ் இல்லத்தில் எதிர்பார்க்கலாம்.

இந்த முறை பல்வேறு புதிய ரூல்ஸ்களை புகுத்த டெலிவிஷன் திட்டமிட்டு இருக்கிறதாம். ஒரு பக்கம் அதற்கான கண்டன்ட் வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டு இருக்க, இன்னொரு பக்கம் பிக்பாஸ் 7 சீசனுக்கான வீடும் பிரம்மாண்டமாக ரெடி ஆகி கொண்டு இருக்கிறதாம். இந்த முறை நிறைய அதகளத்தை எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.

வீடு, கண்டன்ட், கமல்ஹாசன் என்று எல்லோரும் ரெடி ஆகிக் கொண்டு இருந்தாலும் கூட இன்னமும் கண்டஸ்டண்ட் லிஸ்ட் ரெடி ஆகவில்லையாம். காரணம் பிக்பாஸ் என்றாலே தெறித்து ஓடுகிறார்களாம். டெலிவிஷன் எப்படியும் ஆள் கிடைக்கவில்லை என்றால் டிவி தொடர்களில் இருந்து நாலைந்து பேரை எடுத்து போட்டு விடுவார்கள். அது அவர்களுக்கு எந்த கடினமும் இல்லை.

“ ஹ்ம் எப்படியோ ரசிகர்களுக்கு ஒரு 100 நாள் பொழுது போக்கு வருகிறது. ஐபிஎல்-ற்கு பின்னர் ஒரு பெரிய பொழுது போக்கு வெற்றிடம் உருவாகி விட்டது. அதை பிக்பாஸ் நிச்சயம் நிரப்பும் என்பதில் ஐயமில்லை “

About Author