பிக்பாஸ் 5 தமிழ் | Day 6 | Review | பிக்பாஸ்சில் இருந்து வெளியேறிய நமீதா மாரிமுத்து!

Bigg Boss 5 Tamil Day 6 Review In Tamil

Bigg Boss 5 Tamil Day 6 Review In Tamil

பிக்பாஸ் 5 தமிழின் ஆறாம் நாளிற்கு உரிய ஒட்டு மொத்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை சிறு தொகுப்பாக இங்கு காண்போம்.

சனி மற்றும் ஞாயிறு, கமல் ஹாசன் அவர்கள் அகம் டிவி வழியாக ஹவுஸ்சிற்குள் நுழைவார் என்பது அனைவரும் அறிந்தததே என்றாலும், நாம் அறிந்திடாத நிகழ்வு ஒன்றும் அரங்கேறி இருக்கிறது பிக்பாஸ் 5 இல்லத்தில், இன்றைய எபிசோடு தொடங்கும் போதே பிக்பாஸ் ஒரு அறிவிப்பை வெளியிடுகிறார். ’நமீதா மாரிமுத்து ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்’ என்று அறிவிக்கிறார். இது அறிந்திடாத நிகழ்வு மட்டும் அல்ல ஒரு அதிர்ச்சியான நிகழ்வும் கூட. எப்போதும் போல ஆரவாரமான கைத்தட்டல்களுடன் மாஸ்சாக என்ட்ரி கொடுக்கிறார் உலக நாயகன்.

ஒரு வலிமையான பலமான பிரநிதியை இந்த பிக்பாஸ் தவிர்க்க முடியாத காரணங்களால் இழந்து நிற்கிறது. அவ்வாறே கமல் ஹாசன் அவர்களும் நமீதா மாரிமுத்துவை பற்றி ஒரிரு வார்த்தைகள் பேசி விட்டு அகம் டிவியின் வழியாக பிக்பாஸ் இல்லத்திற்குள் காட்சியாய் நுழைகிறார். ’வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பதை நிரூப் அவர்கள், அவரின் அம்மிக் கல் எக்சர்சைஸ் மூலம் உலகிற்கு நிரூபித்து இருக்கிறார்’. ’பிரியங்கா, நீங்கள் உங்கள் கேஸ் ஸ்டவ் கம்முயூனிகேசனை பாட்டர்ன் செய்து வைத்து கொள்ளுங்கள் பிற்காலத்தில் உதவும்’ என்று ஏற்கனவே கல கலப்புக்கு பஞ்சம் இல்லாத இந்த இல்லத்தில், கமல்ஹாசன் அவர்களும் அவரின் பங்குக்கு கொஞ்சம் சிரிப்பலைகளை விதைக்கிறார்.

எல்லோரும் எதிலாவது, எந்த காட்சியிலாவது ஸ்கோர் செய்திருக்கும் போது, வருண் மட்டும் இந்த ஒரு வாரத்தில் நம் மனதில் பதியும்படிம், இந்த இல்லத்தில் நினைவு கூறும்படியும் ஒரு காட்சியிலும் இடம் பெறவில்லை. அதையேத் தான் கமல்ஹாசன் அவர்களும் எடுத்துரைக்கிறார். நாமும் அதை முன்மொழிவோம். ‘சிபி நன்றாகவே டீ போடுகிறீர்கள் காபியும் சீக்கிரம் போட கற்றுக் கொள்ளுங்கள்’ என்று சிபி குறித்து ஹைக்கூ போல பேசி நகர்கிறார் கமல் அவர்கள். அதற்கு பின் ‘நாமெல்லாம் தூங்கி கொண்டே இருந்தால் வீட்டிற்குள்ளும் துப்பாக்கி சூடு நடக்கும், நாட்டிற்குள்ளும் துப்பாக்கி சூடு நடக்கும்’ என்று தனக்கே உரிய பாணியில் நம்ம அபிஷேக் ராஜாவுக்கு, அரசியல் கலந்து ஒரு குட்டு வைக்கிறார் கமல்ஹாசன் அவர்கள்.அக்‌ஷாராவின் யோகா, முதல் முதலில் அவர் குரலை சின்னத்திரையில் உலகிற்கு அறிமுகப்படுத்தி இருக்கும் பவ்னி, மகளைப் பிரிந்து தவிக்கும் தந்தையாக அபினய் என்று வரிசையாக ஒவ்வொருவரின் இந்த ஒரு வார காட்சிதனை நெகிழ்ச்சியாக கூறிக்கொண்டே செல்கிறார் கமல் அவர்கள்.

’எனக்கு ஒரு பதட்டம் என்னன்னா, இங்க இங்கிலீஸ் கத்துக்குற வெறில வட்டார வழக்க அண்ணாச்சி மறந்திடுவாறோன்னு ஒரு பயம்’ என்று அண்ணாச்சிக்கு ஒரு கலாய்ப்பு, ‘சொந்த வீடு வாங்குகிறேன் என்று சூளுரைத்த இசை வாணிக்கு என் வாழ்த்துக்கள்’ என்று இசைக்கு ஒரு வாழ்த்து, ‘வீட்டிற்குள் இருப்பதை வைத்து தான் உங்கள் திறமையை பளிச்சிட செய்ய வேண்டும். அதனால உள்ள ஒரு பேஸ்கட் பால் வரும்னு காத்திருக்காதீங்கன்னு’ ஸ்ருதிக்கு ஒரு அட்வைஸ், ‘குறட்டையே தாங்கிக்க முடிலங்கிறீங்களே தாமரை, இன்னும் வீட்டுக்குள்ள நெறைய அரட்டை எல்லாம் வருமே எப்படி தாங்கிக்க போறீங்க’ என்று தாமரைக்கு ஒரு முன்னெச்சரிக்கை, மதுமிதாவின் ’யாழ்ப்பாண தமிழ் புகழ்ச்சி’, ‘சின்ன பொண்னுன்னு பேரு வச்சுக்கிட்டு வீட்ல எல்லாருக்கும் அம்மாவா இருக்கீங்க’ என்று சின்ன பொண்ணு அக்காவுக்கு ஒரு கீரிடம், ‘கொஞ்சம் முன்னாடி வாங்க’ என்று நாடியாவுக்கு ஒரு கோரிக்கை, ‘எல்லாருக்கும் ஒரு கதையை சொல்லி, வீட்டுக்குள்ள ஒரு திரைக்கதையை தேடிக்கிட்டு இருக்கீங்க போல, வாழ்த்துக்கள்’ என்று ராஜூவுக்கு ஒரு புரிதல் வாழ்த்து, என்று வரிசையாக இந்த ஒரு வாரத்தில் ஒவ்வொருவரின் செய்கைகளை எல்லாம் ’நீங்க எத்தன மார்க் வாங்கியிருக்கீங்க என்று நம் ஸ்கூல் வாத்தியார் வகுப்பறையின் முன் நின்று வாசிப்பது போல’, கோர்வையாக வாசித்து முடித்தார் நம்ம வாத்தியார்.

‘ஒரு கதை சொல்லட்டும்மா’ டாஸ்க்கில் தன்னை நெகிழவைத்த கதைகளில் ஒன்றாக இசைவாணியின் கதையையும், நமீதா மாரிமுத்து அவர்களின் கதையையும் கமல் தெரிவு செய்தார். ’தடைகளை எல்லாம் கடந்து உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள், அந்த திறமை பெரிதாக பெரிதாக, உங்கள் வாய்ப்புகளை யாராலும் , எந்த மேடையிலும் மறுக்க முடியாது’ என்று இசைவாணிக்கு தன்னம்பிக்கை ஊட்டினார் கமல்ஹாசன் அவர்கள். அதற்கு பின் இன்னும் கதை சொல்லாத போட்டியாளர்களிடம், உங்கள் கதையை எப்படி சொல்ல போகிறீர்கள் என்று ஒவ்வொருவரிடம் கேட்டு விடையைப் பெற்றுக் கொண்டிருந்தார். ராஜு கிளைமேக்ஸ் அன்டர் வொர்க்கிங் என்று கூற, நிரூப் யாரையும் அழ வைக்காத கதையைச் சொல்ல போகிறேன் என்று கூறினார். நிரூப் சொன்னதற்கு பதிலாக ‘அண்ணாச்சி சொன்ன கதைல அழுகை இல்லாம இல்ல, ஆனா அவர் அதற்கு சிரிப்பு பெயிண்ட் அடிச்சிட்டார்’னு நாம மனசுல யோசிச்சத கமல் சார், அப்படியே நம் குரலாக அங்கு வெளிப்படுத்தினார்.

’போற போக்குல அப்புடியே சொல்ல போறேன் சார்’ என்று வருண், ’பார்ட் பார்ட்டா பிரிச்சு சொல்ல போறேன் சார்’ என்று அபினய், ஏதோ செமினார் எடுக்க விளைவது போல ’எனக்கு நேரேசன் தான் சார் ப்ராப்ளம்’ என்று அக்‌ஷாரா, ‘தான் கடந்து வந்ததை சொல்ல போறேன்’ என்று நாடியாவும், ‘நமக்கு அறிமுகம் தேவையில்லாத வரைக்கும், நாம அடிக்கடி வேலை செய்யனும்’னு தத்துவத்தோட ‘நான் இந்த உயரத்திற்கு செல்ல சப்போர்ட்டா இருந்தவர்களை பற்றி சொல்ல போறேன்’னு பிரியங்காவும், கதை சொல்ல போற விதத்தை, கமல் சாரிடம் சொல்லி முடித்தனர். ‘ஏற்கனவே பல கதை சொன்னவங்க நீங்க, இப்ப உங்க கதைய கேக்க நாங்க ஆவலா இருக்கோம்’னு தாமரைக்கு உண்டான பதில கமலே சொல்லி முடிச்சிடுறார்.

அதுக்கப்புறம் அகம் டிவியிலேருந்து கமல் சார் ஒரு சின்ன இடைவெளி விடுகிறார். அந்த இடைவெளியில ஹவுஸ்குள்ள நடக்குற காட்சி ஒளிபரப்பாக ஆரம்பிக்குது. கமல் சாரின் மேடைக் கலாய்ப்புகளை பற்றி, மாற்றி மாற்றி பேசி, அபினய்-யும், அண்ணாச்சியும், பிரியங்காவை கலாய்த்துக் கொண்டு இருக்கின்றனர். அதற்குபின் மீண்டும் அகம் டிவி வழியே கமல் சார் ஹவுஸ்மேட்ஸ்சிடம் உரையாட வருகிறார். இந்த முறை ஸ்ருதி அவர்கள் கூறிய கதையில் இருந்த ஒரு சில சமூக அர்த்தங்களை மக்களிடம் எடுத்துரைத்தார். ‘வற்புறுத்தும் போது No சொல்ல பழகுங்க, குழந்தை திருமணத்தால் ஒருவர் இழக்கின்ற வாழ்வியல், ஒரு குழந்தையை சுதந்திரம் இழக்க செய்து திருமண விலங்கிடுதல்’ போன்றவற்றை மேற்கோள் காட்டி, சமூகத்திற்கு அதனுள் இருக்கும் பொறுப்புகளை சுட்டிக்காட்டினார்.

அடுத்ததாக பவ்னி ரெட்டி அவர்களின் கதையை பற்றி பேச ஆரம்பித்தார் கமல் அவர்கள். ‘கணப்பொழுதில் ஒரு சிலர் எடுக்கும் முடிவுகள் இங்கு பலரை பாதிக்கிறது. அவர் விடைபெற்று விடுவார். ஆனால் இருந்து அனுபவிப்பவர்கள் கடைசி வரை வலியைத் தாங்க நேரிடும். விடைபெற்றவரின் சொந்தங்கள் நினைத்திருந்தால் இவர்(பவ்னி) மேல் பழியைச் சாட்டி இருக்கலாம். ஆனால் நீயும் என் பிள்ளையே என்று அரவணைத்தது அவர்கள் இந்த உலகிற்கு உணர்த்தும் மற்றுமொரு பாடம்’ என்று பவ்னியின் கதையில் இருக்கும் அர்த்தங்களை கமல் அவர்கள் அரங்கில் எடுத்துரைத்தார். யாராக இருந்தாலும் சரி சுற்றி இருக்கும் இடர்களை எதிர்கொள்ளும் தைரியம் வேண்டும். எதுனாலும் பேசுங்கள் யாரிடமாவது கூறுங்கள் என்று மதுமிதா குறியதையும் மேற்கோள் காட்டி தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்பதுடன் அந்த விவாதத்தை முடித்துக் கொண்டார்.

அதற்கு பின் ராஜுவை நோக்கி, சின்ன பொண்ணு அக்கா மற்றும் அண்ணாச்சியின் கதைக்கு ஏன் டிஸ்லைக் கொடுத்தீர்கள் என்று காரணம் கேட்கிறார் கமல் அவர்கள். அதற்கு ராஜுவோ ’ஒரு சரியான நேரேட்டிவ் இல்லை’ என்று திரைக் கதாசிரியர் போலவே விளக்கம் கொடுத்தார். கமல் சாரோ, ஒன்று நீங்கள் அவர்களின் வாழ்வியலில் இருந்த கடின சூழல்களை, உங்கள் பாதையில் நீங்கள் அனுபவித்திருக்க மாட்டீர்கள் என்று ஒரு குட்டு கொடுத்து விட்டு, அதற்கு பின் ராஜு சொன்னதையும் நியாயப்படுத்தி பேசினார். நீங்கள் எவ்வளவு கஸ்டப்பட்டிருந்தாலும் அதை சரியான முறையில் விளக்கவில்லையெனில் உங்கள் கஸ்டம் அவர்களுக்கு போய் சேராது. உதாரணத்துக்கு வயிற்று வலிக்கு டாக்டர்கிட்ட போய்ட்டு வாய தொறக்காம இருந்தா அவர் எப்படி ட்ரீட்மென்ட் கொடுப்பாரு என்பது போல தான் என்று சொல்லி அந்த விவாதப்பொருளை முடிக்கிறார்.

’எது செய்தாலும் அதை ஒரு பேஷனுடன் செய்ய வேண்டும்’ என்பதற்கு உதாரணமாக இயாக்கியின் கதையை முன்மொழிகிறார் கமல் அவர்கள். சிறிது நேரம் நம் மொழிப்பெருமையை பற்றி விரிவுரையாக்குகிறார். மதுமிதாவின் வாய்மொழியான யாழ்த்தமிழை கமல் பெரிதும் ரசிப்பதாக எடுத்துரைக்கிறார். அறிவியல் மொழியை விட மேன்மையானதா என்பதற்கு இல்லை என்று கூறி, அதற்கு உதாரணமாக 2000 வருடங்களுக்கு முன்பு அறிவியல் இல்லாத போதே, ராஜ ராஜ சோழன் உருவாக்கிய தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலை உதாரணப்படுத்திக் கூறினார் கமல் அவர்கள். அதற்கு பின் தஞ்சை பெரிய கோவில் அதியங்களைப்பற்றி, தஞ்சை தமிழ் பெண் இயாக்கி எடுத்துரைத்துக் கொண்டு இருந்தார். அவ்வப்போது கமல் சார் அவர்களின் பேச்சு வழக்கில் அரசியல் வாடை ரொம்பவே வீசுகிறது. ஆனாலும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது.

அதற்கு பின் கமல் விடைபெறுகிறார். சாப்பாடு செய்யல. பசி பிரியங்காவ கொன்னுருக்கும் போல. பிரியங்கா என்னென்ன வகை வெரைட்டி ரைஸ்லாம் இருக்கோ அதெல்லாம் மைன்ட்ல ஏத்திக்கிட்டு. மனசுல மட்டும் அதெல்லாம் சாப்பிடுற மாறி யோசிச்சிக்கிட்டு அன்னிக்கு லன்ச்ச முடிச்சிக்கிறாங்க. திடீர்னு பெல் அடிக்குது. உள்ள போய் பார்த்தா ப்ரியங்கா மனசுல நெனச்ச சாப்பாடுலாம் பிக்பாஸ்குள்ள வந்து நிக்குது. ஒரு வேள பிரியங்கா பேசினதெல்லாம் விஜய் டிவி ஓனருக்கு கேட்டிருக்கும் போல. ஹ்ம்ம் நட்க்கட்டும் நடக்கட்டும். கொஞ்ச நேரத்துக்கு போரிங் கதையா ஓடுது. அந்த போரிங் கதையையும் ஓட்டுறது நம்ம பிரியங்கா தான். வர வர நிரூப்பும் பழைய ஜோக் சொல்ல ஆரம்பிச்சிட்டாரு. அத்தோட முடியுது இன்றைய ஆறாம் நாள் எபிசோடு.

” ஹைலைட்ஸ் : சனி, ஞாயிறு எபிசோடுனாலே கமல் சார் தான் ஹைலைட்ஸ் அதுல எந்த மாற்றமும் இல்லை, ஒரு வாரம் நடந்த மொத்தத்தையும் அப்புடியே நமக்கு ரீகால் பண்ணுவாரு பாருங்க, அதும் கோர்வையா, அதுக்கு தான் அவர சகலகலா வல்லவன்னு சொல்லுறோம், சிரிப்பு, வலிக்காம ஒரு கொட்டு, அட்வைஸ்னு சொல்லாம ஒரு அட்வைஸ், பாராட்டுன்னு வர்ற கொஞ்ச நேரத்துல எல்லாத்தையும் கொடுத்துட்டு போயிடுறாருப்பா. சூப்பர் சார் என்ற ஒன்று மட்டுமே எங்களிடம் இருந்து வரும் வார்த்தைகள், நாளை மீண்டும் சந்திப்போம் “

About Author