Bigg Boss Tamil 7 | Day 10 | Review | ‘பற்றிக்கொள்ளும் வீடு, சுவாரஸ்யமாகும் களம்’
பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், பத்தாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம்.
ஹைலைட்ஸ்: பிரதீப், நிக்ஸன், விசித்ரா ஸ்பீச் – கோல்டு ஸ்டார் வின்னர் – நிக்ஸன் VS பிரதீப் – பிரதீப், நிக்ஸன் கான்வர்சேஷன் – சேமியா பிரச்சினை – மாயா, பூர்ணிமா கான்வர்சேஷன் – ரீ பேமண்ட் டாஸ்க் – விசித்ரா நிராகரிப்பு – ஸ்மால் பாஸ் ஹவுஸ் கேப்டன்சிப் டிஸ்கஷன்
கோல்டு ஸ்டார் வாய்ப்பிற்காக நிக்ஸன், பிரதீப், விசித்ரா வாதிடுவதில் இருந்து துவங்குகிறது இன்றைய எபிசோடு. அனைவரும் தாங்கள் இல்லத்தில் எந்த வகையில் எண்டர்டெயினராக தெரிகிறோம் என்பதை விளக்கி கொண்டு இருந்தனர். நிக்ஸன் பேசும் போது, பிரதீப் ‘ஏண்டா வீட்ல இருக்கிற ஒருத்தர், இன்னும் உன்ன நெல்சன் நெல்சனு கூப்பிட்டு இருக்கிறார், வீட்டுல உள்ளவங்க மனசுலையே உன் பேரு இன்னும் பதியலன்ன வெளில இருக்கிறவங்க மனசுல எப்படி நீ இருப்ப’ என்று ஒரு விவாதத்தை முன் வைத்தார். அதற்கு நிக்ஸனும் ’கமல் சாரே அன்னிக்கு உங்கள பிரவீன்னு தான் கூப்பிட்டாரு, அப்போ நீங்க அவரு மனசுலயே பதியலன்னா, மக்கள் மனசுல எப்படி பதிவிங்க’ என சாட்டையடி அடித்தார். இந்த விவாதம் அப்படியே முற்றி ஒரு சமயத்தில் ’உனக்கெல்லாம் பேச தகுதியே இல்ல’ என்ற ஒரு வார்த்தையை பிரதீல் வெளிப்படுத்தி விட்டார். அது சற்றே வீட்டை பரபரப்புள்ளாக்கியது.
அடுத்தகட்டமாக டாஸ்க்கில் யார் ஸ்டார் என்பதை தெரிவு செய்ய வேண்டும். ஜோவிகா, பிரதீப் என கூறியதை பூர்ணிமாவால் பொறுக்க முடியவில்லை போல. கொஞ்சம் பொங்கினார். பிக்பாஸ்சே ஜோவிகா சொன்ன காரணம் சரி தான் என பூர்ணிமாவை உட்கார வைத்து விட்டார். கடைசி கட்டத்தில் பிரதீப் VS கூல் சுரேஷ் என ஓட்டெடுப்பு வரும் போது, கூல் சுரேஷ் ஓட்டெடுப்பில் முன்னிலை வகித்து டாஸ்க்கில் வென்று ’ஸ்டார்’ ஆகி கோல்டு ஸ்டாரையும் அடைந்து விடுகிறார்.
’எனக்கு தகுதி இல்ல’ அப்படின்னு சொன்னீங்களே உங்களுக்கு என்ன தகுதி இருக்கு என்ன பத்தி பேச, நானும் கஸ்டப்பட்டு தான் இந்த மேடைக்கு வந்திருக்கேன், உனக்கு அப்படி என்ன தகுதி இருக்கு?, நீ வெளில இருந்து கேம பார்த்துட்டு அதுக்கு ஏத்தாப்புல நடிச்சு விளையாடுற, நான் நேர்மையா விளையாடுறேன், எனக்கு அந்த திறமை இருக்கு, உனக்கு அது இல்லன்னா மூடிட்ட்டு உக்காரு, என கடுமையான வார்த்தைகளை நிக்ஸன் உபயோகித்த போதும் கூட பிரதீப்பிடம் இருந்து ’சரி, போ, வச்சிக்க’ என்ற வார்த்தைகளே பொறுமையாக வந்தது.
அடுத்தபடியாக, நிக்ஸன் மற்றும் பிரதீப் சமாதானம் பேசிக் கொள்கின்றனர். தகுதி என்பதை ரூலை வைத்து தான் சொன்னேன், பெர்சனலாக ஏதும் சொல்லவில்லை என பிரதீப் அவரது வாதத்தை, நிக்ஸன் முன் வைக்கிறார். இதற்கிடையிலும் விவாதத்தை பிரதீப், நீட்டிக் கொண்டே செல்ல ஒரு சமயத்தில், ‘உன்னல்லாம் ஆர்ட்டிஸ்ட்னு நினைச்சு பேசினதுக்கு என செருப்பால அடிச்சிக்கனும்டா’ என்ற வார்த்தையை வெளிப்படுத்தி விட்டார். எதற்காக அப்படி ஒரு வார்த்தையை கூறினார் என்பது விளங்கவில்லை, பிரதீப் அவர்களுக்கு வாய் தான் பிளஸ்சும், வாய் தான் மைனஸ்சும், நிச்சயம் இந்த விவாதங்கள் வீக் எண்டில் பேசு பொருளாகும். இந்த வார்த்தை நிக்ஸ்னை மனமுடைய வைத்து அழ வைத்து விட்டது. மணி உள்ளிட்டோர் அவருக்கு ஆறுதல் அளித்தனர்.
அடுத்ததாக சேமியா பிரச்சினை, ஸ்மால் பாஸ் இல்லத்தினர் அவர்களுக்கு தெரிந்த வகையில் சேமியாக்களை செய்து இல்லத்தார்களுக்கு கொடுக்க, அது பெரும்பாலானோருக்கு வயிற்றில் இறங்கவில்லை. பூர்ணிமா, ரவீனா உள்ளிட்டோர் கொஞ்சம் கூட சாப்பிடவே இல்லை. சாப்பாடு குறித்து கேள்வி கேட்பவர்களிடம் மாயா, விஷ்ணு உள்ளிட்டோர் ’இது ஒன்னும் ரெஸ்டாரண்ட் இல்ல ரிவ்யூ சொல்றதுக்கு நீங்க தானே எங்கள அனுப்புனீங்க அனுபவிங்க’ என ஒரு வார்த்தையில் முடித்து விடுகின்றனர்.
இந்த மாயாவிற்கு, பூர்ணிமா தான் இணைப்பு பாலம் போல, அந்த வீட்டில் நடக்கும் அத்துனையையும் வந்து மாயாவிடம் ஒப்புவிக்கிறார். மாயாவும் இந்த வீட்டில் நடப்பவர்களை அவரிடம் ஒப்புவிக்கிறார். இருவரும் நாமினேசன், ஸ்ட்ரேட்டஜி உள்ளிட்ட விஷயங்களை வெளிப்படையாக ஷேர் செய்து கொள்கின்றனர். இருவரும் வீட்டில் நடக்கும் அத்துனை கோஷ்ப்களையும் ஷேர் செய்து கொள்ளும் ஒரு கோஷிப் டிவியாகவே வலம் வருகின்றனர்.
அடுத்ததாக ரீபேமெண்ட் டாஸ்க், சங்கிலி இணைப்பு பாலம், கையில் கொடுக்கப்பட்ட பாக்ஸ்களையும் போட்டியாளர்களையும் வைத்து, ஒரு சங்கிலி இணைப்பு பாலத்தை ஏற்படுத்த வேண்டும். இந்த டாஸ்க்ல பிக்பாஸ் வீடு ஜெயிக்கும் பட்சத்தில், பிக்பாஸ் இல்லத்தின் கடனில், ஒரு 15,000 ரூபாய் கழிக்கப்படும். டாஸ்க் ஆரம்பிச்ச ஒரு சில நிமிடங்கள்லயே டாஸ்க்குக்கு கொடுக்கப்பட்ட பாக்ஸ் உடைந்து விடுகிறது. இதனால் டாஸ்க் தள்ளி வைக்கப்பட்டது. இதற்கிடையே டாஸ்க்கிற்கு ஆள் தேர்வு செய்த விவகாரத்தில் விசித்ராவை யாருமே முன்வைத்து பேசவில்லை. அவருக்கு ஒரு வாய்ப்பும் வழங்கவில்லை.
விசித்ரா மீண்டும், பூர்ணிமா சரியாக விளையாடவில்லை தானே எனக்கு அந்த வாய்ப்பை கொடுங்கள் என கேப்டனிடம் கேட்க, கேப்டனும் ஏதோ பிக்பாஸ்சிடம் கேமரா முன்பு பேசுவது போல நடித்து விட்டு விசித்ராவிற்கு வாய்ப்பளிக்க மறுக்கிறார். நிச்சயம் கேப்டனின் இந்த பாரபட்சம் வீக் எண்டில் பேசப்படலாம், வாய்ப்பு இருக்கிறது.
ஸ்மால் பாஸ் ஹவுஸ்சில் தினமும் கேப்டன் குறித்த பேச்சு எழுகிறது. விஷ்ணு உஷாராக இந்த வார கேப்டன் போட்டிக்கு நான் போகுறேன். ஜெயிக்கிறேன், பிக்பாஸ் ஹவுஸ்ல இருக்குற எல்லாரையும் வச்சு செய்யுறேன், எனக்கு ஓட்டு போடுங்க எல்லாரும், என ஐஸ்ஷூ, விஜய், மாயாவிற்கு முன் கூறுகிறார். அவர்களும் கொஞ்சம் திக்கி திக்கி ஒரு சமயத்தில் ஏற்றுக் கொள்கின்றனர். இந்த விவாதத்தின் போது பிரதீப் அங்கு இல்லை.
பிரதீப் இவர்கள் செய்யும் எந்த சூழ்ச்சி வலையிலும் சிக்கவில்லை என்பது பிளஸ், ஐஸ்ஷூ ஒரு நல்ல பிளேயராக தெரிகிறார். ஆனால் அவரும் மாயா வலையில் சிக்கி பிக்பாஸ் இல்லத்திற்கு எதிராக, சூழ்ச்சிகளை பின்னிக் கொண்டு இருக்கிறார். பிரதீப் ரூல், ரூல் என்று கேம் ஆடினாலும் கூட, நிக்ஸனுடனான விவாதம் அவருக்கு ஒரு பிளேக் மார்க் தான். இதற்கிடையில் விஷ்ணுவை ஸ்மால் பாஸ் கூப்பிட்டு விட்டு, பிக்பாஸ் இல்லத்தினருக்கு ஒரு பாட்டு எழுத சொல்லுகிறார். இல்லத்தார்கள் சொல்ல, பிரதீப் உட்கார்ந்து எழுதிக் கொண்டு இருப்பதோடு இந்த எபிசோடு முடிவடைகிறது.
“ இரு வீட்டிற்கும் இடையேயான முரண்பாடுகள் நாள் ஆக ஆக பெரிதாகிக் கொண்டே இருக்கிறது. தற்போதெல்லாம் பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் அதிகமாக டெலிவிஷனில் தெரிவதைக் காட்டிலும், ஸ்மால் பாஸ் ஹவுஸ்சில் இருப்பவர்கள் தான் அதிகமாக தெரிகிறார்கள். அவர்கள் செய்வது சூழ்ச்சி தான் என்றாலும் கூட, அது களத்தை இன்னும் சுவாரஸ்யம் ஆக்குகிறது “
மீண்டும் நாளைய பிக்பாஸ் ரிவ்யூவில் சந்திப்போம். இப்படிக்கு இடம்பொருள் இல்லத்தில் இருந்து உங்கள் லெ. ரமேஷ் !