Bigg Boss Tamil 7 | Day 11 | ‘இன்றைய புரோமோக்கள் ஒரு அலசல்’
Bigg Boss Tamil 7 Day 11 Promos Oru Alasal Idamporul
பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யில் இன்று வெளியான அனைத்து புரோமோக்களையும் வைத்து இன்றைய எபிசோடில் நடக்க இருப்பதை கணிப்போம்.
முதல் புரோமோவில் பிக்பாஸ் இல்லத்தார்கள் மூன்று வேளைக்குமான சாப்பாடு லிஸ்டை போர்டில் எழுதி வைப்பது போல தெரிகிறது. 7 பேர் வரும் வரைக்கும் வேலை நடக்காது என்பது போல ஸ்ட்ரைக்கை அறிவித்து ஒட்டு மொத்த வேலையையும் கை விடுகின்றனர் ஸ்மால் பாஸ் இல்லத்தினர். இதனால் கொடுத்த பொருட்களை எதை எதை எடுக்க முடியுமோ அதை எல்லாம் கேப்டனின் சரவணனின் உதவியுடன் திரும்ப பெருகின்றனர் பிக்பாஸ் இல்லத்தினர்.
” சும்மாவே சண்ட பிச்சுக்கும், இதுல ஸ்ட்ரைக் வேறு சொல்லவா வேண்டும், இரு வீடும் அடித்துக் கொண்டு பிக்பாஸ் இல்லம் வெடிக்க போகிறது “
ஸ்மால் பாஸ் இல்லத்தினருக்கு, பிக்பாஸ் இல்லத்தினர் தங்களை அடிமை போல நடத்துவதாக தெரிகிறது போல. ஒவ்வொரு சாப்பாட்டிற்கும் குறை கூறுவது, சாப்பாட்டில் ஏதேனும் அதிகமாக இருந்தாலோ, சாப்பாட்டில் டேஸ்ட் குறைவாக இருந்தாலோ அப்படியே கொட்டுவதை வழக்காம வைத்து இருக்கின்றனர். இதை பிரதீப் கேட்கவே, ஜோவிகா அவரை ஒருமையில் பேசி, வேலை செய்யுறதுக்கு தானே நீ அந்த ஹவுஸ்ல இருக்க செய் என அதட்டல் பாணியில் கூறுகிறார்.
” அன்று விசித்ராவையும் சரி, இன்று பிரதீப்பையும் சரி தொடர்ந்து ஜோவிகா ஒருமையில் பேசி வருவது நிச்சயம் கண்டனத்திற்குரியது. நிச்சயம் இதற்கு வீக் எண்ட் எபிசோடில் பஞ்சாயத்து இருக்கும் “
விஷ்ணு தான் இந்த அனைத்து பிரச்சினைக்கும் முற்றுப்புள்ளி போல, பசியால் பிக்பாஸ் இல்லம் ஒரு புறம் தவிக்க, ஸ்மால் பாஸ் இல்லத்தினர் ஒரு சிலர் தனியாக வெளுத்துக்கட்ட, கேப்டன் தானாக முன் வந்து நான் அனைவருக்கும் சமைக்கிறேன். ஆனால் யாரும் என் அருகில் வர கூடாது என ஸ்மால் பாஸ் இல்லத்தினருக்கு ஒரு சவாலை விடுகிறார். அதற்கும் பிரதீப் எதிர்ப்பு தெரிவித்து கேப்டனை நக்கல் செய்கிறார்.
புரோமோக்களை வைத்து பார்க்கும் போது ஒட்டு மொத்தமாக இன்றைய எபிசோடு ஒரு சரவெடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு வேறு வீடு, பல பல பிரச்சினைகள், எப்படி இது தீரும், ஒரு நாளைக்கு தான் எத்தனை சண்டைகள் என இந்த முறை பிக்பாஸ் சீசன் 7 மொத்தமாய் ஒரு கலவர சீசன் அவ்வளவு தான்.
” இந்த கலவரத்தில் யார் கடைசிவரை மிஞ்சி இருந்து டைட்டிலை கைப்பற்ற போகிறார் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்“
About Author
Auto Amazon Links: No products found.