Bigg Boss Tamil 7 | Day 11 | Review | ‘நாளுக்கு நாள் போர்க்களமாகும் பிக்பாஸ் வீடு’
பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், பதினொன்றாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம்.
ஹைலைட்ஸ்: பிக்பாஸ் இல்லத்தில் காதல்? – ஸ்ட்ரைக் மற்றும் அதில் இருந்த முரண்பாடுகள் – கேப்டன் ஸ்ட்ரைக்கில் தலையீடு – மனதை கவர்ந்த சீன்கள் – இந்த எபிசோடில் எந்தெந்த விஷயங்கள் வீக் எண்டில் பேசப்படலாம்!
எங்கு எங்கு எது நடக்கிறது என்பதை கூர்ந்து கவனித்து விட்டு, எதை தொட்டால் எப்படி தொட்டால் அது பயங்கரமாக வெடிக்கும் என்பதை நன்கு கவனித்து வைத்து இருப்பார் போல பிரதீப். இன்றைய எபிசோடு ஆரம்பிக்கும் போதே ரவீனா – மணிக்கு இடையில் இருக்கும் ஒரு வெடியை தொட்டு பயங்கரமாக வெடிக்க வைத்து விட்டார். இதுவரை சூசகமாக சென்று கொண்டு இருந்த அந்த ரிலேசன்சிப் தற்போது பொதுவெளியில் வந்து விட்டது. மணியும் அவரது நெருங்கிய வட்டாரமான ஐஸ்ஷூவிடம் ரிலேசன்சிப் விஷயத்தை போட்டு உடைத்து விட்டார்.
மணி, ஐஸ்ஷூவிடம் போட்டு உடைத்ததை, ரவீனா விரும்பவில்லை போல. இதனால் ரவீனாவிற்கும், மணிக்கும் இடையே ஒரு சின்ன கசப்பு ஏற்பட்டு விடுகிறது. நீ ஏன் அவ கிட்ட போய் இப்ப சொன்ன, இதுவரைக்கும் ஒரு தோராயமா நினைச்சிகிட்டு இருந்தவங்கள்ட்ட போய்ட்டு நீ ஏன் அக்ஸப்டன்ஸ் கொடுத்திட்டு வந்த, ’என் வீட்ல உள்ளவங்க இப்ப என்ன, என்ன நினைப்பாங்க?’ என்ற ஒரு கேள்வியை கேட்டு மணியை திணறடித்தார் ரவீனா.
இது ஒரு பிக்பாஸ் ஹவுஸ், ரிலேசன்சிப் இங்க தப்பு இல்ல தான், ஆனா அது மத்தவங்க கேம பாதிக்க கூடாது. இதுவரைக்கும் பாதிக்கல. ஆனா இனிமேல் பாதிக்க வாய்ப்பு இருக்கு. அத தான் மாயாவும் கரெக்டா சொன்னாங்க!
ஸ்மால் பாஸ் இல்லத்தில் இருக்கிறவங்க, காலைல சாப்பாடு எப்போதும் போல செஞ்சு கொடுத்திட்டு, மதியத்துல இருந்து ஒரு ஸ்ட்ரைக் அனவுன்ஸ் பண்ணுறாங்க, அதுக்கான சில வேலிட் காரணங்களும் அவங்க தரப்புல இருந்து சொல்லப்படுது. முதல் காரணம் ’ஒவ்வொருத்தரும் இங்க வந்து அவங்களோட ஒவ்வொரு Suggestion சொல்லுறாங்க, அது பண்ணலயா, இது பண்ணலயான்னு ஓயாம கேக்குறாங்க’, இரண்டாவது ’எங்களுக்கு இங்க வேலைப் பளு அதிகமா இருக்கு, எங்களுக்கு 7 பேர் தான் நியமிச்சு இருந்தாங்க, அதுல பவா போயிட்டாரு, அதுனால 7 பேர் வந்தா நாங்க சமைக்கிறோம்’ அது வரைக்கும் சமைக்க போறதில்லன்னு முடிவு பண்ணுறாங்க.
ஸ்மால் பாஸ் இல்லத்தினரின் ஸ்ட்ரைக் என்னவோ ஒகே தான். ஆனா மாயா, ஐஸ்ஷூ உள்ளிட்டோர் சாப்பிடுறதுக்காக சில பழங்கள், ஸ்னேக்ஸ் உள்ளிட்டவைகளை ஒளித்து வைத்தது என்பது ஏற்கத்தக்கது அல்ல. அதே சமயத்தில் கேப்டனின் உதவியுடன் பிக்பாஸ் இல்லத்தினரும் தாங்கள் கொடுத்த சில பொருள்கள், பழங்களை ஸ்மால் பாஸ் இல்லத்தில் இருந்து திரும்ப பெற்றனர். ஆக மொத்ததுல்ல இங்க ரெண்டு சைடுலையுமே கருணை இல்லாம போயிடுச்சு.
இங்க பிக்பாஸ் இல்லத்துல சுகர் இருக்கிறவங்க இருக்காங்க, அல்சர் இருக்கிறவங்க இருக்காங்க, ஒரு சில பேருக்கு உடல்நலம் சரியில்லாமலும் இருக்கு, சரியான நேரத்துல சாப்பாடு எடுத்துக்காதது அவங்களுக்கு வேறு சில பிரச்சினையா கூட போய் முடியலாம் என்ற கருத்தை ஜோவிகா முன் வைத்தது கூட சரி தான். ஆனா ஒரு பக்கம் பிக்பாஸ் இல்லத்துல இருக்கிறவங்க, கொடுத்த ஸ்னேக்ஸ் எல்லாத்தையும் திரும்ப வாங்கி ஸ்மால் பாஸ் இல்லத்துல இருக்கிறவங்கள பாக்க வச்சு சாப்பிடுறாங்க. இன்னொரு பக்கம் மாயா, ஐஸ்ஷு, விஷ்ணு, விஜய், கூல் சுரேஷ் உள்ளிட்டோர் எடுத்து மறைச்சு வச்சத ஒளிச்சு வச்சு சாப்பிடுறாங்க. இவங்க ரெண்டு கூட்டத்துக்கும் இடையிலயும், ரூல்ஸ்க்கு இடையிலயும் பிரதீப் சிக்கி எதுவுமே சாப்பிடாம கிடந்தது தான் இங்கு பாவத்திற்குரியது.
கேப்டன் எவ்வளவோ பிக்பாஸ்கிட்ட சொல்லியும் இந்த பிரச்சினைக்கு அவர் ஒரு தீர்வு சொல்லுறதா இல்ல. ஒரு கட்டத்தில் பிக்பாஸ் இல்லத்தில் இருப்பவர்கள் அனைவரும் பிரதீப்பை சாட, ஆனாலும் பிரதீப் ஒரு சில பாயிண்ட்களை கரெக்டாக முன் வைத்தார். ஒரு இல்லத்திற்கு எது எவ்வளவு தேவையோ அதை கணித்து வாங்கி கொடுத்தால் சமைப்பதற்கு எளிதாக இருக்கும். அதை விட்டுட்டு சும்மா தேவையில்லாததை எல்லாம் வாங்கி வேஸ்ட் பண்ணிட்டு இருக்கீங்க, பீன்ஸ், கேரட் எல்லாம் அள்ளி எடுத்துட்டு வந்து கிடக்குதுங்கிறதுக்காக சமைக்க சொல்றிங்க, அப்புறம் கெட்டு போச்சுன்னா தூரப்போட சொல்லுறீங்க, என அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளுமே சரியாக தான் இருந்தது.
இருபக்கமும் ஏகப்பட்ட முரண்பாடுகள், ஸ்ட்ரைக் என்பதை பிரதீப், ஐஸ்ஷூ தவிர மற்ற ஸ்மால் பாஸ் இல்லத்தார்கள் யாருமே சீரியஸ்சாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏதோ ஒரு கன்டன்ட்டை பண்ணியே ஆக வேண்டும் என்பதற்காகவே மாயா உள்ளிட்டோர் ஸ்ட்ரைக்கை கையில் எடுத்ததாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் ஐஸ்ஷூவுமே மாயா, விஷ்ணு அவர்களுடன் இணைந்து ஸ்ட்ரைக் என்பதை மீறி விட்டார். கடைசி வரை அந்த இல்லத்தில் ஸ்ட்ரைக்கை கடைப்பிடித்தது பிரதீப் மட்டுமாக தான் இருக்கும்.
அவ்வளவு பேசியும் பிக்பாஸ் இந்த விவகாரத்துல எந்த ஒரு டிசிசனும் எடுக்காததனால, சரவணன் நான் மட்டுமே சமைக்கிறேன், வேற யாரும் வர வேண்டாம். நான் உங்க ரெண்டு இல்லத்துக்கும் செஞ்சு நான் சாப்பாடு போடுறேன்னு முடிவெடுக்கிறார். ஸ்மால் பாஸ் இல்லத்தினர் அதற்கு, எங்களுக்கு தேவை ஒரு ஆள், அது நீங்களா இருந்தாலும் கூட எங்களுக்கு ஒகே தான். நீங்க எங்க கூட வந்து ஏதாச்சு வேலைய செஞ்சிங்கன்னா, நாங்க இப்பவே ஸ்ட்ரைக்க விடுறோம். சமைக்கிறோம் என சொல்ல, ஸ்ட்ரைக் அத்தோடு முடிகிறது.
அவ்வளவு பிரச்சினைகளுக்கும், கலவரத்திற்கும் பின்னர் ஸ்மால் பாஸ் இல்லத்தினர், ஸ்ட்ரைக்கை முடித்து விட்டு சமையல் செய்ய ஆரம்பித்தனர். கேப்டனும் அவரால் முடிந்த உதவிகளை செய்து கொடுத்தார். பிரதீப்பும் ஸ்ட்ரைக் முடிந்ததும் வழக்கம் போல வந்து சமையல் வேலைகளில் ஈடுபட்டார்.
மனதை கவர்ந்த விஷயங்கள்: ஸ்மால் பாஸ் இல்லத்தினர், பிக்பாஸ் இல்லத்தில் இருப்பவர்களுக்காக பாட்டு, எழுதி பாடிய விதம் அழகாக இருந்தது. சரவணன் நிச்சயம் கேப்டன் கூல் தான், அவ்வளவு அடிபணிந்து பேசி, ’சாப்பாடு என்ற விஷயத்தில் பிரச்சினைகள் செய்யாதீர்கள்’ என கூறி விட்டு, தானே முன் வந்து அந்த பிரச்சினையை தீர்த்த விதமும் நச். ’ஸ்மால் பாஸ்’ அவர்கள் ஸ்மால் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்சுடன் இல்லத்திற்குள் பேசிய விதம் அழகாக இருந்தது. ஐஸ்ஷு சில சமயங்களில் தான் பேசுகிறார். ஆனால் அந்த சில சமயத்திலும் மிளிரும் படி பேசி விடுகிறார். என்ன தற்போது சேர்க்கை தான் சரி இல்லை.
வீக் என்ட் பஞ்சாயத்தில் இவை பேசப்படலாம்: பிரதீப் விவாதத்தின் போது, ‘வாய உடைச்சிடுவேன்னு’ சொன்ன வார்த்தை நிச்சயம் பேசப்படும், அவருக்கு ஸ்ட்ரைக் கூட கொடுக்க வாய்ப்பு இருக்கு, மாயா, விஜய், விஷ்ணு உள்ளிட்டோரின் நேர்மையில்லாத இந்த ஸ்மால் பாஸ் ஹவுஸ் ஸ்ட்ரைக் குறித்தும் அதிகமாக பேச வாய்ப்பு இருக்கிறது. அடிக்கடி ஜோவிகா ஒருமையில் பேசுவது நிச்சயம் பேசப்படலாம். எதுக்கெடுத்தாலும் ‘நான்சென்ஸ்’ சொல்லுற விஷ்ணுவும் கண்டிப்பாக நிச்சயமாக பஞ்சாயத்தில் இருப்பார் என்பதில் ஐயமில்லை.
“ ஒட்டு மொத்தமாக ஒரு அத்தியாவசிய பிரச்சனைகளுக்காக ஸ்ட்ரைக் என்பது செய்யலாம். ஆனால் அதில் நேர்மை இருக்க வேண்டும். இங்கு இரு பக்கமும் நேர்மை இல்லை. அதனால் தராசு தற்போது வரை அலைக்களித்து கொண்டு தான் இருக்கிறது “
மீண்டும் நாளைய பிக்பாஸ் ரிவ்யூவில் சந்திப்போம். இப்படிக்கு இடம்பொருள் இல்லத்தில் இருந்து உங்கள் லெ. ரமேஷ் !