Bigg Boss Tamil 7 | Day 13 | Review | ‘அப்ப கண்டனத்துக்கு ஸ்ட்ரைக் இல்ல, கன்டன்டுக்காக தான் ஸ்ட்ரைக்’
பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், பதிமூன்றாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம்.
ஹைலைட்ஸ்: கேப்டன் தேர்வு – கேப்டன் தேர்வில் சர்ச்சை – கேப்டன் மற்றும் ஸ்மால் பாஸ் இல்லத்தார்கள் இடையேயான முரண்பாடுகள் – ஸ்ட்ரைக் ஏன்? – ஸ்ட்ரைக் தவிர்த்திருக்க பட வேண்டும் – ஸ்ட்ரைக் Is For Content ?
கேப்டன் நாமினேசன், பிக்பாஸ் இல்லத்தில் இருந்து இந்த வாரம் சிறப்பாக செயல்பட்ட இருவரையும், ஸ்மால் பாஸ் இல்லத்தில் இருந்து இந்த வாரம் சிறப்பாக செயல்பட்ட ஒருவரையும் ஹவுஸ்மேட்ஸ் தேர்ந்து எடுக்க வேண்டும். அந்த வகையில் பிக்பாஸ் இல்லத்தில் இருந்து யுகேந்திரன் மற்றும் ஜோவிகா தேர்ந்து எடுக்கப்பட்டனர். ஸ்மால் பாஸ் இல்லத்தில் இருந்து ஐஸ்ஷூ தேர்ந்து எடுக்கபட்டார். மூவருக்கும் இடையில் ஒரு டாஸ்க் வைக்கப்பட்டது.
90 கிட்ஸ் விளையாடுகின்ற சில்லி பந்து விளையாட்டு போல தான் ஒரு டாஸ்க். ஒவ்வொருவரும் தங்களுக்கு ஒரு உதவியாளரை வைத்துக் கொள்ளலாம். அந்த வகையில் யுகேந்திரனுக்கு நிக்ஸனும், ஐஸ்ஷூவிற்கு விஜய்யும், ஜோவிகாவிற்கு மணியும் களம் இறங்குகின்றனர். போட்டியாளர்கள் சிதறிக்கிடக்கும் ரவுண்ட் டிஸ்க்குகளை வரிசையாக அடுக்க வேண்டும். மற்ற போட்டியாளர்களோ, உதவியாளர்களோ அதை கலைத்து விடலாம் இறுதியில் யார் முழுமையாக அடுக்கி இருக்கிறார்களோ அவரே வெற்றியாளர்.
ஐஸ்ஷூ கலைத்து விடுவது தான் டாஸ்க் என நினைத்து விட்டாரா, இல்லை மணியால் ட்ரிகர் ஆகி விட்டாரா தெரியவில்லை. அவர் ஜோவிகாவின் டிஸ்க்குகளை கலைப்பதை மட்டும் தான் குறியாக வைத்து இருந்தார். யுகேந்திரன் – நிக்ஸன் டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்டனர். ஜோவிகாவும் விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டார். பஸ்ஸர் அடித்ததும் இறுதியாக யுகேந்திரன் ஓரளவிற்கு டிஸ்க்குகளை முழுமையாக அடுக்கி விட்டதாக கூறி சரவணன் அவரை வெற்றியாளராக அறிவித்தார்.
இந்த வார கேப்டனாக யுகேந்திரன் தேர்ந்து எடுக்கப்பட்டார்.
தன்னுடைய கனவுக்கோட்டை உடைந்து விட்டதனாலோ தெரியவில்லை. மாயா சரவணனிடம் சென்று கடுமையாக வாதிடுகிறார், யார் டிஸ்க்குகளை முழுமையாக அடுக்குகிறார்களோ அவர் தானே போட்டியின் வின்னர். அப்படி இருக்கும் போது இங்கு யாருமே முழுமையாக அடுக்கவில்லை என்னும் போது எப்படி நீங்கள் யுகேந்திரனை தேர்ந்து எடுத்தீர்கள், நீங்கள் ஒருதலைபட்சமாக செயல்படுகிறீர்கள் என ஒரு விவாதத்தை முன் வைத்தார். இந்த குழப்பத்திற்கு பிக்பாஸ்சிடம் இருந்து தீர்வு கிடைக்கவில்லை. அதனால் இந்த குழப்பத்தை கமல்ஹாசனே தீர்த்து வைத்தார். மற்ற போட்டியாளர்களை ஒப்பிடும் போது யுகேந்திரன் வெற்றியை நெருங்கி விட்டதால் அவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இந்த போட்டியில் தடுப்பது கேம் அல்ல, அடுக்குவது தான் கேம் என மாயாவிற்கு ஒரு கொட்டு வைத்தார்.
போன வாரம், ஸ்மால் பாஸ் இல்லத்திற்குள் சென்றவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு டைட்டில் கொடுக்கப்பட்டது. அந்த டைட்டிலிற்கு விஷ்ணு, விஜய், ஐஸ்ஷூ மூவரும் எதிர் விவாதம் செய்தனர். விஷ்ணுவிற்கு சோம்பேறி என்ற டைட்டிலை கொடுத்து இருந்தார் சரவணன். அது நிச்சயம் அவருக்கு பொருத்தமில்லாதது தான். அவர் அதை அக்ஷயா மற்றும் வினுஷாவிற்கு திருப்பிக் கொடுத்தார். சுயபுத்தி இல்லாவதர் என்று ஐஸ்ஷூவிற்கு கொடுக்கப்பட்டது, அதற்கு ஐஸ்ஷூ சிறந்த தேர்வு அல்ல, ஐஸ்ஷூ அதை ரவீனாவிற்கு திருப்பி கொடுத்தார்.
விஜய், அவர்களுக்கு சுவாரஸ்யமற்றவர் என்ற டைட்டில் கொடுக்கப்பட்டது, அதும் சிறந்த தேர்வு அல்ல, பிக்பாஸ்சே வினுஷா, அக்ஷயா தான் சுவாரஸ்யமற்றவர்கள் என்று பிடிவாரண்ட் எல்லாம் பிறப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. பிரதீப் உப்புக்கு சப்பாணியாக சென்றதாக் அவர் பெரியதாக வாதிடவில்லை. கூல் சுரேஷ் இந்த டைட்டிலாவது நமக்கு கொடுத்தாங்களேன்னு சந்தோஷமா ஏத்துக்கிட்டேன் என்றார்.
அடுத்ததாக ஸ்ட்ரைக்கிற்கான காரணம் ஒவ்வொரு ஸ்மால் பாஸ் இல்லத்தினரிடமும் கேட்கப்பட்டது. எங்களுக்கு 7 பேர் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அதில் பவா சென்று விட்டதால் 6 பேர் ஆகி விட்டது. அந்த ஒருவர் எங்களுக்கு வேண்டும். அது எங்களுக்கான பெனிஃபிட் தான் எப்படி விட்டுக் கொடுக்க முடியும், வேலைப்பளு அதிகம், ஒவ்வொருவரும் வந்து ஒவ்வொன்றை கூறிக் கொண்டு இருக்கின்றனர். மெனுவை ஒழுங்காக எழுதுவதில்லை, சாப்பாட்டை அதிகமாக குறை கூறுகின்றனர், சாப்பாட்டை கொட்டுகின்றனர் என்று பல்வேறு காரணங்களை காட்டி ஸ்ட்ரைக் செய்ததாக கூறுகின்றனர்.
இன்னொரு பக்கம் பிக்பாஸ் ஹவுஸ் மேட்ஸ், ஸ்ட்ரைக் ஒகே தான், ஆனால் முறையான முன்னறிவிப்பு இல்லை, உணவில் விளையாடுகிறார்கள், இங்கு எத்துனையோ உடல்நலம் குன்றியவர்கள் இருக்கிறார்கள். வீட்டில் அம்மா என்ற ஒருவரே அத்துனை வேலை செய்யும் போது, இவர்களுக்கு 6 பேர் பத்தாதா, கடுமையான வார்த்தைகள் பேசினார்கள், என்ற வார்த்தைகளை எல்லாம் கூறி எதிர் விவாதம் வைத்தனர். பெரும்பாலும் அனைவரும் விஷ்ணுவை தாக்கியே வார்த்தைகள் கூறினர். ஆனால் எல்லாம் மறைமுக பேச்சுக்கள். விசித்ரா மட்டும் நேரடியாக விஷ்ணுவின் பெயரை கூறினார்.
அனைவரின் விவாதங்களையும் கேட்டு அறிந்த பிறகு, கமல்ஹாசன் ஒவ்வொருவரின் தரப்பு நியாயங்களை விளக்கினார். முதலில் ஸ்ட்ரைக் என்பது ஒரு நியாயத்திற்காக என்கிறீர்கள். ஆனால் அந்த ஸ்ட்ரைக்கே அநியாயமாக தான் இருந்தது. நீங்கள் ஒரு நியாயத்தை கேட்கும் போது, நீங்களே அநியாயமாக நடந்து கொண்டால், உங்கள் நியாயத்திற்கான தீர்வு என்பது எப்படி கிடைக்கும், முதலில் நீங்கள் ஸ்ட்ரைக் என்பது இந்த காரணத்திற்காக தான் செய்தீர்களா, செய்தீர்களா என அழுத்தமாக கேட்க ஒரு சமயத்தில் அவர்களே ஸ்ட்ரைக் கன்டன்டுக்காக தான் செய்தோம் என பிரதீப் தவிர அனைவரும் ஒப்புக் கொண்டார்கள். அதில் பிரதீப்பை பார்க்கையில் தான் கொஞ்சம் பாவமாக இருந்தது. ஏனென்றால் ஸ்ட்ரைக்கை கொஞ்சம் சீரியஸ்சாக எடுத்துக் கொண்டு அவர் மட்டுமே அந்த ஸ்ட்ரைக்கிற்கு கொஞ்சம் ஆவது நேர்மையாக இருந்தார்.
“ ஒரு கூட்டம் அநியாயம் செய்து கொண்டு இருக்கிறது. அந்த கூட்டத்தில் நீங்கள் ஒரு சிறு புள்ளியாக இருந்து கொண்டு நேர்மையைக் கடைப்பிடித்தாலும் கூட நீங்களும் அநியாயக்காரர்களாக தான் தெரிவீர்கள் என்பது பிரதீப்பை பார்க்கும் போது புரிந்தது, பார்க்கலாம் இன்றைய எபிசோடில் அவர் தரப்பு நியாயங்களை விளக்க நேரம் கொடுக்கப்படல “
மீண்டும் நாளைய பிக்பாஸ் ரிவ்யூவில் சந்திப்போம். இப்படிக்கு இடம்பொருள் இல்லத்தில் இருந்து உங்கள் லெ. ரமேஷ் !