Bigg Boss Tamil 7 | Day 14 | Review | ‘நீங்க கன்டன்ட் பண்ணும் போது நாங்க பண்ண கூடாதா?’
பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், பதிநான்காம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம்.
ஹைலைட்ஸ்: விக்ரம் கேப்டன்சி பற்றி ஹவுஸ் மேட்ஸ்சும், கமலும் – கமல்ஹாசன் அவர்களின் எலிமினேசன் கன்டன்ட் – புத்தக பரிந்துரை – மாயாவின் பல்புகள் – ஸ்மால் மாஸ் ஹவுஸ்மேட்ஸ் தேர்ந்தெடுப்பு – எமோசனல் மூமண்ட்ஸ்
கமல் அவர்கள் ஹவுஸ்மேட்ஸ்சிடம் விக்ரம் கேப்டன்சிப் பற்றி கேட்ட போது, பெரும்பாலானோர் சொல்லிய பதில்கள், அவர் இரு வீட்டுக்குமான தகவல்களை மட்டுமே பரிமாறியது போல இருந்தது, அவராக எந்த முடிவும் எடுக்கவில்லை, எல்லா விடயங்களையும் அமைதியாக சரி செய்ய முற்பட்டாலும் கூட, முன் நின்று, பிரச்சினைகளை பிரச்சினைக்குரியவர்களிடம் அடித்து பேச தவறிவிட்டார் என்பதே அனைவரின் கருத்தாக இருந்தது.
’என்ன பிக்பாஸ், எப்படியும் நான் சரவணன்ட்ட கேள்வி கேட்டா, அவரு எப்படியும் உங்கள்ட்ட கேட்டு தான் பதில் சொல்லுவாரு, அதுக்கு நேரடியா உங்கள்ட்டையே கேட்டுடுவோமே?’ என கமல்ஹாசன் சொல்ல, அதற்கு பிக்பாஸ்சும், ‘ஏற்கனவே பல கேள்விகள் பெண்டிங்ல இருக்கு, நீங்களே இந்த பஞ்சாயத்த பார்த்துக்கோங்க’ என எஸ்கேப் ஆகிவிடுகிறார் பிக்பாஸ்.’ பிக்பாஸ் மற்றும் கமல் ஹாசன் இடையிலான இந்த உரையாடல் ரசிக்கும் படியாக இருந்தது.
ஒரு தலைவன் என்றால் முன் நின்று தைரியமாக பேச வேண்டும். என்ன நடந்தாலும் பரவாயில்லை, என்னோட முடிவு இது தான், இதனால் என்னுடைய பதவியே போனாலும் பரவாயில்லை என நீங்கள் நின்றிருக்க வேண்டும், அவர்கள் கேட்டது எக்ஸ்ட்ராவாக ஒரு பெர்சன், உங்களால் அந்த இல்லத்திற்குள் செல்ல முடியும் என்னும் போது, நீங்கள் யோசிக்காமல் சென்று இருக்க வேண்டும். ஆனால் நீங்கள் அதற்கு 7 மணி நேரம் எடுத்துக் கொண்டீர்கள் என கமல் அவர்கள் கூறி தலைமையின் முக்கியத்துவத்தை உணர்த்தினார்.
என்ன அவங்க மட்டும் தான் கன்டன்ட் பண்ணுவாங்களா, நாமலும் பண்ணுவோம் என கமல்ஹாசன் அவர்களும் எலிமினேசன் கன்டன்ட்டை கையில் எடுத்தார். இந்த வீக்கில் எலிமினேசன் இல்லை என ஏற்கனவே பிக்பாஸ் தரப்பில் இருந்து சொல்லப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த எலிமினேசன் கன்டன்ட்டில் முதல் சேவ் செய்யப்பட்டவர் ஜோவிகா, ஒருமையில் பேசுவதை மட்டும் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள் என்ற ஒரு அட்வைஸ்சை மட்டும் கமல்ஹாசன் அவர்முன் வைத்தார்.
அதற்கு அடுத்தபடியாக, விசித்ரா சேவ் செய்யப்பட்டார். அதற்கு அடுத்தபடியாக பிரதீப் சேவ் செய்யப்பட்டார். பிரதீப்பின் பெயரை கூறி சேவ்டு என சொல்லி முடிக்கும் முன்னமே வெளியில் கைதட்டல்களும் விசில்களும் பறந்தது. மாயா ஒரு முறை சொல்லி இருந்தார், ’இந்த பிரதீப்புக்கு மட்டும் வீக் எண்ட் எபிசோடுல மக்கள் கைதட்டட்டும், நான் இந்த வீட்ட விட்டே போயிடுறேன்’, அவர் அவ்வாறு சொல்லிய காரணத்திற்காகவே கைதட்டல்களும், விசில்களும் எக்ஸ்ட்ரா மோடில் ஆடியன்ஸ் போட்டது போல இருந்தது.
அதற்கு பின்னர் மீதி இருக்கும் வினுஷா, அக்ஷயா, விஷ்ணுவையும் சேவ் செய்து விட்டு மாயா மற்றும் பூர்ணிமாவை மிச்சம் வைத்து விட்டு அவர்களுக்குள் திக் திக் நிமிடங்களை விதைத்தார். ’அவங்க சொன்னாங்க, நீங்க போயிட்டா அவங்களும் போயிடுவாங்கன்னு, நீங்க எப்படி?’ என கமல்ஹாசன் அவர்கள் பூர்ணிமாவிடம் கேட்ட போடு ‘நான் அப்படி இல்ல சார்’ என பூர்ணிமா கூறியதும், மாயா மூக்கறுந்து கிடந்தார். ‘வெளில சிரிச்சிக்கிட்டு உள்ள அழுகுறேண்டா’ என்பது போல இரண்டு பல்புகளை வாங்கி விட்டு தன்னை அடக்கிக் கொண்டு சிரித்துக் கொண்டு இருந்தார்,
இதற்கிடையில் ஒரு சிறிய இடைவெளி விட்டு விட்டு, இன்னும் திக் திக் நிமிடங்களை விதைத்தார் கமல்ஹாசன். அத்தோடு ஒரு புத்தக பரிந்துரை. பால கிருஷ்ணன் அவர்கள் எழுதிய ‘சிந்துசமவெளி பண்பாட்டின் திராவிட அடித்தளம்’ என்ற புத்தகத்தை பரிந்துரை செய்தார். திராவிடம் என்பது பரவலானது என்ற வரலாற்றை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டுமானால் இந்த புத்தகம் பயன்படும் என்பதை கூறி இந்த புத்தகத்தை பரிந்துரை செய்தார். இந்த புத்தகத்தை வாங்க நினைப்பவர்கள் கீழ் இருக்கும் லிங்கில் சென்று வாங்கி கொள்ளலாம்.
ஒரு கட்டத்திற்கு பின்னர் கன்டன்ட்டின் கிளைமேக்ஸ் முடிச்சுக்களை அவிழ்த்து விட்டார் கமல்ஹாசன். வழக்கம் போல தனது பையில் இருந்து எலிமினேசன் சிட்டையை எடுப்பது போல எடுத்து, வெற்று பக்கத்தை காண்பித்ததும் தான் மாயா மற்றும் பூர்ணிமா நிம்மதி பெருமூச்சு விட்டனர். ’நீங்க மட்டும் தான் கன்டன்ட் பண்ணனுமா, நாங்க பண்ண கூடாதா?’ நாங்களும் பண்ணுவோம் என கூறி விட்டு, நீங்க ரெண்டு பேருமே ஒரு சில விஷயங்கள்ல விதிகள மீறுகிறீர்கள், பார்த்துக் கொள்ளுங்கள் இல்லன்னா டபுள் எலிமினேசன் தான் என்பது போல எச்சரித்து விட்டு நகர்ந்தார் கமல்ஹாசன்.
எப்போதும் வீக் எண்ட் எபிசோடு முடிந்ததும், அந்த எபிசோடு குறித்த பேச்சுக்கள் இல்லத்தில் இருக்கும், என்னங்க பிரதீப்புக்கு இவ்வளவு கிளாப்ஸ் என விசித்ரா ஒரு பக்கமும், இன்னொரு பக்கம் மாயாவும், பூர்ணிமாவும் இந்த கன்டன்ட் சரி இல்ல, நாம அடுத்த கன்டன்ட் தேடுவோம்னு, கன்டன்டால தான் அவங்க இந்த நிலைமைக்கே வந்தாங்க என்பத புரிஞ்சிக்காம, அவங்க ஒரு பக்கமும், வினுஷாவின் பெயர் நிறைய இடங்களில் நெகட்டிவாக அடிபட்டதால் அவர் அழுதுகொண்டே ஒரு பக்கமும் என பிக்பாஸ் இல்லத்திற்குள் பல காட்சிகள். இன்னொரு பக்கம் ஜோவிகாவும், கூல் சுரேஷ் அவர்களும் வீட்டின் நினைப்பால் ரொம்ப எமோசனலாக அழுத காட்சிகளும் அரங்கேறின.
அடுத்தகட்டமாக கேப்டன் ஸ்மால் பாஸ் இல்லத்திற்கான ஹவுஸ்மேட்ஸ்களை தெரிவு செய்யும் டாஸ்க்.
மரியாதையில்லாமல் பேசுபவர் யார்? – விஷ்ணு
யாருக்கு தைரியமாக பேசத்தெரியாது? – விக்ரம்
வேலை செய்பவதற்காக மட்டுமே வந்து இருப்பவர்? – வினுஷா
சின்ன விஷயத்தை கூட பெரிதாக்குபவர்? – பிரதீப்
விதிகளை மீறுபவர்? – பூர்ணிமா
இந்த வீட்டில் அதிகம் Influnce செய்பவர்? – மாயா
என்ற ஆறு பேரை தெரிவு செய்தார் கேப்டன் யுகேந்திரன். இதில் மாயா, பூர்ணிமா, விஷ்ணு மட்டும் தங்களுக்கான டைட்டிலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இறுதியாக ஆறு பேரும் ஸ்மால் பாஸ் இல்லத்திற்குள் அடியெடுத்து வைத்தனர்.
சுவாரஸ்யங்கள்: எபிசோடு முழுக்க நிறைய Fun-கள் இருந்தது. மாயா வெளில போய் பல்பு கடை தான் வைக்கனும்னு நினைக்கிறேன். கமல்ஹாசன் அவர்கள் இந்த எபிசோடில் அவருக்கு பல்புகளை அள்ளிக் கொடுத்தார். கூல் சுரேஷ் அவர்களின் ரன்னிங் கமெண்ட்ரி செம்ம Fun ஆக இருந்து. ஆர்ய மாலா ‘குதூகலப்படம்’ அருமை. பிரதீப்பிற்கு வெளியில் விழுந்த க்ளாப்ஸ்சுகள் தான் எபிசோடின் ஹை பாயிண்ட்.
“ எபிசோடு முழுக்க கமல்ஹாசன் அவர்கள் செய்த குறும்புகள், கண்டிப்புகள், அட்வைஸ்கள் என எல்லாமே ரசிக்கும்படி இருந்தது. பிக்பாஸ் கொடுத்த ஸ்பெசல் எண்ட்ரியும் மாஸ் “
மீண்டும் நாளைய பிக்பாஸ் ரிவ்யூவில் சந்திப்போம். இப்படிக்கு இடம்பொருள் இல்லத்தில் இருந்து உங்கள் லெ. ரமேஷ் !