Bigg Boss Tamil 7 | Day 15 | Review | ‘ப்பாஹ், பிக்பாஸ் வீட்டில் விஷ்ணுவிற்கு இனி வெற்றி லக்கணம் போல’
பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், பதினைந்தாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம்.
ஹைலைட்ஸ்: நிக்ஸன் எகிறி குதித்தல் – மாயா மற்றும் பூர்ணிமாவின் மண்டைய கழுவும் வேலை – நாமினேஷன் பிராசஸ் – பிக்பாஸ் ஷாப்பிங்ஸ் – ஸ்மால் பாஸ் கான்வர்சேஷன் – டாஸ்க்
இன்றைய எபிசோடின் ஆரம்பமே ஏதோ திரில்லர் படத்தின் ஆரம்பம் போல இருந்தது. திடீரென நிக்ஸன் ஸ்மால் பாஸ் இல்லத்திற்குள் எகிறி குதித்தார். என்ன ஏது என்று அப்புறமாக தான் தெரிந்தது அவர் விஜய்க்காக ஐஸ் கட்டிகளை எடுக்க எகிறி குதித்து இருக்கிறார். பிக்பாஸ்சும் விசாரித்து விட்டு, கேப்டன் யுகேந்திரன் அவர்களுடனும் கலந்துரையாடி விட்டு, காரணம் சரி என்பதால் அவருக்கு தண்டனை ஏதும் வழங்கவில்லை.
வழக்கம் போல மாயா மற்றவர்களின் மண்டையை கழுவும் வேலையை துவங்கினார். இந்த முறை அவரின் அந்த பணிக்கு துணையாக பூர்ணிமாவும் அவருடன் சேர்ந்து விட்டார். அதாவது அவர்களின் ட்ரிக் என்னவென்றால், பிக்பாஸ் இல்லத்தில் வீக்கானவர்களை தேர்ந்தெடுத்து நாமினேட் செய்து விட்டால், அவர் எலிமினேட் ஆகி விடுவார், நாம் எல்லாம் தப்பித்து விடலாம் என்பது தான். மாயாவின் கண்களுக்கு வீக்காக தெரிவது விசித்ரா போல, அவரை நாமினேட் செய்து விட்டால் அவர் வெளியே சென்று விடுவார் நாம் தப்பித்துக் கொள்ளலாம் என பேசிக் கொண்டு இருந்தார்.
வெளியில் நடப்பதெல்லாம் அவருக்கு தெரியாது என்பதால் விசித்ராவிற்கு இரண்டு நாமினேசன் குத்தி விட்டால் நாம் தப்பித்துக் கொள்ளலாம் என நினைத்துக் கொண்டு பூர்ணிமாவும், மாயாவும், மணி மற்றும் விசித்ராவை நாமினேட் செய்ய தங்களுக்குள் பேசி முடிவெடுத்துக் கொண்டனர். இது போக இந்த வாரம் முழுக்க அதிரடி கன்டன்டுகளை விட்டு அமைதியான கன்டன்டுகளில் இறங்க இருப்பதாகவும் பூர்ணிமா மற்றும் மாயா முடிவெடுத்து இருக்கின்றனர்.
அடுத்தகட்டமாக நாமினேசன் பிராசஸ், வழக்கம் போல பிக்பாஸ் மேட்ஸ், ஸ்மால் பாஸ் மேட்ஸ்சினை நாமினேட் செய்ய வேண்டும், ஸ்மால் பாஸ் மேட்ஸ், பிக்பாஸ் மேட்ஸ்சினை நாமினேட் செய்ய வேண்டும். ஒவ்வொருவரும் இரண்டு பேரை நாமினேட் செய்ய வேண்டும். கேப்டனை யாரும் நாமினேட் செய்ய முடியாது. அவ்வளவு தான் ரூல்.
அந்த வகையில் இல்லத்தார்களால், பிக்பாஸ் இல்லத்தில் இருந்து 6 பேரும், ஸ்மால் பாஸ் இல்லத்தில் இருந்து 5 பேரும் என மொத்தமாக 11 பேர் நாமினேட் செய்யப்பட்டனர். பிக்பாஸ் இல்லத்தில் இருந்து விஜய், விசித்ரா, மணி, அக்ஷயா, ஐஸ்ஷூ மற்றும் நிக்ஸன் நாமினேட் செய்யப்பட்டனர். ஸ்மால் பாஸ் இல்லத்தில் இருந்து, மாயா, பூர்ணிமா, பிரதீப், வினுஷா, விக்ரம் உள்ளிட்டோர் நாமினேட் செய்யப்பட்டனர்.
நாமினேசனில் இருந்து தப்பியவர்கள்: ஜோவிகா, ரவீனா, கூல் சுரேஷ் உள்ளிட்டோர்களை யாரும் நாமினேட் செய்யவில்லை. விஷ்ணு ஒரே ஒரு நாமினேசன் மட்டுமே வாங்கி இருந்தார். குறைந்த பட்சம் 2 நாமினேசன் இருப்பவர்கள் மட்டுமே ஓட்டிங்கிற்கு செல்வார்கள் என்பதால் அவரும் தப்பி விட்டார். அவர்களுடன் கேப்டன் யுகேந்திரனை யாரும் நாமினேட் செய்ய முடியாது என்பதால் அவரும் நாமினேசன் ப்ரீ ஷோனில் இருக்கிறார்.
அடுத்தகட்டமாக பிக்பாஸ் ஷாப்பிங், முன்னதான விதிமுறைகளில் மார்க்கெட்டிற்குள் எத்துனை பேர் வேண்டுமானாலும் நுழையலாம், ஆனால் தற்போது இரண்டு பேர், நான்கு கூடைகள், அதில் எவ்வளவு பொருட்கள் எடுத்து வர முடியுமோ அவ்வளவு தான் அந்த ஒரு வாரத்திற்கு, போன முறை சமைக்கும் பொருட்கள் அதிகமாக வேஸ்ட் செய்யப்படுகிறது என்பதை பிக்பாஸ் பார்த்து இருப்பார் போல, அதன் காரணத்தினாலோ என்னவோ ஷாப்பிங்கும் டாஸ்க் ஆகி விட்டது.
பிக்பாஸ்ச விட ஸ்மால் பாஸ் கொளுத்தி போடுவதில் எக்ஸ்பெர்ட் போல, போன முறை அவர் கொளுத்திப் போட்ட சிறு நெருப்பு தான் வீடே பற்றி எரிந்து கொண்டு இருந்தது. ஏற்கனவே வீட்டில் இருந்தவர்களிடமும், புதிதாய் வந்து இருப்பவர்களிடமும், தனித்தனியாக பேசினார் ஸ்மால் பாஸ். நீங்க என்ன பண்ணுவீங்களோ எனக்கு தெரியாது வீடு கலகலன்னு இருக்கனும்னு ஒரு சுதந்திரத்தை கொடுத்தார் ஸ்மால் பாஸ். இந்த சுதந்திரம் எப்படி வெடிக்க போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.
அடுத்தக்கட்டமாக ஹவுஸ் க்ளீனிங் டாஸ்க், வழக்கம் போல பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒருவர், ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்து ஒருவர் வந்து விளையாட வேண்டும். இரண்டு பெடஸ்டல்கள் இருக்கும். அதனுள் ஒரு பந்து இருக்கும். பெடஸ்டலை நிலைநிறுத்தி பந்தை மையத்திற்குள் கொண்டு வர வேண்டும் அவ்வளவு தான் டாஸ்க்.
பிக்பாஸ் வீட்டில் இருந்து மணியும், ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்து விஷ்ணுவும் இந்த கேமை விளையாடினார்கள். விஷ்ணுவிற்கு இன்று எதை தொட்டாலும் தங்கம் போல, இந்த டாஸ்க்கில் எளிதாக பெடஸ்டலை நிலைநிறுத்தி வெற்றி பெற்று, ஸ்மால் பாஸ் இல்லத்திற்கு ஹவுஸ் க்ளீனிங் வேலையை மிச்சப்படுத்திக் கொடுத்தார்.
அடுத்தகட்டமாக கழுவ போவது யாரு டாஸ்க். இந்த முறை பிக்பாஸ் இல்லத்தில் இருந்து கூல் சுரேஷ் அவர்களும், ஸ்மால் பாஸ் இல்லத்தில் இருந்து பிரதீப் அவர்களும் கேமை தொடங்கினர். தண்ணீருக்குள் கொடுக்கப்பட்ட ப்ளேட் மற்றும் உருளைகளை வைத்து ஒரு மிதக்கும் கோபுரம் கட்ட வேண்டும். இருவருக்கும் இடையில் சரியான போட்டி நிலவியது. இறுதியாக கூல் சுரேஷ் வெற்றியை தட்டி சென்றார். இதனால் கழுவும் வேலை ஸ்மால் பாஸ் இல்லத்திடம் சென்றது. போன வாரம் இரண்டு டாஸ்க்கிலும் ஸ்மால் பாஸ் இல்லத்தினர் ஜெயித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யங்கள்: விஷ்ணு நாமினேசனில் இருந்து தப்பியது, டாஸ்க்கிலும் அவர் சிறப்பாக செயல்பட்டது, கூல் சுரேஷ்சின் வெற்றி, நிக்ஸனின் ராப் என்று சுவாரஸ்யங்கள் பல இரண்டு வீட்டிலும் இருந்தது.
வீக் எண்டில் பேசப்படலாம்: ஷடனாக விஷ்ணுவிடம் இருந்து ஒரு பக்கா சேஞ், அது பாசிட்டிவ் தான், நிச்சயம் அது வீக் எண்டில் பேசப்படலாம். கைதட்டலும் பறக்கும் என நினைக்கிறேன். தொடர்ந்து மாயா – பூர்ணிமா ஸ்ட்ரேட்டஜி என்ற பெயரில் ஒரு சில குழப்பங்களை ஏற்படுத்துகின்றனர். அதற்கு எச்சரிப்பு நிச்சயம் இருக்கும். நிக்ஸன் எகிறி குதித்த விஷயமும் பேசப்படலாம்.
“ ஒட்டு மொத்தமாக இன்றைய எபிசோடு நாமினேசன், பர்சேஸ், டாஸ்க்குகள் என்ற மூன்று விஷயங்களுக்குள்ளேயே அடங்கி விட்டது. நாளை முதல் இல்லத்திற்குள் வழக்கம் போல கன்டன்டுகள் துவங்கும் என நினைக்கிறேன் “
மீண்டும் நாளைய பிக்பாஸ் ரிவ்யூவில் சந்திப்போம். இப்படிக்கு இடம்பொருள் இல்லத்தில் இருந்து உங்கள் லெ. ரமேஷ் !