Bigg Boss Tamil 7 | Day 16 | Review | ‘சுவாரஸ்யமற்றவரில் இருந்து ஸ்டார் பெர்பாமர்’
பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், பதினாறாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம்.
ஹைலைட்ஸ்: மணி Possessiveness – கூல் சுரேஷ் ராசி பலன்கள் – Body Shaming – விஷ்ணு VS பூர்ணிமா – ஸ்டார் டாஸ்க், கடந்து வந்த பாதை
மணியும், ரவீனாவும் கொஞ்சம் லவ் கன்டன்டுகள், ஓட்டுவதை நிறுத்தி விட்டு எதற்காக இங்கு வந்தார்களோ அதற்காக கொஞ்சம் உழைத்தால் பலன் கிடைக்கலாம். ’நீ இந்த வீட்ல யாரையும் நம்பாத, நீ எல்லார்கிட்டையும் அன்பு காட்டுறது எனக்கு பிடிக்கல, எல்லோரும் எப்ப வேணாலும், எப்படி வேணாலும் மாறலாம்’ என கொஞ்சம் பொஸ்சசிவ் அட்வைஸ்களை மணி அள்ளி தெளிக்கும் போது ‘பாஸ் கண்ணாடி பாஸ்’ என்றே சொல்ல தோன்றுகிறது. லோஸ்லியாவோட அப்பா வந்த மாறி, ரவீனாவுக்கு யாராச்சு அவங்களோட வீட்ல இருந்து வரும் போது தான் தெரியும். அதுவரைக்கும் ‘குதூகலப்படம்’ நடக்கட்டும்.
கூல் சுரேஷ் அவர்களின் ராசி பலன்கள் அருமை, அதிலும் விஜய் மற்றும் ரவீனாவிற்கு அவர் சொல்லிய ராசிபலன்கள் அல்டிமேட். எல்லோருக்கும் சனி எந்த மூலையில் இருக்கிறது என சொல்லிய கூல் சுரேஷ், தனக்கு அது வாயில் இருப்பதை மறந்து விட்டார் போல. போற போக்கில் கொஞ்சம் லைட்டாக பாடி ஷேமிங் பண்ணி விட்டார். அதற்கு உரிய போட்டியாளரிடமும் காலில் விழுந்து மன்னிப்பும் கேட்டு விட்டார். ஆனாலும் கூட அது இல்லத்திற்குள் பேசு பொருளாகி விட்டது. பாடி ஷேமிங் சரி என்று யாரும் சொல்லவில்லை. அது அவரை உணராமல் காமெடிக்காக அவருடைய வாயில் வந்த வார்த்தை, அதற்கு மன்னிப்பும் கேட்டு விட்டார். அத்தோடு அது முடிந்து விட்டது.
மாயா கொஞ்சம் ராசி பலன்களால் ட்ரிகர் ஆகி விட்டார். தேவையில்லாத இடங்களில் எல்லாம் தனியாக கை தட்டிக் கொண்டு இருந்தார். அவரைப் பொறுத்தவரை அவர் ஒன்று மற்றவர்களுக்கு செய்தால் அது ஹ்யூமர், மற்றவர்கள் அதை அவருக்கு செய்தால் அது வலி. நிச்சயம் மாயா இந்த விடயங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.
ரவீனா, காபி கேட்டதை பூர்ணிமா கண்டு கொள்ளவில்லை போல, தெரியாது, செய்ய முடியாது, எனக்கு எங்கு இருக்கிறதென்று தெரியாது என ஏதாவது பதில் சொல்லி இருக்கலாம் ஆனால் எதுவுமே சொல்லாமல் பூர்ணிமா நகர்ந்து விட்டார் போல, ஏற்கனவே பூர்ணிமாவிற்கு மணி, ரவீனா என்றால் பிடிக்காது. அதை காரணமாக வைத்து இப்படி செய்கிறாரோ என சந்தேகம் கொண்டு விஷ்ணு, பூர்ணிமாவிடம் கடுமையாக வாதிடுகிறார். இதை பார்க்கும் போது ‘விஷ்ணு நீங்க அவ்வளவு நல்லவரா?’ என்ற கேள்வி தான் எழுந்தது. ஆனால் அதே சமயத்தில் விஷ்ணு கேட்கும் கேள்விகளும் பூர்ணிமாவின் கழுத்தை நெறிப்பதாக அமைந்தது. ’எல்லாரையும் விட நீ தான் சரின்னு நினைச்சுகிட்டு இருக்க, ஆனா அது நீ இல்ல, உன்கிட்ட சுத்தமா எதையும் ஏத்துக்கிற பக்குவமே கிடையாது’ என பூர்ணிமா குறித்து, விஷ்ணு கூறிய இரண்டுமே நெத்தியடி உண்மைகள்.
அடுத்ததாக கோல்டு ஸ்டார் டாஸ்க், பிக்பாஸ் மேட் ஒவ்வொருவரும் தங்கள் கதையை கொடுக்கப்பட்ட மேடையில் நின்று சொல்ல வேண்டும். யாருடைய கதை ஸ்மால் பாஸ் இல்லத்தினர்களை கேள்விகளின்றி, சந்தேகங்கள் இன்றி திருப்தி படுத்துகிறதோ அவர்களே வின்னர்.
ஜோவிகா, கூல் சுரேஷ் உள்ளிட்டோரின் கதைகள் உண்மையாகவே மனதை தொட்டது என்று சொல்லலாம். ஐஸ்ஷூ அவருடைய கதையை நன்றாக தான் ஆரம்பித்தார், ஆனால் ஆரம்பித்த சில வினாடிகளிலேயே ஓவர் எமோசனலாகி அவருக்கு வார்த்தை வரவில்லை. அக்ஷயா தன்னுடைய கதையை ஒரு நேர்த்தியாக கூற முடியாவிட்டாலும் கூட குறுகிய நேரத்திற்குள் தன் வாழ்க்கையை சொல்லி முடித்தார்.
பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் கூல் சுரேஷ், ஜோவிகா, அக்ஷயாவின் கடந்து வந்த பாதைகள் பெஸ்ட் கதைகள் என ஸ்மால் பாஸ் இல்லத்தினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டது. ஆனாலும் மூவரில் ஒருவரை தானே தேர்ந்து எடுக்க வேண்டும். கடைசியாக ஸ்மால் பாஸ் இல்லத்தினர்கள் ஒன்று கூடி முடிவெடுத்து அக்ஷயாவை வின்னராக தேர்ந்து எடுத்தனர். ஆனாலும் ரசிகர்களுக்கு மனதில் பதிந்த கதைகள் ஜோவிகா மற்றும் கூல் சுரேஷ் அவர்களின் கதைகள் தான்.
சுவாரஸ்யமற்றவர், அரெஸ்ட் வாரண்ட், வீட்டில் பிக்னிக் வந்து இருக்கிறார், எதிலும் பெரிதாய் பங்கேற்பதில்லை என்ற கமெண்டுகளை எல்லாம் உடைத்து எறிந்து விட்டு, வீட்டில் முதல் அடியை எடுத்து வைத்து, முதல் அடியையும் எகிறி அடித்து கோல்டு ஸ்டாரை பெற்று இருக்கிறார் அக்ஷயா. வாழ்த்துக்கள்.
அதற்கு அடுத்தபடியாக மியூச்சிவல் பண்ட்ஸ் நிறுவனத்தின் மூலம், ஒவ்வொருவருக்கும் 50 மதிப்பு கொண்ட காயின் வழங்கப்படுகிறது, கேப்டனுக்கு மட்டும் 100 மதிப்பு கொண்ட காயின். அத்தோடு அவர்களுக்கு ஒரு உண்டியலும் வழங்கப்படுகிறது. இனி ஒவ்வொரு வாரமும் அவரவர்க்கு கொடுக்கப்படும் காயின்ஸ்களை அவரவர் உண்டியல்களின் போட வேண்டும். விருப்பப்பட்ட உணவு, பேமிலியுடன் தொடர்பு, தேவைப்படும் பொருள்களை மார்க்கெட்டில் இருந்து வாங்குதல் போன்றவைகளுக்கு இந்த சேவிங்கை பயன்படுத்திக் கொள்ளலாம்.
சுவாரஸ்யங்கள்: கூல் சுரேஷ் அவர்களின் ஜோதிடம், விஷ்ணுவின் நெத்தியடி Against பூர்ணிமா, அக்ஷயாவின் கோல்டு ஸ்டார் வெற்றி போன்றவைகளே இந்த எபிசோடின் சுவாரஸ்யங்கள். வீக் எண்டில் பேசப்படும் அளவிற்கு இந்த எபிசோடில் ஒன்றும் இல்லை. வேண்டுமானால் அக்ஷயாவை பற்றி நாலு வார்த்தை புகழ்வதற்கு வாய்ப்புகள் இருக்கலாம்.
“ சுவாரஸ்யமற்றவர் என்ற பெயரை போன வாரம் வாங்கி விட்டு, இந்த வாரம் கோல்டு ஸ்டார் பெர்பாமர் ஆகி, அவருக்கு வந்த நெகட்டிவிட்டிகளை அடித்து நொறுக்கி இருக்கிறார் அக்ஷயா “
மீண்டும் நாளைய பிக்பாஸ் ரிவ்யூவில் சந்திப்போம். இப்படிக்கு இடம்பொருள் இல்லத்தில் இருந்து உங்கள் லெ. ரமேஷ் !