Bigg Boss Tamil 7 | Day 17 | Review | ‘சாபக்கல்லால் சபிக்கப்பட்ட அக்ஷயா, இது விதியின் செயலா, இல்லை சதியின் செயலா?’
பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், பதினேழாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம்.
ஹைலைட்ஸ்: மணி, ரவீனா கான்வர்சேஷன் About ஸ்டார் டாஸ்க் ரில்சட் – சாபக்கல் டாஸ்க் – சாபக்கல் பெற்ற ஸ்டார் போட்டியாளர் – விச்சு, கூல் கான்வர்சேஷன் – Behavior Analysis
நேற்று எப்படி அக்ஷயாவுக்கு ஸ்டார் கொடுத்தாங்க, என்று பெரும்பாலும் அனைவருக்கும் எழுந்த ஒரு சந்தேகத்தை தான் மணியும், ரவீனாவும் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பேசிக் கொண்டு இருந்தனர். அக்ஷயாவின் கதைகளை காட்டிலும் விசித்ரா, கூல் சுரேஷ், ஜோவிகா உள்ளிட்டோரின் கதைகள் தான் கொஞ்சம் மனதை வருடுவதாக இருந்தது. ஸ்மால் பாஸ் ஹவுஸ்சில் இருப்பவர்கள் தான் ரிசல்ட் சொல்ல வேண்டும் என்பதால், மாயா பூர்ணிமாவை சேர்த்துக் கொண்டு, பூர்ணிமா வினுஷாவை சேர்த்துக் கொண்டு ஒரு ரிசல்ட்டை கொடுத்தனர். அதனால் ஸ்டார் அங்கீகாரம் சற்றே அதன் மதிப்பிற்கு உண்டானவரை சென்று அடையவில்லை என புலப்படுகிறது.
அடுத்ததாக சாபக்கல் டாஸ்க், போட்டியாளர்கள் அனைவரும் இந்த சாபக்கல்லுக்கு உரித்தான ஒருவரை நாமினேட் செய்ய வேண்டும். அவ்வாறு ஒரு மனதாக இல்லத்தார்களால் நாமினேட் செய்யப்பட்டவர், அடுத்த வாரம் நேரடி நாமினேசனுக்கு செல்வதோடு மட்டுமல்லாமல், ஸ்மால் பாஸ் இல்லத்திற்குள் தான் வீக் எண்ட் முடியும் வரை கழிக்க வேண்டும். இன்னொரு விதிமுறை என்னவென்றால் கல்லை கீழே வைக்க கூடாது, அவ்வாறு வைக்கும்பட்சத்தில் அதற்கு அடுத்தவாரமும் நேரடியாக நாமினேசனுக்குள் சென்று விடுவார்.
நேற்று கூல் சொன்ன ராசி பலன் வீட்டில் நிறைய பேரை பாதித்து இருக்கும் போல, நேற்று நன்றாக ராசி பலனுக்கு சிரித்து விட்டு இன்று வன்மத்தோடு நன்கு குத்தி விட்டார்கள். கிட்ட தட்ட 5 பேரின் நாமினேசனை பெற்று சாபக்கல்லை பரிசாக பெற்றார் கூல் சுரேஷ். அதை அவர் கையில் கொடுக்கும் போது ஒரு அறிவிப்பும், உடன் வந்தது. ‘அடுத்த அறிவிப்பு வந்ததும் நீங்கள் ஸ்மால் பாஸ் இல்லத்திற்குள் செல்ல வேண்டும், சாபம் உங்கள் கையில் தான் இருக்க வேண்டுமா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்’ என்று. அடுத்து சில மணி நேரத்திலேயே கூல் சுரேஷ் சாபத்தில் இருந்து விடுபட்டதோடு மட்டும் அல்லாமல், இரண்டு பேரை சபிக்கும் வாய்ப்பும் அவருக்கு கிடைக்கிறது.
கூல் சுரேஷ், தனது சாபத்தை மணி மற்றும் ரவீனாவின் மீது இறக்கி விட்டு தப்பித்தார். அதற்காக அவர் சொன்ன காரணமும் சரியாகவே இருந்தது. பெரும்பாலும் இந்த வீட்டில் பெரிதாக ஏதும் செய்யவில்லை என்று வினுஷா மீது பயங்கரமாக சாடப்படுகிறது. ஆனால் மணி, ரவீனா என்ன செய்தார்கள் என்று யோசித்து பார்த்தால் எதுவுமே இல்லை. இருவரும் எப்போதும் இணைந்தே இருப்பதால் கேமராவின் வெளிச்சம் அவர்களுக்கு அதிகமாக இருக்கிறது. ஒரு கிசு கிசுவாக மட்டுமே அவர்கள் இந்த வீட்டில் இருக்கின்றார்களே தவிர மற்றபடி சொல்லிக் கொள்ளும் அளவிற்கும் ஏதும் அவர்கள் செய்ததாக தெரியவில்லை. மணி, ரவீனா சாபக்கல்லை பெறும் போதும் அதே அறிவிப்பு வந்தது.
‘அறிவிப்பு வந்ததும் நீங்கள் ஸ்மால் பாஸ் இல்லத்திற்குள் செல்ல வேண்டும், சாபம் உங்கள் கையில் தான் இருக்க வேண்டுமா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்’
அடுத்து சில மணி நேரத்தில் அவர்களின் சாபம் நீங்கி, அவர்களுக்கு 3 பேரை சபிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. மணி, அக்ஷயாவையும், ரவீனா ஐஸ்ஷூவையும், இருவரும் இணைந்து விஜய் அவர்களையும் நாமினேட் செய்கின்றனர். அந்த மூவருக்கும் சாபக்கல் கொடுக்கப்படுகிறது. அக்ஷயாவிற்கு அவர்கள் சொன்ன காரணம் ஒகே. ஆனால் விஜய் அவர்களுக்கும், ஐஸ்ஷூவிற்கும் சொன்ன காரணம் ஏற்கும் படியாக இல்லை. அடுத்ததாக மீண்டும் அதே அறிவிப்பு.
‘அறிவிப்பு வந்ததும் நீங்கள் ஸ்மால் பாஸ் இல்லத்திற்குள் செல்ல வேண்டும், சாபம் உங்கள் கையில் தான் இருக்க வேண்டுமா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்’
அடுத்த சில நிமிடத்தில் அக்ஷயா, ஐஸ்ஷூ, விஜய் அவர்களின் சாபம் நீக்கப்பட்டு, அவர்களுக்கு இருவரை சபிக்க வாய்ப்பு கிடைக்கிறது. அவர்கள் கூல் சுரேஷ் மற்றும் மணிக்கு சாபத்தை திருப்பிக் கொடுக்கின்றனர். மீண்டும் அதே அறிவிப்பு.
‘அறிவிப்பு வந்ததும் நீங்கள் ஸ்மால் பாஸ் இல்லத்திற்குள் செல்ல வேண்டும், சாபம் உங்கள் கையில் தான் இருக்க வேண்டுமா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்’
சில மணி நேரங்களில் சுரேஷ், மணி அவர்களது சாபமும் நீக்கப்பட்டு, அவர்களுக்கு ஒருவரை சபிக்க வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் இருவரும் அக்ஷயாவை நாமினேட் செய்தனர். இறுதியாக சாபக்கல் அக்ஷயாவிற்கே சென்றது. ஒரு வாரத்திற்கான உடையை எடுத்துக்கொண்டு ஸ்மால் பாஸ் இல்லத்திற்குள் சென்று விடுங்கள். அடுத்த வாரம் நீங்கள் டைரக்ட் நாமினேசனிலும் இருக்கிறீர்கள் என பிக்பாஸ் அக்ஷயாவிடம் கூறினார்.
இந்த டாஸ்க்கும் ஆரம்பிக்கும் சமயத்தில், ஆஹா ஏதோ ட்விஸ்ட் இருக்கு போல என்று ஆரம்பித்து விட்டு கடைசியில் சப்பை கட்டாக முடிந்தது. எதற்காக இந்த டாஸ்க் என்பது கூட புரியாத புதிராகவே இருக்கிறது. கடைசியாக ஸ்டார் போட்டியாளரையே பலி கொண்டது சாபக்கல்.
’யாரு இங்க டேஞ்சர்னு நினைக்கிறீங்க’ என விசித்ரா கேட்கும் போது, கூல் சுரேஷ், விக்ரம் மற்றும் விஜய்யை கூறினார். இருவருமே அமைதியாக இருக்கின்றனர், அந்த அமைதி தான் ஆபத்தும் கூட என்று காரணம் சொன்னார். விசித்ரா அவர்கள் பிரதீப், யுகேந்திரன், ஜோவிகாவை கூறினார், விசித்ரா ஒரு போட்டி ரீதியாக கூறியது போல இருந்தது. விசித்ரா, கூல் இருவருமே பேச வேண்டிய இடத்தில் நெத்தியடி அடிக்கின்றனர். கொஞ்சம் கொஞ்சமாக விசித்ராவும், கூல் சுரேஷ்சும் மற்ற போட்டியாளர்களுக்கு எதிராக தங்கள் வலிமையை நிரூபித்து வருகின்றனர்.
அடுத்ததாக ’Behavior Analysis’ , ஸ்மால் பாஸ் இல்லத்தில் அதிக நாட்கள் இருந்தவர்கள், பிக்பாஸ் இல்லத்தில் இருப்பவர்களின் பிகேவியர் அனாலிசிஸ்சை சொல்ல வேண்டும் என்பது தான் டாஸ்க். முதலாவதாக பிரதீப் பேசினார். அவர் சொன்ன ஒவ்வொரு பாயிண்ட்களும், ஒவ்வொரு அட்வைஸ்களும், ஒவ்வொரு அனாலிசிஸ்களுமே சிறப்பாக இருந்தது. ஒவ்வொருவரையும் அவர் புரிந்து வைத்து இருக்கும் விதம் அவர்களுக்கே சற்று வியப்பாக இருந்தது. கொஞ்சம் ஐஸ்ஷூவிடம் பேசும் போது மட்டும் சொதப்பி விட்டார். மற்றபடி அவர் கூறிய அத்துனை கருத்துக்களும் Perfect என்றே சொல்லலாம்.
மாயாவும், பிரதீப்பிற்கு ஈடு கொடுக்கும் வகையில் அசத்தலாக பேசினார். ஒரு சில புரிதல்கள் மாறுபட்டாலும் கூட, கோர்வையாக அனைத்து போட்டியாளர்களையும் வாழைப்பழத்தின் மீது ஏறும் ஊசி போல, நறுக்கென்று வச்சு செய்தார். மாயா ஒரு கடினமான போட்டியாளர் தான். ஆனால் கேம் குறித்த அவருடைய புரிதல் வழி மாறி சென்று விட்டது. யாரிடமும் Gossips பேசாமல் தனித்திறனுடன் விளையாடி இருந்தால் நிச்சயம் ஒரு சிறந்த போட்டியாளராகவே மாயா வெளியில் தெரிந்திருப்பார் என்பதில் ஐயமில்லை.
சுவாரஸ்யங்கள்: விஜய், மாயா குறித்த விஷ்ணுவின் கிசு கிசுக்கள் செம்ம, கூல் சுரேஸ்சின் கோபம் மாஸ், ’சப்பாத்திக்கு எண்ணெய் கம்மியா ஊத்தனும், ஆனால் சிக்கன் சாப்பிடுவ இன்னம்மா’ என அக்ஷயாவை கூல் அதிர வைத்த நிமிடம் மாஸ். பிரதீப் – மாயா காம்போவின் பிகேவியர் அனாலிசிஸ்சும் மாஸ்.
பேசப்படலாம்: அக்ஷயாவை ஏன் ஸ்டார் டாஸ்க்கில் தேர்ந்தெடுத்தார்கள், மாயாவின் மண்டையை கழும் வேலை ஏதும் அதில் இருந்ததா, என்பது குறித்து வீக் எண்டில் பேசப்பட வாய்ப்பு இருக்கிறது, பிரதீப் -ஐஸ்ஷூ இடையிலான முரண்பாடுகள் பேசப்படலாம்.
“ சாபக்கல் அந்த அளவிற்கு சுவாரஸ்யம் தரவில்லை, பிக்பாஸ் 7 ஸ்கிரிப்ட் ஆரம்பத்தில் இருந்தே நன்றாக தான் இருக்கிறது, ஆனால் டாஸ்க் ஸ்க்ரிப்டுகள் அப்படி இல்லை, இன்னுமே புதுமைகள் தரலாம் “
மீண்டும் நாளைய பிக்பாஸ் ரிவ்யூவில் சந்திப்போம். இப்படிக்கு இடம்பொருள் இல்லத்தில் இருந்து உங்கள் லெ. ரமேஷ் !