Bigg Boss Tamil 7 | Day 18 | Review | ‘விபரீதமாகும் டாஸ்க்குகள், நரித்தந்திரம் செய்யும் யுகேந்திரன்’
பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், பதினெட்டாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம்.
ஹைலைட்ஸ்: நிக்ஸன், ரவீனா, மணி கான்வர்சேஷன் – ஆக்சிஜன் எமெர்ஜன்சி டாஸ்க், ரவுண்ட் 1, ரவுண்ட் 2 – யுகேந்திரனின் நரி சூழ்ச்சி – Repayment Task, Code Red
நீங்க வரும் போது 100 சதவிகிதம் ரவீனாவ இருந்தீங்க, எல்லார் கூடவும் நல்ல கான்டாக்ட்லயும் இருந்தீங்க, இப்ப ரவீனான்னு எடுத்துக்கிட்டா, எனக்கு 70 சதவிகிதம் ரவீனா தான், ரவீனாகிட்ட தெரியுறாங்க, மீது 30 சதவிகிதம் மணியா தெரியுறாங்க, அதே மாறி மணிய எடுத்துக்கிட்டோம்னா ஒரு 70 சதவிகிதம் மணிய தான், மணிகிட்ட பார்க்க முடியுது. மீதி ரவீனா தான் தெரியுறாங்க. நீங்க எதுக்காக வந்தீங்களோ அத விட்டு கொஞ்சம் வழி மாறி போகுற மாறி தெரியுது. உங்களோட நேரத்த அவரும், அவரோட நேரத்த நீங்களும் மொத்தமா பறிச்சிகிட்ட மாறி தெரியுது. நெறைய விஷயங்களுக்காக நீங்க அவர்கிட்ட சாரி கேக்குறீங்க. அது தப்பில்ல. ஆனா அது நிர்ப்பந்திக்க படுதோன்னு எனக்கு தோனுது என்று நிக்சன் கூறிய ஒவ்வொரு வார்த்தைகளுமே ரவீனா மற்றும் மணிக்கு ஒரு பெர்பெஃக்ட் அட்வைஸ்களாக இருந்தது.
ஆனால் இருவருமே அதை காதில் வாங்கிக் கொண்டதாக தெரியவில்லை. மறுபடியும் இருவரும் இணைந்து பேசிக் கொண்டே தான் இருந்தார்கள். ஆக மொத்தம் நிக்ஸன் கூறிய அட்வைஸ் அனைத்தையும் உண்மை என ஏற்றுக் கொண்ட ரவீனா, அதை இந்த காதில் வாங்கி விட்டு அந்த காதில் விட்டு விட்டார் போல, இது போக மணிக்கு நிக்ஸன் மீது பொசசிவ்னஸ் தான் அதிகமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் யாரையும் இங்க நம்பாத, எந்த ரிலேசன்சிப்குள்ளையும் போகாத, போகாத என அட்வைஸ் கூறிக் கொண்டே இருந்தார்.
இப்போது ரவீனாவால் மணியோ, மணியால் ரவீனாவோ மட்டும் பாதிக்கப்பட்டால் இந்த விடயம் பெரிதாக எடுத்துக் கொள்ளபடாது. ஆனால் இந்த ரிலேசன்சிப் இந்த ஒட்டு மொத்த இல்லத்தின் விளையாட்டையும், இல்லத்தார்களையுமே பாதிக்கிறது. இருவர் என்னும் போது அவர்களிடம் நான்கு நாமினேசன் இருக்கிறது, கேமிலும் இணைந்து விளையாடுகின்றனர் என்னும் போது, ஒரு காம்பெட்டிசனுக்கு அது உகந்தது அல்ல. மாயா – பூர்ணிமாவை விட இந்த ஜோடி கொஞ்சம் இல்லத்திற்கு ஆபத்து தான்.
அடுத்தகட்டமாக இரு வீட்டார்களுக்குமான, ஆக்சிஜன் எமெர்ஜென்சி டாஸ்க், கார்டன் ஏரியாவில் 30 சிலிண்டர்கள் வைக்கப்பட்டு இருக்கும். பிக்பாஸ் வீட்டில் இருந்து 7 பேர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஸ்மால் பாஸ் இல்லத்தில் உள்ள 7 பேரும் பங்கேற்க வேண்டும். கேப்டன் எந்த அணிக்கு வேண்டுமானாலும் விளையாடலாம். ஆனால் யாரையாவது ஒருவரை ரீப்ளைஸ் செய்து விளையாட வேண்டும். இந்த கேம் மொத்தம் இரண்டு ரவுண்டுகளாக விளையாடப்பட்டது. முதல் ரவுண்டில் எந்த வீடு அதிக சிலிண்டர்களை கைப்பற்றி வெல்கிறதோ, அந்த வீட்டில் இருந்து தான் இந்த வாரம் இரண்டு கேப்டன்களை செலக்ட் செய்ய வேண்டும். ஒரு வேளை ஸ்மால் பாஸ் இல்லத்தினர் வென்று விட்டால் அவர்கள் 7 பேரில், இரண்டு பேர் கேப்டன் டாஸ்க்கிற்கும், பிக்பாஸ் இல்லத்தில் இருந்து ஒருவரும் தேர்ந்தெடுக்கப்படுவர். ஒட்டு மொத்த ஏரியாவையும் விளையாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் இது தான் ரூல்.
யுகேந்திரன் அவர்களிடம் முதல் வாரத்தில் ஒரு தனித்தன்மை தெரிந்தது. ஆனால் அதை அவரே தற்போது உடைத்து எறிந்து கொண்டு இருக்கிறார். இரு வீட்டார்களுக்கும் பொதுவான ஒரு கேப்டன், பிக்பாஸ் இல்லத்தின் பக்கம் ஒரு ஸ்ட்ராங்கான 7 பிளேயர்கள் இருக்கிறார்கள், இன்னொரு பக்கம் 7 பேர் இருந்தாலும் கூட, அக்ஷயா கைகளில் சாபக்கல் வைத்து இருக்கிறார் என்பதற்காக, கொஞ்சம் யோசித்து ஒரு கேப்டனாக ஸ்மால் பாஸ் இல்லத்தின் பலத்திற்காக ஒன்று சேர வேண்டும். ஆனால் அவர் ஸ்மால் பாஸ் இல்லத்தின் பலத்தை உடைக்க வேண்டும் என்பதற்காகவே, முதலில் விஷ்ணுவை ரீப்ளைஸ் செய்வதாக கூறினார். பின்னர் ஒரு கட்டத்தில் சாபக்கல் வைத்து இருப்பதாக அக்ஷயாவால் கேம் விளையாடுவது கஸ்டம் என மன்றாடிய பின்னரே அக்ஷயாவை ரீப்ளைஸ் செய்து விளையாடினார்.
ஒரு பக்கம் பிக்பாஸ் இல்லத்தினர் சிலிண்டர்களை பாத்ரூமில் சேகரித்து கதவை லாக் செய்தனர். இன்னொரு பக்கம் ஸ்மால் பாஸ் இல்லத்தினர் அதிகபட்சமான சிலிண்டர்களை எடுத்துக் கொண்டு ஸ்மால் பாஸ் இல்லத்திற்குள் சென்று கதவை லாக் செய்து கொண்டனர். நிக்ஸன் என்ன செய்தார் என்று தெரியவில்லை திடீரென்று ஸ்மால் பாஸ் இல்லத்தின் கதவு சல்லி சல்லியாக நொறுங்கியது. பிரதீப் அதில் பலத்த காயம் அடையவே டாஸ்க் நிறுத்தப்பட்டது. டாஸ்க் நிறுத்தப்பட்டதோடு அல்லாமல் கேமும் முதலில் இருந்து விளையாடவேண்டும் என பிக்பாஸ் அறிவுறுத்தினார்.
இதற்கிடையில் ஸ்மால் பாஸ் இல்லத்திற்காக விளையாட வேண்டிய யுகேந்திரன், பிக்பாஸ் இல்லம் ஜெயிப்பதற்காக ஒரு சூழ்ச்சியை உருவாக்கி கொண்டு இருந்தார். ’நான் டம்மியா விளையாடுறேன் சிலிண்டர்கள எடுக்குறேன், நீங்க என்கிட்ட இருந்து சிலிண்டர்களை புடுங்கிக்கோங்க என்பது தான் அந்த சூழ்ச்சி’. இதை அவர் செய்து இருக்க வேண்டாம் என்றே தோன்றியது. ஒரு பக்கம் பிரதீப்பால் விளையாட இயலாது. அக்ஷயா வேறு கையில் சாபக்கல் வைத்து இருக்கிறார். இதன் காரணத்தால் 6 போட்டியாளர்கள் தான் ஸ்மால் பாஸ் இல்லத்திற்கு வலுவாக இருக்கிறார்கள் என்னும் போது, முழுமையாக ஸ்மால் பாஸ் இல்லத்தின் பலத்திற்கே தான் யுகேந்திரன் அவர்கள் விளையாடி இருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படி விளையாட ஆசைப்படவில்லை. டாஸ்க் ஆரம்பித்தது.
இரு அணிகளுமே தீவிரமாக டாஸ்க்கில் விளையாடினர். யுகேந்திரன் முழுக்க முழுக்க பிக்பாஸ் இல்லத்திற்காக விளையாடினார். கையில் இருந்த சிலிண்டர்களை எல்லாம் வேண்டும் என்றே பறி கொடுத்தார். அப்படி பார்த்தால் போட்டி என்பது 6 VS 7 என்பதாகி விட்டது. அதிலும் பிரதீப்பிற்கு காயம் என்பதால் அவரால் முழு பலத்தோடு விளையாட முடியவில்லை, அதிலும் விஜய் ஏதோ ரெஸ்ட்லிங் கேம் விளையாடுவது போல அவரை தூக்கி தரையில் ஒரு சாத்து சாத்தி விட்டார். இதனால் பிரதீப் சற்றே நிலை குலைய போட்டி, 5 VS 7 என்று ஆனது. அப்படியும் கூட ஸ்மால் பாஸ் இல்லத்தினர் லாவகமாக 14 சிலிண்டர்களை சேகரித்தனர். பிக்பாஸ் இல்லத்தினர், யுகேந்திரன் உள்ளிட்ட 7 பேரின் உதவியோடு 16 சிலிண்டர்களை மட்டுமே சேகரித்தனர். பின்னர் பிக்பாஸ் இல்லத்தினரே வென்றதாக அறிவிக்கப்பட்டனர். இரண்டு கேப்டனை நாமினேட் செய்யும் உரிமையை பிக்பாஸ் இல்லத்தினர் தக்க வைத்துக் கொண்டனர்.
அடுத்ததாக ரவுண்ட் 2, அதே டாஸ்க் தான், ஆனால் கதவை யாரும் பூட்டிக் கொள்ள கூடாது என்பது இந்த முறை ரூலில் புதியதாக சேர்க்கப்பட்டது, ஜெயிக்கும் அணியில் ஒருவர், தங்களது எதிர் வீட்டினரில் ஒருவரை அடுத்த வாரத்திற்கான டைரக்ட் நாமினேசனுக்குள் இழுக்கலாம் என்னும் போது இந்த முறையும் போட்டி கொஞ்சம் பயங்கரமாக இருந்தது. ஸ்மால் பாஸ் இல்லத்தில் பிரதீப் உடல்நலக்குறைவால் விளையாடவில்லை, அதற்கு பதிலாக அக்ஷயா கையில் சாபக்கல்லுடன் களத்தில் இறங்கினார். இந்த நிலையிலும் கூட யுகேந்திரன் தொடர்ந்து பிக்பாஸ் இல்லத்திற்காக தான் விளையாடினார்.
யுகேந்திரன் அந்த பக்கம் சாய்ந்து விட்டாலும், 6 போட்டியாளர்களை வைத்துக் கொண்டும் கூட ஸ்மால் பாஸ் இல்லத்தினர் திறமையாக தான் விளையாடினார்கள். இறுதியில் ஸ்மால் பாஸ் இல்லத்தினர் 11 சிலிண்டர்களையும், பிக்பாஸ் இல்லத்தினர் 19 சிலிண்டர்களையும் சேகரித்தனர். இதனால் பிக்பாஸ் இல்லத்தினர், வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, ஸ்மால் பாஸ் இல்லத்தில் இருந்து ஒருவரை அடுத்த வாரத்திற்கான டைரக்ட் நாமினேசனுக்கு அனுப்பும் வாய்ப்பை பெற்றனர். பிக்பாஸ் இல்லத்தினர் கலந்து ஆலோசித்து விஷ்ணுவை அனைவரும் ஒருமனதாக, அடுத்த வார டைரக்ட் நாமினேசனுக்கு அனுப்பி வைத்தனர்.
’விசித்ரா, சிலிண்டர்களை ஆடைகளுக்கு மறைத்து வைத்தது, யுகேந்திரன் ஸ்மால் பாஸ் இல்லத்தின் போட்டியாளராக இருந்து கொண்டு, பிக்பாஸ் இல்லத்திற்காக மட்டுமே நரித்தனமாக விளையாடியது, விஜய் பிரதீப்பை தூக்கி அடித்தது,’ என எல்லாமே இந்த டாஸ்க்கில் Fair ஆக தெரியவில்லை. அனைத்தும் ஸ்மால் பாஸ் இல்லத்தார்களுக்கு எதிராக இருந்தும் கூட அவர்கள் விட்டுக் கொடுக்காமல் போட்டித் திறனுடன் விளையாடியது பாராட்டத்தக்கது.
அடுத்தக்கட்டமாக ரீ பேமெண்ட் டாஸ்க் – Code Red, அதாவது பிளாஸ்மாவில் ஒரு சில விதிமுறைகள் இருக்கும், அதன் படி Bomb-யை Diffuse செய்ய வேண்டும், 5 பேரில் 4 பேராவது சரியாக செய்ய வேண்டும். இல்லையேல் வீக் எண்ட் வரும் வரையிலும் அதே உடையில் சுற்றித் திரிய வேண்டும் பிக்பாஸ் இல்லத்தார்கள் என்பதே விதிமுறை. முதலில் சென்ற ஐஷூ, ஜோவிகா என இருவருமே Bomb-யை Diffuse செய்ய தவறியதால் டாஸ்க்கில் பிக்பாஸ் இல்லத்தினர் தோற்றனர். உடைகள் அனைத்தும் பறிக்கப்பட்டது.
பேசப்படலாம்: யுகேந்திரனின் கேப்டன்சி மற்றும் சூழ்ச்சி குறித்து இந்த வீக் எண்டில் பேசப்பட வாய்ப்பு இருக்கிறது. விஜய் அவர்களின் ஆக்ரோஷம், ரவீனா – மணி குறித்தும் இந்த வீக் எண்டில் பேசப்பட வாய்ப்பு இருக்கிறது.
” கேமில் விஜய்யின் ஆக்ரோஷம் தேவையற்றது, கேப்டன் என்னும் பொறுப்பில் இருந்து கொண்டு யுகேந்திரனின் சூழ்ச்சி, அந்த ஒரு இடத்தில் தேவையில்லாதது. டாஸ்க் முழுவதுமே Unfair ஆகவே நடைபெற்றது போல தான் இருந்தது. ஒரு சின்ன சின்ன நேர்மையற்ற செயல்களும் கூட ஒட்டு மொத்த வெற்றியையே மாற்ற வல்லது. அந்த வகையில் ஒட்டு மொத்தமாகவே பிக்பாஸ் ரசிகர்களுக்கு இந்த டாஸ்க் நேர்மையானதாக படவில்லை. “
மீண்டும் நாளைய பிக்பாஸ் ரிவ்யூவில் சந்திப்போம். இப்படிக்கு இடம்பொருள் இல்லத்தில் இருந்து உங்கள் லெ. ரமேஷ் !