Bigg Boss Tamil 7 | Day 19 | Review | ‘கேப்டன் என்ற அந்தஸ்தை புரிந்து கொள்ளாமல் விளையாடுகிறாரா யுகேந்திரன்? ’
பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், பத்தொன்பதாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம்.
ஹைலைட்ஸ்: விசித்ரா மற்றும் யுகேந்திரன் About பிரதீப் – கூல் VS அக்ஷயா – வினுஷா Decision – மணி, ரவீனா VS மாயா – Repayment Task, Pin Ball Puthir – யுகேந்திரன் டார்கெட்டிங் SBM – Food Crisis – Fantastic Duo Show
ஸ்மால் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்க்கு 6:30 -க்கு எந்திரிக்கனும் அப்படிங்கிறது ரூல். ஆனால் அங்க யாருமே எந்திரிக்கிறதுல்ல, ஒரு வெண்ணீர் போடுறதுக்கு கூட கஸ்டமா இருக்கு, ஆனா பிரதீப் மட்டும் கரெக்டா 6:30-க்கு முன்னமாவே எந்திரிச்சிடுறாரு, அவரு ஒரு ரூல் புக் அவர விடுங்க, என விசித்ரா மற்றும் யுகேந்திரன் பேசிக் கொண்டு இருந்தனர். கேம் ஆரம்பித்த முதல் நாளில் இருந்து முழுக்க முழுக்க ரூல் ரூல் என்று ரூலை பிடித்து தொங்கி கொண்டு விளையாடிக் கொண்டு இருக்கிறார் பிரதீப். பிக்பாஸ்சிற்கு ஏதும் ரூலில் டவுட் இருந்தாலும் கூட பிரதீப்பிடம் கேட்கலாம் போல, ரூலில் அவ்வளவு தரோவாக இருக்கிறார். பிக்பாஸ்சின் ‘ரூல் புக்’ என பிரதீப்பிற்கு பெயர் வைத்தாலும் ஆச்சரியப்படுவதாக இல்லை.
நீங்க சப்பாத்தில எண்ணெய் அதிகமா விட கூடாது வயித்துல புண் இருக்குன்னு சொல்லுறீங்க, ஆனா சட்னி எடுக்குறப்போ காரச்சட்னி எடுக்குறீங்க, பிரியாணி சாப்பிடுறீங்க, சிக்கன் 65 சாப்பிடுறீங்க அதெல்லாம் ஒன்னும் செய்யாதா? என கூல் சுரேஷ் ஒரு நியாயமான கேள்வியை அக்ஷயாவிடம் கேட்ட போது, திரும்ப அவருக்கு சொல்ல பதில்கள் இல்லை. உளறல்கள் மட்டுமே இருந்தது.
தொடர்ந்து உடல் நலக்குறைவு, தன்னால் ஏதும் சுவாரஸ்யமாக ஏதும் செய்ய முடியவில்லையே, படுத்தே கிடக்கிறோமே என்பதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு வினுஷா பிக்பாஸ் விட்டு வெளியேற நினைப்பதாக பிக்பாஸ்சிடம் கூறினார். நீங்கள் முயற்சி செய்கிறீர்கள், இதற்கடுத்தபடியாக தொடர்ந்து போராடுங்கள், சுற்றி இருப்பவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது முக்கியமல்ல. நீங்கள் உங்களுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பிற்கு நீங்கள் உண்மையாக இருந்தால் போதும் என பிக்பாஸ் மோட்டிவேசனை அள்ளி விட வினுஷா ஒரு வழியாக தன்னுடைய டிசிசனை ரிவர்ஸ் செய்தார்.
என்ன மாயா கன்டட்டுக்கு காஞ்சி போய் கிடக்குறியோ, என சும்மா கிடந்த எதையோ சொறிஞ்சு விட்ட மாறி , ரவீனா, மாயாவை சொறிஞ்சு விட அவர் சும்மா இருப்பாரா வார்த்தைகளால் மணியையும், ரவீனாவையும் வச்சு செய்து விட்டார். மாயாவாவது ஏதோ கண்டட்டுக்காக எதையாச்சு செய்யுராங்க, இந்த ரவீனாவும், மணியும் இதுவரைக்கும் என்ன செஞ்சாங்கன்னு யாருக்கும் தெரியாது. ஏன் அது அவங்களுக்கே கூட தெரியாது என்பது தான் உண்மை.
அடுத்ததாக டாஸ்க் ரீ பேமெண்ட் டாஸ்க், ஒரே சமயத்தில் பின் பால் & Puzzle கேம்களை At A Time-ல விளையாடனும். முக்கியமான கண்டிசன் பால் கீழ விழக்கூடாது. இன்னொன்று 3 பிக்பாஸ் மேட்கள் விளையாட வேண்டும். அதில் இரண்டு பேராவது வெற்றி பெற்றால் மட்டுமே வெற்றி இறுதி செய்யப்படும். விளையாட்டில் தோற்றால் பிக்பாஸ் வீட்டில் சமைக்கும் எதையும் பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் சாப்பிட முடியாது.
கொஞ்சம் கஸ்டமான டாஸ்க் தான், டாஸ்க் நடைபெறும் போதே எங்கே இரண்டு நாள் சாப்பாடு கிடைக்காமல் போய் விடுமோ என நிக்ஸன், ஜோவிகா உள்ளிட்டோர் சாப்பாட்டை வெளுத்துக் கட்டினர். யாருமே டாஸ்க்கில் ஜெயிக்க வேண்டும் இதில் தோற்றால் நமக்கு சாப்பாடு இல்லாமல் போய்விடும் கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும் என ஒரு ஸ்ட்ரேட்டஜியோ எதுவும் வகுத்ததாக தெரியவில்லை. அதை பிக்பாஸ்சுமே கண்டிக்க தான் செய்தார். டாஸ்க்கில் பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் தோற்கவே பிக்பாஸ் வீட்டில் சமைக்கும் எதையும் இல்லத்தார் சாப்பிட முடியாத சூழல் உருவாகிறது.
இதற்கிடையில் யுகேந்திரன் ஏதோ பழைய கணக்கை கழிப்போம், பழி வாங்குவோம், போன தடவ நம்மள வச்சு செஞ்சாங்கள்ல, இப்ப நமக்கு சாப்பாடு இல்லல, நாம திங்ஸ் கொடுத்தா தானே அவங்க சமைக்க முடியும், நாம திங்ஸ் எல்லாம் எடுத்திட்டு வந்திடலாம். வச்சுக்கிட்டு கொஞ்ச நேரம் விளையாடலாம் என யுகேந்திரன் ஒரு ஸ்ட்ரேட்டஜியை சொல்கிறார். அதுக்கு இல்லத்தார்களும் சம்மதிக்கவே ஒரு சமயத்தில் அது விபரீதமாகி விடுகிறது. ஸ்மால் பாஸ் இல்லத்தினருக்கும் பிக்பாஸ் இல்லத்தினருக்கும் இடையே பெரும் கலகம் வெடிக்கிறது.
வீட்டை ஒருங்கிணைக்க வேண்டிய கேப்டன் யுகேந்திரன், வீட்டை இரண்டாக பிரித்து வைக்கவே இந்த வாரம் முழுக்க பெரும்பாடு பட்டதாக தெரிகிறது. அவர் ஒரு கேப்டனாகவே ஒட்டு மொத்தமாக செயல்படவில்லை. இந்த முறையும் சாப்பாடு பெரும் பிரச்சினையை கிளப்பியது, உங்கள வீட்ல சமைச்சத தானே சாப்பிட கூடாதுன்னு சொன்னேன், நான் சாப்பாடு தரேன் என பிக்பாஸ்சும் கொஞ்சம் ஸ்மால் பாஸ் இல்லத்தினரை வெறுப்பேத்தி அவர்களுக்கு மட்டும் சாப்பாட்டை அனுப்பி வைத்தார். பிக்பாஸ்சே அவர்களுக்கு சாப்பாட்டை அனுப்பி வைத்து விடுவார் என்றா, பின்னர் எதற்காக இந்த டாஸ்க்? அப்படியென்றால் இப்படி ஒரு டாஸ்க்கே தேவையில்லையே என தான் மனதுக்குள் தோன்றியது.
அடுத்தகட்டமாக ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் Fantastic Duo Show என்ற ஒரு ஷோ ஒன்றை இல்லத்திற்குள் நடத்தியது. ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் ஜோடி ஜோடியாக பிரிந்து கொள்ள வேண்டும். பின்னர் அமைக்கப்பட்ட மேடையில் ஒரு ஸ்டைலிஸ் வால்க் அவ்வளவு தான் டாஸ்க். நடுவராக யுகேந்திரன் மற்றும் விச்சு செயல்பட்டனர்.
விஷ்ணு – பூர்ணிமா, விஜய் – ஐஷூ, கூல் சுரேஷ் – வினுஷா உள்ளிட்டோர் சிறப்பாகவே வால்க் செய்தனர். ஆனால் விஷ்ணு – பூர்ணிமா, கூல் சுரேஷ் – வினுஷா கொஞ்சம் சிறப்பாக செயல்பட்டதாக கூறி இருவருள் இறுதியாக கூல் சுரேஷ் மற்றும் வினுஷா Fantastic Duo – வாக செலக்ட் செய்யப்பட்டனர்.
பேசப்படலாம்: வீக் முழுக்கவே பயாஸ்டாக செயல்பட்ட கேப்டன் யுகேந்திரனை விளாசும் கணம் நிச்சயம் இருக்கும். கேப்டனுக்கு மதிப்பு கொடுக்காத ஒரு சில ஹவுஸ்மேட்ஸ் கண்டிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
“ இரு வீட்டையும் தாங்கி பிடிக்க தான் கேப்டன் என்னும் பொறுப்பு என்பதை மறந்து விட்டு யுகேந்திரன், வீட்டிற்கு நடுவே ஒரு கோட்டை போட்டி விட்டு விசு போலவே அடந்து கொண்டார் “