Bigg Boss Tamil 7 | Day 2 | Review | ‘கொஞ்சம் காபி, கொஞ்சம் காரம்’

Bigg Boss Tamil 7 Day 2 Review In Tamil Idamporul

Bigg Boss Tamil 7 Day 2 Review In Tamil Idamporul

பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின் இரண்டாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம்.

ஹைலைட்ஸ்: குட்டி பிக்பாஸ் கல கல உரையாடல் – மணி மற்றும் ரவீனாவின் கிசு கிசு – டாஸ்க் 1 தோத்தவங்க துடைக்கனும் – டாஸ்க் 2 வெல்கம் டு கழுவ போவது யாரு? – விசித்ரா, யுகேந்திரன் விதி மீறல் – விஜய் VS பிரதீப் – கோல்டு ஸ்டார் டாஸ்க்

Bigg Boss Tamil 7 Day 2 Kutty Bigg Boss Jolly Conversation With Box House Contestants Idamporul
Bigg Boss Tamil 7 Day 2 Kutty Bigg Boss Jolly Conversation With Box House Contestants Idamporul

குட்டி பிக்பாஸ்சின் ஜாலியான கலகலப்பான உரையாடல் அழகாக இருந்தது. குட்டி வீட்டின் வாண்டுகளையும் பெருசுகளையும் சேட்டைகள் செய்ய வைத்து, பெரிய வீட்டில் அசந்து தூங்குபவர்களை தட்டி எழுப்பிய விதம் செம்ம, இதனால் பிக்பாஸ் இல்லத்தில் இத்துனை நாட்களாக போட்டியாளர்களை எழுப்பிக் கொண்டு இருந்த குரைக்கும் நாய்க்கு கொஞ்சமே வேலை மிச்சம்.

Bigg Boss Tamil 7 Day 2 Mani Chandra Raveena Conversation Idamporul
Bigg Boss Tamil 7 Day 2 Mani Chandra Raveena Conversation Idamporul

பிக்பாஸ் சீசன் 7 ஆரம்பித்து 1 நாள் தான் ஆகி இருக்கிறது. ஆனால் மணி, ரவீனாவிடம் ஏதோ பல நாட்கள் பழகி, பல நாள் ஏக்கத்தில் இருந்து, பல வருடங்கள் பிரிந்தது போல சில பிட்டுகளை அவிழ்த்து விடுகிறார். அதற்கு ரவீனாவின் ரியாக்சனோ ஒரு குழந்தைதனமாக தான் இருக்கிறது. ஆனாலும் இருவரும் வெகுவிரைவில் கிசு கிசுக்களில் சிக்க வாய்ப்பு இருக்கிறது.

Bigg Boss Tamil 7 Day 2 Task 1 Thothavanga Thodaikkanum Idamporul
Bigg Boss Tamil 7 Day 2 Task 1 Thothavanga Thodaikkanum Idamporul

அடுத்ததாக பிக்பாஸ் சீசன் 7-யின் முதல் டாஸ்க் – ’தோத்தவங்க துடைக்கனும்’. அதாவது இந்த டாஸ்க் விதிகளின் படி ஒவ்வொரு வீட்டிலும் இருவர் முன் வந்து, கார்டன் ஏரியாவில் வைக்கப்பட்டு இருக்கும், ஒரு Puzzle-யை 10 நிமிடத்திற்குள் சரியாக இணைக்க வேண்டும். டாஸ்க்கில் எந்த வீட்டில் உள்ளவர்கள் தோற்கிறார்களோ அந்த வீட்டில் உள்ளவர்கள், பிக்பாஸ் ஹவுஸ்சின் அன்றாட துடைக்கும் வேலையை பார்க்க வேண்டும்.

Bigg Boss Tamil 7 Day 2 Bigg Boss Housemates Become A Winner For 1st Task Of BB 7 Idamporul
Bigg Boss Tamil 7 Day 2 Bigg Boss Housemates Become A Winner For 1st Task Of BB 7 Idamporul

டாஸ்க்கிற்கான பெரிய வீட்டில் இருந்து ஜோவிகா மற்றும் பிரதீப், குட்டி வீட்டில் இருந்து நிக்சன் மற்றும் அனன்யா, கொடுக்கப்பட்டது பிக்பாஸ் இல்லத்தின் மேப் Puzzle, ஜோவிகா – பிரதீப் சிறப்பாக செயல்பட்டு 10 நிமிடத்திற்குள் பிக்பாஸ் இல்லத்தின் ஒரு 5 இடங்களை சரியாக இணைத்தனர். நிக்சன் – அனன்யா ஜோடி 4 இடங்களை மட்டும் சரியாக இணைத்தனர். இதனால் பிக்பாஸ் இல்லத்தார்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டு, சமைக்கும் வேலையோடு, துடைக்கும் வேலையும் தோற்ற குட்டி வீட்டாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Bigg Boss Tamil 7 Day 2 Task 2 Welcome To Kaluva Povadhu Yaaru Idamporul
Bigg Boss Tamil 7 Day 2 Task 2 Welcome To Kaluva Povadhu Yaaru Idamporul

அடுத்ததாக டாஸ்க் 2 ’வெல்கம் டு கழுவ போவது யாரு’, இந்த டாஸ்க்கும் இரண்டு வீட்டாளர்களுக்கு இடையிலானது தான். தோற்றவர்களிடம் பாத்ரூம் கழுவுகின்ற பொறுப்பு ஒப்படைக்கப்படும். பெரிய டாஸ்க் எல்லாம் ஒன்றும் இல்லை. ஒவ்வொரு வீட்டிலும் ஒருவர் இந்த டாஸ்க்கில் கலந்து கொள்ள வேண்டும். பிக்பாஸ் இல்லத்தின் பாத்ரூம் ஏரியா குறித்த கேள்விகளை அவர்களிடம் பிக்பாஸ் கேட்பார். விடை தெரிந்தவர்கள் பஸ்ச்ரை அழுத்தி கூற வேண்டும். யார் அதிக பதில்கள் கூறுகிறார்களோ அவர்கள் வெற்றியாளர்.

Bigg Boss Tamil 7 Day 2 Task 2 BB House Mates Becomes A Winner Idamporul
Bigg Boss Tamil 7 Day 2 Task 2 BB House Mates Becomes A Winner Idamporul

பெரிய வீட்டில் இருந்து சரவணனும், குட்டி வீட்டில் இருந்து ரவீனாவும் இந்த டாஸ்க்கில் கலந்து கொண்டனர். பிக்பாஸ் கேட்ட கேள்விகளுனுள் சரவணன் அதிக கேள்விகளுக்கு விடை கூறி பிக்பாஸ் இல்லத்தை வெற்றியடைய வைத்தார். ரவீனா தோற்ற காரணத்தினால் பாத்ரூம் கழுவிகிற பொறுப்பும் குட்டி வீட்டு இல்லத்தார்களிடமே ஒப்படைக்கப்பட்டது. ஆக மொத்தம் சமையல், வீடு க்ளீனிங், பாத்ரூம் க்ளீனிங் என ஒட்டு மொத்த வேலையில் குட்டி இல்லத்தார்களின் தலையில் கட்டவிழ்த்து விடப்பட்டது.

Bigg Boss Tamil 7 Day 2 Vichithra And Yugendran Helping In Kitchen For Kutty Housemates Idamporul
Bigg Boss Tamil 7 Day 2 Vichithra And Yugendran Helping In Kitchen For Kutty Housemates Idamporul

பெரிய வீட்டில் இருப்பவர்கள், குட்டி வீட்டில் இருப்பவர்கள் சமைக்கும் போது அவர்களுக்கு எந்த வித உதவிகளையும் செய்ய கூடாது என்பது விதிமுறை. ஆனால் விசித்ரா மற்றும் யுகேந்திரன் அதை மீறிய காரணத்தினால், பிக்பாஸ் அவர்களால் இருவரும் குட்டி இல்லத்திற்குள் அனுப்பப்பட்டனர்.

Bigg Boss Tamil 7 Day 2 Pradeep Unwantedly Rising Some Question To Contestant Idamporul
Bigg Boss Tamil 7 Day 2 Pradeep Unwantedly Rising Some Question To Contestant Idamporul

பிரதீப் அவ்வப்போது கொஞ்சம் தேவையில்லா கேள்விகளை இல்லத்தார்களிடையே முன்வைக்கிறார். இதனால் பிரதீப்பிற்கும், கேப்டன் விஜய் அவர்களுக்கும், விசித்ரா அவர்களுக்கும் இடையே ஒரு குட்டி விவாதம் நடைபெற்றது. கேப்டன் விஜய் கொஞ்சம் பொறுப்புணர்வுடன் தெளிவாக பேசுகிறார். ஆனால் பிரதீப் கேமரா தன் மீது பட வேண்டும் என்பதற்காக மட்டும் ஒரு சில கருத்துக்களை முன் வைப்பது போல இருக்கிறது.

Bigg Boss Tamil 7 Day 2 Thala Ajith Vera Maari Song Dance Idamporul
Bigg Boss Tamil 7 Day 2 Thala Ajith Vera Maari Song Dance Idamporul

போட்டியாளர்களின் வைஃபிற்காக தல அஜித்குமார் அவர்களின் ‘வேற மாறி வேற மாறி’ என்ற பாடல் ஒலிக்கப்பட்டது. போட்டியாளர்களும் அந்த பாடலுக்கு ஏற்ப வெறித்தனமாக நடனம் ஆடினர். நேத்து தளபதி சாங்கு, இன்னிக்கு தல சாங்கா? நல்லா மெயிண்டெயின் பண்றீங்க பிக்பாஸ்.

Bigg Boss Tamil 7 Day 2 Gold Star Task Know Your Housemates Idamporul
Bigg Boss Tamil 7 Day 2 Gold Star Task Know Your Housemates Idamporul

அடுத்ததாக கோல்டு ஸ்டார் டாஸ்க். இது ஒரு வீக்லி டாஸ்க். இந்த டாஸ்க்கில் வெற்றி பெறுபவர்களுக்கு ஒரு கோல்டு ஸ்டார் வழங்கப்படுமாம். அப்படி ஒவ்வொரு வாரமும் வெற்றி பெற்று 5 கோல்டு ஸ்டார்களை ஒரு போட்டியாளர் பெற்று விட்டால், முதல் 10 வாரத்திற்குள் ஏதாவது ஒரு தடவை மட்டும் நாமினேசனில் இருந்து அவர் தப்பித்துக் கொள்ளலாம் என்பது ரூல். அந்த வகையில் இந்த வாரத்திற்கான கோல்டு ஸ்டார் டாஸ்க் ‘கிசு கிசு’

அதாவது ஒவ்வொரு போட்டியாளர்களும் ஏதாவது ஒரு போட்டியாளரை தெரிவு செய்து அவருக்கென கொடுக்கப்படும் கிசு கிசுக்களை இணைத்து கற்பனையாக ஒரு கதை சொல்ல வேண்டும். யார் நன்றாக கிசு கிசுக்களை எல்லாம் இணைத்து கற்பனை கதைகளை சொல்கிறார்களோ அவர்களுக்கு ஒரு கோல்டு ஸ்டார் வழங்கப்பட்டும்,

Bigg Boss Tamil 7 Day 2 Cool Suresh In Kisu Kissu Story About Vishnu Idamporul
Bigg Boss Tamil 7 Day 2 Cool Suresh In Kisu Kissu Story About Vishnu Idamporul

கிசு கிசு டாஸ்க்கில், கூல் சுரேஷ் அவர்கள் விஷ்ணு குறித்து கூறிய கிசு கிசு கதை ரொம்பவே அருமையாக இருந்தது. அனைவரையும் குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்தது. ஆனால் கேப்டன் விஜய், சரவணனையே வின்னராக தேர்ந்து எடுத்ததால் அவருக்கே கோல்டு ஸ்டாரும் வழங்கப்பட்டது.

“ ஆக மொத்தம் இன்றைய தினம் ஜோவிகா, சரவணன் டாஸ்க்கில் கலக்கல், கூல் சுரேஷ் இல்லத்திற்குள் நிறையவே கல கலப்பை விதைக்கிறார். விஜய் அவர்களின் கேப்டன் இயல்பு பிரமாதம். பிரதீப் தேவையான நேரங்களில் மட்டும் கேள்விகளை முன் வைக்கலாம், அவ்வளவு தான் இரண்டாம் நாளின் சுவாரஸ்ய நிகழ்வுகள்“

மீண்டும் நாளைய பிக்பாஸ் ரிவ்யூவில் சந்திப்போம். இப்படிக்கு இடம்பொருள் இல்லத்தில் இருந்து உங்கள் லெ. ரமேஷ் !

About Author