Bigg Boss Tamil 7 | Day 20 | Review | ‘உணர்த்தப்பட்ட தவறு, உணர்ந்து கொள்ளாத யுகேந்திரன்’
பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், இருபதாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம்.
ஹைலைட்ஸ்: ஸ்மால் பாஸ் இல்லத்துக்கான வாழ்த்து சேதி – இந்த வார சுவாரஸ்யங்கள் பற்றி – கேப்டன்சி – தடைக்கல் – கேப்டன்சி நாமினேசன் மற்றும் டாஸ்க் – சேவ் செய்யப்பட்டவர்கள் – சுவாரஸ்யங்கள் – இந்த வீக்கில் பலமான மற்றும் பலமற்றவர்களாக தெரிந்தவர்கள்.
ஒரு குறுகிய இடம், அவ்வளவாக வசதிகள் இல்லை, எப்போதும் வேலைகள் என்றிருக்கும் போது கூட, ஸ்மால் பாஸ் இல்லத்தினர் அவ்வளவு மகிழ்வாக இருந்தனர். ஆனால் பிக்பாஸ் இல்லத்தில் எல்லா வசதிகள் இருந்தும் கூட, போட்டியாளர்களிடம் அந்த மகிழ்வை உணர முடியவில்லை. ஆதலால் மகிழ்வு என்பது இருக்கும் இடத்தையோ, வசதியையோ பொறுத்தது அல்ல. அது மனிதர்களை பொறுத்தது என்பதை உணர்த்திய ஸ்மால் பாஸ் இல்லத்தினருக்கு வாழ்த்துக்களை கமல்ஹாசன் தெரிவித்தார்.
அடுத்தகட்டமாக இந்த வார ஸ்வாரஸ்யங்கள் குறித்து இல்லத்தார்களிடம் கருத்து கேட்கப்பட்டது. ரொம்ப போரிங், தனியாவே இருந்த மாறி இருந்தது, பொழுது போக்குக்கான பிராங்க கூட கெடுத்து விட்டாங்க. ஸ்வாரஸ்யம் பெருஷா ஒன்னும் இல்ல, என்ற கருத்துக்களை எல்லாம் பிக்பாஸ் இல்லத்தார்களிடம் இருந்து கேட்க முடிந்தது.
சுவாரஸ்யமா தான் இருந்தது சார், எங்களாலையும் ஒரு சில டாஸ்க் பங்கெடுக்க முடிஞ்சது, நாங்க ஹேப்பியா தான் இருந்தோம் சார், செம்ம ஜாலியா இருந்தோம், இந்த வீடு அப்படியே பழகிடுச்சு சார், எதுனாலும் உடனே உடனே பேசி சார்ட் அவுட் பண்ணிக்க முடியுறதுனால இந்த வீடு எப்பவும் ஹேப்பியா இருக்கு சார், என்ற கருத்துக்களை எல்லாம் பிக்பாஸ் இல்லத்தார்களிடம் இருந்து கேட்க முடிந்தது.
அதற்கு பின்னர், யுகேந்திரன் கேப்டன்சி பற்றி கேப்போமேன்னு பிக்பாஸ் இல்லத்துல இருந்து 3 பேர், ஸ்மால் பாஸ் இல்லத்துல இருந்து 3 பேர் தனியா உக்கார வைக்கப்படுறாங்க. ட்விஸ்ட் என்னன்னா ஸ்மால் பாஸ் இல்லத்துல இருந்து வந்த எல்லாமே அவருக்கு பாசிட்டிவ் ரிவ்யூஸ், பிக்பாஸ் இல்லத்துல இருந்து வந்த எல்லாமே நெகட்டிவ் ரிவ்யூஸ். சாப்பாடு விஷயத்துல நல்ல விதமா நடந்து கிட்டதாகவும், டாஸ்க் மேட்டர்ல அக்ஷயாவுக்கு பதிலா பங்கெடுத்ததையும் சுட்டி காட்டி ஸ்மால் பாஸ் இல்லத்தினர் யுகேந்திரனுக்கு முழுவதுவாகமே பாசிட்டிவ் ரிவ்யூ தான் கொடுத்தனர். அங்க தான் ஒரு ட்விஸ்ட்.
பிக்பாஸ் மேட் நிக்ஸன், கேப்டன் யுகேந்திரனை வறுத்தெடுக்க ஆரம்பித்தார். கேப்டனுக்கான மரியாதை இங்கு பறி போய் இருந்தது. அது போக அவர் டாஸ்க்கில் ஒரு ஸ்ட்ரேட்டஜி வகுத்து இருந்தார். அவருடைய ஸ்ட்ரேட்டஜி சிலிண்டர்களை எடுப்பது போல எடுத்து விட்டு எங்களிடமே கொடுத்திடுவார் என்பது தான் என்று அவரைப்பற்றி ஒவ்வொன்றாக அவிழ்த்து விட்டதும், ஒட்டு மொத்த ஸ்மால் பாஸ் இல்லத்தார்களின் முகத்திலும் ஷாக்கிங் ரியாக்சனை பார்க்க முடிந்தது. காரணம் அவர் இப்படி ஒன்று செய்திருப்பார் என்று அவர்களுக்கு தெரியாது. அவர் இல்லாமலே இருந்து இருந்தால் கூட அவர்கள் ஸ்மால் பாஸ் இல்லத்தார்கள் ஜெயித்து இருப்பார்கள் போல. அந்த அளவிற்கு சிறப்பாக தான் டாஸ்க்கில் செயல்பட்டார்கள். மொத்தத்தில் ஒரு கருப்பு ஆடாக சென்று ஸ்மால் பாஸ் இல்லத்தின் வெற்றியை பிடுங்கி, பிக்பாஸ் இல்லத்திடம் கொடுத்து விட்டார் அவ்வளவு தான்.
யுகேந்திரன் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை கடைசி வரை பொதுமேடையில் ஒத்துக்கவே இல்லை. சத்தியம் கூட செய்தார். ஆனால் மக்கள் அனைத்தையும் பார்த்து கொண்டு தான் இருந்தார்கள் என்பதை அவர் உணரவில்லை போல. முகம் முழுக்க ஒரு குற்ற உணர்ச்சியோடு இருந்தது. ஸ்ட்ரேட்டஜி தான் என்று சொல்லி விடுங்களேன் என்று கமல் ஹாசன் வற்புறுத்தி கேட்ட போது தான் அதையும் ஒத்துக் கொண்டார்.
தடைக்கல், இந்த வீட்டில் என் வெற்றிக்கு யார் தடையாக இருக்கிறார்கள், மற்றவர்களின் வெற்றிக்கு யார் தடையாக இருக்கிறார்கள் என்ற காரணங்களை கூறி ஒவ்வொருவரும் தடைக்கல்லை இருவரிடம் கொடுக்க வேண்டும், ஒருவருக்கே கூட இரண்டு கற்களையும் கொடுக்கலாம் என்பது டாஸ்க்.
பெரும்பாலான கற்கள், மாயா (11) மற்றும் ரவீனாவையே (5) சுற்றி வந்தது. அவர் அடுத்தவருடைய வெற்றிக்கு தடையாக இருக்கிறார். பூர்ணிமா அவரால் மறைக்கப்படுகிறார். ஒட்டு மொத்த இல்லத்தார்களுக்கும் தடையாகவே இருக்கிறார் என்ற காரணங்களை கூறி மாயாவிற்கு இல்லாத்தார்கள் 11 தடைக்கல்லை வழங்கினார். மாயா அந்த விடயத்தையும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஒரு போட்டினா எல்லாத்துக்கும் தடையா தானே சார் இருக்கனும். நான் இத்தன பேருக்கு தடையா இருக்கிறதயே பெருமையா நினைக்கிறேன் சார் என தடைக்கல்லை வைத்து கூட ஒரு பாசிட்டிவ் வைஃப் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டார்.
ரவீனா பெரும்பாலும் மணியுடன் இருப்பது போலவே இருக்கிறது. நாமினேசன், மற்ற விஷயங்கள் எல்லாம் இருவரும் ஒன்றாக சேர்ந்து முடிவெடுப்பது போல தெரிகிறது. நாங்களாம் பிக்பாஸ்ல இருக்கிறோம், ஆனா ரவீனா மற்றும் மணி வேற ஒரு நிகழ்ச்சில இருக்குற மாறி இருக்கிறாங்க, மணியோட வளர்ச்சிக்கு தடைக் கல்லா இருக்காங்க என்பதை எல்லாம் கூறி 5 தடைக்கல்லை ரவீனாவிற்கு இல்லத்தார்களுக்கு வழங்கினர். ரவீனாவால் பெரிதாக இந்த விடயங்களுக்கு எல்லாம் எதிர்கருத்து கூற முடியவில்லை. காரணம் அவர் செய்ததை தான் இங்கு இல்லத்தார்கள் கூறி இருந்தனர்.
அடுத்தகட்டமாக கேப்டன்சிப் நாமினேசன், வழக்கம் போல பிக்பாஸ் இல்லத்தாரில் இருந்து இரண்டு பேர், ஸ்மால் பாஸ் இல்லத்தில் இருந்து இரண்டு பேர் நாமினேசன் செய்ய வேண்டும். பிக்பாஸ் இல்லத்தில் இருந்து இறுதியாக விஜய் மற்றும் நிக்ஸன் நாமினேட் செய்யப்பட்டனர். ஸ்மால் பாஸ் இல்லத்தில் இருந்து ஒருமனதாக பூர்ணிமா நாமினேட் செய்யப்பட்டார்.
அடுத்ததாக OTP கன்வின்சிங் டாஸ்க், கார்டன் ஏரியாவில் பல நம்பர்ஸ் வைக்கப்பட்டு இருக்கும், இல்லத்தார்கள் அதை ஓடி போய் எடுக்க வேண்டும். பின்னர் ஸ்க்ரேட்ச் கார்டு ஒன்று கொடுக்கப்பட்டு இருக்கும், அதில் இருக்கும் நம்பர்களை சுரண்டி அதில் எந்த நான்கு நம்பர் வருகிறதோ, அந்த நான்கு நம்பரை வைத்து இருக்கும் போட்டியாளர்கள் மட்டும் தனியாக வர வேண்டும். அந்த நான்கு பேரை பேசி கன்வின்ஸ் செய்து யார் நான்கில் அதிக பட்ச நம்பர்களை பெறுகிறார்களோ அவர்களே இந்த வாரத்தின் கேப்டன்.
விஜய் மற்றும் நிக்ஸன் இதுவரை நிகழ்ந்தவைகள் நிகழாது. உணவு விஷயங்கள், கேப்டனோட பவர பார்பீர்கள் என சிலவற்றை கூறி கன்வின்ஸ் செய்ய முனைந்தனர். ஆனால் பூர்ணிமா ஒரு கேப்டன் என்ன என்ன செய்ய வேண்டும் என்பதையெல்லாம் கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் மேலோட்டமாக கூறி இல்லத்தில் இருப்பவர்களையும் சரி, பார்வையாளர்களையும் சரி செம்மையாக இம்ப்ரஸ் செய்தார். பூர்ணிமாவுக்குள்ள இவ்வளவு திறமையா என்று வியக்கும் அளவிற்கு அவரின் பேச்சு இருந்தது. இறுதியில் நான்கில் 3 பேர் பூர்ணிமாவால் கன்வின்ஸ் ஆகி, பூர்ணிமா அடுத்த வாரத்திற்கான கேப்டனாக தேர்ந்து எடுக்கப்பட்டார். பிக்பாஸ் 7 இல்லத்தின் முதல் பெண் கேப்டன், அது போக ஸ்மால் பாஸ் இல்லத்தில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட முதல் கேப்டன் என்ற பெருமையை பெற்றார் பூர்ணிமா.
நிக்ஸனுக்கு பூர்ணிமா மீது என்ன காண்டு என்று தெரியவில்லை. அவர் கேப்டனாக தேர்ந்து எடுக்கப்பட்டதற்கு ஆக்ரோஷமாக ஒரு சில வார்த்தைகளை கூறிக் கொண்டு இருந்தார். அது என்ன முதல் பெண் கேப்டன், கேப்டனுக்கு ஏன் பாலின பாகுபாடு, என்னங்க பொழுது போக்கு, பொழுது போக்கா இருக்கனும்னா போட்டியாளராவே இருந்திட்டு போக வெண்டியதானே, எதுக்கு கேப்டனாக இருக்க வேண்டும் என நிக்ஸன் புலம்பி தள்ளிக் கொண்டு இருந்தார். அவருக்கு பூர்ணிமா கூறிய மற்ற நியாயமான விஷயங்கள் கண்ணில் படவில்லை போல, பொழுது போக்கு, முதல் பெண் கேப்டன் என்பதை மட்டும் பிடித்து தொங்கி கொண்டு இருந்தார்.
இந்த சனிக்கிழமை எபிசோடில் ஒட்டு மொத்தமாக 3 பேர் சேவ் செய்யப்பட்டனர். முதலாவதாக ஒட்டு மொத்த பார்வையாளர்களின் க்ளாப்ஸ்களை அள்ளி பிரதீப் சேவ் செய்யப்பட்டார். இரண்டாவதாக நிக்ஸனும், மூன்றாவதாக மாயாவும் சேவ் செய்யப்பட்டனர்.
சுவாரஸ்யங்கள்: யுகேந்திரனின் மூக்கு உடைபட்டது சுவாரஸ்யமாக இருந்தது. மணி – ரவீனா இருவருக்கும் இடையேயான உண்மைகள் உடைபட்டது, பிரதீப், நிக்ஸன் ஆர்மியின் க்ளாப்சுகள், பூர்ணிமாவின் தெளிவான கருத்துக்கள் உள்ளிட்டவைகள் எல்லாம் இந்த எபிசோடின் சுவாரஸ்யங்கள்.
பலமாக தெரிந்தவர்கள்: விஷ்ணு மற்றும் மாயாவிடம் ஒரு முழு மாற்றம் தெரிந்தது இருவருமே இந்த வாரம் தங்களுடைய ஓட்டுக்களை அதிகப்படுத்தி இருக்கின்றன. பூர்ணிமா ஒரு பெரிய அடி முன்னெடுத்து வைத்து இருக்கிறார். ஐஷூவின் கருத்து தெளிவானதாக இருக்கிறது. அவர் கொஞ்சம் ஒரு சில கருத்துக்களை முன்னெடுத்து வைத்தால் பலமானவராக தெரிய வாய்ப்பு இருக்கிறது.
பலமற்றவர்களாக தெரிந்தவர்கள்: மணி மற்றும் ரவீனா பெரும்பாலும் இவர்கள் வீட்டில் என்ன செய்கிறார்கள் என்றே தெரியவில்லை. வினுஷா வீக்கானவர் என்றால் அவர் விளையாடவாவது முயற்சிக்கிறார். ஆனால் இவர்கள் இருவரும் அப்படி இல்லை. அவர்களுடைய கேமையும் கெடுத்து மற்றவர்களின் கேமையும் கெடுக்கின்றனர். விக்ரமும் இந்த வீக்கில் பெரிதாக தெரியவில்லை.
“ ஒட்டு மொத்தமாக யுகேந்திரன் என்பவரின் பிம்பம் உடைக்கப்பட்டது, மணி, ரவீனா இருவரின் ஆட்டம் பொதுவெளியில் உடைக்கப்பட்டது, பூர்ணிமா கேப்டனாக தேர்ந்து எடுக்கப்பட்டது, கமல்ஹாசன் அவர்களின் நெத்தியடி கேள்விகள் என்று இந்த எபிசோடு ஒட்டு மொத்தமாக ஒரு கலக்கல் எபிசோடு தான் “
மீண்டும் நாளைய பிக்பாஸ் ரிவ்யூவில் சந்திப்போம். இப்படிக்கு இடம்பொருள் இல்லத்தில் இருந்து உங்கள் லெ. ரமேஷ் !