Bigg Boss Tamil 7 | Day 21 | Review | ‘அட்வைஸ்கள் பொழிந்த கமல்ஹாசன், விஜய் வர்மாவின் வெளியேற்றம்’
பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், இருபத்து ஒன்றாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம்.
ஹைலைட்ஸ்: கூல் சுரேஷ் ‘ராசி பலன்’ பிரச்சினை – கடந்து வந்த பாதை டிஸ்கஸன் – சிலிண்டர் டாஸ்க் டிஸ்கஸன் – எலிமினேசன் – எமோசனல் கூல் சுரேஷ் – புத்தக பரிந்துரை – கேப்டன் செலக்ஷன் ஆஃப் ஸ்மால் பாஸ் இல்லத்தினர் – நிக்ஸன், ஐஷூ கான்வர்சேஷன் – கமல் ஹாசன், மணிரத்னம் டீசர் அப்டேட் – விஜய் அட்வைஸ்சஸ்
கூல் அவர்கள் ராசி பலன் கூறிய போது, ஒரு ஃப்ளோவில் விசித்ரா அவர்களை கொஞ்சம் பாடி ஷேமிங் செய்து விட்டார். அது அப்போதே கண்டிக்கப்பட்டது. அவரும் மன்னிப்பு கேட்டு விட்டார். ஆனால் மாயா யாரிடமோ, ‘பாரேன் இத பத்திலாம் கமல் சார் கேக்க மாட்டாரு’ என கூறினாராம். அதற்காகவே இந்த பிரச்சினையை கமல் அவர்கள் கையில் எடுத்தது போல இருந்தது. ஒரு நல்ல காமெடி என்பது தன்னை தாழ்த்திக் கொண்டு பிறரை சிரிக்க வைப்பதே தவிர, பிறரை தாழ்த்தி பேசி சிரிப்பை கொண்டு வர முயல்வது அல்ல, திருத்திக் கொள்ளுங்கள், அதே சமயம் மன்னிப்பை கேட்கும் போது கண்களை நேராக பார்த்து மன்னிப்பு கேளுங்கள் என அட்வைஸ் கூறினார்.
நிக்ஸன், இத பேசினா நமக்கு க்ளாப்ஸ் கிடைக்கும் அப்படினே பேசுறாரோன்னு சில சமயங்கள்ல தோனுது. ஏன்னா கூல் சுரேஷ்க்கு பாடி ஷேமிங் க்ளாஸ் எடுத்த அவரு, ‘எஸ்டிஆரின் பத்து தல, கூல் சுரேஷ் சொட்ட தல’ன்னு அவருமே கூல் சுரேஷ் அவர்கள கிண்டல் பண்ணி இருக்கிறாராம். கூல் சுரேஷ் கண்டிக்கத்தக்கவர் என்றால், நிக்ஸனும் கண்டிக்கதக்கவரே. யார் பாடி ஷேமிங்கை எந்த வகையில் செய்தாலும் அது கண்டிக்கதக்கது தான்.
’கடந்து வந்த பாதை’ டாஸ்க்கின் போது கதை போரிங்கா இருந்தால் பஸ்சரை அழுத்தலாம் என்ற ஒரு ஆப்சன் இருந்தது. ஆனால் யாருமே அதை பயன்படுத்தவில்லை. ஆனால் யாருமே கதையை தெளிவாக சுவாரஸ்யமாக சொல்லவில்லை என்பது தான் உண்மை. நம்முடைய கதை என்பது நம்மை மக்களுடன் இணைக்கும் ஒரு தூண். நீங்கள் அதற்கான கொஞ்சம் ஒரு சில முன்னெடுப்புகள் செய்து இருக்க வேண்டும் என கமல் அவர்கள் ஒரு சில அட்வைஸ்களை போட்டியாளர்களுக்கு வழங்கினார். உண்மையில் போரிங்காக இருந்தது விஜய், ரவீனா உள்ளிட்டோரின் கதைகள் தான் என இல்லத்தார்களும் ஒப்புவித்தனர்.
அடுத்தகட்டமாக சிலிண்டர் டாஸ்க்கில் அக்ரஸன் இருந்ததா என கமல் ஹாசன் அவர்கள் கேள்வி எழுப்பினார். பெரும்பாலானோரிடம் இருந்து, ஆம் இருந்தது, தேவையில்லாத அக்ரஸனும் இருந்தது என போட்டியாளர்கள் கூறினர். ஆனால் அதிகமாக அடி வாங்கிய பிரதீப், ‘இதெல்லாம் கேம்ல நார்மல் தான் சார், நான் இதெல்லாம் அக்சப்ட் பண்ணிக்கிறேன் சார்’ என்று கூறினார். பிரதீப் அவர்களின் அந்த வார்த்தை, கமல்ஹாசன் அவர்களால் பாராட்டப்பட்டது, கேம் என்றால் ஒரு சில அக்ரஸன்ஸ் இருக்கும், நம்முடைய சொந்த விளையாட்டுக்களான கபடி உள்ளிட்டவைகளில் இல்லாத அக்ரஸ்சான இந்த கேமில் இருந்து விட போகிறது. ஆனால் அந்த அக்ரஸன் எல்லை மீறினால் கேமை நிறுத்துவது தப்பில்லை. அந்த வகையில் ’மாயா இதுக்கு மேல நான் விளையாடலப்பா’ என மறுத்ததும் எனக்கு பிடித்து இருந்தது என கமல்ஹாசன் கூறினார்.
ஒவ்வொருத்தராக காப்பாற்றப்பட்டு, இறுதியாக விஜய் மற்றும் வினுஷா என இருவரும் எவிக்சன் பிராசஸ்சில் இருந்தனர். பின்னர் இல்லத்தார்களிடம் கருத்து கேட்கப்பட்டது. பெரும்பாலானோர் வினுஷா என்றே கூறினர். அவரது உடல் நலக்குறைபாடும், அவர் பெரும்பாலும் ஆக்டிவாக இல்லாததனாலும், அவர் எலிமினேட் செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது என இல்லத்தார்கள் கூறினர். ஆனால் அங்கு தான் ஒரு ட்விஸ்ட்.
விஜய் அவர்கள் எலிமினேட் செய்யப்பட்டார், முதல் வீக் கேப்டனாக அவருடைய கேம் என்பது பாராட்டத்தக்கது. ஆனால் கண்டிப்புகள், ஸ்ட்ரைக் எப்போது வந்ததோ அதிலிருந்து கொஞ்சம் இல்லத்தில் இன்ஆக்டிவாக இருந்து விட்டார். கொஞ்சம் அக்ரஸ்சனை குறைத்துக் கொண்டு, முதல் வாரம் விளையாடியது போலவே அவ்வப்போது கேள்விகள் எழுப்பி தன்னை முன் நிறுத்தி இருந்தால் நிச்சயம் ஒரு டஃப் ஆன போட்டியாளராக கடைசி வரை இருந்து இருப்பார்.
விஜய் அவர்கள் எலிமினேசனுக்கு பின் அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் கொஞ்சம் எமோசனலாக இருந்தது. தன்னுடைய மியூச்சுவல் பண்ட்ஸ் காயினை யாராவது ஒருவருக்கு கொடுத்து விட்டு செல்ல வேண்டும் என்னும் போது, ‘இந்த வீட்டில் குடும்பத்தை கூல் சுரேஷ் அவர்கள் அதிகமாக மிஸ் செய்கிறார், அவருக்கு இந்த காயினால் அவர் குடும்பத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் நான் ஹேப்பி’ என்று அவர் கூறியதும் கூல் சுரேஷ் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் துளிகள். அது பார்வையாளர்களுக்குமே கொஞ்சம் எமோசனலாக தான் இருந்தது. அவர் அந்த அக்ரஸ்சனை மட்டும் காட்டாமல் இருந்து இருந்தால் நிச்சயம் கடைசி வீக் வரை இருந்து இருப்பார் என்பதி ஐயமில்லை. கடைசியாக வெளியேறும் போது, தன் பயண வீடியோவை பார்த்து விட்டு ஒவ்வொருவருக்கும் ஒரு அட்வைஸ் கூறிக் கொண்டு வெளியேறினார்.
ஐப்பான் நாட்டில் உள்ள ஒரு தீவு, உலகிலேயே அதிக வயதானவர்கள் நல்ல உடல் நலத்துடன் இருக்கும் ஒரு நாடு அது. அவர்கள் எப்படி அப்படி இருக்கிறார்கள் என்பதை ஆராய்ந்த போது, ஒவ்வொரு நாளும் அவர்கள் மகிழ்வுக்கான காரணத்தை தேடிக் கொண்டு அந்த நாட்களை கழிப்பார்களாம். இதை மையப்படுத்தி ஹெக்டர் கார்சியா மற்றும் பிரான்சஸ் மிரால்ஸ் எழுதிய புத்தகமான ‘Ikigai’ புத்தகம் தான் இந்த வாரத்திற்கான புத்தக பரிந்துரை.
புத்தகத்தை படிக்க நினைப்பவர்கள் இதில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்:
கமல்ஹாசன் அவர்கள் நாயகன் திரைப்படத்திற்கு பிறகு மணிரத்னம் அவர்களுடன் 36 வருடத்திற்கு பின் இணைய இருக்கிறார். அறிவிப்பு 2022-லேயே வந்து இருந்தாலும் கூட அந்த படத்தின் அப்டேட் வெளியில் வராமலலே இருந்த நிலையில், படத்தின் டீசர் அப்டேட் ஒன்றை கமல்ஹாசன் அவர்கள் பிக்பாஸ் மேடையில் கூறி இருந்தார். நவம்பர் 7 அன்று டீசர் ஒன்றை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம். பிக்பாஸ்சில் ஒரு சர்ப்ரைஸ் மூவி அப்டேட்.
அடுத்தகட்டமாக ஸ்மால் பாஸ் இல்லத்தினரை கேப்டன் செலக்ட் செய்ய வேண்டும். மூன்று ஸ்டேட்மெண்ட்கள் ஒவ்வொரு ஸ்டேட்மெண்ட்க்கும் இருவரை தேர்வு செய்ய வேண்டும் என்பது டாஸ்க். ‘இவர்களுடன் எந்த உடன்பாடும் இல்லை’ – மணி, யுகேந்திரன், ‘புரிந்து கொள்ளவே முடியவில்லை’ – நிக்ஸன், ஜோவிகா, ‘இவர்களை பற்றி எந்த அக்கறையும் இல்லை’ – பிரதீப், அக்ஷயா, என ஆறு பேர் தேர்ந்து எடுக்கப்பட்டானர், ஒரு தெளிவான பார்வையாக தான் இதை பார்க்க முடிந்தது. பூர்ணிமா இந்த வாரம் கேப்டன்சியில் கலக்குவார் என தோன்றுகிறது.
சுவாரஸ்யங்கள்: பூர்ணிமா மற்றும் பிரதீப்பின் பார்வைகள் கொஞ்சம் தற்போது வியக்க வைக்கிறது. பூர்ணிமா இறங்கி ஆட ஆரம்பித்து இருப்பது பிடித்து இருக்கிறது.
” நிக்ஸன் பல்வேறு குறைகளை போட்டியார்களிடம் வைக்கிறார், இது ரிலேசன்சிப்கான இடம் இல்லன்னு சொல்லிட்டு, அவர் ஐஷூ கூட ஜெல் ஆகுற மாறி இருக்கு. பாடி ஷேமிங் தப்புன்னு சொல்லிட்டு அவரே கூல் சுரேஷ்ச பாடி ஷேமிங்கும் பண்ணி இருக்கிறார். பார்க்கலாம் அவருடைய உண்மை முகம் எது என்று “
மீண்டும் நாளைய பிக்பாஸ் ரிவ்யூவில் சந்திப்போம். இப்படிக்கு இடம்பொருள் இல்லத்தில் இருந்து உங்கள் லெ. ரமேஷ் !