Bigg Boss Tamil 7 | Day 22 | Review | ‘சம பலத்துடன் டாஸ்க்குகளை கையாளும் பிக்பாஸ் மற்றும் ஸ்மால் பாஸ் இல்லத்தினர்’
பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், இருபத்து இரண்டாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம்.
ஹைலைட்ஸ்: Alternative Profession – முதல் ஓபன் நாமினேசன் – Mani Asked Caste To Maya? – Task For Cleaning And Vessel Washing – Ayshu, Nixen, Raveena, Mani Conversation – சுவாரஸ்யங்கள் – பேசப்படலாம்
கேப்டன் ஆன முதல் நாளே பூர்ணிமாவிற்கு ஒரு வெடிகுண்டு வைத்தார் பிக்பாஸ் . அதாவது ஹவுஸ்மேட்ஸ் ஒவ்வொருவருக்கும் பூர்ணிமா, ஒரு Alternative Profession சொல்ல வேண்டும். விஷ்ணு நல்லா வெசல்ஸ் வாஸ் பண்றாரு, அவருக்கு நடிப்பு சான்ஸ் கிடைக்கலனாலும், அத பண்ணிக்கலாம், விசித்ராமா நல்லா துணி மடிக்கிறாங்க, ஐஷு கட்டிப்பிடி வைத்தியம் ஸ்பெசலிஸ்ட்னு சொன்ன இந்த மூன்று Profession மட்டும் கொஞ்சம் இல்லத்தில் சர்ச்சை ஆகியது. மத்தபடி ஒகே.
அடுத்தகட்டமாக இந்த பிக்பாஸ் சீசன் 7 தமிழின் முதல் ஓபன் நாமினேசன் அரங்கேறியது. வழக்கமான ரூல்கள் தான் பிக்பாஸ் இல்லத்தில் இருப்பவர்கள், ஸ்மால் பாஸ் இல்லத்தில் இருப்பவர்களை நாமினேட் செய்ய வேண்டும். ஸ்மால் பாஸ் இல்லத்தில் இருப்பவர்கள், பிக்பாஸ் இல்லத்தில் இருப்பவர்களை நாமினேட் செய்ய வேண்டும். கேப்டனை யாரும் நாமினேட் செய்ய முடியாது. அக்ஷயா மற்றும் விஷ்ணு ஏற்கனவே டைரக்ட் நாமினேசனில் இருக்கிறார்கள்.
பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் நாமினேசன்:
Bigg Boss Contestants | Nomination |
Vishnu | Pradeep, Nixen |
Cool Suresh | Nixen, Jovika |
Vinusha | Pradeep ,Yugendran |
Raveena | Yugendran, Jovika |
Vickram | Nixen, Pradeep |
Aishu | Yugendran, Mani |
Vichithra | Yugendran, Pradeep |
Maya | Mani, Nixen |
Poornima | Mani, Jovika |
ஒட்டு மொத்தமாக, பிக்பாஸ் இல்லத்தினரால் அனைத்து ஸ்மால் பாஸ் இல்லத்தினரும் நாமினேட் செய்யப்பட்டனர்.
ஸ்மால் பாஸ் ஹவுஸ் நாமினேசன்:
Small Boss Contestants | Nominations |
Nixen | Cool Suresh, Vikram |
Akshaya | Vinusha, Cool Suresh |
Mani | Maya, Vinusha |
Jovika | Vickram, Cool Suresh |
Pradeep | Cool Suresh, Maya |
Yugendran | Vinusha, Maya |
ஒட்டு மொத்தமாக நாமினேசனில் இருப்பவர்கள்: பிரதீப், யுகி, நிக்ஸன், ஜோவிகா, மணி, அக்ஷயா உள்ளிட்டோர் ஸ்மால் பாஸ் இல்லத்தில் இருந்தும், கூல் சுரேஷ், வினுஷா, விக்ரம், மாயா, விஷ்ணு உள்ளிட்டோர் பிக்பாஸ் இல்லத்தில் இருந்தும் நாமினேசனுக்குள் வந்தனர்.
மணி அவர்களை மாயா பிற்போக்குவாதின்னு ரெண்டு டைம் சொல்லி இருந்தாங்க, அப்படி என்ன பிற்போக்கா நடந்துகிட்டார்னு எல்லோருக்குமே ஒரு குழப்பம் இருந்தது. மாயா கிட்ட மணி அவருடைய சாதி என்னனு கேட்டதா மாயா, ஐஷுகிட்ட சொல்லிட்டு இருக்காங்க, அது உண்மைலயே நடந்ததா என்னனு தெரியல, ஆனா மணி சொல்றது ‘சிக்கன் சாப்பிட மாட்டியா, பிராமினா நீ?’ என்று மட்டுமே கேட்டதாக சொல்கிறார். நிச்சயம் பஞ்சாயத்து ஒன்று வந்தால் தால் இந்த மேட்டர் என்ன என்பது வெளிப்படும்.
அடுத்தகட்டமாக தோற்த்தவங்க துடைக்கனும் டாஸ்க், உட்கார்ந்து கிட்டே விளையாடுற மாறி ஒரு கால்பந்து களம், மொத்தம் மூன்று ரவுண்டுகள், யார் தோற்குறாங்களோ அவங்களோ இல்லம் தான் துடைக்கனும் என்பது வழக்கமான ரூல், ஸ்மால் பாஸ் இல்லத்துல இருந்து மணியும், பிக்பாஸ் இல்லத்துல இருந்து விஷ்ணுவும் இந்த டாஸ்க்ல பங்கெடுத்து இருந்தாங்க.
டாஸ்க்ல கேப்டன் பூர்ணிமா மற்றும் விஷ்ணு செய்த பவுல் வேலைகளால் ஒரு சில குழப்பங்கள் இருந்தாலும் கூட, மணி செம்மையாக விளையாடினார். ஒரு கட்டத்தில் விஷ்ணுவை எளிதாக வீழ்த்தி, தனது ஸ்மால் பாஸ் இல்லத்தை துடைக்கும் வேலையில் இருந்து காப்பாற்றினார் மணி சந்திரா. ஒரு வழியாக மணி வெளியில் தெரிய ஆரம்பித்து விட்டார். இந்த மணியை தான் பிக்பாஸ் ரசிகர்கள் தேடிக் கொண்டு இருந்தனர்.
அதற்கு அடுத்தபடியாக ‘கழுவ போவது யாரு டாஸ்க்’, கார்டன் ஏரியாவில் வைக்கப்பட்டு இருக்கும் அழுக்கான டீத்தை கொடுக்கப்பட்ட பிரஸ் மூலம் யார் நன்றாக க்ளீன் செய்கிறார்களோ அவர்களே வின்னர். இந்த டாஸ்க்கில் இருவருக்குமே போட்டி பயங்கரமாக நிலவியது. ஒரு கட்டத்தில் மணியை விட கொஞ்சம் சிறப்பாக க்ளீனிங் செய்து இருந்த விஷ்ணு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். பிக்பாஸ் மேட்ஸ் கழுவும் வேலையில் இருந்து தப்பித்து கொண்டனர்.
நிக்ஸன், ஐஷூ இடையே என்ன நடக்கிறது என்றே புரியவில்லை, எப்போதோ நிக்ஸன், காமெடிக்காக எதையோ சொன்னது, ஐஷு அதை சீரியஸ்சாக எடுத்துக் கொண்டார் போல. ஒரு கட்டத்தில் இருவரும் அந்த பிரச்சினையை சரி செய்ய முயலும் போது, ரவீனா குறுக்கிட, அது இன்னொரு பிரச்சினையாக உருவெடுக்கிறது. ரவீனா, நிக்சன் – ஐஷூ இடையே ஏதோ ரிலேசன்சிப் இருப்பதாக நினைத்துக் கொண்டாரா என்ன தெரியவில்லை. ஐஷு அதை மறுக்கிறார், நிக்ஸன் அதை பூசி மொழுகுகிறார். அட்வைஸ் அட்வைஸ்சாக பொழியும் நிக்ஸன், சில நேரம் அந்த அட்வைஸ் தனக்கும் தான் என்பதை மறந்து விடுவார் போல. இது இங்க வேண்டாம் என ரவீனாகிட்ட கூறிய அட்வைஸ் காத்துல போயிடுச்சான்னு தெரியல.
சுவாரஸ்யங்கள்: மணி, துடைக்க போவது யாரு? டாஸ்க்கில் ஜெயித்து கொஞ்சம் தன்னை வெளியில் காட்டிக் கொண்டது கொஞ்சம் சுவாரஸ்யத்தைக் கூட்டியது. மணி டாஸ்க்கில் கொஞ்சம் ஸ்ட்ராங்காக தெரிகிறார். ரவீனாவையே மேய்க்காமல், தொடர்ந்து அப்படியே விளையாடினால் நிச்சயம் அவரது பலத்திற்கு டிக்கெட் டு பினாலே வெல்ல வாய்ப்பு இருக்கிறது.
பேசப்படலாம்: மணி உண்மையில் மாயாவிடம் சாதியை கேட்டாரா என தெரியவில்லை, அதை பற்றி வீக் எண்டில் பேசப்பட வாய்ப்பு இருக்கிறது. ‘கண்டவன்கிட்டலாம் பேச முடியாது’ என பிரதீப் சொன்ன வார்த்தைகளும் கண்டிக்கப்படலாம். பிரதீப் கொஞ்சம் டிஸ்ரெஸ்பெக்டடா இருப்பது நிச்சயம் விவாதம் ஆகலாம்.
“ ஒட்டு மொத்தமாக பிக்பாஸ் அணி, ஸ்மால் பாஸ் அணி இரண்டுமே சமமான பலத்துடன் இருக்கிறது. இந்த வாரம் நிச்சயம் நிறைய சுவாரஸ்யங்களை எதிர்பார்க்கலாம் “
மீண்டும் நாளைய பிக்பாஸ் ரிவ்யூவில் சந்திப்போம். இப்படிக்கு இடம்பொருள் இல்லத்தில் இருந்து உங்கள் லெ. ரமேஷ் !