Bigg Boss Tamil 7 | Day 23 | Review | ‘அக்ஷயா, விஷ்ணு இடையே வெடித்த மோதல், உண்மையில் யார் மீது தவறு?’
பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், இருபத்து மூன்றாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம்.
ஹைலைட்ஸ்: ஷாப்பிங் டாஸ்க் – மூன்று ரிலேசன்சிப் கண்டண்டுகள் – டபுள் கோல்டு ஸ்டார் டாஸ்க் – விஷ்ணு VS Akshaya – இடம் பொருள் ஆராய்ச்சிகள் – சுவாரஸ்யங்கள் – பேசப்படலாம்
இந்த வாரத்தின் முதல் ஷாப்பிங் டாஸ்க், பிரிக் ட்ரான்ஸ்பரிங், பிக்பாஸ் இல்லத்துல இருந்து மாயாவும், ஸ்மால் பாஸ் இல்லத்துல இருந்து யுகியும் இந்த விளையாட்ட விளையாடினாங்க, இரண்டு பேருமே கேமோட ஸ்பிரிட் குறையாம நல்லாவே விளையாடினாங்க, பிரிக்கோட பெயின்ட் அவங்க கைல ஒட்டினதால இன்னும் சிறப்பாக அவங்களால செயல்பட முடில. டாஸ்க்லயும் தோற்த்துட்டாங்க,
பிரிக் பெயிண்ட் கைல ஒட்டின காரணத்த சொல்லி, பனிஷ்மெண்ட்ல பூர்ணிமா டிஸ்கவுண்ட் கேட்க, பிக்பாஸ்சும் அதற்கு ஒப்புக் கொண்டார். ஒரு 5 பேர் உங்களோட ட்ரெஸ்ச தியாகம் பண்ண தயாராகுங்கன்னு சொன்னதும், மாயா, கூல், விஷ்ணு, விக்ரம், ஐஷூ உள்ளிடோர் தியாகம் பண்ண தயாராகினாங்க, ஆனா அங்க தான் ஒரு ட்விஸ்ட், உங்களின் தியாகம் மற்றவங்களுக்கு பாதகம்னு சொல்லிட்டு நீங்க 5 பேர் இந்த வீக் எண்ட் வரைக்கும் என்ன ட்ரெஸ்னாலும் போட்டுக்கலாம். மீது இருக்கிறவங்க யாரும் ட்ரெஸ் சேஞ் பண்ண கூடாதுன்னு பிக்பாஸ் சொல்லிட்டார்.
மணி – ரவீனா தவிர்த்து இந்த வீட்டில் மேலும் இரண்டு ரிலேசன்சிப் கண்டண்டுகள் ஓடிக் கொண்டு இருக்கிறது. ஒன்று நிக்ஸன் – ஐஷூ, இன்னொன்று விக்ரம் – பூர்ணிமா, ரிலேசன் சிப், அட்டாச்மெண்ட் எல்லாம் ஓகே தான், இது எப்படி மற்றவரின் கேமை பாதிக்கும் என்றால், இவர்களுக்குள் ஒரு சாப்ட் கார்னர் இருக்கும், ஒருவரையொருவர் நாமினேட் செய்து கொள்ள மாட்டார்கள், இன்னொன்று ஜோடி ஜோடியாக நாமினேசனில் வன்மத்தை கக்குக்வார்கள். உதாரணத்திற்கு மணியுடன் ஒருவர் சண்டையிட்டால், அவரை ரவீனா நாமினேட் செய்வார், ரவீனாவிடம் ஒருவர் சண்டையிட்டால் மணி அவரை நாமினேட் செய்வார். இது ஒட்டு மொத்தமாக கேமை சுவாரஸ்யம் இல்லாமல் ஆக்கி விடும். இதற்கு ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
அடுத்தகட்டமாக இரு வீட்டார்களுக்குமான பேட்டரி ரீசார்ஜ் டாஸ்க், இதற்கு டபுள் ஸ்டார் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் இருந்தது. அதனால் அனைவருமே டாஸ்க்கிற்கு பயங்கரமாக ஆயத்தம் ஆனார்கள். டாஸ்க் என்னவென்றால், ஒவ்வொருவரின் புகைப்படத்துடன் கூடிய செல்போன் கார்டன் ஏரியாவில் வைக்கப்பட்டு இருக்கும், பஸ்சர் அடித்ததும் போட்டியாளர்கள் ஓடிச் சென்று அதை எடுத்து கையில் வைத்துக் கொள்ள வேண்டும். இன்னொரு பஸ்சர் அடித்ததும் மறுபடியும் ஓடி, கார்டன் ஏரியாவில் இன்னொரு பக்கம் வைக்கப்பட்டு இருக்கும் சார்ஜிக் போர்ட்டில் தன் கையில் இருக்கும் செல்போன் அட்டையை சொறுக வேண்டும். ஒருவர் ஒரு அட்டைகளை மட்டுமே எடுக்க வேண்டும். ஒவ்வொருவரும் வேறு ஒரு போட்டியாளர்களின் புகைப்படம் ஒட்டிய அட்டை செல்போனை மட்டும் தான் எடுக்க வேண்டும். இறுதியாக யாருடைய புகைப்படம் ஒட்டிய செல்போன் அட்டைகள் சார்ஜிங் போர்ட்டில் சொறுகாமல் இருக்கிறதோ அவர்கள் போட்டியில் இருந்து எலிமினேட் செய்யப்படுவார்கள்.
முதல் ரவுண்ட் ஆரம்பித்தது, அக்ஷயா, விசித்ரா உள்ளிட்டோர் ஓடி எடுத்த பிரதீப் மற்றும் யுகேந்திரன் படம் பதித்த செல்போன் அட்டையை சொறுக அவர்களுக்கு சார்ஜிங் போர்ட் கிடைக்கவில்லை. மாயா வேண்டுமென்றே ,மணி இருக்கும் செல்போன் அட்டையை சார்ஜிங் போர்ட்டில் சொறுக மறுத்து வினுஷாவுக்கு வழிவிட்டார். ஆதலால் முதல் ரவுண்டில் பிரதீப், மணி, யுகேந்திரன் எலிமினேட் செய்யப்பட்டனர்.
இரண்டாவது ரவுண்டில் விக்ரம், விசித்ரா உள்ளிட்டோர் ஓடி எடுத்த விசித்ரா மற்றும் மாயாவின் படம் பதித்த செல்போன் அட்டைகளை சொறுக அவர்களுக்கு சார்ஜிங் போர்ட் கிடைக்கவில்லை. மாயா ரவீனாவை டார்கெட் செய்ய, ரவீனா பூர்ணிமாவை டார்கெட் செய்ய, இந்த கேம் ஒட்டு மொத்தமாக பழிவாங்கும் கேமாகவே மாறி விட்டது. ஆக மொத்தமாக இரண்டாவது ரவுண்டில் ரவீனா, விசித்ரா, மாயா, பூர்ணிமா எலிமினேட் செய்யப்பட்டனர்.
மூன்றாவது ரவுண்ட் கொஞ்சம் கலவர ரவுண்டாக மாறியது, அட்டைகளை எடுக்க ஓடும் போது அக்ஷயா, விஷ்ணுவை ப்ளாக் செய்து தள்ளி விட்டதாக கூறி, விஷ்ணு அக்ஷயாவிடம் எகிறு எகிறு என்று எகிறினார். ஒரு கட்டத்தில் அக்ஷயாவின் கைகளை ஹிட்டும் செய்து விட்டார். இதை பார்த்து, விக்ரம், நிக்ஸன் உள்ளிட்டோர் கொதித்து எழ, பிரச்சினை இன்னும் விஸ்வரூபம் எடுத்தது. ஒரு கட்டத்தில் அனைவரும் சமாதனப்படுத்தவே விஷ்ணு கொஞ்சம் சாந்தம் ஆகினார்.
மூன்றாவது ரவுண்டின் முடிவில், கூல் எடுத்த வினுஷா பட அட்டை , அக்ஷயா எடுத்த விக்ரம் பட அட்டை, ஜோவிகா எடுத்த நிக்ஸன் பட அட்டை உள்ளிட்டவைகள் சார்ஜிங் போர்ட் கிடைக்காமல் எலிமினேட் செய்யப்பட்டன. இறுதி ரவுண்டில் கூல் சுரேஷ், ஐஷூ, அக்ஷயா, விஷ்ணு, ஜோவிகா உள்ளிட்டோர் ஸ்டேண்டிங்கில் இருந்தனர்.
இறுதி ரவுண்டில் ஒரே ஒரு போர்ட் மட்டுமே வைக்கப்பட்டு இருக்கும். அதில் யாருடைய போட்டோ ஒட்டிய செல்போன் அட்டை சொறுகப்படுகிறதோ அவரே வின்னர். முதல் பஸ்சர் அடித்ததும் ஓடி சென்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு கார்டுகளை எடுத்தனர். ஜோவிகாவிற்கு கைகளில் கார்டுகள் இல்லை. காரணம் கூல் இரண்டு கார்டுகளை எடுத்து வைத்து இருந்தார். கொடுக்கவேயில்லை. இரண்டாவது பஸ்சர் அடித்தது. ஒவ்வொருவரும் ஓடிச்சென்று அந்த ஒரேயொரு போர்ட்டில் படுத்து விட இறுதியாக பல்வேறு போராட்டங்களுக்கு பின்னர், அக்ஷயா ஜோவிகாவின் படம் போட்ட செல்போன் அட்டையை, இருந்த ஒரேயொரு போர்ட்டில் சொறுகினார். ஜோவிகா டாஸ்க்கில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
ஜோவிகாவிற்கு இரண்டு ஸ்டார்கள் வழங்கப்பட்டது. ஜோவிகாவை வெல்ல வைத்த அக்ஷயாவின் முயற்சியும், பிக்பாஸ் மற்றும் ஹவுஸ்மேட்ஸால் வெகுவாக பாராட்டப்பட்டது. இன்னொரு பக்கம் ‘நம் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகி விட்டதே’ என்பது போல விஷ்ணுவும், ஐஷூவும் நின்று கொண்டு இருந்தனர்.
இடம் பொருள் ஆராய்ச்சிகள்: 1) அக்ஷயா தான் விஷ்ணுவ ப்ளாக் பண்ணாங்கலா?
2) பூர்ணிமா கேப்டன்சிப் டாஸ்க்ல பயாஸ்டா இருந்ததா? இந்த ரெண்டு மேட்டர தான் இந்த ஆராய்ச்சில நாம விவாதிக்க போறோம்.
முதல் பிரச்சினை என்னன்னா அக்ஷயா விஷ்ணுவ ப்ளாக் பண்ணியதாகவும், தள்ளி விட்டதாகவும் விஷ்ணு சண்ட போட்டாரு, அதற்காக வீடியோ ஆதாரங்கள் ஏதும் தெளிவா இல்ல, ஆனா அக்ஷயா மட்டும் தான் ப்ளாக் பண்ணாங்களா அப்படின்னு கேட்டா இல்ல.
மூன்றாவது ரவுண்டின் ஆரம்பத்தில் முதலில் விஷ்ணு தான், அக்ஷயாவை தன்னுடைய கைகளை வைத்து மறித்து, தள்ளி ஹெவியாக ப்ளாக் செய்து இருக்கிறார். ஆனால் அவர் கீழே விழவில்லை, கொஞ்சம் தடுமாறி அதற்கு பின் ஓடி இருக்கிறார். அதற்கான ஆதாரம் மேலே இருக்கும் போட்டோவில் இருக்கிறது. இரண்டாம் பட்சமாக தான் விஷ்ணு கீழே விழுந்த நிகழ்வு நிகழ்ந்து இருக்கிறது. ஒருவேளை அக்ஷயா தான் விஷ்ணுவை ப்ளாக் செய்து தள்ளி இருந்தார் என்றால் முதலில் விஷ்ணு செய்த செயலுக்கு அது எதிர்வினையாக இருக்கலாம். எதிர்வினை இல்லாத கேமை எல்லாம் பார்க்க முடியுமா என்ன?
இரண்டாவதாக பூர்ணிமாவோட கேப்டன்சிப் டாஸ்க்ல பயாஸ்டா இருந்திச்சான்னா, ஆமான்னு தான் சொல்லனும். அவங்க ஒரு இடத்துல விஷ்ணுவுக்கு ஹெல்ப் பண்ணாங்கன்னே சொல்லலாம். விஷ்ணு டாஸ்குக்கு இடையில ‘என்னோட படத்தையும், ஐஷூவோட படத்தையும் ஒன்னா வச்சிடு’ அப்படின்னு பூர்ணிமா கிட்ட சொன்னாரு.
பூர்ணிமாவும் அத அப்படியே செஞ்சாங்க, விஷ்ணு, ஐஷு போட்டோவ வைக்கிறப்போ சேர்த்து வச்சாங்க, ஒரு கேப்டனா இருந்திட்டு தனி ஒருத்தருக்காக டாஸ்க்ல பூர்ணிமா ஹெல்ப் பண்ணத நிச்சயம் ஏத்துக்க முடியாது.
சுவாரஸ்யங்கள்: ஸ்மால் பாஸ் இல்லத்தார்களின் Anthem, பிரதீப், யுகேந்திரன் கார்த்திக் ராஜா சாங்கிற்கி வைஃப் செய்தது, பேட்டரி ரீசார்ஜ் டாஸ்க் போன்றவை சுவாரஸ்யமாக இருந்தன.
பேசப்படலாம்: மாயா பேட்டரி ரீசார்ஜ் டாஸ்க்கில் மணி, ரவீனாவை டார்கெட் செய்து அடித்தது, விஷ்ணு மற்றும் அக்ஷயா இடையிலான பிரச்சினை, கேப்டன் பூர்ணிமா, விஷ்ணுவிற்கு ஹெல்ப் பண்ணியது உள்ளிட்டவைகள் குறித்து கமல் மேடையில் பேசப்படலாம்.
“ இன்றைய டாஸ்க் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்தது. பேசுவதையே டாஸ்க்காக கொடுக்காமல் இது போல டாஸ்க்குகளையும் அவ்வப்போது கொடுத்தால் அக்ஷயா உள்ளிட்ட வெளியில் தெரியாதவர்களின் திறனும் வெளிப்படும் “
மீண்டும் நாளைய பிக்பாஸ் ரிவ்யூவில் சந்திப்போம். இப்படிக்கு இடம்பொருள் இல்லத்தில் இருந்து உங்கள் லெ. ரமேஷ் !