Bigg Boss Tamil 7 | Day 24 | Review | ‘மணிக்கு டிஸ்லைக் கொடுத்த ரவீனா, காரணம் என்ன?’
பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், இருபத்து நான்காம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம்.
ஹைலைட்ஸ்: Wake Up Song – விசித்ரா Analysis – எமோசனல் மாயா – அப்ரிசியேசன் For பூர்ணிமா – லைக் Or டிஸ்லைக் டாஸ்க்
‘பேர் வச்சாலும், வைக்காம போனாலும் மல்லி வாசம் அது குத்தால சுகவாசம்’ என்ற பாடலுடன் இனிதே விடிகிறது பிக்பாஸ் இல்லம். ஏனோ இன்றைய வேக் அப் சாங்கும், அதற்கான இல்லத்தார்களின் இசைவும் பார்ப்பதற்கு அழகாக இருந்தது. இரண்டு வீட்டார்களும் ஆக்டிவாகவும் பாசிட்டிவாகவும் இருந்ததை உணர முடிந்தது.
ஒவ்வொரு இல்லத்தார்களுக்குமான விசித்ராவின் அனாலிசிஸ் என்பது ஒரு 85 சதவிகிதம் சரியாக இருந்தது என சொல்லலாம். முக்கியமாக மாயாவிற்கு அவர் சொன்னதும் சரியே. ஆனாலும் மாயாவால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மாயா மட்டும் அவருடைய கருத்து வேறுபாட்டை மற்ற போட்டியாளர்களிடம் கொஞ்சம் காட்டமாகவே ஒப்புவித்தார். அந்த நிகழ்வு மட்டும் கொஞ்சம் சர்ச்சை ஆகியது.
ஆனாலும் அந்த நிகழ்வுகளுக்கெல்லாம் பின்னர் மாயா, ‘எனக்கு விசித்ரா பக்கம் நெருங்கினா என் அம்மா நியாபகம் வந்திரும்’ நான் எமோசனல் அப்படின்னு காட்டிக்க கூடாதுன்னு தான் நான் இப்படி இருக்கேன், அப்படின்னு ஒரு வார்த்தை சொல்லி அது வரைக்கும் நிகழ்ந்த ஒட்டு மொத்த நெகட்டிவான நிகழ்வையும் மறக்க வச்சிட்டாங்க மாயா.
கடைசியாக ஒரேயொரு கட்டிப்பிடி வைத்தியத்தில் முடிகிறது இருவருக்குமான அனைத்து பிரச்சினைகளும், ஆனாலும் விசித்ராவை நல்லவர்கள் போல நடிக்கிறார் என்று மாயா சொன்ன அந்த வார்த்தை ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. இன்னொன்று ‘மக்கள் எல்லாம் முட்டாள்களாக இருக்கிறார்கள்’ என்று அவர் சொன்ன வார்த்தையையும் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.
அடுத்த கட்டமாக லைக் Or டிஸ்லைக் கோல்டு ஸ்டார் டாஸ்க், ஒவ்வொருவரும் தனி தனியாக கன்பஃஷன் ரூமிற்கு அழைக்கப்படுவர், ஒவ்வொருவரும் இரண்டு போட்டியாளர்களை தேர்வு செய்ய வேண்டும். அந்த இரண்டு போட்டியாளர்களின் பேமிலி வீடியோ அவர்களுக்கு திரையிடப்படும். எந்த போட்டியாளர்களின் பேமிலி வீடியோ அவர்களை ஈர்த்த்ததோ அவர்களுக்கு லைக்கும், மற்றவருக்கு டிஸ்லைக்கும் கொடுக்க வேண்டும் என்பது டாஸ்க். இறுதியாக எந்த ஹவுஸ்மேட்ஸ்க்கு அதிக லைக் வருகிறதோ அவர்களே வின்னர்.
முதலாவதாக பிரதீப் உள்ளே சென்றார். அவர் கூல் சுரேஷ் மற்றும் ஜோவிகா அவர்களின் பேமிலி வீடியோவை பார்க்க வேண்டும் என்று கூறினார். இருவரின் பேமிலி பேசிய முழு வீடியோவையும் பார்த்து விட்டு, ஜோவிகாவின் தங்கை பேசிய வீடியோ பிடித்ததாக கூறி, ஜோவிகாவிற்கு லைக்கும், கூல் சுரேஷ் அவர்களுக்கு டிஸ்லைக்கும் கொடுத்தார்.
அடுத்தகட்டமாக ரவீனா அவர்கள் பிரதீப் மற்றும் மணி அவர்களின் பேமிலி பேசிய வீடியோவை பார்க்க முற்பட்டார். இரண்டு வீடியோக்களையும் பார்த்து முடித்து விட்டு பிரதீப்பிற்கு லைக்கும், மணிக்கு டிஸ்லைக்கும் கொடுத்தார். மணி ஸ்ட்ரேட்டஜியே இல்லாம கூலா கேம் ஆடுறதா அவங்க ப்ரெண்ட்ஸ் சொன்னாங்க. பட் கேம்னா ஸ்ட்ரேட்டஜி கண்டிப்பா வேணும். அதுனால மணிக்கு டிஸ்லைக் கொடுக்கிறேன் என்று ரவீனா விளக்கம் கூறினார்.
ரவீனா சுயமாக யோசிக்க கூடியவர் ஆகவும், தெளிவான பார்வையிலும் பேசக்கூடியவராகவும் தெரிகிறார். அந்த வகையில் அவர் பிரதீப்பிற்கு லைக் கொடுத்ததும் சரி தான் என்னும் போது, அவருடைய டிசிஸனில் மணிக்கு உடன்பாடு இல்லை. ’என் மனதுக்கு பட்ட தான் நான் செஞ்சேன்’ என ரவீனா சொல்ல, ’அப்போ இன்னொருத்தங்க முன்னாடி வச்சு என்ன தோற்கடிப்பல்ல’, என மணி சொல்ல கான்வர்சேஷன் ஒரு முடிவை எட்டவில்லை. ஆனாலும் மணி பெர்சனல் வேறு, கேம் வேறு என்பதையாவது புரிந்துகொள்ள வேண்டும். புரிந்து கொள்ளவே முடியாது என்றால் அவர் ரவீனாவை விட்டு ஒதுங்கி இருப்பது நலம்.
அடுத்தகட்டமாக மணி அவர்கள், விக்ரம் மற்றும் ரவீனாவின் பேமிலி பேசிய வீடியோக்களை பார்க்க ஆர்வம் காட்டினார். இறுதியில் இரண்டு வீடியோக்களையும் பார்த்து விட்டு, ரவீனாவிற்கு லைக்கும், விக்ரமுக்கு டிஸ்லைக்கும் கொடுத்தார். விக்ரம் அவர்கள் வீட்டில் கூறியது போல அவர் இங்கு அனைவரிடமும் எண்டர்டெயினிங்காக இல்லை என கூறி டிஸ்லைக்குகான விளக்கமும் கூறினார். ரவீனா அவர்கள் வீட்டில் கூறியது போல எப்போதும் ஜாலியாக தான் இங்கும் இருக்கிறார் அதுனால் அவருக்கு லைக் என்றும் கூறினார்.
சுவாரஸ்யங்கள்: விசித்ராவின் அனாலிசிஸ்கள் சுவாரஸ்யமாக இருந்தது, விசித்ரா அவர்களின் ஸ்மால் பாஸ்க்கான புரோபசல் க்யூட்டாக இருந்தது, ஸ்மால் பாஸ் இல்லத்திற்கு உட்கார சேர் கொடுத்து, இதனால் என்ன விளைவுகள் வந்தாலும் சரி என, தைரியமாக ஈகுவலிட்டியை மெயிண்டன் செய்த கேப்டன் பூர்ணிமா பிக்பாஸ்சால் பாராட்டப்பட்ட விஷயம் கைதட்டல்களை வாங்கியது.
பேசப்படலாம்: மணி அவர்கள் ரவீனாவை யோசிக்க விடாமல், அவரது கேமையும் விளையாட விடாமல், தனக்குள் ரவீனாவை அடக்கி வைக்க நினைப்பது குறித்து வீக் எண்டில் பேசப்படலாம்.
” இந்த லைக் ஆர் டிஸ்லைக் டாஸ்க் நன்றாக தான் இருக்கிறது, பேமிலி மெம்பர்கள் அனைவரும் நல்ல விஷயங்களை மட்டும் தான் சொன்னார்களா என்பது தான் கேள்விக்குறியாக இருக்கிறது. ஒரு வேளை சுதாரித்து விடுவார்கள் என்பதற்காக பாசிட்டிவான விஷயங்களை மட்டும் ஒளிபரப்பி இருக்கலாம் “
மீண்டும் நாளைய பிக்பாஸ் ரிவ்யூவில் சந்திப்போம். இப்படிக்கு இடம்பொருள் இல்லத்தில் இருந்து உங்கள் லெ. ரமேஷ் !