Bigg Boss Tamil 7 | Day 25 | Review | ‘சூடு பிடிக்கும் ரேங்கிங் டாஸ்க் முதலிடம் யாருக்கு?’
பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், இருபத்து ஐந்தாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம்.
ஹைலைட்ஸ்: Like Or Dislike Task Result – கேப்டனின் விதி மீறல் – ரவீனா மணி இடையே உருவாகும் விரிசல் – ரேங்கிங் டாஸ்க்
லைக் Or டிஸ்லைக் டாஸ்க்கின் இறுதியில் பிரதீப் மற்றும் நிக்ஸன் இருவரும் 3 லைக்குகள் மற்றும் 1 டிஸ்லைக்குகள் பெற்று சமநிலையில் இருந்தனர். பின்னர் பிக்பாஸ் இரண்டு வீடியோவையும் ஒட்டு மொத்த இல்லத்தார்களுக்கும் போட்டு காண்பித்து விட்டு இருவருக்கும் இடையே ஓட்டெடுப்பு நடத்தினார்.
ஓட்டெடுப்பின் இறுதியில் பிரதீப் பெருவாரியான இல்லத்தார்களின் ஆதரவை பெற்று லைக் Or டிஸ்லைக் டாஸ்க்கின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு ஒரு கோல்டு ஸ்டாரும் வழங்கப்பட்டது. இறுதியாக அனைத்து இல்லத்தார்களுக்கும் நன்றி கூறி விட்டு, ‘போட்டி என்று வரும் போது மட்டுமே என் எதிரிகள் நீங்கள், மற்ற நேரம் இங்கு இருக்கும் அனைவரும் எனக்கு நண்பர்கள் தான்’ என பிரதீப் கூறியது அனைவரையும் நெகிழ வைத்தது.
கேப்டன் பூர்ணிமா விதிகளை மீறி, மேக்கப் பொருள்களை உபயோகித்ததை பிக்பாஸ் சுட்டி காட்டவே முதலில் மழுப்பிய பூர்ணிமா பின்னர் ஒத்துக் கொண்டார். ஏற்கனவே இருவர் செய்த விதி மீறலால் டாஸ்க்கே விளையாடாமல் மேக்கப் பொருள்கள் பறி போனது. அதற்கு அடுத்து என்ன உணவில் கை வைப்பது தான். கேப்டனின் இந்த விதி மீறலுக்கான தண்டனையை, பிக்பாஸ் இல்லத்தார்களிடமே ஒப்படைத்து விட்டார்.
எல்லோரும் மன்னித்து விட முடிவு செய்த போதும் கூட, பிரதீப் மட்டும் ’கேப்டன்சியை விட்டுக் கொடுங்கள், நாமினேசனுக்கு வாருங்கள், நீங்க எங்களுக்கு சேர் கொடுத்ததுக்காக உங்கள விடலாம் அந்த பாயிண்ட நான் ஏத்துப்பேன், நீங்க செஞ்சது ஒரு சின்ன தப்பு தான், ஆனால் கேப்டனா இருந்திட்டு செஞ்சதால அது பெரிய தப்பு. நீங்களே கூட உங்களுக்கான ஒரு தண்டனையை தேர்ந்தெடுத்துக்கோங்க’ என ஒரு விவாதத்தை பூர்ணிமா முன் வைத்தார். தண்டனை இன்னும் Fix செய்யப்படவில்லை. பார்க்கலாம் பிக்பாஸ் என்ன தண்டனை கொடுக்கிறார் என்று!
ரவீனா மற்றும் மணி இடையே கொஞ்சம் கொஞ்சமாக ஒரு பிரிதலை உணர முடிகிறது. மணி ஒவ்வொன்றிற்கும் கேள்வி கேட்பதை, ரவீனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஒரு சமயத்தில் நேரடியாகவே சொல்லி விட்டார். ’நீங்க குழந்தை மாறி நடந்துக்கிறீங்க மணி’ என ரவீனா மணியிடம் நேரடியாக சொல்ல, மணிக்கு கொஞ்சம் உள்ளுக்குள் காண்டு. உண்மையாகவே , 20 வயதில் ரவீனாவிற்கு இருக்கும் மெச்சூரிட்டி, 30 வயதை நெருங்கும் மணியிடம் இல்லை என்பது தான் இங்கு பிரச்சினை. அவரிடம் உண்மையாகவே மெச்சூரிட்டி இல்லையா, இல்லையேல் ரவீனாவிற்காக இங்கு வந்து வேறு ஒரு முகம் காட்டுகிறாரா என்பதை பொறுத்து இருந்து தான் பாக்க வேண்டும்.
முதல் இடத்திற்காக பிரதீப், மாயா, ஜோவிகா இடையே கடும் வாக்குவாதம் நிகழ்கிறது. மாயா ஒரு கட்டத்தில் ’பிரைஸ் மணியை நான் உனக்கு தருகிறேன், நீ எனக்கு முதல் இடத்தை விட்டுக் கொடு’ என கூற பிரதீப்பும் முதல் இடத்தை மாயாவிற்கு விட்டுக் கொடுத்தார். கடைசி வரை வாக்குவாதம் பிரைஸ் மணியை பகிர்வதை வைத்தே சென்றதால் பிக்பாஸ் கடுப்பாகி, நீங்கள் இந்த வீட்டில் இத்துனை நாட்கள் செய்த ஆக்டிவிட்டியை மட்டும் பேசுங்கள், நீங்கள் அந்த இடத்திற்கு ஏன் தகுதியானவர்கள் என்று பேசுங்கள் என கூறினார்.
பின்னர் மீண்டும் பிரதீப் முதல் இடத்தை ஆக்கிரமித்தார், பின்னர் ஜோவிகா அவர்கள் பிரதீப்பிடம் முதல் இடத்திற்காக விவாதம் செய்தார். இரண்டு பேருக்கும் இடையில் மிடில் கிளாஸ் என்ற டைட்டிலை வைத்தே விவாதம் சென்றது. ‘நீங்களாம் மிடில் கிளாஸ்னா நான் என்ன பிச்சைக்காரனா, மிடில் கிளாஸ்னு சொல்லிட்டு பொது மக்கள இன்புளூயன்ஸ் பண்ணாதீங்க’ என பிரதீப் கூறியதும் ஜோவிகாவின் குரல் கொஞ்சம் மேலோங்கியது.
டாபிக் மிடில் கிளாஸ் பத்தியே நீள, ஒரு சமயத்தில் பிரதீப்பின் கோபமும் தூண்டப்பட்டு தேவையில்லாத ஒரு சில வார்த்தைகளை விட்டு விட்டார். ’நான் உன்ன பார்த்து கோபத்துல நாயே-ன்னு ஒரு வார்த்தை சொன்னேன், நான் சொன்ன அந்த வார்த்தைக்காக அந்த முதல் இடத்திற்கு நான் தகுதி இல்லன்னு நினைக்கிறேன், மன்னிச்சிடு’ என்று கூறி விட்டு கடைசி இடத்தை நோக்கி நகர்ந்தார்.
அதற்கு பின்னர் மாயாவிற்கும், ஜோவிகாவிற்கும் இடையே முதல் இடத்திற்கான விவாதம் நடைபெற்றது. விவாதம் நீண்டு கொண்டே சென்றது, ஒரு கட்டத்திற்கு பின் ஓட்டெடுப்பு மூலம் மாயாவா, ஜோவிகாவா என்பதை செலக்ட் செய்து கொள்ளலாம் என முடிவுக்கு வந்தனர். ஜோவிகாவை விட மாயா இல்லத்தார்களிடையே அதிக ஓட்டுக்களையும் ஆதரவையும் பெறவே மாயாவிற்கு முதல் இடத்தை கொடுத்து விட்டு நகர்ந்தார் ஜோவிகா.
இரண்டாவது இடத்தை சரவண விக்ரம் ஆக்கிரமித்து கொள்ள, மூன்றாவது இடத்திற்கு ரவீனாவும், மணியும் ஏதோ குழந்தைகள் சண்டை பிடிப்பது போல மணிக்கணக்காக சண்டையிட்டு கொண்டு இருந்தனர். ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த ரவீனா, மூன்றாவது இடத்தை மணிக்கே விட்டுக் கொடுத்தார். பின்னர் நிக்ஸன் மூன்றாவது இடத்திற்கு வாதிட, ஓட்டெடுப்பு மூலம் மணியை விட நிக்ஸன் இல்லத்தார்களின் ஆதரவை அதிகமாக பெற்றதால் மூன்றாவது இடத்தை நிக்ஸன் பிடித்துக் கொண்டார்.
’அப்ப மறுபடியும் நான் தான் உன்கிட்ட வாதிடனுமா, என நான்காவது இடத்தில் நின்ற ரவீனாவிடம் மணி கேட்க, யப்பா போதும்டா சாமி என நான்காவது இடத்தையும் விட்டுக் கொடுத்து விட்டு தெறித்து ஒடினார் ரவீனா.’
“ நேற்றைய எபிசோடு முடியும் வரை, முதல் இடத்தில் மாயாவும், இரண்டாம் இடத்தில் சரவண விக்ரமும், மூன்றாவது இடத்தில் நிக்ஸனும், நின்று கொண்டு இருக்கின்றனர். மீதி ஸ்பாட்கள் ஏதும் இன்னும் வாக்குவாதத்திற்கு இன்னும் உட்படுத்தப்படவில்லை, இறுதியாக யார் யார் எந்த எந்த ஸ்பாட்களை பிடிக்க போகிறார்கள் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “
மீண்டும் நாளைய பிக்பாஸ் ரிவ்யூவில் சந்திப்போம். இப்படிக்கு இடம்பொருள் இல்லத்தில் இருந்து உங்கள் லெ. ரமேஷ் !