Bigg Boss Tamil 7 | Day 26 | Review | ‘விதிகளை இஸ்டத்திற்கு மீறும் இல்லத்தார்கள், கடுமையாக்கப்படுமா தண்டனைகள்?’
பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், இருபத்து ஆறாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம்.
ஹைலைட்ஸ்: ரேங்கிங் டாஸ்க் ரிசல்ட் – மாயா VS விஷ்ணு – Match Making Shopping Repayment Task – விதிமீறல்கள் – விஷ்ணு VS பிரதீப் – கேட்கப்படலாம்
ஒவ்வொரு சீசனிலும் ரேங்கிங் டாஸ்க் என்றால் ஒரு பைஃயர் இருக்கும், ஆனால் இந்த சீசன் அதற்கு விதி விலக்கு, எந்த இடத்திற்குமே, யாருமே சரியாக வாதிடவில்லை. எல்லா இடங்களுமே அநாதையாக நின்று கொண்டு இருந்தது. யாருமே எந்த இடத்திற்கும் சரியாக உரிமையும் கோரவில்லை. கூல் சுரேஷ் கடைசியாக ஒன்று சொன்னார் ’யாரும் இப்படி ஒரு ரேங்கிங்கு கை தட்டி விடாதீர்கள் அது கேவலம்’ என்று கூறியது ஒரு ஆகச்சிறந்த உண்மை அவ்வளவு தான்.
ரேங்கிங் டாஸ்க் பைனல் ஸ்டேண்டிங் : 1) மாயா, 2) சரவண விக்ரம், 3) நிக்ஸன், 4) யுகேந்திரன், 5) ஜோவிகா, 6) மணி, 7) ரவீனா, 8) ஐஷூ, 9) விசித்ரா, 10) வினுஷா, 11) அக்ஷயா, 12) கூல் சுரேஷ், 13) பூர்ணிமா, 14) விஷ்ணு, 15) பிரதீப்
‘நீங்க ஜெயிச்சிட்டு வெளில போனா 50 லட்சம் கொடுத்திருவீங்களாக்கும், 5 பைசா கூட கொடுக்க மாட்டீங்க, சிரிப்பு காட்டாதீங்க’ என விஷ்ணு கூற, என்னோட வார்த்தைகளை ஜட்ஜ் பண்றதுக்கு நீங்க யாரு, நான் வெளில போய் பண்ண மாட்டேன்னு நீங்க எப்படி முடிவெடுக்கிறீங்க, நீங்க ஒரு புல்ஷீட் என மாயா கடுமையாக பேசி விடவும் விஷ்ணு சற்றே அமைதியானார்.
ஆனாலும் விஷ்ணு அவ்வப்போது பேசும் போது ஒரு சில உண்மைகளையும் வெளிக்கொணர்கிறார். ஒருத்தங்க கூட இருக்கவே பயப்பட்டு, அவங்கள சைக்கோ அப்படி இப்படின்னு சொன்ன மாயா, இப்ப அவங்க கூட அண்ணன், தங்கச்சி அளவுக்கு வந்து இருக்காங்கன்னா அது புரிதலா, இல்ல ’பிரதீப்பிற்கு வெளில க்ளாப்ஸ் அள்ளுது, நாம அவன் கூட ஒரு பாசிட்டிவ் வைஃப் மட்டுமே வச்சுப்போம்’ என யோசித்து விளையாடும் மாயாவின் ஸ்ட்ரேட்டஜியா என்பது தான் புரியாத புதிர்.
அடுத்ததாக ஷாப்பிங் ரீபேமெண்ட் டாஸ்க் – மேட்ச் மேக்கிங், 3 பேர் மொத்தமாக விளையாட வேண்டும், இரண்டு பேர் பிக்பாஸ் இல்லத்தில் இருந்தும், ஒருவர் ஸ்மால் பாஸ் இல்லத்தில் இருந்தும் வருவர். அந்த வகையில், விக்ரம், ஐஷு பிக்பாஸ் இல்லத்தில் இருந்தும், அக்ஷயா ஸ்மால் பாஸ் இல்லத்தில் இருந்தும் டாஸ்க்கை விளையாட தேர்ந்து எடுக்கப்பட்டனர்.
பிளாஸ்மாவின் காட்டப்படும் ஒரு பொம்மை வரிசையை பார்த்து விட்டு, கார்டன் ஏரியாவில் வைக்கப்பட்டு இருக்கும் பல பொம்மை பலகைகளில் இருந்து, தனக்கு காட்டப்பட்ட பொம்மை பலகைகளை எடுத்து, அதை ஒரு பலகையின் மீது சரியான ஆர்டரில் வைக்க வேண்டும். ஐஷூவும், விக்ரமும் நிறைவு செய்யும் முன்னமே பஸ்சர் அடித்து விட்டது. ஐஷூ கொஞ்சம் நேரம் கடத்தி விட்டார். அக்ஷயாவிற்கு விளையாடவே நேரம் கிடைக்கவில்லை. வழக்கம் போல டாஸ்க்கில் தோற்று விட்டனர். உணவு பறிபோனது.
இன்னொரு பக்கம் இங்கிருந்தால் நல்ல சாப்பாடு கிடைக்காது என்பதை அறிந்து கொண்ட கூல், மாயா, ரவீனா உள்ளிட்டோர், ஸ்மால் பாஸ் இல்லத்திற்குள் அடி எடுத்து வைத்தனர். பின்னர் கேப்டனின் பல்வேறு விவாதங்களுக்கு பின்னர் கூல் சுரேஷ், மாயா மீண்டும் பிக்பாஸ் இல்லத்திற்குள் வந்தனர். ஆனால் ரவீனா மட்டும் மறுக்கவே, பிரதீப் உடனே ஸ்மால் பாஸ் இல்லத்தில் இருந்து வெளிவந்து பிக்பாஸ் இல்லத்திற்குள் அடி எடுத்து வைத்தார். ஆள் ஆளுக்கு அவர்களது சூழலுக்கு ஏற்ப விதிகளை வளைத்துக் கொண்டது சர்ச்சையாகி இருக்கிறது.
’நீ காசு பின்னாடி போறவன், பைத்தியக்காரன், மக்கள் முன்னாடி உன்ன கேவலப்படுத்துறேன் பாரு’ என்று ஆயிரம் வன்மங்களை விஷ்ணு, பிரதீப் மீது அள்ளிக் கொட்டிய போதும் கூட ‘அடுத்த வாரம் நீ தான் போயிடுவியே டா’ என்ற ஒற்றை பதிலில் விஷ்ணுவின் வாயை அடைத்தார் பிரதீப். விஷ்ணுவின் வாய் பழைய நிலைக்கு திரும்பியது போல. பிரதீப் மீது செம்ம காண்டாக சுற்றித்திரிகிறார்.
தொடர்ந்து விதிமீறல்கள் அதிகரித்து வரவே, ஸ்மால் பாஸ் இல்லத்தில் கேஸ் கட் செய்யப்பட்டது. மைக்ரோ வேவன் பவர் புடுங்கப்பட்டது. பிக்பாஸ் இல்லத்தார்களுக்கு எப்போதும் கொடுக்கப்படுகிற சாம்பார் சாதம் கூட கொடுக்கப்படவில்லை. ஒரு கட்டத்திற்கு பின்னர் ரவீனாவும், பிரதீப்பும் அவரவர் வீட்டிற்குள் செல்ல, பெல் ஒலித்தது. சாப்பாடு வந்தது. அதே சாம்பார் சாதம் தான். ஸ்மால் பாஸ் இல்லத்திற்குள்ளும் கேஸ்சும், மைக்ரோ வேவனும் ஆன் செய்ப்பட்டது.
கேட்கப்படலாம்: விதிமீறல்கள் பேசப்படலாம், தொடர்ந்து ரவீனாவிற்கு சுதந்திரம் கொடுக்க மறுக்கும் மணி குறித்து பேசப்படலாம். ரேங்கிங் டாஸ்க்கும் நிச்சயம் பேசு பொருளாகும்.
“ தொடர்ந்து நடக்கும் பல்வேறு விதி மீறல்கள், அப்படி என்ன செய்து விட போகிறார்கள் என்ற தைரியம் தான் விதி மீறலுக்கு காரணம் என்று நினைக்கிறேன். தண்டனைகள் கடுமையாக்கப்படுமா?, பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் “
மீண்டும் நாளைய பிக்பாஸ் ரிவ்யூவில் சந்திப்போம். இப்படிக்கு இடம்பொருள் இல்லத்தில் இருந்து உங்கள் லெ. ரமேஷ் !