Bigg Boss Tamil 7 | Day 27 | Review | ‘குறும்படத்தை கேட்டு வாங்கி, பல்பு வாங்கிய விஷ்ணு, ’
பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், இருபத்து ஏழாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம்.
ஹைலைட்ஸ்: நிக்ஸன் மற்றும் ஐஷூ – பேட்டரி டாஸ்க் பிரச்சினைகள் – குறும்படம் – நண்பேண்டா – ரேங்கிங் டாஸ்க் கோளாறுகள் – ஸ்டேட்மெண்ட்கள் – சேவ்டு லிஸ்ட் – கேப்டன்சி நாமினேசன் மற்றும் வின்னர்
நிக்ஸன், ஐஷூ இடையிலான ரிலேசன்சிப் நாளடைவில் ஒரு புரியாத புதிர் போல நகர்கிறது. ‘அதுக்கான இடம் இது இல்ல’ன்னு பக்கம் பக்கமா பேசிட்டு மணி என்ன பண்ணிட்டு இருந்தாரோ அதையே நிக்ஸனும் பண்ற மாறி இருக்கு. உதாரணத்துக்கு ஒரு டாஸ்க்ல இம்ம்புட்டுக்கான்னு துணி கொடுக்கலன்னு வெறியாகிட்டு இருக்காரு. இதுவரைக்கும் நிக்ஸன குத்துறதுக்கு யாருக்கும் பெரிய ரீசன் கிடைக்கல. இனி கிடைக்கும்னு நினைக்கிறேன். இது போக ரெண்டு பேரும் பெர்சனலா பேசுறதுக்கு மைக்க வேற கலட்டி கலட்டி வைக்கிறாங்க. அது ஒரு விதி மீறல் தான். அதுக்கு என்ன ஆக போகுதுன்னு பொறுத்து இருந்து பார்ப்போம்.
பேட்டரி ரீசார்ஜ் டாஸ்க் அப்போ, விஷ்ணு அவர்கள் அக்ஷயா தன்ன தள்ளி விட்டதா ஒரு பெரிய விவாதம் பண்ணி இருந்தாரு, அது போக அவரோட கைய வேற முறுக்கி, தேவையில்லாத சில வார்த்தைகளையும் பயன்படுத்தி இருந்தாரு விஷ்ணு. ‘ஒரு வேளை அக்ஷயா தள்ளி விட்டுருப்பாங்களோ?’ என்ற கேள்வி அவர் பேசும் போது நமக்குள்ளேயே எழுந்தது. அந்த அளவிற்கு பெண், ஆண் என்று பாலின பாடங்கள் எல்லாம் எடுத்துக் கொண்டு இருந்தார்.
விஷ்ணுவின் இந்த டவுட்டை தீர்க்க, இந்த பிக்பாஸ் சீசன் 7-யின் முதல் குறும்படம் ஒளிபரப்பப்பட்டது. ஆரம்பத்தில் அக்ஷயாவிடம் எந்த அக்ரஸனும் வேண்டாம் என ஒத்துக் கொண்ட விஷ்ணு, பஸ்சர் அடித்ததுமே கைகளை வைத்து பலமாக அக்ஷயாவை தான் மறிக்கிறார். அதுமட்டுமல்லாது மூச்சு முட்ட யாருக்காக அவர் விளையாடினாரோ ( ஐஷூ), அவருடைய கால்கள் தான் விஷ்ணுவை தட்டி விட்டு இருக்கிறது. அது தெரியாமல் எந்த இண்டன்சனும் இல்லாமல் நிகழ்ந்த ஒரு நிகழ்வாக தான் தெரிகிறது.
’தப்ப உங்க மேல வச்சுக்கிட்டு, அக்ஷயாகிட்ட வீண்டாவீவாதம் பண்ணி இருக்கீங்க, அதுல வேற அவங்க கைய முறுக்குன விஷயத்த எல்லாம் ஒத்துக்க முடியாது. உங்களுக்கு ஆல்மோஸ்ட் ஸ்ட்ரைக் கொடுத்த மாறி தான். ஆனா ரேங்கிங் டாஸ்க்ல உங்க மேல இருக்குற ஒரு சில பிழைகளை புரிஞ்சிகிட்டு நீங்களாவே 14 ஆவது இடத்துல போய் நின்னது அத பேலன்ஸ் பண்ணிடுச்சு’ இருந்தாலும் இனி பர்ஸ்ட் ஸ்ட்ரைக், செகண்ட் ஸ்ட்ரைக்னு படிப்படியாலாம் போயிட்டு இருக்க மாட்டேன். நேரா உங்கள இங்க அழைக்கிறதுக்கு கூட எனக்கு உரிமை இருக்குன்னு, விஷ்ணுவிற்கு வார்த்தைகளால் பலத்த கொட்டு ஒன்றை கொடுத்தார் கமல்ஹாசன்.
‘முதல்ல ஒரு மாறி நினைச்சேன், ஆனா இப்ப எனக்கு நம்பிக்கையுரியவங்களா தெரியுறாங்க’ அப்படிங்கிறவளுக்கு தங்களோட கை முத்திரை பதித்த ஒரு துணியை கொடுக்க வேண்டும் என்பது டாஸ்க். பெரும்பாலான நம்பிக்கைகள் மாயா மீது சரிந்தது அவரது கேம்-யில், அவர் எந்த அளவிற்கு Improve ஆகி இருக்கிறார் என்பதை உணர்த்தியது. கூல் சுரேஷ், வினுஷா, விசித்ரா உள்ளிட்டோர் யார் மீதும் நம்பிக்கை இல்ல என்று கைகள் பதித்த முத்திரையை தாங்களே வைத்துக் கொண்டனர். ஐஷு தனக்கு கொடுக்கவில்லையென்று கோபத்தில் நிக்ஸனும், தன்னம்பிக்கை பாத்திரமாக முத்திரையை தானே வைத்துக் கொண்டது ஆகச்சிறந்த காமெடி.
ரேங்கிங் டாஸ்க் இந்த முறை பெரிதளவில் சுவாரஸ்யங்கள் ஏதும் இல்லாமலே நடைபெற்று முடிந்தது. முக்கியமாக முதல் இடத்திற்கு இரு இரண்டு பேரை தவிர யாரும் வாதிடவில்லை. ’ஏதோ நடக்குது, எந்த இடம் கிடைச்சாலும் நின்னுப்போம்’ அப்படின்னு தான் மற்ற எல்லாரும் விளையாண்ட மாறி இருந்தது. அது போக இதுல ஏழை, பணக்காரன், மிடில்கிளாஸ் டாபிக்லா ஏன் வந்ததுன்னு தெரியல, ‘இப்ப என்கிட்ட நிறைய செருப்புகள் இருக்கலாம், ஆனா நான் கடந்து வந்த பாதைல செருப்பே இல்லாம கூட நடந்து இருக்கேன்’ என போற போக்கில் பிரதீப்பிற்கு ஒரு குட்டு வைத்து அந்த டாபிக்கை முடித்து வைத்தார் கமல்ஹாசன்.
ரேங்கிங் டாஸ்க்ல ஒவ்வொருவரும் கூறிய ஸ்டேட்மெண்ட்டை அவரே போர்டில் இருந்து எடுத்து, ஏன் அதை கூறினேன் என்பதை என்ற காரணத்தை, சொல்ல வேண்டும் என்பதே டாஸ்க். பெரும்பாலும் ஒவ்வொருவரும் ரேங்கிங் டாஸ்க்ல என்ன காரணத்தோட அந்த வார்த்தைகளை பயன்படுத்தினாங்கன்னு நமக்கே தெரியும் என்பதால இந்த டாஸ்க் அவ்வளவு சுவாரஸ்யமா இல்ல. ‘மக்கள் உன்ன வெளில போல செருப்பால அடிப்பாங்க’ என விஷ்ணு சொன்னதிற்கு மட்டும் கமல் அவர்கள் விளக்கம் கொடுத்தார். மக்களாகவே இருந்தாலும் அவர்கள் ஓட்டால் தான் அடிப்பார்கள், வன்முறையில் அல்ல என்று கூறி கமல் அவர்கள் ஸ்டேட்மெண்ட் டாஸ்க்கிற்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்த வீக் எண்ட் எபிசோடில் முதலாவதாக சேவ் செய்யப்பட்டவர், ஜோவிகா, அதற்கு அடுத்தபடியாக அக்ஷயா, மாயா, விஷ்ணு என கடைசியாக பிரதீப்பும் சேவ் செய்யப்பட்டார். ஒட்டு மொத்தமாக சனிக்கிழமை எபிசோடில் 5 பேர் சேவ் செய்யப்பட்டனர். ஒரு வேளை 5 பேரின் வருகைக்காக 5 பேர் மட்டும் சேவ் செய்யப்பட்டார்களோ பொறுத்து இருந்து பார்க்கலாம்.
அடுத்த வாரத்திற்கான கேப்டன்சிப் நாமினேசன், பிக்பாஸ் இல்லத்துல இருந்து அக்ஷயா, பூர்ணிமாவும், ஸ்மால் பாஸ் இல்லத்துல இருந்து ஜோவிகாவும் கேப்டன்சிப் டாஸ்க்குக்கு நாமினேட் செய்யப்பட்டாங்க. ‘ரீல் அந்து போச்சுன்னு’ ஒரு டாஸ்க், கார்டன் ஏரியால இருக்குற ஒரு ரீல்ல, ஹவுஸ்மேட்ஸ் ஒருவரின் உதவியோடு கந்தல் துணிகளை சேர்த்து சுற்ற வேண்டும். முடிவில் போன வாரம் கேப்டனாக இருந்த பூர்ணிமாவின் ரீல்களே நீளமாக இருந்தது. அவரே அடுத்த வாரத்திற்கும் கேப்டனாக தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறார்.
“ குறும்படம் கேட்டு பல்பு வாங்கிய விஷ்ணு, கூல் சுரேஷ் அந்தர்கள், மீண்டும் கேப்டனாக பூர்ணிமா என்று பல்வேறு சுவாரஸ்யங்கள் எபிசோடில் நிறைந்து இருந்தது. விதி மீறல்கள், கேப்டன்சிப் உள்ளிட்ட மிச்ச டாபிக்குகள் இன்றைய எபிசோடில் பேசப்படும் என்று நினைக்கிறேன் பார்க்கலாம் “
மீண்டும் நாளைய பிக்பாஸ் ரிவ்யூவில் சந்திப்போம். இப்படிக்கு இடம்பொருள் இல்லத்தில் இருந்து உங்கள் லெ. ரமேஷ் !