Bigg Boss Tamil 7 | Day 28 | Review | ‘சமநிலையை சரி செய்வதற்காக டபுள் எலிமினேசன் என்பது ஏற்றுக் கொள்ள தக்கதா? ’
பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், இருபத்து எட்டாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம்.
ஹைலைட்ஸ்: பூர்ணிமா கேப்டன்சிப் – கமல் சார் வார்னிங் டு நிக்ஸன் – Wild Card Contestants – டபுள் எவிக்சன் – புத்தக பரிந்துரை – நிக்ஸன் மற்றும் ஐஷூ
ஸ்மால் பாஸ் இல்லத்தினருக்கும் இருக்கைகள் கொடுத்தது, அதனால் என்ன விளைவு வந்தாலும் பரவாயில்லை நான் சந்தித்துக் கொள்கிறேன் என தைரியமாக செயல்பட்டது, பிரச்சினைகளை எளிதான முறையில் தீர்த்தது, தினமும் ஒவ்வொருவருக்கும் அவரது திறமைகளை காண்பிக்க வாய்ப்பு கொடுத்தது, இரண்டு இல்லத்தார்களையும் ஒன்றாக குழும வைத்து, அவர்களின் தினசரி பிரச்சினைகளை கேட்டு அறிந்து செயல்பட்டது, முக்கியமாக பனிஷ்மெண்ட்களுக்கு பிக்பாஸ்சிடம் இருந்து டிஸ்கவுண்ட் வாங்கி கொடுத்தது என, ஒரு கேப்டன் கூலாக இந்த வாரம் முழுக்க சிக்ஸர்களை பறக்க விட்டதாக இல்லத்தார்கள் அனைவரும் பூர்ணிமாவின் கேப்டன்சிப் குறித்து கருத்து தெரிவித்தனர்.
இல்லத்தார்கள் பாராட்டியது மட்டும் போதாது என நினைத்த கமல்ஹாசன், அவரும் அவரது பங்கிற்கு பாராட்டி விட்டு ஒரு மதிப்பு மிக்க கோல்டு ஸ்டார் ஒன்றையும் பூர்ணிமாவிற்கு பரிசளித்தார். லிப் பால்ம் போட்டது, பேட்டரி டாஸ்க்கில் விஷ்ணுவிற்கு உதவி செய்தது என, ஒரு சில சின்ன சின்ன Flaws கள் பூர்ணிமாவின் மீது இருந்தாலும் கூட, அதை அவர் தன்னுடைய திறமையான செயல்பாடுகளால் திரையிட்டு மறைத்து விட்டார் என்றே சொல்லலாம். இந்த வாரத்திற்கும் கேப்டன் பூர்ணிமா தான் என்பது குறிப்பிடத்தக்கது.
வீடு விட்டு வீடு மாறியது உள்ளிட்ட விதிமீறல்கள் குறித்து, கமல்ஹாசன் அவர்கள் கண்டித்துக் கொண்டு இருந்த போது, ‘சார் அது அவங்க தானே பண்ணாங்க, நாங்க ரூல்ஸ்படி தானே இருந்தோம், எங்களுக்கு ஏன் கேஸ் இல்ல, நாங்க ஏன் சாப்ட கூடாது?’ என ஒரு கேள்வியை முன் வைத்தார். அது உங்க வீடு அங்க என்ன நடந்தாலும் ஒட்டு மொத்தமாக அது அங்கு இருப்பவர்களின் பொறுப்பு ஆகி விடும், ‘ஆமா நிக்ஸன் நீங்க அப்ப அப்ப மைக்க ஆஃப் பண்ணிட்டு கிசு கிசு பேசுற மாறி இருக்கு, ரூல்ஸ் பேசலாம், ஆனா அத பாலோவும் பண்ணனும், பெர்சனலா பேசனும்னா வெளில வந்து பேசிக்கோங்க, நான் வேணா வாய்ப்பு தரேன்’ என ஒரு விதமாக கமல்ஹாசன் கூறியது நிக்ஸனின் மூக்கு உடைந்தது. அட்வைஸ்கள், வாதங்கள் பொழிந்திடும் நிக்ஸன் தான் அதை பாலோ செய்வதில்லை என்பது நிரூபணம் ஆகி இருக்கிறது.
அடுத்தகட்டமாக தினேஷ், அன்ன பாரதி, அர்ச்சனா, RJ பிராவோ, கானா பாலா உள்ளிட்ட, 5 Wild Card போட்டியாளர்கள் பிக்பாஸ் இல்லத்திற்குள் அனுப்பப் பட்டனர். Replacement Entry என தினேஷ் உள்ளே நுழைந்து அனைத்து போட்டியாளர்களையும் கதிகலங்க வைத்தது கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்தது. அடுத்தபடியாக அன்ன பாரதியின் பட்டிமன்றம், அர்ச்சனாவின் ரேங்கிங், பிராவோவின் செல்ஃபி ரிவ்யூ, கானா பாலாவின் பிக்பாஸ் கானா என்று அனைத்து போட்டியாளர்களுமே ஒரு அசத்தலான கண்டண்டுடன் தான் உள்ளே இணைந்தனர்.
‘நாம இத்தன நாள் உள்ள ஒவ்வொரு விஷயங்கள பண்ணிட்டு உள்ள சர்வைவ் பண்ணிட்டு இருக்கோம், இவங்க ஈசியா உள்ள நுழைஞ்சு நம்மள ஈசியா கலாய்ச்சிட்டு இருக்காங்களே’ என்ற ஒரு எண்ணத்தை அனைத்து போட்டியாளர்களின் முகத்திலும் பார்க்க முடிந்தது. ஆனால் பிரதீப் மட்டும் கட்டம் முன்னேறி ‘உங்களுக்கு எத்தன வாரம் நாமினேசன் ப்ரீ ஷோன், நாமினேட் பண்ணனும்ல’ என கூறி வந்த Wild Card போட்டியாளர்களை கலாய்த்து கொண்டு இருந்தார்.
வீட்டின் சமநிலையை சரி செய்கிறோம் என்று கூறி யுகேந்திரன், வினுஷா என இருவரும் டபுள் எவிக்சன் செய்யப்பட்டது எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாதது. புதியதாக வருகிறவர்களுக்காக, இத்தனை நாட்கள் தன்னை நிரூபித்து சர்வைவ் செய்பவர்களை அது அவமானப்படுத்துவது போல இருந்தது. கமல்ஹாசனும் அதே காரணத்தை கூறியது கொஞ்சம் நெருடலாக இருந்தது.
இந்த வாரம் டபுள் எவிக்சன் இல்லாமல், அடுத்த வாரம் வைத்து இருந்தால் கூட ஏதும் தெரியாது. இந்த வாரமே முடிவெடுத்தது வருபவர்களுக்கு இடம் இல்லை கூட யாராவது ஒருத்தர் இடத்த காலி பண்ணுங்கன்னு சொன்ன மாறி இருந்தது. யுகி வெளியில் செல்லும் போது, பிரதீப்பை உற்ற நண்பராக உணர்ந்து இருப்பார் போல, ‘பிரதீப்பே, கப்பு முக்கியம் பிகிலே’ என அவர் கூறியது கைதட்டல்களை வாங்கியது.
வெளியேறிய வினுஷா மற்றும் யுகி இல்லத்தார்களுக்கு ஒரு சில அட்வைஸ்களையும் கொடுத்து சென்றனர். யுகி தன்னுடைய இரண்டு மியூச்சிவல் பண்ட்ஸ் காயினை ஐஷூ மற்றும் ஜோவிகாவிற்கு கொடுத்தார். வினுஷா தன்னுடைய காயினை கூல் சுரேஷ் அவர்களுக்கு கொடுத்தார்.
இந்த முறை கமல்ஹாசன் அவர்கள் உலகப்பொதுமறையான திருக்குறள் புத்தகத்தை பரிந்துரை செய்தார். கவிதைகளை சுருக்கி எழுதி, அதை ஒருவருக்கு புரியவும் வைக்க வேண்டும் என்பது மிகவும் கடினம், அதிலும் அனைத்து காலத்திற்கும் பொருந்தும் வகையில் இரண்டு வரிகளில் எழுதிய திருக்குறள் நிச்சயம் அனைவரின் வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம் என கமல் அவர்கள் கூறி பரிந்துரை செய்து இருந்தார்.
திருக்குறளுக்கான சிறந்த உரை பரிமேல் அழகரின் உரை என்றே சொல்லலாம். அந்த வகையில் உங்களுக்காக அதன் தொகுப்பு மேலே கொடுக்கப்பட்டு இருக்கிறது. விரும்புவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
ஐஷூவிற்கு ஏற்கனவே வெளியில் ஒரு காதலன் இருக்கிறார் போல. தற்போது அவர் நிக்ஸனுக்கும் அவருக்கும் இடையில் இருந்து கொண்டு ஒரு அழுத்தத்தில் இருப்பது போல தான் இருக்கிறது. அவருக்கு நிக்ஸனோடு நட்பையாவது தொடர வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது போல. ஆனால் இவ்வளவு ரகளைகள் புரிந்து விட்டு வெளியில் சென்று அந்த காதலை தொடர முடிவது என்பது சந்தேகம் தான். இந்த டிராமா எப்படியும் இதோடு நிற்க போவதில்லை. நாளை நிக்ஸனும், ஐஷூவும் மீண்டும் இணைந்து இதைப் பற்றி இன்னும் ஒருவாரத்திற்கு பேசிக் கொண்டு தான் இருக்க போகிறார்கள் அது நிச்சயம்.
சுவாரஸ்யங்கள்: புதியதாக உள்ளே வந்த ஐந்து போட்டியாளர்களும், மற்ற போட்டியாளர்களுக்கு, வெளியில் இருந்து தாங்கள் எடுத்து வந்த ஹிண்ட் மற்றும் ரேங்கிங்களை கொடுத்தது சுவாரஸ்யமாக இருந்தது.
ஏற்புடையது அல்ல: வந்த முதல் நாளே தினேஷ் ஒரு சில போட்டியாளர்களின் பெயரை கூறாமல் மிக்ஸர்ஸ் என்று கூறியதும் ஏற்புடையது அல்ல.
“ டபுள் எலிமினேசன், Wild Card Contestants என்று எபிசோடு இரண்டே டாபிக்கிற்குள் அடங்கி விட்டது, தினேஷ் கொஞ்சம் ஸ்ட்ராங்காக தெரிகிறார், நிச்சயமாக பிரதீப் VS தினேஷ் ஒரு சிறந்த போட்டியாக இருக்கும் பார்க்கலாம் “
மீண்டும் நாளைய பிக்பாஸ் ரிவ்யூவில் சந்திப்போம். இப்படிக்கு இடம்பொருள் இல்லத்தில் இருந்து உங்கள் லெ. ரமேஷ் !