Bigg Boss Tamil 7 | Day 29 | Review | ‘சின்ன சின்ன பிரச்சினைகளுக்கெல்லாம் கண்ணீர், தாக்கு பிடிப்பாரா அர்ச்சனா?’
பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், இருபத்து ஒன்பதாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம்.
ஹைலைட்ஸ்: எமோசனல் அர்ச்சனா – ஸ்மால் பாஸ் டீம் செலக்சன் – நாமினேசன் – தினேஷ் VS பூர்ணிமா
வந்து ஒரு நாள் கூட முழுசா ஆகல, அதுக்குள்ளயும் 30 தடவ அழுதிட்டாங்க அர்ச்சனா, 28 நாள் முழுசா பிக்பாஸ்ச பார்த்துட்டு வந்தவங்களுக்கு, இப்படியெல்லாம் பிக்பாஸ்குள்ள நடக்கும்னு தெரியாமலா இருக்கும். இந்த இல்லம்ங்கிறது ஒரு ஜெயில் இல்ல நிச்சயமா, இங்க இருக்கிற ஒவ்வொரு போட்டியாளர்களுமே, வெளியில இருக்குற ஒரு மக்களோட பிரதிபலிப்பு தான், நாளைக்கு இந்த இல்லத்த விட்டு அர்ச்சனா வெளியில போயிட்டாலும், இது மாறி நிறைய பேர பேஸ் பண்ணி தான் ஆகனும். இது ஒரு கேம்னு தெரிஞ்சிகிட்டும் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களுக்கும் அத பேஸ் பண்ண முடியாம, அழுதுகிட்டேவும் இருந்தா, மக்கள் நிச்சயம் அர்ச்சனாவிற்கு கூடிய சீக்கிரமே டாட்டா காட்டிடுவாங்க. அவங்க இந்த வீட்டுல தாக்கு பிடிக்கிறதும் ரொம்ப கஸ்டம்.
இல்லத்தார்கள் ஏற்கனவே பேசிக் கொண்ட ஒரு ஸ்ட்ரேட்டஜியை தான் பூர்ணிமா, ஸ்மால் பாஸ் இல்லத்தார்களை செலக்ட் செய்யும் டாஸ்க்கில் பயன்படுத்தினார். அதாவது Wild Card போட்டியாளர்கள் அனைவரையும் ஸ்மால் பாஸ் இல்லத்திற்குள் அனுப்புவது தான் ஒட்டு மொத்த சீனியர் போட்டியாளர்களின் ஸ்ட்ரேட்டஜி. அதை பூர்ணிமா தெள்ள தெளிவாக செய்தார் என்பது தான் மாஸ். ஒவ்வொருவருக்கும் அவர் கூறிய காரணங்கள் எல்லாம் பக்காவாகவும் தெளிவாகவும் இருந்தது பாராட்டுதலுக்குரியது.
பூர்ணிமா தேர்வு செய்த அந்த ஆறு ஸ்மால் பாஸ் இல்லத்தார்கள்:
1) இந்த வீட்டில் இந்த ஒருவரை நான் நம்ப மாட்டேன் – தினேஷ்
2) இந்த ஒருவரை நான் நம்புவேன், ஆனால் மதிக்க மாட்டேன் – VJ பிராவோ
3) மதிக்கிறேன், ஆனால் அன்பு காட்ட மாட்டேன் – கானா பாலா
4) அன்பு காட்டுவேன், நம்ப மாட்டேன் – அர்ச்சனா VJ
5) இந்த நபர் முக்கியம், ஆனால் விளையாட்டில் அல்ல – அன்ன பாரதி
6) அவருடைய ஆட்டம் முடிந்து விட்டது – விசித்ரா
என்ன தான் நாமினேசன் முன்னதாக ப்ளான் செய்யப்பட்டாலும் கூட, ஒவ்வொருவருக்கும் பூர்ணிமா ஒவ்வொரு வேலிட் பாயிண்ட்களை சொல்லி தான் நாமினேட் செய்ய வேண்டும் என்பது ரூல். பூர்ணிமா அந்த விஷயத்தில் பட்டாசாக வெடித்தார் என்றே சொல்லலாம். அவர் ஒவ்வொரு ஸ்டேட்மெண்ட்களும் ஒவ்வொருவரை தேர்ந்தெடுத்து, அவர்கள் ஒவ்வொருவருக்கும் தெளிவான காரணத்தை கூறிய போது இல்லம் கைதட்டல்களாலும் விசில்களாலும் நிறைந்தது.
வழக்கமான ரூல் தான் பிக்பாஸ் இல்லத்தில் இருப்பவர்கள், ஸ்மால் பாஸ் இல்லத்தில் இருப்பவர்களை நாமினேட் செய்ய வேண்டும், ஸ்மால் பாஸ் இல்லத்தில் இருப்பவர்கள் பிக்பாஸ் இல்லத்தில் இருப்பவர்களை நாமினேட் செய்ய வேண்டும்.
பிக்பாஸ் இல்லத்தில் இருப்பவர்கள்: ஜோவிகா, அக்ஷயா, விஷ்ணு, மாயா, கூல் சுரேஷ், நிக்ஸன், மணி, பிரதீப், ஐஷூ, ரவீனா, விக்ரம் மற்றும் பூர்ணிமா
ஸ்மால் பாஸ் இல்லத்தில் இருப்பவர்கள்: விசித்ரா, அர்ச்சனா, விஜே பிராவோ, தினேஷ், கானா பாலா மற்றும் அன்னபாரதி
பிக்பாஸ் நாமினேசன்ஸ்:
Housemates | Nominations |
ஜோவிகா | தினேஷ், அர்ச்சனா |
அக்ஷயா | அர்ச்சனா, கானா பாலா |
விஷ்ணு | அர்ச்சனா, அன்னபாரதி |
மாயா | அன்னபாரதி, பிராவோ |
கூல் சுரேஷ் | கானா பாலா, அர்ச்சனா |
நிக்ஸன் | பிராவோ, அன்னபாரதி |
மணி சந்திரா | தினேஷ், அர்ச்சனா |
பிரதீப் ஆண்டனி | அர்ச்சனா, கானா பாலா |
ஐஷூ | தினேஷ், அர்ச்சனா |
ரவீனா | தினேஷ், பிராவோ |
விக்ரம் | அன்னபாரதி, பிராவோ |
பூர்ணிமா (கேப்டன்) | அன்னபாரதி, பிராவோ |
ஸ்மால் பாஸ் நாமினேசன்ஸ்:
Housemates | Nominations |
விசித்ரா | மாயா, மணி சந்திரா |
அர்ச்சனா | மணி சந்திரா, அக்ஷனா |
விஜே பிராவோ | மாயா, ஐஷூ |
தினேஷ் கோபாலசாமி | ஐஷூ, மணி சந்திரா |
கானா பாலா | கூல் சுரேஷ், விக்ரம் |
அன்னபாரதி | அக்ஷயா, மாயா |
ஒட்டு மொத்தமாக இல்லத்தில் இருந்து நாமினேட் செய்யப்பட்டவர்கள்: தினேஷ், அர்ச்சனா, அன்னபாரதி, கானா பாலா, விஜே பிராவோ, மாயா, மணி சந்திரா, அக்ஷயா, ஐஷூ, Wild Card-யில் வந்த ஒட்டு மொத்த போட்டியாளர்களும் நாமினேசனில் பிக்பாஸ் சீனியர்களால், டார்கெட் செய்யப்பட்டனர். ஆனாலும் Wild Card போட்டியாளர்கள் நேர்மையான காரணங்களோடு மட்டும் ஒரு சிலரை நாமினேட் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வந்த Wild Card போட்டியாளர்களில் தினேஷ் கொஞ்சம் ஸ்ட்ராங்காக தெரிகிறார். ஆனாலும் இந்த துணி காயப்போடும் மேட்டரை எல்லாம் பெரிதாக்காமல் விட்டு விட்டு, வீட்டில் அவ்வப்போது நடக்கும் பிரச்சினைகளுக்கு எதிர்வினையாற்றினாலே, அவர் ஒரு நல்ல போட்டியாளராக மாற வாய்ப்பு இருக்கிறது. ஆனாலும் பிரதீப்பிடம் மட்டும் கொஞ்சம் சாப்ட் கார்னர் காட்டுகிறார். ரசிகர்கள் விரும்புவதே பிரதீப் VS தினேஷ் தான், பிரதீப் ரெடியாக தான் இருக்கிறார். தினேஷ் இறங்கி அடிப்பாரா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.
அடுத்ததாக வெல்கமிங் பிரச்சினை, அர்ச்சனாவை ஒரு சிலர் சரியாக வெல்கம் பண்ணவில்லை என்ற பிரச்சினை எழுகிறது. அந்த நேரம் வீட்டில் இரண்டு போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்ட எமோசனலான நேரம், அந்த சமயத்தில் உங்களை எப்படி சந்தோசமாக நாங்கள் உங்களை வெல்கம் செய்ய முடியும் என்று பிரதீப் சரியாக வாதாடினார். இன்னொரு பக்கம் இது கேம் உங்களை பாக்கு தட்டுலா வச்சு வெல்கம் பண்ணிட்டு இருக்க முடியாது என மாயா கூறினார். பிரதீப், மாயா என இருவர் கூறியதுமே கரெக்டு தான். ஆனால் அர்ச்சனாவால் அதற்கு எதிர்வினை ஆற்ற முடியாமல் அழுது கொண்டே விவாதத்தை முடித்து கிளம்பி விட்டார். மாயாவுடனான சமாதானத்திற்கும் அவர் இடம் கொடுக்கவில்லை.
tதினேஷ் ஏற்கனவே போட்டியில் களம் இறங்கி விட்டார், கானா பாலா பேச வேண்டிய நேரங்களில் சரியான பாயிண்ட்களை எடுத்து விடுகிறார். எதற்கெடுத்தாலும் மூக்கு சீந்தும் அர்ச்சனா இந்த போர்க்களத்தில் தாக்கு பிடிப்பது கொஞ்சம் கஸ்டம் தான். பிராவோ, அன்னபாரதி எல்லாம் கொஞ்சம் மறைவாகவே இருக்கிறார்கள். போக போக வெளியில் வருவார்கள் என்று நினைக்கிறேன். பார்க்கலாம்.
“ இதுவரை ஸ்மால் பாஸ் VS பிக்பாஸ் போட்டியாளர்கள் என சென்று கொண்டு இருந்த போட்டிக்களம், தற்போது ஜூனியர் (Wild Card) போட்டியாளர்கள் VS சீனியர்கள் போட்டியாளர்கள் என மாறி இருக்கிறது “
மீண்டும் நாளைய பிக்பாஸ் ரிவ்யூவில் சந்திப்போம். இப்படிக்கு இடம்பொருள் இல்லத்தில் இருந்து உங்கள் லெ. ரமேஷ் !