Bigg Boss Tamil 7 | Day 3 | ’அனன்யாவிடம் டாட்டூக்களை காட்ட சொல்லி மீண்டும் எல்லை மீறிய விசித்ரா’
Bigg Boss Tamil 7 Day 3 Vichithra Ananya Tatoo Controversey Idamporul
அவ்வப்போது ஏதாவது சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளும் விசித்ரா தற்போது அனன்யாவிடன் டாட்டூக்களை காட்ட சொல்லி இன்னும் ஒரு சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.
ஏற்கனவே நாமினேசனில் ஆடை என்ற வார்த்தையை உபயோகப்படுத்தி அனன்யாவை, விசித்ரா நாமினேட் செய்து இருந்தது இல்லத்திற்குள்ளும் சரி இணையத்திலும் சரி சர்ச்சையாகி இருந்தது. தற்போது அனன்யாவின் டாட்டூக்களை விசித்ரா காட்ட சொல்லி கேட்டு இருப்பது மேலும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
ஏன் அவர் அதை விசித்ராவிடம் காட்ட வேண்டும், பெண்கள் இப்படி ஆடை அணிந்தால், பெண்கள் இப்படி டாட்டூ போட்டுக் கொண்டால் ஆண்கள் தப்பான பார்வையில் தான் பார்ப்பார்கள் என்பதெல்லாம் அந்த காலத்து இலக்கணங்கள். விசித்ரா இவ்வளவு மேன்மையாக படித்தும் இந்த விடயத்தில் ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என இணைய வாசிகள் கடுமையாக அவரை சாடி வருகின்றனர்.
” ஒருவரின் மீதான கேர் என்பது அன்பின் வடிவில் இருக்க வேண்டும். அது சந்தேக கண்களாக, சந்தேகத்தின் வடிவிலாக இருக்க கூடாது. அதை விசித்ரா புரிந்து கொள்வாரா என்பதை போக போக பார்க்கலாம் ”