Bigg Boss Tamil 7 | Day 3 | Review | ’ஆத்தி, ஒரு கதைக்கு இவ்வளவு கலவரமா?’
பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், மூன்றாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம்.
ஹைலைட்ஸ்: கூல் சுரேஷ் செல்போன் கடை – கூல் சுரேஷ், விஷ்ணு, மாயா விவாதம் – ’குலேபா’ வேக் அப் சாங் – அனன்யா, விசித்ரா டாட்டூ மேட்டர் – பவா ஸ்டோரி டைம் – ஸ்டோரி ஏற்படுத்திய சலசலப்பு – அனன்யா ராவ் கன்வர்சேசன் வித் பவா – Know Your Housemates, Task 2 – விஷ்ணு VS மாயா
மூன்றாம் நாள் எபிசோடு, அண்ணன் கூல் சுரேஷ்சின் செல்போன் கடை ஸ்டோரியில் இருந்து தான் ஆரம்பிக்கிறது. ’செல்போன் கடை வச்சேன், கடை பக்கமே போவ மாட்டேன், வந்து கல்லாவ பாக்க மட்டும் வருவேன். அப்போ கடையும் காலியா இருக்கும், கல்லாவும் காலியா தான் இருக்கும்’ என அவர் சொன்ன அந்த செல்போன் கடை ஸ்டோரி, வடிவேலுவின் ‘என்ன கல்லாவும் காலியா இருக்கு’ என்ற காமெடியை தான் நினைவு படுத்துகிறது.
மாயா – கூல் சுரேஷ் இடையே ஏதோ ஒரு வார்த்தையால் மனஸ்தாபம் போல. அதை தீர்க்க மாயா, கூல் சுரேஷ் அவர்களுடன் வந்து விவாதம் செய்ய, அவரோ வழக்கம் போல மனதிற்குள் ‘அய்யா என் குல சாமி, தப்பி தவறி கூட எதுவும் என் வாய்ல இருந்து, தப்பா வந்திடாம சாமி’ என மனதில் வேண்டிக்கொண்டே, மாயா பேசும் அனைத்தையும் கேட்டுக் கொண்டு அமைதியாக இருந்தது போல இருந்தது.
கூல் சுரேஷ் அமைதியாகவே இருக்க கடைசியில் அந்த விவாதம் பெரிதாகி அது விஷ்ணுவின் பக்கம் திரும்பியது. மாயா, விஷ்ணு இருவரும் சம்பந்தமே இல்லாமல் கார சாரமாக விவாதித்துக் கொண்டு இருக்க, எல்லாவற்றிற்கும் காரணமான கூல் சுரேஷ் அங்கிருந்து நைஸ்சாக எஸ்கேப் ஆகி விட்டார். கடைசியாக விவாதம் முடிந்ததும் மறுபடியும் வந்து அமர்ந்து கொண்டார்.
வேக் அப் சாங் போடுவதற்கு முன்னமே, இன்று அனைத்து போட்டியாளர்களும் வேக் அப் ஆகி தான் இருந்தனர். இருந்தாலும் கடமைக்கு ‘குலேபா’ சாங்க் ஒலித்தது. அனைவரும் அதற்கு வழக்கம் போல டேன்ஸ் ஆடி வைஃப் செய்தனர். பாட்டிற்கு சம்பந்தமே இல்லாமல் கூல் சுரேஷ் ஆடிய நாகாத்தம்மன் டேன்ஸ்சும் நன்றாக தான் இருந்தது.
டாட்டூ விவகாரத்தில் விசித்ராவை ஏற்கனவே இணையவாசிகள் நன்றாக வசை பாடி இருந்தனர். ஆனால் முதலாவதாக அனன்யா டாட்டூ குறித்து பேசும் போது தான், ஒரு எக்சைட்மெண்டில் ’எங்க கொண்டா அந்த டாட்டூவ பாப்போம்’ என்று நார்மலாக விசித்ரா, கேட்டது போல தான் இருக்கிறது. ’இதுக்காடா என்ன இவ்வளவு அடி அடிச்சீங்க’ என்பது போல ஆகி விட்டது டாட்டூ மேட்டர்.
பவா இன்றைய தினத்தில் இரண்டு ஸ்டோரிகளை இல்லத்தாரிடம் முன் வைத்தார். ஒன்று கமல்ஹாசன் மற்றும் எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கும் இடையேயான ஒரு நிகழ்வு, பின் அந்த நிகழ்வை தான் கதையாக எழுதிய விவரம், இன்னொன்று பாலச்சந்திரன் சுள்ளிக்காடு அவர்களின் சிதம்பர நினைவுகளில் இருந்து ஒரு குட்டிக்கதை. இரண்டு கதைகளையும் அவர் சொல்லிய விதம் மிகவும் தெளிவாகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் இருந்தது.
அந்த சமயத்துல தான் என்னடா கதை சொல்லிகிட்டு இருக்கும் போது அழுகை சத்தம் கேக்குது இது ஒன்னும் எமோசனல் கதை இல்லையேன்னு, பவா குனிஞ்சு பார்க்க, அங்க ஒரு பக்கம் பிரதீப் உட்கார்ந்து தேம்பி தேம்பி அழுது கொண்டு இருக்கிறார். என்னனு கேட்டா, ‘நீங்க சில விஷயம் பண்றீங்க (பொது வெளியில் எச்சில் துப்பியது), அது எனக்கு நார்மலா தெரியுது, ஆனா எல்லாருக்கும் அப்படி தெரியாது, அந்த காரணத்துக்காக யாரும் உங்கள நாமினேட் பண்ணி வெளில அனுப்பிட கூடாது நீங்க என் கூட நிறைய நாள் இருக்கனும்னு நினைக்கிறேன்’ என சில எமோசனல் பாயிண்ட்களை அள்ளி, பிரதீப் அளந்து விட்டார்.
ஆனால் அதற்கெல்லாம் பவா பெரியதாக செவி சாய்ப்பதாக இல்லை. அது என்னோட இயல்பு, அத கடவுளே சொன்னாலும் மாற்ற மாட்டேன், என எளிதாக கடந்து போய்விட்டார். ஒன்றே ஒன்று மட்டும் சொல்லி இருக்க்லாம். பொதுவெளியில் எச்சில் துப்புவதை மட்டும் தவிர்த்துக் கொள்கிறேன் என்ற ஒரு வார்த்தையை மட்டும் ஆவது மேன்மையாக கூறி இருக்கலாம்.
இது ஒரு பக்கம் போய் கொண்டு இருக்க, இன்னொரு பக்கம் பவா சொன்ன சிதம்பர நினைவுகள் கதை வீட்டிற்குள் ஒரு பெரிய தீப்பொறியை கிளப்பியது. ஒரு மனிதன் அவனின் உண்மையை பொதுவெளியில் தைரியமாக உடைத்து எழுதிய புத்தகம் தான் ‘சிதம்பர நினைவுகள்’. அந்த பாலச்சந்திரன் அவர்களுக்கு தான் எவ்வளவு கட்ஸ் பாருங்களேன், எல்லோரும் சொல்ல தயங்குகிற தனதான உண்மைகளை, அவர் புத்தமாகவே எழுதி இருக்கிறார், என்பது தான் பவா சொல்ல வந்தவைகள்.
ஆனால் இல்லவாசிகள் அதை தவறாக புரிந்து கொண்டு, கதையில் இருந்து ஒரு சில விடயங்களை எடுத்துக் கொண்டு, பவாவிடம் மொத்தமாக விவாதம் வைக்க துவங்கி விட்டனர். அவரும் ஒரு கட்டம் வரை பொறுமையாக விவாதித்து பார்த்தார். பின்னர் ’ஒரு கதைக்கு இவ்வளவு கலவரமாடா?’, என அவரும் அங்கிருந்து நகர்ந்து குட்டி பாஸ் இல்லத்திற்குள் சென்று படுத்து விட்டார்.
பவாவின் கதையை, கதையாக கேட்டது அனன்யா மட்டும் தான் போல, ’ஒரு படத்தை பார்த்தால் அதில் எத்தனையோ சரியான விஷயங்கள் இருக்கிறது, தப்பான விஷயங்கள் இருக்கிறது. அந்த தப்பான விஷயங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு வெளியில் வந்து நாம் அந்த தப்பை செய்ய போகிறோமா?’ வெளில எல்லாரும் உங்க கதைய பத்தி தான் பேசிட்டு இருக்காங்க, நான் போ மாட்டேன், எனக்கு பசிக்குது, நான் சாப்பிட போறேன் என்று க்யூட்டாக பேசி விட்டு, பேச்சுக்குள் ஒரு கருத்தையும் சொல்லி விட்டு கிளம்பினார் அனன்யா.
அடுத்தகட்டமாக ‘Know Your Housemates’ டாஸ்க் 2, இது ஒன்னும் பெருசா இல்ல, ‘யாரு பெருசுன்னு அடிச்சுக் காட்டனும்’ இரண்டு பேருக்கு இடைல ஒரு விவாதம் இருக்கும், அந்த விவாதத்துல சரியான பாயிண்ட்களை சொல்லி தன்னை இன்னொருவரோடு மேன்மைன்னு காட்டி ஜெயிக்கிறவங்க Verified, தோத்தவங்க Blocked. இவ்ளோ தான் கான்சப்ட். முதலாவதாக இந்த டாஸ்க்கில் களம் இறங்கியது விஷ்ணு மற்றும் மாயா.
மாயா தான் முதல்ல பேசினாங்க, தான் ஏன் விஷ்ணுவ விட பிரபலம் அப்படிங்கிறதுக்கு ஒரு சில வேலிட் பாயிண்ட் எடுத்து வச்சாங்க, அதுக்கப்புறம் விஷ்ணுவும் ஒரு 10 செகண்ட் நல்லா தான் பேசினாரு, அப்புறம் ட்ரிகர் ஆகி மாயாவ கடுமையா சாட ஆரம்பிச்சிட்டார். கடைசியாக விவாதத்தோட இறுதில ஹவுஸ்மேட்ஸ் எல்லாருமே மாயாவுக்கு ‘Verified’னும், விஷ்ணுக்கு ’Blocked’னும் முத்திரை குத்திட்டாங்க. அவ்வளவு தான் மாயா டாஸ்க்ல ஜெயிச்சிட்டாங்க.
” ஆக மொத்தம் இன்றைய எபிசோடில் முக்கால்வாசி நேரம், பவா கூறிய கதை தான் விவாதமாக இருந்தது. அவர் பொதுவெளியில் எச்சில் துப்பியது தவறு தான். ஆனால் அதே சமயத்தில் அவர் கூறிய கதையும், கதை மட்டும் தான் “
மீண்டும் நாளைய பிக்பாஸ் ரிவ்யூவில் சந்திப்போம். இப்படிக்கு இடம்பொருள் இல்லத்தில் இருந்து உங்கள் லெ. ரமேஷ் !