Bigg Boss Tamil 7 | Day 30 | Review | ‘வார்த்தைகள் தவறிய பிரதீப், வீட்டை விட்டு சென்றாரா கூல் சுரேஷ்?’
பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், முப்பதாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம்.
ஹைலைட்ஸ்: எமோசனல் அர்ச்சனா – சொந்த செலவில் சூனியம் – பிரதீப் Unwanted ஸ்ட்ரேட்டஜி – க்ளீனிங் & கழுவப்போவது யாரு டாஸ்க் – கோல்டு ஸ்டார் டாஸ்க், அசைஞ்சா போச்சு – கூல் VS பிரதீப்
இனி ஒவ்வொரு வாரமும் அர்ச்சனாவின் எமோசனல் சீன்கள் இல்லாத எபிசோடுகளை பார்க்க முடியாது போல. அதாவது ஒருவர் ரயில் தண்டவாளத்தில் தானே சென்று தலை வைத்து படுத்து விட்டு, ’ஹெலோ இங்க ட்ரெயினே வரக்கூடாதுங்க, நான் படுத்திருக்கேங்க’ என்று சொல்வது போல இருக்கிறது அர்ச்சனாவின் எமோசன்களும் அதற்கு அவர் சொல்லும் ரீசன்களும்.
எப்படியும் புதுசா வர்றவங்களோட பேர் நமக்கோ வெளியிலயோ, பதியுறதுக்கே நிச்சயம் ஒரு வாரம் ஆச்சு ஆகும். ஆனா இவனுங்க சும்மா செவனேன்னு இருக்கிறவங்கள எல்லாம் நோண்டி நோண்டி இவங்களே ஒரே நாள்ல பிரபலமே ஆக்கி விட்டானுங்க. அவங்கள சும்மா விட்டு இருந்தா கூட என்ன செய்யுறது ஏது செய்யுறது தெரியாம, வெளில தெரியாம இருந்து இருப்பாங்க, இப்ப பாரு இவனுங்களே அவங்களுக்கு ஒரு அட்வாண்டேஜ் கொடுத்திட்டானுங்க, இது தான் சொந்த செலவில் சூனியங்கிறது என விஷ்ணு மணியுடன் பேசிக் கொண்டு இருந்தது என்னவோ நூறு சதவிகிதம் உண்மை என்றே சொல்லலாம்.
தினேஷ்ச யாரும் கண்டுக்கவே வேணாம், அர்ச்சனாவ நானும் மாயாவும் பாத்துக்குறோம், அக்ஷயாவ வச்சு பிராவோவ எமோசனலா அட்டாக் பண்ணுவோம், என பிரதீப் யோசிப்பதை எல்லாம் ஒரு கேமாக பார்த்தால் நன்றாக தான் இருக்கும். ஆனால் ஒருவரை எமோசனலாக அட்டாக் செய்வது என்பதெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாதது தான். ஸ்ரேட்டஜி ஒகே தான். ஆனால் எமோசனல் ஸ்ட்ரேட்டஜி எல்லாம் வேண்டாம்.
தோத்தவங்க துடைக்கனும், இது ஒரு பேஸ்கட் பால் மாறியான டாஸ்க், இரண்டு வீட்டுல இருந்தும் 5 பேர் விளையாடனும். ஒரு 5 பிரம்பு கம்புகள் இரு அணிகளுக்கும் கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த பிரம்பு கம்புகள அடில விட்டு பந்த லிப்ட் பண்ணி வலைக்குள்ள போடனும். இது தான் டாஸ்க். ஸ்மால் பாஸ் டீம்ல எல்லாமே ஃபவுல் பாயிண்ட்ஸா இருந்தது. அதே சமயம் பிக்பாஸ் டீம் அவங்கள விட அதிக முறை பந்துகள வலையில போட்டதுனால பிக்பாஸ் இல்லத்தார்கள் ஜெயித்ததாக அறிவிக்கப்பட்டனர். இதனால் சமைக்கும் பொறுப்போடு துடைக்கும் பொறுப்பும் பிக்பாஸ் இல்லத்தார்களிடம் சென்றது.
அடுத்த கட்டமாக கழுவப்போவது யாரு டாஸ்க், இரு வீட்டுல இருந்தும் 6 பேர் இந்த கேம் விளையாடனும், ப்ளேயிங் ஏரியால மொத்தம் 12 வளையங்கள் வைக்கப்பட்டு இருக்கும். ஒவ்வொருவரும் பந்துகள் கீழ விழாம ஊதி ஊதி மட்டும் பந்துகள அந்த வளையங்களுக்குள்ள சேர்க்கனும். ஒவ்வொருவருக்கும் இரண்டு பந்துகள் கொடுக்கப்பட்டு இருக்கும். ஒரு நேரத்தில் ஒருவர் தான் கேமை விளையாட வேண்டும்.
இந்த கேமிலும் பிக்பாஸ் இல்லத்தார்களே சிறப்பாக விளையாடி ஜெயித்து கழுவும் பொறுப்பையும் ஸ்மால் பாஸ் இல்லத்தார்களிடம் ஒப்படைத்தனர்.
இது ஒரு கோல்டு ஸ்டார் டாஸ்க், அசைஞ்சா போச்சு, ஒவ்வொருவரின் தலையிலும் ஒரு மணி தொங்க விடப்பட்டு இருக்கும். ப்ரீஸ் என்று சொல்லப்பட்டதும் அனைவரும் மணி சத்தம் கேட்காமல் தங்கள் அசைவுகளை வைத்துக் கொள்ள வேண்டும். பஸ்சர் அடித்த பின் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். இது மொத்தம் 6 ரவுண்டுகளாக நடைபெறும் என பிக்பாஸ் அறிவித்தார்.
டாஸ்க் முதலில் ஜாலியாக தான் போய் கொண்டு இருந்தது. டாஸ்க்கில் ஒரிரு ரவுண்டுகளில் தோற்ற நிக்ஸன், மாயா உள்ளிடோர் மற்ற ஹவுஸ்மேட்களின் விளையாட்டிற்கு இடையூறு செய்ய ஆரம்பித்தனர். தொடாமல் இடையூறு செய்யலாம். ஆனால் இவர்கள் மணியை ஊதுவது, இன்னொரு மணியை வைத்து அடித்து அவர்களை நம்ப வைத்து எலிமினேட் செய்வது போன்ற ஸ்ட்ரேட்டஜிகளை கடைப்பிடித்தனர்.
இதே சமயத்தில் வெளியில் செவனேன்னு நின்று கொண்டு இருந்த கூல் சுரேஷ் அவர்களை விஷ்ணு தூண்டி விட்டார். உள்ளே போய் நிறைய போய் ஆட்டத்த கலைங்க, என சொல்ல அவரும் நேராக பிரதீப் இருக்கும் இடத்திற்கு சென்று அவரை டைவர்ட் செய்ய, அவரோ டென்ஷன் ஆகி வார்த்தைகளை விட்டு விட்டார். ஒரு சில கேட்க முடியாத கெட்ட வார்த்தைகளையும் கூல் சுரேஷ் நோக்கி விட்டு விட்டார். ஒரு கேமில் இவ்வளவு ஆக்ரோஷம் தேவையில்லை தான்.
ஆனாலும் பிரதீப் சொன்ன ஒரு சில வார்த்தைகளை கூல் சுரேஷ் ட்விஸ்ட் செய்து இல்லத்தார்களிடம் சொன்னதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.
பிரதீப் – ‘உன்ன நம்புனதுக்கு என்ன செருப்பால அடிச்சிக்கனும் டா’,
கூல் சுரேஷ் – ‘ஏதோ செருப்பால அடிப்பேன்னு சொன்னியேடா இப்ப அடி பாக்கலாம்’
பிரதீப் – ‘அம்மா மேலயே மரியாதை இல்ல, தாயின் மீது ஆணையாம்’
கூல் சுரேஷ் – ‘எங்க அம்மாவ பத்தி அப்படி இப்படின்னு தப்பா பேசுறான்’
பிரதீப் சொன்னத சரின்னும் ஏத்துக்க முடியாது, அதே சமயத்துல கூல் சுரேஷ் ட்விஸ்ட் பண்ணி சொன்னதையும் ஏத்துக்க முடியாது. பிரதீப், அவரோட திமிறு தான் அவர இந்த இடத்துல நிக்க வச்சிருக்குன்னு தப்பா புரிஞ்சிக்கிட்டாருன்னு நினைக்கிறேன். அவர ஒரு இடத்துல வச்சு பார்க்குற ஒவ்வொரு ரசிகர்களையும் இது நிச்சயம் பாதிக்கும். நாளைக்கு அந்த ரசிகர்களே அவர இந்த காரணங்களுக்காக வெறுக்கவும் செய்யலாம். இந்த வீட்ல என்ன வேணாலும் மாறும் என்பத புரிஞ்சிக்கிட்டு பொறுப்பா பிரதீப் இனிமேல் ஆச்சு விளையாடலாம்.
‘அசைஞ்சா போச்சு – கோல்டு ஸ்டார்’ டாஸ்க்ல வின் பண்ண விசித்ரா அவர்களுக்கு ஜோவிகா கோல்டு ஸ்டாரை அணிவித்தார் ஜோவிகா. விசித்ரா அவர்களுக்கு ஆரிய மாலா டாஸ்க்கிற்கு அப்புறம் கிடைத்த ஒரு வெற்றி, அவரது முகத்தில் ஒரு மிகப்பெரிய சந்தோசத்தை பார்க்க முடிந்தது. அதிலும் ஜோவிகாவின் கைகளால் ஸ்டார் வாங்கியதையும் பெருமையாக நினைத்துக் கொண்டார்.
“ பிரதீப் விட்ட வார்த்தைகளை திருப்பி அள்ள முடியாது, ஆனாலும் ஒரு கட்டத்தில் கண்களில் தேம்பி இருந்த கண்ணீரோடு அவர் அக்ஷயாவிடம் ஒரு Hug கொடுக்குறியா, என்பதை கேட்கும் போது கொஞ்சம் பாவமாகவும் இருந்தது. இனியாவது கோபத்தில் வார்த்தைகளை விடுவதை பிரதீப் தவிர்க்கலாம். தேவையில்லாத ஸ்ட்ரேட்டஜி ஆணிகளையும் அவர் புடுங்காமல் இருக்கலாம் “
மீண்டும் நாளைய பிக்பாஸ் ரிவ்யூவில் சந்திப்போம். இப்படிக்கு இடம்பொருள் இல்லத்தில் இருந்து உங்கள் லெ. ரமேஷ் !