Bigg Boss Tamil 7 | Day 32 | Review | ‘பிரதீப்பை ஜெயிலில் தள்ள நினைத்து பல்பு வாங்கிய ஹவுஸ்மேட்ஸ்’
பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், முப்பத்து இரண்டாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம்.
ஹைலைட்ஸ்: நிக்ஸன் VS தினேஷ் – ஷாப்பிங் ரீ பேமெண்ட் டாஸ்க் – Planning Against Pradeep – விச்சு VS அர்ச்சனா – பனிஸ்மெண்ட் For ஜோவிகா
முதன் முதலில் பார்த்த நிக்ஸன் என்ற பெர்சனாலிட்டியிடம் ஒரு நேர்மை இருந்தது. ஆனால் தற்போதெல்லாம் அது அவரிடம் சுத்தமாக இல்லை. அப்பள விஷயத்திற்கு சண்டை, நைட் 12 மணிக்கு காபி போட்டு தரலன்னு சண்டை, சாப்பாடு பத்தலன்னு சண்டை என எல்லாத்துக்கும் ஒவ்வொருவரையும் வம்பிழுத்துக் கொண்டு இருக்கிறார்.
ஸ்மால் பாஸ் இல்லத்தில் இருப்பவர்கள் யாரும் வேண்டுமென்றே இப்படி செய்ய வேண்டும் என்று செய்ததாக தெரியவில்லை. பிராவோ அவர்கள் ‘சாப்பாடு கம்மி ஆகிடுச்சு அதானே பிரச்சினை, நாளைல இருந்து சரி பண்ணிடலாம்’ என எவ்வளவோ நிக்ஸனை கன்வின்ஸ் பண்ண முயன்றாலும் கூட அவர் கன்வின்ஸ் ஆகுவதாக இல்லை. கண்டன்ட் கிடைத்தால் தான் கன்வின்ஸ் ஆகுவார் போல.
‘நாங்க உங்கள செய்யனும்னு நினைச்சா எங்களுக்கு ஆயிரம் வழி இருக்கு செஞ்சு காட்டவா’ என நிக்ஸன் டையலாக்குகளை அள்ளி விட்டு கொண்டு இருக்க, ‘செய்யுங்க, அத சமாளிக்க எங்ககிட்டையும் ஆயிரம் வழி இருக்கு’ என தினேஷ்சும் தக்க பதிலடி கொடுத்தார். ஸ்மால் பாஸ் இல்லத்தில் 5 பேருமே சமையலில் சரியான அனுபவம் இல்லாதவர்கள், விசித்ரா மட்டுமே நன்றாக சமைக்க தெரிந்தவர். முதல் வாரம் தானே சற்றே சகித்து தான் ஆக வேண்டும். அதை நிக்ஸனும் மற்ற ஹவுஸ்மேட்ஸ்சும் உணர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும்.
இது ஒரு ஷாப்பிங் ரீ பேமெண்ட் டாஸ்க், சந்துல பொந்துல மாட்டிக்காத, மொத்தம் 10 வெவ்வேறு உருவங்கள், ஒவ்வொரு ஹவுஸ்மேட்ஸ்சும் 10 உருவத்திற்குள்ளும் உள்நுழைந்து வெளியே வர வேண்டும், மூன்று உடைபடலாம், அதை தாண்டி உருவங்கள் உடைபட்டால், டாஸ்க்கில் சிறப்பாக செயல்படாதவரை தேர்ந்தெடுத்து ஹவுஸ்மேட்ஸ் ஒன்றாக சேர்ந்து ஜெயிலுக்கு அனுப்பலாம். டாஸ்கிற்கு அம்பயர் போல ஸ்மால் பாஸ் இல்லத்தில் இருந்து இரண்டு பேரை அனுப்ப வேண்டும். விசித்ராவும், கானா பாலாவும் அம்பயர்களாக களம் இறங்கினர்.
விஷ்ணு, நிக்ஸன், பூர்ணிமா உள்ளிட்ட ஹவுஸ்மேட்ஸ் ‘பிரதீப்ப கடைசியா அனுப்புவோம், அவன ஜெயிலுக்கு அனுப்ப சரியான சான்ஸ்’ என திட்டங்களை வகுத்துக் கொண்டு இருந்தனர். அவர்கள் பேசி முடிக்கும் முன்பே அவர்களின் திட்டத்தை போட்டு உடைத்துக் கொண்டு இருந்தார் பிரதீப். முன்னெச்சரிக்கையாக தான் இருக்கிறார் பிரதீப்.
ஆனால் இல்லத்தார்களின் நினைப்பிற்கு எதிராக, பிரதீப் ஈசியாக டாஸ்க்கை முடித்தார். பூர்ணிமா, விஷ்ணு, நிக்ஸன் உள்ளிட்டோர் மிகப்பெரிய பல்பு வாங்கினர். ஒரு வழியாக அனைவருமே உருவங்களை எளிதாக கடந்தனர். கடைசியாக கூல் சுரேஷ் இறங்கி விளையாடி பிக்பாஸ் இல்லத்தார்களின் வெற்றியை உறுதி செய்தார். பிக்பாஸ் இல்லத்தார்கள் ஜெயித்ததால் ஜெயில் தண்டனையும் ரத்து செய்யப்பட்டது.
இதற்கிடையில் அர்ச்சனா, ’என்ன கேட்காம எப்படி விசித்ராவையும், கானா பாலாவையும் அனுப்புனீங்க, அவங்கள அனுப்புனது எனக்கு ஒகே தான் ஆனா என்கிட்ட கேட்டு இருக்கனும் தானே’ என தினேஷ் அவர்களிடம் வாக்குவாதம் செய்து கொண்டு இருந்தார். அதை அத்தோடு விட்டால் பரவாயில்லை தொடர்ந்து அதையே வீண்டா விவாதமாக செய்து கொண்டு இருக்க, ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் விசித்ரா ஸ்மால் பாஸ் இல்லத்தில் இருந்து குதித்து, பிக்பாஸ் இல்லத்திற்குள் நுழைந்தார்.
தினேஷ் பரவாயில்லை, எந்த விடயத்திற்காக குரல் கொடுக்க வேண்டுமோ அதற்கு மட்டும் குரல் கொடுத்து தெளிவான பாதையில் செல்கிறார். பிராவோவும் பேச வேண்டிய இடங்களில் மட்டும் பேசுகிறார். கானா பாலாவும் ஒகே, அன்ன பாரதியும், அர்ச்சனாவும் கொஞ்சம் விசித்ராவிற்கு குடைச்சல் கொடுப்பது போல தெரிகிறது. அன்னபாரதி சொல்கிற வேலைகளைச் செய்யாமல், செய்யாததற்கு ஆயிரணம் காரணம் சொல்கிறாரா. அர்ச்சனா சின்ன சின்ன பிரச்சினைகளையும் பெரிதாக்கிவிட்டு அதையே அரை மணி நேரம் பேசிவிட்டு இறுதியில் ஒரு அழுகை காட்சியையும் நிகழ்த்தி விடுகிறார்.
இந்த காரணத்திற்காக தான் விசித்ராவும், ஸ்மால் பாஸ் இல்லத்தை விட்டு வெளியேறியதாக கூறுகிறார். கேஸ் கனெக்சன் ஸ்டாப் செய்யப்பட்டது. சமையல் வேலை நின்றது. ஒரு கட்டத்திற்கு பின் விசித்ராவே முடிவெடுத்து மீண்டும் ஸ்மால் பாஸ் இல்லத்திற்கு சென்றார். ஆனாலும் கேஸ் கனெக்சன் வரவில்லை. காரணம் என்ன என்று பார்த்தால் இந்த பிரச்சினைகளுக்கு இடையில் ஜோவிகா சமையலுக்கு ஹெல்ப் செய்து இருக்கிறார்.
விதிகளின் படி பிக்பாஸ் இல்லத்தார்கள் யாரும், ஸ்மால் பாஸ் இல்லத்தார்கள் சமையல் செய்யும் போது உதவிகரமாக இருக்கும் பட்சத்தில், அவர்களும் ஸ்மால் பாஸ் இல்லத்திற்குள் அனுப்பப்படுவார்கள். அதன்படி ஜோவிகாவும் ஸ்மால் பாஸ் இல்லத்திற்குள் அனுப்பப்பட்டார்.
தேவையில்லாத ஸ்ட்ரேட்டஜிகளை விட்டாலே போதும், பிரதீப் ஸ்ட்ராங்காக தெரிவார், ஏதாவது ஒரு கிரிட்டிகலான ஸ்ட்ரேட்டஜிகளை வகுத்து விட்டு கடைசியில் அதனால் கெட்ட பெயரும் எடுக்கிறார். அக்ஷயாவை தனது ஸ்ட்ரேட்டஜிக்காக உபயோகிக்க நினைத்த பிரதீப், அது செல்லுபடியாகததால் தற்போது ஐஷூ பக்கம் திரும்பி இருக்கிறார். எப்படியும் ஐஷூ இத்திட்டத்தை பொதுவெளியில் உடைத்து விடுவார். கடைசியில் அது பிரதீப்பிற்கு தான் வினையாக வந்து முடியும்.
“ 5 போட்டியாளர்கள் இடையில் வந்ததில் இருந்தே, போட்டியை எப்படி கொண்டு செல்வது என தெரியாமல் அனைத்து போட்டியாளர்களும் குழம்பி இருக்கின்றனர். அதிலும் முக்கியமாக பிரதீப் ரொம்பவே குழம்பி இருக்கிறார். பிரதீப், மாயா இருவரும் எலிமினேசன் கேமை விட்டு விட்டு அவர்களின் கேமை ஆடினாலே போதும் பார்க்கலாம் இனியாவது செய்வார்களா என! “
மீண்டும் நாளைய பிக்பாஸ் ரிவ்யூவில் சந்திப்போம். இப்படிக்கு இடம்பொருள் இல்லத்தில் இருந்து உங்கள் லெ. ரமேஷ் !