Bigg Boss Tamil 7 | Day 34 | Review | ‘ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட பிரதீப், Fair Or Unfair?’
பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், முப்பத்து நான்காம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம்.
ஹைலைட்ஸ்: உரிமைக்குரல் – பிரதீப்பிற்கு ரெட் கார்டு – பிரதீப் வெளியேற்றம் – Fair Or Unfair
பிரதீப்பிற்கும் – கூல் சுரேஷ்சிற்கும் இடையில் ஒரு பிரச்சினை நடந்தது. அதில் பிரதீப்பின் வார்த்தைகள் ரொம்பவே தவறாக சென்றது. ஒரு கட்டத்தில் அவரும் அதை தவறாக உணர்ந்து கொண்டதும் உண்மை. ஆனாலும் கமல் அவர்களின் மேடையில் உரிமைக்குரலை எழுப்பினர் பெரும்பாலான போட்டியாளர்கள்.
பெரும்பாலும் அவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள், ’Disrespectful, எங்களோட பாதுகாப்புக்கு இடைஞ்சலா இருக்கிறாரு, கெட்ட வார்த்தைகள் அதிகமா பேசுறாரு’ என்பவைகள் தான். சரி Disrespectful, அப்படிங்கிற வார்த்தைக்கு முதல்ல வருவோம். மாயா, விஷ்ணு, பூர்ணிமா, நிக்ஸன், ஜோவிகா இவங்கலாம் எல்லா ஹவுஸ்மேட்ஸ்கிட்டயும் மரியாதையா நடந்துகிட்டாங்களா, நேரடியா மரியாதை கொடுக்கிறா மாறி கொடுத்திட்டு, பின்னாடி மரியாதைக்குறைவாவா எத்தனையோ முறை நடந்திருக்காங்க அதெல்லாம் Disrespectful-குள்ள அடங்காதா? சரி ஒகே.
’தூங்காம உக்காந்திட்டே இருக்காரு, எங்களோட பாதுகாப்புக்கு இடைஞ்சலா இருக்கு’ இந்த வார்த்தைக்கு வருவோம், இங்க ஹவுஸ்மேட்ஸ் நிறைய பேர் தூங்காம நைட் முழுக்க பேசிட்டு தான் இருக்காங்க, ஒரு டைம் நிக்ஸன் கூட, படுத்து தூங்கிட்டு இருக்கிற ஐஷூ பக்கத்துல உக்காந்து, நோண்டிகிட்டு இருந்தாரு ஐஷூவ, காபி கப்ப தூக்கி அவர் மூஞ்சுல வைக்கிறது, அவர தட்டுறது, அவர் தலைய கோரி விடுறதுன்னு சில சில்மிஷங்கள பண்ணிகிட்டு இருந்தாரு, அப்ப அதுவெல்லாம் ஐஷூவிற்கு பாதுகாப்பான நடைமுறைகளா?
’கெட்ட வார்த்தைகள் அதிகமா பேசுறாரு?’ இந்த வார்த்தைக்கு வருவோம், Sh*t, O**ha, F*cking இந்த வார்த்தைகள் எல்லாம் மாயா, விஷ்ணு உள்ளிட்ட இல்லத்தார்கள் முதல்ல இருந்தே சாதாரணமா பேசிட்டு தான் வர்றாங்க. ஏன் இதெல்லாம் பார்க்குற சின்ன பிள்ளைங்க கெட்டு போக மாட்டாங்களா, பிரதீப் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் எல்லாமே ஒகே, ஆனா அத சொன்னவங்க ஒவ்வொருத்தர்கிட்டயுமே அதே குறைகள் இருக்கு தானே.
சரி ஒரு விஷயம் , டெமோகிரேட்டிக்கா பண்ணுவோம்னு பண்ணீங்க, ‘பிரதீப் இந்த போட்டியில் நீடிக்கனுமா வேண்டாமான்னு’ இல்லத்தார்கள்ட்ட கருத்து கேட்டீங்க, கிட்டதட்ட 12 போட்டியாளர்கள் ரெட் கார்டு கொடுத்தாங்க. தினமும் 24/7 இந்த பிக்பாஸ்ச வேலை வெட்டி இல்லாம பார்த்துகிட்டு வாக்கும் அளிக்கிற மக்கள் கிட்ட ஏன் நீங்க முடிவுகள கேக்கல? அது தானே உண்மையான டெமோகிரேட்டிக் நடவடிக்கையா இருக்கும்? உண்மையா நீங்க டெமோகிரேட்டிக்கா நடந்து இருந்தீங்கன்னா மக்கள் கிட்ட அவர டைரக்ட் நாமினேசனுக்கு அனுப்பி இருக்கனும். It’s Look Like Unfair.
கடைசி வரைக்கும் ஒருத்தரோட கருத்த கூட சொல்ல அனுமதி கொடுக்காம, சக போட்டியாளர்களின் முடிவை மட்டுமே வைத்து ரெட் கார்டு கொடுத்து பிரதீப் அவர்களை அனுப்பியதெல்லாம், நிச்சயம் இத்தனை நாள் வாக்களித்த மக்களை அவமதிக்கும் செயல்கள் தான். நிச்சயம் இவைகளெல்லாம் ஏற்கதக்கதே அல்ல. கிட்ட தட்ட 4 நாமினேசன்ல பிரதீப் இருந்து இருக்காரு, அப்ப எல்லாம் பெண்கள் பாதுகாப்பு குறித்து சொல்லி நாமினேட் செய்யாதவங்க, இப்ப மட்டும் அந்த டாபிக்க தூக்கிட்டு வர்றதெல்லாம் நிச்சயம் டார்கெட் பண்ற மாறி தான் இருந்தது.
“ என்னோட முடிவும், மக்களின் முடிவும் வேறுபட்டால், நானும் நிகழ்ச்சியை விட்டு வெளியேற தயார் என்ற வார்த்தையை கூறிய கமல், மக்கள நீங்க இந்த விஷயத்துல முடிவெடுக்கவே விடல, என்பதையும் புரிஞ்சிக்கனும் “
மீண்டும் நாளைய பிக்பாஸ் ரிவ்யூவில் சந்திப்போம். இப்படிக்கு இடம்பொருள் இல்லத்தில் இருந்து உங்கள் லெ. ரமேஷ் !