Bigg Boss Tamil 7 | Day 35 | Review | ‘முடிவுகளை முன்னதாகவே எடுத்து விட்டு தேர்தலை நடத்துவதில் என்ன பயன்?’
பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், முப்பத்து ஐந்தாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம்.
ஹைலைட்ஸ்: ஸ்மால் பாஸ் ஹவுஸ் First Week Experience – லட்டு, பாகற்காய் ஹல்வா -Poornima கேப்டன்சி – நாமினேசன் டிஸ்கசன் – அன்ன பாரதி எவிக்டடு – புத்தக பரிந்துரை – பூர்ணிமா, அக்ஷயா டிஸ்கசன் About விஷ்ணு
வந்து வீட்ட முழுசா சுத்தி பாக்குறதுக்குள்ள தூக்கி ஸ்மால் பாஸ் இல்லத்துக்குள்ள போட்டாங்க, வேலைப் பளு அதிகமாக இருந்தது, டாஸ்க், வேலை ரெண்டையும் பாக்குறதுக்கு கொஞ்சம் கஸ்டமா தான் இருந்தது, ஒரு வீக் போனதே தெரியல சாரி என்பது ஸ்மால் பாஸ் இல்லத்தினரின் பெரும்பாலோனாரின் கருத்தாக இருந்தது.
அடுத்தகட்டமாக Wild Card-யில் வந்தவர்களிடம் லட்டு, பாகற்காய் ஹல்வா கொடுக்கப்பட்டு யார் உங்களை இனிப்பாக இந்த இல்லத்தில் தெரிகிறார்கள், யார் உங்களை கசப்பாக தெரிகிறார்கள் என்பதை தேர்ந்தெடுத்து, இனிப்பாக தெரிபவர்களுக்கு லட்டும், கசப்பாக தெரியும் இருவருக்கு பாகற்காய் ஹல்வாவும் கொடுக்க வேண்டும் என்பது டாஸ்க். பெரும்பாலான லட்டுகள் கூல் சுரேஷ், விஷ்ணுவை சுற்றி வந்தது. பெரும்பாலான பாகற்காய் ஹல்வாக்கள் மாயா மற்றும் பூர்ணிமாவை சுற்றி வந்தது. மாயா மற்றும் பூர்ணிமாவிற்கு பாகற்காய் ஹல்வா என்பது சரியானது தான். பார்ப்பதற்கு ஹல்வாவை போல தான் இருப்பார்கள், ஆனால் விஷத்தின் கசப்புகள் என்று அவர்களை சொன்னால் தப்பில்லை.
விஷ்ணுவிற்கு லட்டுக்கள் வந்ததை, மாயா மற்றும் பூர்ணிமாவால் கூட ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ‘சார் அவன் அங்க நல்ல மாதிரி பேசிட்டு, பெட்ரூம்க்கு வந்ததும் கிழி கிழின்னு கிழிப்பான் சார், அவன பத்தி எங்களுக்கு நல்லா தெரியும் சார்’ என மாயாவும் பூர்ணிமாவும் ஒரு சேர விஷ்ணுவை போட்டுக் கொடுக்க, ‘ஓ அப்ப அவர் அங்க ஒன்னு இங்க ஒன்னு பேசுறவறா’ என கமல் கேட்க, ‘Just Fun’ என்று கூறி சிரித்தே கேள்வியை கடத்தினர் மாயாவும் பூர்ணிமாவும். இருவரின் Fun-க்கும் விஷ்ணு சீரியஸ்சாக எதிர்வினை ஆற்ற புல்லி கேங் ஆனது, பல்பு கேங்காக சிறுது நேரம் திகைத்து நின்றது.
போன முறை கேப்டன்சிக்காக ஸ்டார் வாங்கிய மமதையோ என்னவோ தெரியவில்லை, இந்த முறை பூர்ணிமா கொஞ்சம் மிதப்பிலேயே திரிந்தார். அவர் எடுத்த பெரும்பாலான முடிவுகள் பயாஸ்டாக தான் இருந்தது. முக்கியமாக ஸ்மால் பாஸ் இல்லத்திற்கான போட்டியாளர்கள் தேர்வு, கொடுக்கப்பட்டு இருந்த ஒவ்வொரு ஸ்டேட்மெண்ட்களும் வேறு ஒருவருக்கு பொருந்தினாலும் கூட, முடிவுகளை முன்னதாகவே முடிவு செய்து விட்டு அனைத்தையும் Wild Card போட்டியாளர்களுக்கு கொடுத்தது என்பது ஏற்கத்தக்கது அல்ல. அர்ச்சனாவிற்காக விதிகளை மீறிய விடயமும் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டது.
சுவாரஸ்யத்திற்காக நாமினேசனை டிஸ்கஸ் செய்து கொள்ளலாம் என்ற ஒரு விதி இருந்தது. ஆனால் போன முறை அனைத்து பிக்பாஸ் போட்டியாளர்களும் வெளிப்படையாக எலிமினேசனுக்கு செல்லும் போட்டியாளர்களை முடிவு செய்து விட்டு நாமினேசனை நிகழ்த்தியதால், நாமினேசன் பிராசஸ் சுவாரஸ்யம் இல்லாமலே ஆகி விட்டது. இதனால் நாமினேசனை டிஸ்கஸ் செய்து கொள்ளலாம் என்ற விதிமுறை ஒட்டு மொத்தமாக தகர்க்கப்பட்டது. இனி நாமினேசனை டிஸ்கஸ் செய்தால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
பிக்பாஸ் இல்லத்தார்கள் செய்த சூழ்ச்சிகளாலும், ஒரு வாரத்தில் பெரிதாக எந்த ஆக்டிவிட்டியிலும் இல்லாததாலும் Wild Card போட்டியாளர் அன்னபாரதி மக்களின் வாக்கெடுப்பின் மூலம் வெளியேற்றப்பட்டார். அன்னபாரதி அவர்கள் விளையாட்டை பிள்ளையார் சுழி வைத்து துவங்கும் முன்னதாகவே அவரை மொத்தமாக வெளியேற்றி விட்டது இந்த பிக்பாஸ் இல்லம்.
சுதந்திரத்திற்கு முன்பில் இருந்து 1972 வரையிலும் நாடகத்தின் மதிப்பிற்காக பெரும்பாடு பட்ட டி கே சண்முகம் அவர்களால், எழுதப்பட்ட புத்தகமான ‘எனது நாடக வாழ்க்கை’ என்பது தான் இந்த வாரத்தில் கமல்ஹாசன் அவர்கள் செய்த புத்தக பரிந்துரை. புத்தகத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் இணைப்பை பயன்படுத்திக் கொள்ளவும்.
இறுதியாக பிக்பாஸ் டீம் சார்பாகவும், பிக்பாஸ் சார்பாகவும், போட்டியாளர்கள் சார்பாகவும் கமல்ஹாசன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. பிறந்தநாள் பரிசாக இரத்ததான முகாம் ஒன்றையும் பிக்பாஸ் டீம் நடத்த முடிவு செய்து இருப்பதாக பிக்பாஸ் அறிவித்து இருந்தார். போட்டியாளர்களும் விருப்பப்பட்டவர்கள் பங்கேற்கலாம் என்ற அறிவிப்பும் வழங்கப்பட்டது.
“ எபிசோடின் இடையில் கமல் ஹாசன் அவர்கள் ஒரு கருத்தை கூறி இருப்பார், ’முடிவுகளை முன்னதாகவே முடிவு செய்து விட்டு, தேர்தலை நடத்தி என்ன பயன்’ என்று, அது நிச்சயம் போட்டியாளர்கள் அவர்களுக்கும், திரு கமல்ஹாசன் அவர்களுக்கும் பொருந்தும் என்பதில் ஐயமில்லை “
மீண்டும் நாளைய பிக்பாஸ் ரிவ்யூவில் சந்திப்போம். இப்படிக்கு இடம்பொருள் இல்லத்தில் இருந்து உங்கள் லெ. ரமேஷ் !