Bigg Boss Tamil 7 | Day 36 | Review | ‘அர்ச்சனா, விசித்ரா, தினேஷ்சை டார்கெட் செய்கிறார்களா பிக்பாஸ்மேட்ஸ்? ’

Bigg Boss Tamil 7 Day 36 Maya Ayshu Archana Conversation Idamporul

Bigg Boss Tamil 7 Day 36 Maya Ayshu Archana Conversation Idamporul

பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், முப்பத்து ஆறாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம்.

ஹைலைட்ஸ்: செலக்டிங் ஸ்மால் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் – நாமினேசன் பிராசஸ் – தினேஷ், அர்ச்சனா, விசித்ரா VS பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்

Bigg Boss Tamil 7 Day 36 Maya Selecting Small Boss Housemates Idamporul
Bigg Boss Tamil 7 Day 36 Maya Selecting Small Boss Housemates Idamporul

வழக்கம் போல இல்லத்தின் கேப்டனின் ஸ்மால் பாஸ் இல்லத்துக்கான தேர்வுகள் நடைபெற்றது, ’இரண்டு நபர்கள் ரூல் பிரேக் பண்ண தயங்க மாட்டார்கள்’ என்ற ஸ்டேட்மெண்டுக்கு விசித்ரா மற்றும் கூல் சுரேஷ்சை தேர்வு செய்தார். ’யாராச்சு ரூல் பிரேக் பண்ணா அவங்க பின்னாடியே போயிடுவாங்க’ என்ற ஸ்டேட்மெண்டுக்கு ரவீனா மற்றும் மணியை தேர்வு செய்தார். ‘இதுவரைக்கும் எதுவும் பண்ணல, இனியாச்சு Effort போடனும்’ என்ற ஸ்டேட்மெண்டுக்கு தினேஷ் மற்றும் அர்ச்சனாவை தேர்வு செய்தார். இதில் தினேஷ் மற்றும் அர்ச்சனாவின் தேர்வு மட்டும் வித்தியாசமாக இருந்தது. 5 வாரங்களாக இல்லத்திற்குள் மறைந்தே இருக்கும் விக்ரம் மற்றும் அக்‌ஷயாவை விட்டு விட்டு, தினேஷ் அர்ச்சனாவை தேர்வு செய்தது கொஞ்சம் பயாஸ்டாக தான் இருந்தது.

Bigg Boss Tamil 7 Day 36 Nomination Process Idamporul
Bigg Boss Tamil 7 Day 36 Nomination Process Idamporul


பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் நாமினேசன்ஸ்:

CONTESTENTSNOMINATIONS
PoornimaDinesh, Vichithra
JovikaDinesh, Vichithra
VJ BravoRaveena, Vichithra
AkshayaArchana, Vichithra
NixenDinesh, Mani Chandra
Gana BalaDinesh, Archana
AyshuArchana, Dinesh
VishnuVichithra, Archana
VickramDinesh, Archana
MayaVichithra, Archana


ஸ்மால் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் நாமினேசன்ஸ்:

CONTESTANTSNOMINATINS
Cool SureshAyshu, Poornima
VichithraNixen, Ayshu
RaveenaAyshu, VJ Bravo
Mani ChandraAyshu, VJ Bravo
DineshPoornima, Ayshu
ArchanaVickram, Akshaya


ஒட்டு மொத்தமாக நாமினேசனுக்குள் வந்தவர்கள்: தினேஷ், விசித்ரா, அர்ச்சனா, ஐஷூ, பூர்ணிமா, பிராவோ

Bigg Boss Tamil 7 Day 36 Red Card Controversey Being Issue Idamporul
Bigg Boss Tamil 7 Day 36 Red Card Controversey Being Issue Idamporul


’ரெட் கார்டு’ கொடுத்த ஒருத்தருக்காக வரிந்து கட்டி நாமினேசன் பண்றதெல்லாம் ஒரு கேவலமான வேல, என பிக்பாஸ் மேட்ஸ் மொத்தமாக வந்து கேட்ட கேள்வி தான், எபிசோடு முழுக்க சண்டையானது. அப்படி ஒருத்தருக்கு சப்போர்ட் பண்ணி நீங்க நாமினேட் பண்ணதெல்லாம் ஏத்துக்க முடியாது என பிக்பாஸ் மேட்ஸ் சொன்னது ஒகே. ’சரி ஒகே, நீங்க செஞ்சது சரின்னா நீங்க Save ஆக போறிங்க’ என விசித்ராவும், அர்ச்சனாவும் பதிலடி கொடுத்ததும் சரி தான். அத்தோடு அந்த பிரச்சினையை பிக்பாஸ்மேட்ஸ் விட்டு இருக்கலாம். ஆனால் ஒட்டு மொத்தமாக வார்த்தைகளை உயர்த்தி எபிசோடு முழுக்க பேசிக் கொண்டே இருந்தனர்.

Bigg Boss Tamil 7 Day 36 Maya Archana Heated Conversation Idamporul
Bigg Boss Tamil 7 Day 36 Maya Archana Heated Conversation Idamporul


’நீங்க இன்னும் அழ போகலையா, உனக்கு கிளாஸ்டோ போபியாலாம் இல்ல, ஒரு சைக்கோ போயிட்டு இன்னொரு சைக்கோவா உள்ள அனுப்பிட்டாங்க, தினேஷ், விசித்ரா, அர்ச்சனா மூணு பேரையும் வெளில அனுப்பனும், நீயெல்லாம் ஒரு பொம்பளையா, அவரு ஆம்பள இல்லனு பீல் பண்றாரு போல’ என பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் அர்ச்சனா, விசித்ரா, தினேஷ் மீது நடத்திய அச்சுருத்தும் தாக்குதலாக தான் இருந்தது.

” Women Safety என்ற வார்த்தையை சொல்லி ஒரு போட்டியாளருக்கு ரெட் கார்டு மாயா, பூர்ணிமா, ஜோவிகா உள்ளிட்டோர், இன்னொரு பெண்ணின் மெண்டல் ஹெல்த்துக்கு பாதுகாப்புக்கு இல்லாமல் நடந்து கொள்கிறார்கள், நிச்சயம் இது எல்லாம் வீக் எண்டில் பேசப்படுமா என்பது தெரியவில்லை, கமல் அவர்கள் மாயா மற்றும் பூர்ணிமாவுடன் சிரித்தே கடந்து போனாலும் ஆச்சரியப்படுவதாக இல்லை “

மீண்டும் நாளைய பிக்பாஸ் ரிவ்யூவில் சந்திப்போம். இப்படிக்கு இடம்பொருள் இல்லத்தில் இருந்து உங்கள் லெ. ரமேஷ் !

About Author