Bigg Boss Tamil 7 | Day 38 | Review | ‘பூதாகரமாகும் நிக்ஸன் விடயம், வினுஷாவிற்கு தக்க நியாயம் கிடைக்குமா? ’
பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், முப்பத்து எட்டாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம்.
ஹைலைட்ஸ்: ஸ்டேட்மெண்ட் டாஸ்க் – அர்ச்சனா அட்வைஸ் டு நிக்ஸன் – ஐஷூ Hugs விசித்ரா – ஜோவிகாவின் தேவையில்லாத ஆணி – பூர்ணிமா, நிக்ஸன் இன் வினுஷா மேட்டர்
ஒவ்வொருவரும் இந்த வீட்டில், நேரடியாகவோ, மறைமுகமாகவோ பேசிய வார்த்தைகள் ஸ்டேட்மெண்டாக பிளாஸ்மாவில் காண்பிக்கப்படும். அந்த ஸ்டேட்மெண்டுக்கு உரித்தானவர்கள் யாரென்று ஹவுஸ்மேட்ஸ் கண்டு பிடிக்க வேண்டும். இறுதியாக ஸ்டேட்மெண்டுக்கு உரித்தானவர்களே எந்திரித்து அதை கூறியதற்கான விளக்கங்களை கொடுக்க வேண்டும். அவ்வளவு தான்.
’அவரு ஆம்பள இல்லன்னு பீல் பண்றாரா என்ன?’ இந்த ஸ்டேட்மெண்ட் ஜோவிகா அவர்கள் தினேஷ் பற்றி கூறியது. அடிக்கடி இந்த வீட்ல வேற ஆம்பள இல்லையா, ஆம்பள இல்லையான்னு கேட்டுகிட்டே இருக்காரே, அவரு ஆம்பள இல்லன்னு பீல் பண்றாரா என்ன, என ஜோவிகா பூர்ணிமா, மாயாவிடம் பேசிய வார்த்தைகள். ரெட் கார்டு விஷயத்துல நீங்க எந்திரிச்சு குரல் கொடுத்து இருக்கலாம், எதுவுமே பேசல, ஆனா அடிக்கடி இந்த வீட்ல ஆம்பள இல்லையா, ஆம்பள இல்லையான்னு கேட்டுகிட்டே இருந்தீங்க, அதான் ‘அவரு ஆம்பள இல்லன்னு பீல் பண்றாரா என்ன’ அப்படின்னு கேஷூவலா சொன்னேன் என ஜோவிகா தன்னுடைய விளக்கத்தை கூறினார்.
இது நிக்ஸன், ஐஷூவிடம், வினுஷா குறித்து கூறியது, இது முழுக்க முழுக்க ஒரு கேவலமான கமெண்ட். ஆனால் அதற்கு நிக்ஸன் கூறிய சமாளிப்பு என்பது ஏற்றுக் கொள்ள கூடியதாக இல்லை. ’நான் கூறியது எந்த ஒரு தப்பான நோக்கத்துலையும் இல்ல, இத நான் வினுஷா அக்காட்டயே சொல்லி இருக்கேன்’ என நிக்ஸன் விளக்கம் அளித்து இருந்தார். அந்த விளக்கத்தினை கும்பல்கள் ஏற்றுக் கொண்டன. ஆனால் விசித்ரா, அர்ச்சனா, தினேஷ் ஏற்றுக் கொள்ளவில்லை. ‘சீரியஸ்சா பேசலா Funah தான் சொன்னேன்’ அப்ப சீரியஸ்சா சொல்லாம, Funah என்ன வேணும்னாலும் சொல்லலமா? அப்ப பிரதீப் சொன்ன அத்தனையையும் Funah எடுத்து இருக்கலாமே இந்த கும்பல்கள்.
வெளில இருக்குற வினுஷாவும், நிக்ஸன் ‘இத நான் வினுஷா அக்காட்டயே சொல்லி இருக்கேன்’ என்ற ஸ்டேட்மெண்டையை மறுத்து இருக்காங்க இந்த விஷயம் அவங்களுக்கு வெளில வந்து தான் தெரியும்னும் அவங்களோட இன்ஸ்டாஅ பதிவிட்டு இருக்காங்க. நிச்சயம் இது நிக்ஸனுக்கு மிகப்பெரிய பிளாக் மார்க்கா இருக்கும். இதெல்லாம் மிகப்பெரிய கேவலமான கமெண்ட், இதெல்லாம் பிக்பாஸ் ஹாஸ்ட் பண்றவங்க வீக் எண்ட்ல கேப்பாங்களான்னு தெரியல பாக்கலாம்.
வினுஷா உள்ள இல்ல, அதுனால நாம தப்பிச்சோம்னு நிக்ஸன் சாதாரணமா ஒரு விளக்கம் கொடுத்திட்டு போயிட்டாரு, வினுஷா உள்ள இருக்கிறத விட இந்த விஷயத்துல வெளில இருக்கிறது தான் ஆபத்துன்னு உணராம ஒரு பொய்யையும் அவிழ்த்து விட்டுட்டார். நான் பண்ணது தப்பு, சொல்லிருக்க கூடாதுன்னு ஒரு சாரி சொல்லி இருக்கலாம். அது ஏற்கத்தக்கதா இல்ல.
இதும் ஒரு கேவலமான கமெண்ட், மாயா மற்றும் ஐஷூ, பிராவோ குறித்து கூறியது, பிரதீப் ஒன்னு பண்ணாருன்னு நீங்க ரெட் கார்டு கொடுத்து வெளில அனுப்புனீங்க ஒகே, நீங்க பண்றதெல்லாம் அத விட ஒரு கேவலமான கமென்ட் தானே. அதெல்லாம் Fun அப்படின்னு ஈசியா சிரிச்சிக்கிட்டே சொல்லிட்டா அது தப்பு இல்லன்னு ஆகிடுமா. பையன் பண்ணா தப்பு, பொண்ணு பண்ணா Fun ஆஹ்?. இதெல்லாம் கண்டிப்பா அட்ரஸ் பண்ணியே ஆகனும் பண்ணுவாங்களான்னு பாக்கலாம்.
இது அர்ச்சனா, விசித்ரா அவர்களிடம் கூறியது, இது ஜோவிகாவிற்கு ஒரு சரியான அட்வைஸ் தான். ஆனாலும் அவர் அதை ஏற்றுக் கொள்வதாக தெரியவில்லை. எனக்கு தெரியும் நீங்க உக்காருங்க என்ற பாணியில் கைகளை அசைத்து கூறியதெல்லாம் ஜோவிகா, விசித்ராவை டாமினேட் செய்வதாக நினைத்துக் கொண்டு இருக்கிறார். ஆனால் அங்கு குறைவது ஜோவிகாவின் மரியாதையும், மக்கள் அவர் மீது வைத்து இருந்த நம்பிக்கையும் தான் என்பது அவருக்கு புரியவில்லை. அது புரிஞ்சா தான் திருந்திருவாங்களே ஜோவிகா.
இது விசித்ரா அவர்கள் ஸ்மால் பாஸ் மேட்ஸ்கிட்ட சொன்னது. இது நடந்தது என்னவோ உண்மை தான். ஒரு விஷயத்த, இன்னொரு விஷயமாக்கி அத பெருசாக்கி அத ரெட் கார்டு வரைக்கும் கொண்டு போயிட்டாங்க. பிரதீப்பையும் வெளில அனுப்பிட்டாங்க. உண்மை என்னன்னு கும்பல்களுக்கு தெரியும். ஆனா அத மனசுக்குள்ள வச்சுகிட்டு வெளில தன்ன நியாயப்படுத்துறதுக்காக வேறு ஒரு விளக்கம் கொடுத்துட்டு இருக்காங்க.
பிரதீப்பை ஒட்டு மொத்தமா சாத்தி அடிக்கிறதுக்காக பூர்ணிமா, மாயா போட்ட பிளான் தான் இது. இது ஹவுஸ்மேட்ஸ்க்கு தெரியாம இருக்கலாம். ஆனா மக்களுக்கு தெரியும். நிச்சயம் ஹாஸ்ட் அவர்களும் பார்த்திருப்பாருன்னு தெரியும். ஒவ்வொரு வீக் எண்டும் போட்டியாளர்கள் தான், ஹாஸ்ட் முன்னதாகவும் மக்கள் முன்னதாகவும் விளக்கம் கொடுக்க வேண்டி வரும். இந்த முறை ஹாஸ்ட் அவர்களே மக்களின் முன்னால் விளக்கம் கொடுக்க வேண்டி வரும் போல.
ஸ்டேட்மெண்ட் டாஸ்க் ஒகே, ஆனாலும் ஸ்டேட்மெண்டுக்கு சம்பந்தபட்டவர்களை கேள்வி எழுப்ப பிக்பாஸ் வாய்ப்பு கொடுக்காதது ஏற்கத்தக்கது அல்ல. அந்த நிமிடமே ஒவ்வொரு ஸ்டேட்மெண்டுக்கும் சம்பந்தபட்டவர்களுக்கு பேச வாய்ப்பு கொடுத்து இருக்க வேண்டும். கொடுக்கப்படவில்லை, ஆனாலும் ஒவ்வொருவரையும் பற்றி ஹவுஸ்மேட்ஸ் புரிந்து கொள்ள இது ஒரு வாய்ப்பாக அமையும்.
‘நீ என்ன பேசுனியோ அத விடு, நீ இப்பலாம் சரியா இல்ல, முதல் வாரம் உன்ன பார்த்து ரசிச்ச மாறி இப்ப நீ இல்ல, மாத்திக்க உன்ன’ என அர்ச்சனா ஒரு சக போட்டியாளராக நிக்ஸனை பார்க்காமல் அட்வைஸ் கொடுத்தது பாராட்டத்தக்கது.
விசித்ரா, நிக்ஸன் கூறியது தவறு என்பதில் ஸ்ட்ராங்காக தான் இருந்தார். அதை அவரிடமேவும் கூறினார். அந்த தைரியம் பிடித்து இருக்கிறது விசித்ரா.
நிக்ஸன் பேசியதை எல்லாம் ஏற்றுக் கொண்டு, ’இதெல்லாம் ஒரு விஷயமே இல்லடா, பிரதீப் பண்ணினது கூட எல்லாம் இத கம்பேர் பண்ண முடியாது’ என பூர்ணிமா, மாயா பேசுவதை எல்லாம் பார்க்கும் போது, அவர்களுக்குள் அவர்கள் அவர்கள் செய்த தப்பை அவர்களுக்குள்ளேயே நியாயப்படுத்திக் கொள்வது போல இருந்தது. வீக் எண்ட் நெருங்க நெருங்க நிக்ஸன், ஐஷூவின் வாய்ஸ் எல்லாம் ஒடுங்கி விட்டது. சமாதான நாடகம் வேறு நடக்கிறது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.
“ பிரதீப் இந்த வீட்ட விட்டு போயிட்டாலும் கூட இன்னும் போகவே இல்லை, என பூர்ணிமா கூறியது ஏற்றுக் கொள்ள கூடியது தான், 100 நாட்களும் பேசப்பட்டு கொண்டே இருப்பார் என்பதில் ஐயமில்லை “
மீண்டும் நாளைய பிக்பாஸ் ரிவ்யூவில் சந்திப்போம். இப்படிக்கு இடம்பொருள் இல்லத்தில் இருந்து உங்கள் லெ. ரமேஷ் !