Bigg Boss Tamil 7 | Day 4 | Review | ‘நேற்று கதைக்கு கலவரம், இன்று மேக்கப்பினால் கலவரம்’
பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், நான்காம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம்.
ஹைலைட்ஸ்: Know Your House Mates, Task 2 – விஷ்ணு VS பூர்ணிமா – வேக் அப் சாங் – Repayment Task 1, Weightu பார்ட்டி – பிரதீப்பின் ’தேவையில்லாத ஆணி’ ஐடியா – மேக்கப் Controversy – கூல் சுரேஷ் Imitates பிரதீப் – Repayment Task 2
Know Your Housemates டாஸ்க்கில் இருந்து ஆரம்பித்தது இன்றைய எபிசோடு, முதலாவதாக கூல் சுரேஷ் மற்றும் பூர்ணிமா இடையே ’யார் பெருசுன்னு அடிச்சுக்காட்டு’ என்ற விவாதம் ஆரம்பித்தது. முதலில் பூர்ணிமா பேசி முடித்தார். அதற்கு பின்னர் பேச ஆரம்பித்த கூல் சுரேஷ், அவருக்கென்ன பேச சொல்லியா தர வேண்டும், தன்னை உள்ளூர் சூப்பர் ஸ்டார் முதல் உலக சூப்பர் ஸ்டார் வரை ஒப்பிட்டு பேசி பின்னி பெடலெடுத்தது மட்டும் அல்லாது போட்டியாளர்களிடம் இருந்து Verified என்ற இசைவும் பெற்றார். எல்லாம் பொறுத்துக் கொள்ளலாம் ஆனால் கூல் சுரேஷ், லைவ்வில் 99 மில்லியன் என்று போட்டாரே அதை மட்டும் யாராலும் பொறுத்துக் கொள்ள முடியாது.
அடுத்ததாக மணிக்கும் , அக்ஷயாவிற்கும் இடையேயான விவாதம் ஆரம்பித்தது. இருவரும் சாதாரணமாகவே பேசினர். மணிக்கு பேச நேரம் கிடைத்த அளவிற்கு அக்ஷயாவிற்கு கிடைக்கவில்லை. இறுதியில் மணியே விவாதத்தில் Verified இசைவு பெற்றார். அக்ஷயா பிளாக் செய்யப்பட்டார்.
Know Your Housemate Task 2 -வின் இறுதியில் போட்டியாளர்கள் அனைவரின் வோட்டெடுப்புடன் மணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, மதிப்பு மிக்க கோல்டு ஸ்டார் ஒன்றையும் தட்டிச் சென்றார். அவருக்கு இணையாக பேசிய கூல் சுரேஷ்-க்கு ஹவுஸ்மேட்ஸ் இரண்டாம் இடத்தை கொடுத்தனர்.
விவாத டாஸ்க் குறித்து பேசும் போது விஷ்ணு மற்றும் பூர்ணிமா இடையே ஒரு சிறிய வாக்குவாதம் நிகழ்ந்தது. இந்த வாக்கு வாதம் கொஞ்சம் ஹீட் ஆகி வார்த்தைகள் விண்ணைப் பிளந்து கொண்டு இருந்தது, ஆனாலும் கூட அங்கே ஒருவர் கூலாக ‘என்ன வேணா நடக்கட்டும் நான் கூலாக இருப்பேன்’ என்று படுத்துக் கொண்டே அந்த சண்டையை ரசித்துக் கொண்டு இருந்தது தான் இங்கு ஹைலைட்.
இன்று ஓரளவிற்கு 8 மணி வரை தூங்கி கொண்டு இருந்த போட்டியாளர்களை எல்லாம் எழுப்ப தேவைப்பட்டது வேக் அப் சாங், ’வணக்கம் சென்னை’ திரைப்படத்தில் இருந்து ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்’ பாடல் ஒலிக்கப்பட்டது. வழக்கம் போல இல்லத்தார்களும் பாட்டிற்கு ஒட்டு மொத்தமாக கார்டன் ஏரியாவிற்கு வந்து டான்ஸ் ஆடி வைஃப் செய்தனர்.
அடுத்ததாக ஷாப்பிங் பட்ஜெட் ரீ பேமெண்ட் டாஸ்க் 1 – வெயிட்டு பார்ட்டி, டாஸ்க் ஒன்றும் பெரிதாக இல்லை. வெளியே ஒரு எடை மெசினும், மானிட்டரும் இருக்கும். மானிட்டரில் ஒரு குறிப்பிட்ட எடை காண்பிக்கப்படும். அந்த எடையை இல்லத்தார்கள் எத்துனை பேர் வேண்டுமானாலும் எடை மெசினில் ஏறி தோராயமாக அந்த எடையைக் கொண்டு வர வேண்டும். மொத்தம் 3 வாய்ப்பு, அதில் இரண்டில் வெற்றி பெற வேண்டும். டாஸ்க்கில் வெற்றி பெற்றால் கடனில் இருந்து 12,000 கழிக்கபடும். தோல்வியுற்றால் இல்லத்தார்களின் மேக்கப் மற்றும் க்ரூமிங் கிட்கள் பறிக்கப்படும், அவ்வளவு தான்.
டாஸ்க் ஒன்றும் அவ்வளவு கஸ்டம் இல்லை என்பதால், போட்டியாளர்கள் முதல் இரண்டு முயற்சியிலேயே எளிதாக வெற்று பெற்று விட்டு, ஒட்டு மொத்த வீட்டுக் கடனில் பன்னிரெண்டாயிரத்தை எளிதாக கழித்தனர். டாஸ்க்கும் சீக்கிரம் முடிந்தது. ஆனால் டாஸ்க்கிற்கு முன்னர் பிரதீப் சொன்ன ஒரு ஸ்ட்ரேட்டஜி விவாத பொருளானது.
’நாம தோத்துட்டா, பொண்ணுங்க எல்லாம் மேக்கப் இல்லாம இருப்பாங்கள்ல அது நமக்கு அட்வாண்டேஜ் தானே’ என ஒரு உன்னத ஐடியாவை பிரதீப் அவர்கள் மணியிடம் கூறினார், மணியோ அந்த ஐடியாவை கேட்ட அடுத்த நிமிடம் அவரை மேலும் கீழும் ஒரு முறை வித்தியாசமாக பார்த்தார். அந்த சீனை பார்க்கும் போது ‘வாங்க பேசிக்கிட்டே போவோம்’ என்ற காமெடி தான் நியாபகம் வந்தது.
நேற்று கதை விவாதமானது, இன்றோ மேக்கப் விவாதமானது. பிரதீப் எப்போதுமே ஒரு வித்தியாசமான ஆள் தான். எல்லாத்தையும் கேம் ஆக பார்க்கிறார். ஆனால் கூல் சுரேஷ், விஷ்ணு உள்ளிட்டோர், மேக்கப் விடயத்தை ஒரு காமெடி பாணியாக தான் கூறினர், ஆனால் அதுவோ ஒரு பெரிய விவாத பொருளாகி விட்டது. பூர்ணிமா, மாயா, அக்ஷயா உள்ளிட்டோர் சபதம் எல்லாம் எடுத்து விட்டு ‘என்ன நம்மாள மேக்கப் இல்லாம இருக்க முடியாதா, இன்னிக்கு ஒரு நாள் நாம மேக்கப் இல்லாம இருந்து காட்டுவோம்’ என போட்ட மேக்கப்பை அழித்து புது புரட்சி எல்லாம் செய்தனர்.
ஆனாலும் பிரதீப் சொன்னதில் ஒரு பாயிண்ட் மட்டும் ஏற்றுக் கொள்ளும் படி இருந்தது. ஒருத்தன் சொட்டையா வந்து நிக்கிறான் நாமினேசன்ல, இன்னொரு பக்கம் ஒரு பொண்ணு மேக்கப் போட்டு வந்து அழகா நின்னா, மக்கள் யாருக்கு ஓட்டு போடுவாங்க? நிச்சயமா அந்த பொண்ணுக்கு ஒரு ஆர்மி ஒன்னு ஆரம்பிச்சு அந்த பொண்ணுக்கு தான் ஓட்டு போடுவாங்க. அவர் சொன்னதில் மேக்கப் விஷயம் ஏற்றுக்கொள்ளும் படி இல்லையெனினும் இந்த விஷயம் கொஞ்சம் ஏற்றுக் கொள்ளும் படி இருந்தது.
அண்ணன் கூல் சுரேஷ், பிரதீப் அவர்களை இமிட்டேட் செய்தது அழகாக இருந்தது. அவ்வப்போது நிறைய இயல்பான காமெடிகளை அள்ளி விடுகிறார் கூல் சுரேஷ். வார்த்தைகள் உபயோகிப்பதில் மட்டும் கொஞ்சம் திணறுகிறார். அதை மட்டும் கொஞ்சம் கருத்தில் கொண்டால் இன்னும் பல நாட்களுக்கு பிக்பாஸ் இல்லத்தில் கூல் சுரேஷ் மாஸ்சாக வலம் வர வாய்ப்பு இருக்கிறது.
முட்டை கறி சமைப்பத்தில், விசித்ரா – நிக்சன் இடையே ஒரு விவாதம் ஏற்படுகிறது. அது விவாதமே இல்லை. நிக்சன் நார்மலாக பேசிய ஒரு விஷயத்தை விசித்ரா சிக்கலானதாக்கி விடுகிறார். இதில் வேறு ‘உன்னோட உண்மையான முகம் வெளில தெரிஞ்சிட்டுன்னு’ வேற நிக்சன பார்த்து சொல்லுறாங்க. ஆனா மக்களுக்கு இங்க விசித்ராவோட உண்மையான முகம் தான் தெரிஞ்சிருக்கும்.
அடுத்ததாக Repayment Task 2, கார்டன் ஏரியால ஒரு நீளமான, குழப்பமான வளைவு பாதைகள் இருக்கும். இரண்டு போட்டியாளர்கள் இணைந்து, ஒரு கம்ப இரண்டு பக்கமும் பிடிச்சுக்கிட்டு அந்த வளைவுகளோட கரைய தொடாம அதோட பாதைலயே போயிட்டு டார்கெட்ட ரீச் பண்ணனும். ரொம்பவே கஸ்டமான டாஸ்க் தான். இதுல ஜெயிக்கிற பட்சத்துல மொத்த கடன்ல 18,000 கழிக்கப்படும். தோற்குற பட்சத்துல போட்டியாளர்கள் வாரம் முழுக்க போட்ட ஆடைகளோடவே இருக்க வேண்டும். மற்ற ரிசர்வ்டு ஆடைகளை ஒட்டு மொத்தமாக பிக்பாஸ்சிடம் ஒப்படைத்து விட வேண்டும்.
இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் ஜெயிக்கவில்லை, ஒட்டு மொத்தமாக 5 வளைவுகளில் ஒரு வளைவை கூட அவர்களால் தாண்ட முடியவில்லை. மற்றுமொரு வாய்ப்பையும் பிக்பாஸ் அளிக்கவில்லை. அடுத்து என்ன இன்னும் கொஞ்ச நாளுக்கு போட்ட ட்ரெஸ்சோட தான் இருக்கனும். அவ்வளவு தான் டாஸ்க்கும் இன்றைய எபிசோடும்.
“ மேக்கப் பொருள்களை பிடுங்கி வைப்பது, ஆடைகளை பிடுங்கி வைப்பதெல்லாம் ஒரு தண்டனையாக தெரியவில்லை. ஏனோ அது சிறுபிள்ளை தனமாக தான் இருக்கிறது. இவ்வளவு பெரிய நிகழ்ச்சியில் இன்னும் எவ்வளவோ யோசிக்கலாம். இனிவரும் காலங்களிலாவது அது தவிர்க்கப்படுமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “
மீண்டும் நாளைய பிக்பாஸ் ரிவ்யூவில் சந்திப்போம். இப்படிக்கு இடம்பொருள் இல்லத்தில் இருந்து உங்கள் லெ. ரமேஷ் !