Bigg Boss Tamil 7 | Day 40 | Review | ‘அனைத்து கோர்ட் டாஸ்க்கிலும் தோற்று பல்பு வாங்கிய Bully Gang’
பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், நாற்பதாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம்.
ஹைலைட்ஸ்: மாயா,பூர்ணிமா கான்வர்சேஷன் – பிக்பாஸ்சை குறை கூறிய பூர்ணிமா – தினேஷ் VS மாயா, கோர்ட் டாஸ்க் – பூர்ணிமா Argument வித் RJ Bravo – மணி VS நிக்ஸன், கோர்ட் டாஸ்க் – விஷ்ணு, பூர்ணிமா கான்வர்சேஷன்
இங்க நம்ம சைடும் நிறைய தப்பு இருக்கு, என Bully Gang ஒத்துக் கொண்டதோடு மட்டும் அல்லாது, ’அதுக்கென்ன எப்படியும், கமல் சார் கழுவி கழுவி ஊத்துவாரு, அப்படியே சிரிச்சுகிட்டே சாரி கேட்டுட்டு நிக்க போறோம், அது தானே நம்ம வழக்கம்’ அப்ப தப்பு பண்ணா திருத்திக்க மாட்டாங்க போல, வாரம் வாரம் சிரிச்சிகிட்டே சாரி கேட்டுட்டு, கண்டண்டுன்னு டைவர்ட் பண்ணிட்டா கமல் சார் விட்டுருவாருன்னு அவ்ளோ மிதப்பு போல இந்த புல்லி கேங்குக்கு
.
இந்த வீட்ல அவ்ளோ பிரச்சினை இருக்கு, ஆனா நிக்ஸன், உன் பிரச்சினையை மட்டும் தூக்கிட்டு திரியுறான் பாரேன், ‘ஐஷூ ஏதோ அவன பொ*ட-ன்னு சொல்லிட்டாளாம், அதுக்கு அவனுக்கு கோபமே வரலயாம், அத என்கிட்ட சொல்லிட்டு இருக்கான்’ இந்த வீட்ல ஒன்னு மட்டும் புரியுது. மாயாவால ஒருத்தங்கள ஜெயிக்க முடிலன்னா அவங்கள ஜோடி சேர்த்துகிட்டு அவங்களுக்கே குழியும் பறிக்கிறாங்க.
இந்த பூர்ணிமாவுக்கு, எல்லா டாஸ்க்லையும் அவங்களே ஜெயிக்கனும் போல, அவங்க பக்கம் நியாயமே இல்லனாலும் கூட அவங்கள, அவங்களே நியாயப்படுத்திக்கிறாங்க, பிக்பாஸ் ஏதோ அவங்களுக்கு எதிரா நிக்கிற எல்லாருக்கும் சாதகமா இருக்கிற மாறி பூர்ணிமா சொல்லிட்டு இருந்தாங்க. இதுக்கு தான் அன்னிக்கு பிக்பாஸ் நல்லா பல்பு கொடுத்து விட்டாரு. இன்னும் திருந்தல போல.
வழக்கிட்டவர் – தினேஷ்
குற்றம் சாட்டப்பட்டவர் – மாயா
நீதிபதி – பிராவோ
’மாயா இங்க Women Safety பத்திலாம் பேசுறாங்க, ஆனா அவங்களால இங்க நிறைய பேர் ஆண்கள பார்க்குற அணுகுமுறை தப்பாகுது, இத அவங்க ஒத்துக்கனும்’ என்பது தான் தினேஷ் கொடுத்த குற்றச்சாட்டு. ஒரு டைம் கூட்டி பெருக்கிட்டு இருக்கிறப்போ, நிக்ஸன் மாஸ்க் இருந்தா நல்லா இருக்கும்னு சொல்லிடு இருந்தான், அப்ப மாயா அவங்களோட உள்ளாடைய தூக்கி கொடுத்து காமெடி பண்ணுறதா நினைச்சிகிட்டாங்க, அவங்களுக்கு இது வேணா காமெடியா தெரியலாம். ஆனா எல்லாரும் அப்படி கிடையாது. இதுவே ஒரு பையன் பண்ணா நீங்க சும்மா இருப்பீங்களா?, எல்லாரும் சேர்ந்து Women Card தூக்கிர மாட்டீங்க, என தினேஷ் ஸ்ட்ராங்கான விவாதத்தை முன் வைத்தார்.
மாயா தரப்புல இருந்து இது ஒரு ஜஸ்ட் ஜோக், இங்க ஆண், பெண் அப்படின்னு பார்த்துலாம் நான் பேசல, அங்க ஒரு பெண் இருந்து இருந்தா கூட நான் இந்த ஜோக் அடிச்சிருப்பேன்னு அவங்க பண்ணத நியாயப்படுத்தினாங்க, அப்புறம் பேசிய தினேஷ் தரப்பு நியாயங்கள், ‘கூல் சுரேஷ் கண் அடிச்சதுக்கே, நீங்க ஈவ் டீசிங் அளவுக்கு போனீங்க, அப்போ நீங்க பண்றதும் ஒரு வகைல அது தானே’ என விவாதத்தை வைத்தனர். கடைசியாக பிராவோ, வெளில இருந்து பார்க்குறதுக்கு நிச்சயம் இது தப்பா தான் தெரியும் என மாயாவை சாய்த்து ஒரு தீர்ப்பு கொடுத்து தினேஷ் தரப்பு வெற்றி பெற்றதாக அறிவித்தார்.
தீர்ப்பு முடிந்ததற்கு பின்னர் பிராவோவிடம் வந்து காட்டு கத்து கத்திக் கொண்டு இருந்தார் பூர்ணிமா. ‘நான் ஒரு 18+, நான் 18+ ஜோக் போடுவேன், அது போட கூடாதுன்னு ரூல்ல ஏதும் இல்லயே அதுல என்ன தப்பு?’ சரி பிக்பாஸ் ஒரு 16+ ஷோங்கிறது அவங்களுக்கு தெரியுமான்னு தெரியல, 18+ ஜோக்கா அடிக்கிறாருன்னு ஒருத்தர சொல்லி வெளில அனுப்பினாங்க, அது நியாபகம் இருந்திச்சான்னு தெரில. நியாயம் பேசுறப்போ அவங்க பக்கம் இருக்குற அநியாயத்த எல்லாம் மறைச்சிட்டதா பூர்ணிமா நினைக்கிறாங்க, அது சோத்துல பூசணிக்காய மறைக்கிற கதை தான் அப்படிங்கிற பூர்ணிமா புரிஞ்சிக்கனும்.
வழக்கிட்டவர் – மணி
குற்றம் சாட்டப்பட்டவர் – நிக்ஸன்
நீதிபதி – விஷ்ணு
‘நான் ரவீனாவோட பாதையை திசை திருப்பி அவங்களோட வெற்றிய தடுக்குறேன்னா, அப்போ நிக்ஸன் இப்ப ஐஷூக்கு என்ன பண்ணிட்டு இருக்கான், அவனும் அது தானே பண்றான்’ என்பது மணியின் குற்றச்சாட்டு. இது பொது வெளியில் தெரிந்த விடயம் என்றாலும் கூட, விஷ்ணு கேஸ்சை விசாரித்த விதம் சரியாக இருந்தது. ஒரு கட்டத்திற்கு பின் நிக்ஸனால் எதிர்த்து வாதிட முடியவில்லை. மாயாவே வந்து நிக்ஸனுக்கு எதிராக வேறு வார்த்தைகளை விட்டு விட்டு சென்று விட்டார். இன்னொரு பக்கம் மணி, தன்னிடம் ஐஷூ நிக்ஸன் குறித்து பேசிய வார்த்தைகளையும் அவிழ்த்து விட, வழக்கின் தீர்ப்பு மணி பக்கம் சாய்ந்தது. விஷ்ணு மணி வெற்றி பெற்றதாக அறிவித்தார்.
ஒட்டு மொத்தமாக கோர்ட் டாஸ்க்கில் ஜெயித்த அனைவருக்கும் ஸ்டார் வழங்கப்பட்டது. விஷ்ணு வாதாடி ஜெயித்ததில் ஒரு ஸ்டார், சிறந்த நீதிபதியாக செயல்பட்டதாக கூறி ஒரு ஸ்டார் என அவருக்கு இரண்டு ஸ்டார் வழங்கப்பட்டது. புல்லி கேங்கில் வாதிட்ட யாருமே ஜெயிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எபிசோடின் ஆரம்பத்தில் புல்லி கேங்களை வெளுத்து வாங்கிய விஷ்ணு, எபிசோடின் இறுதியில் சாரி சொல்லி சரண்டர் ஆகி விட்டார். என்ன தான் சண்டை போட்டாலும் புல்லி கேங்கின் மீது ஒரு சாப்ட் கார்னர் வைத்து இருக்கிறார் விஷ்ணு. அது சாப்ட் கார்னரா, இல்லை அது கேமா என்பது புலப்படவில்லை. எப்படியும் இந்த வீக் எண்ட் முடிந்ததும் மீண்டும் புல்லி கேங்கை விட்டு விலகி விடுவார் பார்க்கலாம்.
“ மாயா தன் கைகளில் ஒரு சிலரை வைத்துக் கொண்டு அவர்களை ஆட விட்டு மட்டும் வேடிக்கை பார்ப்பதாக தெரிகிறது. முக்கியமாக ஜோவிகா எல்லாம் மாயாவிற்கு தலையாட்டும் பொம்மையாகவே மாறி விட்டார். ”
மீண்டும் நாளைய பிக்பாஸ் ரிவ்யூவில் சந்திப்போம். இப்படிக்கு இடம்பொருள் இல்லத்தில் இருந்து உங்கள் லெ. ரமேஷ் !