Bigg Boss Tamil 7 | Day 41 | Review | ‘ஒரு தவறு செய்துவிட்டோம், அதையே நியாயப்படுத்தி விடுவோம் என்பது எப்படி தீர்வாக இருக்க முடியும்? ’

Bigg Boss Tamil 7 Day 41 Kamal Sir Controversy Verdiction Idamporul

Bigg Boss Tamil 7 Day 41 Kamal Sir Controversy Verdiction Idamporul

பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், நாற்பத்து ஒன்றாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம்.

Bigg Boss Tamil 7 Day 41 1st Kurumpadam Kamal Sir Sonnaru Idamporul
Bigg Boss Tamil 7 Day 41 1st Kurumpadam Kamal Sir Sonnaru Idamporul


ஜோவிகா நான் பாக்கலங்கிறாங்க, மாயா நான் ஒரு சிலர் கேட்டத வச்சு நானும் முடிவெடித்தேனு சொல்றாங்க, அக்‌ஷயா என்கிட்ட அப்படி ஏதும் நடந்துக்கலன்னு சொல்லுறாங்க, பூர்ணிமா விஷயத்துல, நடந்தத பூர்ணிமாவே தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க, ரவீனாவோட அரைஞான் கயிறு மேட்டருக்கு யுகேந்திரன் ஏற்கனவே விளக்கம் கொடுத்திட்டாங்க, ஐஷூக்கு என்ன நடக்குது நடந்துட்டு இருக்குதுன்னே புரியல. இவங்களுக்குள்ளேயே இத்துனை குழப்பங்கள் இருக்கும் போது எத வச்சு ரெட் கார்டு சரியானதுன்னு கமல் சார் முடிவு பண்ணாரு?

Bigg Boss Tamil 7 Day 41 2nd Kurumpadam Red Card Idamporul
Bigg Boss Tamil 7 Day 41 2nd Kurumpadam Red Card Idamporul


நீங்க செஞ்சது சரின்னு நிரூபிக்க, உங்களுக்கு தேவையானத மட்டும் குறும்படமா காமிச்சிடீங்க கமல் சார், மக்கள், அங்க ஒருத்தர களங்கம் இல்லாதவர்னு நிரூபிக்க 50 குறும்படத்துக்கு மேல விட்டுருக்காங்க, பாக்கலன்னா போய் பாத்திருங்க சார். அவங்க சொன்ன சாரிக்காக ஒரு குறும்படம் போட்டீங்க ஒகே. அவங்க சொன்ன சாரியையே நம்பாத நீங்க, அவங்க ஒருத்தர் மேல வச்ச அவ்ளோ பெரிய குற்றச்சாட்ட வெறும் வார்த்தைகளால எப்படி நம்புனீங்க?

ஒரு எடுத்துக்காட்டு ஒன்னு சொன்னீங்க, ஒரு தீயணைப்பு படைக்கு ஒருத்தங்க கால் பண்ணி ‘தீ’-ன்னு சொன்னா, அங்க ஒரு அடுப்பு எரிஞ்சிட்டு இருந்தா கூட அத வந்து அணைச்சிட்டு போயிடுவாங்களாம், குடிசை எரிஞ்சிட்டு இருந்தா பரவால்ல சார் போயிட்டு அணைங்க, எவனோ/ எவளோ ஒரு லூசு பய கால் பண்ணி சொன்னான்னு அங்க ஒருத்தங்க சாப்பாட்டுக்காக உக்காந்துட்டு அடுப்ப பத்த வச்சிட்டு இருப்பாங்களாம், அத போயிட்டு அணைச்சிட்டு வந்திருவாங்களாம். இதுல என்ன லாஜிக் இருக்கு.

Bigg Boss Tamil 7 Day 41 Vichithra Conversation With Kamal Idamporul
Bigg Boss Tamil 7 Day 41 Vichithra Conversation With Kamal Idamporul


ஒருத்தர் மேல ஒரு குற்றச்சாட்டு வச்சு, குற்றவாளின்னும் முடிவு பண்ணீட்டிங்க, தீர விசாரணைகள் ஏதும் நடக்கல, குற்றம் சாட்டப்பட்டவருக்கு பேசுவதற்கு கூட வாய்ப்பு அளிக்கப்படல, 60 கேமராக்களும், அத்துனை மைக்குகளும் ஏதோ அந்த 4 பேர் வாய்ல மட்டும் தான் இருக்கிற மாறி அவங்க சொன்னதயே அப்படியே தீர்ப்பா சொல்லிட்டீங்களே அது எப்படி நியாயமான தீர்ப்பா இருக்க முடியும்?

கடைசியா ’Women Card’ பத்தி சொன்னீங்க, அது தப்புன்னு யாருன்னு சொல்லலயே, அத யூஸ் பண்ணவங்க சரியா தான் யூஸ் பண்ணாங்களா, சரியான காரணத்துக்கு தான் யூஸ் பண்ணாங்களான்னு ஏன் விசாரிக்கல, என்பது தான் இங்கு பலரின் கேள்வி, விசாரணையே இல்லாம, மாயா, பூர்ணிமா மாறி பொண்ணுங்க கைலலாம் ‘Women Card’ அப்படிங்கிற ஒரு அதிகாரம் கொடுக்கப்படுமானால் அது ஆண்களின் வர்க்கத்திற்கு பாதுகாப்பின்மையாக தான் இருக்கும்.

“ தான் எடுத்த முடிவுல இருந்து பின் வாங்க கூடாது, அப்படிங்கிறதுக்காக ஒருத்தர் மீது விதிக்கப்பட்ட அநியாயத்தை, நியாயமாக காட்டிட கமல்ஹாசன் அவர்கள் முயற்சித்த முயற்சி வேண்டுமானால் பாராட்டத்தக்கது, மத்தபடி அவர் கொடுத்த தீர்ப்போ, தீர்வோ மக்கள் மன்றத்தில் அது செல்லுபடியாகாது “

மீண்டும் நாளைய பிக்பாஸ் ரிவ்யூவில் சந்திப்போம். இப்படிக்கு இடம்பொருள் இல்லத்தில் இருந்து உங்கள் லெ. ரமேஷ் !

About Author