Bigg Boss Tamil 7 | Day 42 | Review | ‘இந்த இரண்டு நாட்களில் என்ன தீர்வு தான் எட்டப்பட்டது? யோசித்தால் ஒன்றுமே இல்லை என்பது தான் உண்மை ’
பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், நாற்பத்து இரண்டாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம்.
ஹைலைட்ஸ்: தீபாவளி வாழ்த்துக்கள் – கேப்டன்சிப் நாமினேசன்ஸ் – புத்தக பரிந்துரை – ஹவுஸ்மேட்ஸ் About மாயா கேப்டன்சி – எவிக்சன் – நிக்ஸன், பூர்ணிமா உலறல்கள்
ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் மக்களுக்கும், கமல் அவர்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்களை கூறி விட்டு, திரு கமல் அவர்களுக்காக ஒரு அட்டகாசமான, நடனத்தை தீபாவளி பரிசாக வழங்கினர். நடனம் பார்ப்பதற்கு ஸ்பெசலாகவே இருந்தது. அதற்கு பின்னர் ஒவ்வொரு ஹவுஸ்மேட்ஸ்க்கும் அவர்களுக்கு வெளியில் நெருக்கமானவர்களிடம் இருந்து வந்த தீபாவளி மடல்களை, பரிசாக பிக்பாஸ் சார்பில் கொடுக்கப்பட்டது. மடல்களை படிக்கும் போது அத்துனை பேரின் முகத்திலும் ஒரு உத்வேகத்தை பார்க்க முடிந்தது.
வழக்கமான கேப்டன்சிப் டாஸ்க்கிற்கான நாமினேசன், பிக்பாஸ் வீட்டில் சிறப்பாக செயல்பட்ட இருவரையும், ஸ்மால் பாஸ் வீட்டில் சிறப்பாக செயல்பட்ட ஒருவரையும் அந்தந்த வீட்டார்கள் தேர்ந்தெடுத்து கேப்டன்சிப் டாஸ்க்கிற்கு அனுப்ப வேண்டும். அந்த வகையில் பிக்பாஸ் இல்லத்தில் இருந்து ஜோவிகாவும், ஐஷூவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஸ்மால் பாஸ் இல்லத்தில் இருந்து தினேஷ் தேர்ந்து எடுக்கப்பட்டார்.
கொடுக்கப்பட்ட பந்தை, கொடுக்கப்பட்ட வளையத்திற்குள் சுற்றிக் கொண்டே, கொடுக்கப்பட்ட தூரத்தைக் கடக்க வேண்டும் என்பதே டாஸ்க். ஜோவிகா, ஐஷூ இந்த டாஸ்க் என்ன என்று சுதாரிப்பதற்குள் தினேஷ் டாஸ்க்கையே முடித்து விட்டார். மின்னல் வேகத்தில் டாஸ்க்கை முடித்தார் என்றே சொல்லலாம். வாய் வீச்சில் மட்டும் அல்ல வாள் வீச்சிலும் தினேஷ் கெட்டிக்காரர் தான் போல. இனி கேப்டன் தினேஷ்சின் ஆட்டம் தொடரும்.
இந்த வாரம் கமல்ஹாசன் அவர்கள், ‘கு அழகிரிசாமி அவர்கள் எழுதிய கதைத் தொகுப்பு’ -களை பரிந்துரை செய்திருந்தார். மனதை திறந்து படித்தால், ஒரு புதிய உலகத்திற்கே அந்த கதைத்தொகுப்புகள் கொண்டு செல்லும் என கமல் அவர்கள் கூறி இருந்தார். வாசிக்க நினைப்பவர்கள் புத்தகத்தை கீழே இருக்கும் லிங்கில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
அதிகாரம் இருந்ததே தவிர, தலைமைப்பண்பு சரியில்லை, ’ஸ்டார்ட்டிங் எல்லாம் நல்லா தான் இருந்தது ஆனா உன்கிட்ட பினிஷிங் சரி இல்லையேம்மா’, ‘நாட் கூல்’ என்று ஒட்டு மொத்த போட்டியாளர்களில் ஒருவர் கூட மாயாவின் கேப்டன்சி பற்றி சரியாக கூறவில்லை. ‘இரண்டு முறை கேப்டன்சியில் இருந்த மாயாவின் தோழி, பூர்ணிமா ஏதாவது அவருக்கு அறிவுறுத்தி திருத்தி இருக்கலாம், ஆனால் அவர் செய்யவில்லை, மாறாக அவரின் செயல்களுக்கு கைதட்டி அவரை உசுப்பேத்தி கெடுத்துக் கொண்டு இருந்தார்’ என விசித்ரா கூறியது ஒரே பாலில் இரண்டு சிக்ஸர்களை அடித்தது போல இருந்தது.
எவிக்ஸன் பிராசஸ்சில் ஐஷூ வெளியேறியதாக அறிவிக்கப்பட்டார். பூர்ணிமாவின் வாக்குகள் தான் கம்மியாக இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஐஷூவின் பெற்றோர்களும் குடும்பத்தார்களும் ஐஷூவை வெளியே விடும் படி டெலிவிஷனிடம் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. அதன் காரணமாகவே ஐஷூ வெளியேற்றப்பட்டு இருப்பதாக தகவல்கள் கசிந்து இருக்கிறது.
எதோ ஐஷூ வெளியேறியதற்கு, தினேஷ், அர்ச்சனா, பூர்ணிமா தான் காரணம் என்பது போல நிக்ஸன் புலம்பி தீர்த்துக் கொண்டு இருந்தார். அவர் வெளியேறியதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். அதில் முழு முதன் காரணம் எதுவென்று அது நிக்ஸன் ஆக தான் இருப்பார். இரண்டாவது காரணம் வேண்டுமானால் மாயாவாக இருப்பார். நிக்ஸன் நிச்சயம் அதை புரிந்து கொள்ள வாய்ப்பில்லை. பூர்ணிமா இன்னொரு பக்கம் அவரது கான்பிடன்ஸ் மொத்தத்தையும் இழந்ததை உணர முடிந்தது. இதுவரை பழியை தூக்கி கமல் சார் மீது போட்டுக் கொண்டு இருந்தார். தற்போது பிக்பாஸ்சின் மீதே அவருக்கு சந்தேகம் எழுந்து விட்டது.
“ கண்டிக்கப்பட வேண்டியவர்கள் கண்டிக்கப்படவில்லை, வினுஷா விஷயம் குறித்து ஒன்றும் கேட்கவில்லை, எத்தனையோ குறும்படங்கள் இணையத்தில் வெளியாகியும் கூட ஒன்றுக்கும் அதற்கு ஹாஸ்ட் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. இரண்டு நாட்களாக அநியாயங்கள் நியாயப்படுத்தப்பட்டுக் கொண்டு இருந்தது மட்டும் புலப்பட்டது “
மீண்டும் நாளைய பிக்பாஸ் ரிவ்யூவில் சந்திப்போம். இப்படிக்கு இடம்பொருள் இல்லத்தில் இருந்து உங்கள் லெ. ரமேஷ் !