Bigg Boss Tamil 7 | Day 43 | Review | ‘பிக்பாஸ்சின் மீது நம்பிக்கை இழக்கிறாரா பூர்ணிமா?’

Bigg Boss Tamil 7 Day 43 Poornima About Maya Decison In Koluthi Podu Task Idamporul

Bigg Boss Tamil 7 Day 43 Poornima About Maya Decison In Koluthi Podu Task Idamporul

பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், நாற்பத்து மூன்றாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம்.

ஹைலைட்ஸ்: ஒன்றான இரண்டு வீடுகள் – பூர்ணிமா, மாயா கான்வர்சேஷன் – ஸ்பெசல் விருந்தாளர்கள் – கொளுத்தி போடு – நாமினேசன்

Bigg Boss Tamil 7 Day 43 Free From Small Boss Bigg Boss Seperation Idamporul
Bigg Boss Tamil 7 Day 43 Free From Small Boss Bigg Boss Seperation Idamporul


தீபாவளி கொண்டாட்டத்திற்கான வாரம் என்பதால், இந்த வாரம் மட்டும் ஸ்மால் பாஸ், பிக்பாஸ் பிரிவினைகள் இல்லை. அனைத்து போட்டியாளர்களும் இரண்டு வீடுகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம். நாமினேசனிலும் யாரை வேண்டுமானாலும் நாமினேட் செய்து கொள்ளலாம். முந்தைய சீசனைப் போல சமையல் அணி, ஹவுஸ் க்ளீனிங் அணி, வெஸ்சல் வாஷிங் அணி, பாத்ரூம் க்ளினீங் அணி என்பதை மட்டும் கேப்டன் பிரிக்க வேண்டும்.

கிட்சன் அணி: நிக்ஸன், பிராவோ, ஜோவிகா, விஷ்ணு
ஹவுஸ் க்ளீனிங் அணி: கானா பாலா, விக்ரம், அக்‌ஷயா, விசித்ரா, ரவீனா
வெஸ்சல்ஸ் வாஷிங் அணி: மாயா, பூர்ணிமா
பாத்ரூம் க்ளீனிங் அணி: கூல் சுரேஷ், மணி, அர்ச்சனா

என அணிகள் பிரிக்கப்பட்டது. வெஸ்சல் வாஷிங் அணியில் இருவர் மட்டுமே இருப்பதால், அவரவர் சாப்பிட்ட தட்டுகளை அவரவர் கழுவியே கொடுக்குமாறு கேப்டன் தினேஷ் கேட்டுக்கொண்டார்.

Bigg Boss Tamil 7 Day 43 Poornima Maya Conversation Idamporul
Bigg Boss Tamil 7 Day 43 Poornima Maya Conversation Idamporul


போன வாரம் முழுக்க கமல் ஹாசன் அவர்களை சாடிக் கொண்டு இருந்த பூர்ணிமா, இந்த வாரம் முழுக்க பிக்பாஸ் டீமை சாடிக் கொண்டு இருக்கிறார். எனக்கும் அவங்கள மாதிரி க்ரிஞ்ச் கண்டண்டுலாம் கொடுக்க தெரியும். எனக்கும் அழ தெரியும். அதெல்லாம் நான் அவங்கள விட பெட்டரா பண்ணுவேன். ஆரம்பத்துல இருந்தே இது ஒரு ஒன்சைடடு கேமா தான் போயிட்டு இருக்கு. அவங்களோட ஸ்க்ரிப்டுக்கு ஏத்தாப்பில யாரு பண்றாங்களோ அவங்க தான் வின்னர் போல, என மாயாவும் பூர்ணிமாவும் பிக்பாஸ்சின் ஒட்டு மொத்த டீமையே குறை கூறி கொண்டு இருந்ததெல்லாம் ரொம்ப ஓவர்.

Bigg Boss Tamil 7 Day 43 Special Guest With Special Food Idamporul
Bigg Boss Tamil 7 Day 43 Special Guest With Special Food Idamporul


தீபாவளி ஸ்பெசல் என்பதால் இல்லத்திற்குள் புகழ், ஸ்ருஸ்டி என இரண்டு ஸ்பெசல் விருந்தாளர்களை அனுப்பி, இல்லத்திற்குள் இருக்கும் ஒவ்வொரு போட்டியாளர்களின் வீட்டில் செய்து கொடுத்த ஸ்பெசல் உணவுகளையும் அவர்களிடம் கொடுத்து அனுப்பினார் பிக்பாஸ். உணவு மட்டும் அல்லாது அவர்களுக்கான ஸ்பெசல் ஸ்வீட்ஸ்களையும் அவரவர் இல்லத்தினர் கொடுத்து அனுப்பினர். தீபாவளி கொண்டாட்டமும் இல்லத்திற்குள் சிறப்பாக நடைபெற்றது. முக்கியமாக மாயா, பூர்ணிமாவை, ஸ்ருஸ்டி அவர்கள் புல்லி கேங் என அடையாளப்படுத்தியது குபீர் சிரிப்பை வரவழைத்தது.

Bigg Boss Tamil 7 Day 43 Koluthi Podu Pattasu Task Idamporul
Bigg Boss Tamil 7 Day 43 Koluthi Podu Pattasu Task Idamporul


ஒவ்வொரு போட்டியாளர்களும் ஒவ்வொரு பட்டாசை எடுக்க வேண்டும், அந்த பட்டாசின் தன்மை என்ன என்றும் விளக்கப்பட்டு இருக்கும். எடுத்த பட்டாசு யாருக்கு பொருந்தும் என்பதை காரணத்தோடு விளக்க வேண்டும் என்பதே டாஸ்க்.

பட்டாசை எடுத்த போட்டியாளர்பட்டாசுபட்டாசின் தன்மைகொடுக்கப்பட்ட போட்டியாளர்
கானா பாலாபாம்பு வெடிபுகை மட்டும் தான் வரும்கூல் சுரேஷ்
ரவீனாசங்கு சக்கரம்நல்லா தான் சுத்தும், கால சுத்தவும் வாய்ப்பு இருக்குஅர்ச்சனா
நிக்ஸன்ஆட்டம் பாம்ப்பத்திக்கிட்டா பவர் புல்லா வெடிக்கும்மாயா
மணிபுஸ்வானம்பெருசா ஏதாச்சு பண்ணுவாங்கன்னு நினைப்போம் புஸ்சுன்னு போயிடும்அக்‌ஷயா
அர்ச்சனாசாட்டைகவனிப்பற்று இருக்கும்விக்ரம்
பிராவோசரவெடிகண்ட்ரோலே இருக்காதுவிஷ்ணு
அக்‌ஷயாஊசி வெடிசட்டு சட்டுன்னு வெடிக்கும்கூல் சுரேஷ்
விக்ரம்கம்பி மத்தாப்புபத்த வச்சா தான் பிரைட் ஆகும்நிக்ஸன்
ஜோவிகாபென்சில் வெடிஇது எதுக்கு இருக்குனே தெரியாதுபிராவோ
விசித்ராபுல்லட் பாம்ப்வெடிக்கிறது ஒரு இடத்துல, சிதறி விழுறது இன்னொரு இடத்துலபூர்ணிமா
விஷ்ணுபிக் புல்லட்பாக்குறதுக்கு சின்னதா இருக்கும், சத்தம் பயங்கரமா இருக்கும்விசித்ரா
மாயாபட்டர்பிளைபறந்து வெடிக்கும்னு பார்த்தா புஷ்ஷுன்னு ஊர்ந்து போகும்அர்ச்சனா
பூர்ணிமாராக்கெட்பத்த வச்சா பறக்கும் ஆனா சாஞ்சா ஆபத்துஜோவிகா
கூல் சுரேஷ்வெங்காய வெடிதூக்கி எறியுறது ஒருத்தரு, அடி வாங்கிறது இன்னொருத்தருவிசித்ரா
ரோல் வெடிதினேஷ்ட்ரிகர் அழுத்தினா தான் வெடிக்கும்மணி


Bigg Boss Tamil 7 Day 43 Nomination Process Idamporul
Bigg Boss Tamil 7 Day 43 Nomination Process Idamporul

போட்டியாளர்நாமினேட் செய்யப்பட்டவர்கள்
பிராவோகானா பாலா, விசித்ரா
விஷ்ணுவிக்ரம், அக்‌ஷயா
ஜோவிகாமணி சந்திரா, விக்ரம்
கூல் சுரேஷ்விக்ரம், அக்‌ஷயா
ரவீனாவிக்ரம், அர்ச்சனா
அக்‌ஷயாவிசித்ரா, மணி
நிக்ஸன்விசித்ரா, மணி
பூர்ணிமாமணி, ரவீனா
மணிஅக்‌ஷயா, பிராவோ
அர்ச்சனாமாயா, பூர்ணிமா
கானா பாலாபூர்ணிமா, பிராவோ
விக்ரம்விஷ்ணு, பிராவோ
மாயாமணி, பாலா
விசித்ராவிக்ரம், ரவீனா
தினேஷ்பூர்ணிமா, விக்ரம்


ஓவர் ஆல் இன்றைய எபிசோடில் முக்கியமாக நடைபெற்றது கொளுத்திப் போடு டாஸ்க்கும், நாமினேசனும் தான் மீதி எல்லாம் செலிபிரேசனும், பூர்ணிமா மற்றும் மாயாவின் காஸிப்சுகள் தான்.

“ பூர்ணிமா சொல்வது பிக்பாஸ் விசித்ரா, அர்ச்சனாவிற்கு மட்டுமே சாதகமாக நடந்து கொள்கிறார்கள் என்பது, ஆனால் மக்கள் யோசிப்பது பிக்பாஸ், மாயா மற்றும் பூர்ணிமாவிற்கு மட்டும் ரொம்பவே கருணை காட்டுகிறது என்பது தான் “

மீண்டும் நாளைய பிக்பாஸ் ரிவ்யூவில் சந்திப்போம். இப்படிக்கு இடம்பொருள் இல்லத்தில் இருந்து உங்கள் லெ. ரமேஷ் !

About Author