Bigg Boss Tamil 7 | Day 46 | Review | ‘நீ நல்ல பிளேயர் தான், ஆனா உன் ட்ராக் இப்ப திசை மாறிடுச்சு’
பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், நாற்பத்து ஆறாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம்.
ஹைலைட்ஸ்: உன்னை போல் ஒருவன் டாஸ்க் 2 – விஷ்ணு, மணி கான்வர்சேஷன் – விசித்ரா, மாயா கான்வர்சேஷன் – தீபாவளி ஸ்டார் டாஸ்க் – விஷ்ணு, பூர்ணிமா கான்வர்சேஷன்
இது ஒரு 3 ரவுண்டுகளாக நடைபெறும் போட்டி, கானா பாலா நடுவராகவும், அணிகள் ஆண்கள் அணியாகவும், பெண்கள் அணியாகவும் பிரிய வேண்டும். 3 தலைப்புகள் கொடுக்கப்பட்டு அதன் கீழ் பெண்கள் வேடமிட்டு இருக்கும் ஆண்களும், ஆண்கள் வேடமிட்டு இருக்கும் பெண்களும் வாதிட வேண்டும். சிறப்பாக செயல்பட்ட அணிக்கு ஒரு ஸ்டார் வழங்கப்படும். ’கிச்சனில் சிறப்பாக செயல்படுவது ஆண்களா, பெண்களா?, கேப்டன்சிப்பை சிறப்பாக வழிநடத்துவது ஆண்களா, பெண்களா?, டைட்டில் வின்னர் ஆக தகுதி இருப்பவர்கள் ஆண்களா, பெண்களா?’ என்ற மூன்று தலைப்புகளின் விவாதம் நடைபெற்றது. பெண்கள் வேடமிட்டு இருந்த ஆண்களே இரண்டு தலைப்புகளில் வெற்றி பெற்றதால் அவர்களுக்கு ஸ்டார் வழங்கப்பட்டது. ஆண்கள் அவர்களுக்குள் கலந்து ஆலோசித்து அந்த ஸ்டாரை பூர்ணிமா வேடமிட்டு இருந்த மணிக்கு கொடுத்தனர்.
ஆனா, வூனான்னா பாஸ்ட்ல நடந்த Trauma சொல்லி தப்பிச்சிக்கிறாளுங்க, ஏன் மத்தவங்களுக்கெல்லாம் Trauma இல்லயா, எல்லார்கிட்டையும் போய் நல்லவிதமா பேசிட்டு, அப்புறமா அவங்கள கவுக்குறதுக்கு தனியா ரெண்டு பேரும் உக்காந்து ஆலோசிக்க வேண்டியது. சில நேரம் விஷ்ணு பாயிண்டாக தான் பேசுகிறார், ஆனால் மாயா, பூர்ணிமாவை மணிகணக்கா திட்டி விட்டு அடுத்த நொடியே அங்கு சென்று இன்னொரு கதை பேசிக் கொண்டு இருக்கிறார்.
சிலர் கேமிற்காக ஒரு சில வார்த்தைகளை தவிர்ப்பர், இல்லையேல் கொஞ்சம் வார்த்தைகளை மிகைப்படுத்துவர், ஆனால் விசித்ரா நடுநிலையாக தனக்கு தோன்றுவதை நெத்தியடியாக பேசுவது பெரும்பாலானோரால் ரசிக்கப்படுகிறது. ’ஐஷூ ஏன் வெளில போனா?, ஸ்ட்ராங்கான ப்ளேயர்னா பிராவோ தானே போன வாரம் போயிருக்கனும், ஸ்ட்ராங்கான ப்ளேயர நாமினேட் பண்ண கூடாதுன்னா என்ன ஏன் எல்லாரும் நாமினேட் பண்ணீங்க, அவ போனதுக்கு நீங்க எல்லாரும் தான் காரணம்’ என மாயாவுக்கு விசித்ரா பதிலடி கொடுத்துக் கொண்டு இருந்தது மாஸ்சாக இருந்தது. இந்த மண்டைய கழுவுற வேலை எல்லாம் விஷ்ணு, ரவீனாகிட்ட வச்சிக்கோங்க மாயா, விசித்ரா மா கிட்ட அது நடக்காது போல.
இது ஒரு தீபாவளி ட்ரீட் டாஸ்க், கன்பசன் ரூமில் மொத்தம் 15 லட்டுகள் இருக்கும், 15 லட்டுகளில் மூன்றில் ஸ்டார் இருக்கும். மொத்தம் 5 பேர் உள்ளே செல்ல வாய்ப்பு அளிக்கப்படும். அந்த 5 பேர் யார் யார் என்பதை அனைத்து போட்டியாளர்களும் தேர்ந்து எடுத்து அனுப்ப வேண்டும். முதலில் செல்பவர் 5 லட்டுகள் எடுக்கலாம், இரண்டாவது செல்பவர் 4 லட்டுகள் எடுக்கலாம். மூன்றாவது செல்பவர் 3 லட்டுகள் எடுக்கலாம், நான்காவது செல்பவர் 2 லட்டுகள் எடுக்கலாம், ஐந்தாவது செல்பவர் 1 லட்டுகள் எடுக்கலாம். போட்டியாளர்களால் ரவீனா 5 லட்டு எடுப்பதற்கும், விஷ்ணு நான்கு லட்டு எடுப்பதற்கும், பிராவோ மூன்று லட்டு எடுப்பதற்கும், கூல் சுரேஷ் இரண்டு லட்டு எடுப்பதற்கும், தினேஷ் ஒரு லட்டு எடுப்பதற்கு தெரிவு செய்யப்பட்டனர். முதலில் ரவீனா எடுத்த 5 லட்டுகளில் ஒரு ஸ்டாரும், இரண்டாவதாக சென்று விஷ்ணு எடுத்த 4 லட்டுகளில் இரண்டும் ஸ்டாரும் என்று டாஸ்க் இரண்டே பிளேயர்களுக்குள் முடிந்து விட்டது.
‘நீ ஒரு நல்ல பிளேயர் தான், ஆனா இப்ப சரி இல்ல, நீ இப்ப வேற ட்ராக்ல போயிட்டு இருக்க, இப்படியே போனா அவ்ளோ தான், உங்க வீட்ல இருந்து வர்றதுக்குள்ள நீ போயிடுவன்னு தான் எனக்கு தோணுது’ விசித்ரா ரொம்ப ஸ்ட்ராங்க தெரியுறாங்க, அவங்க 10 வாரத்துக்கு மேல கூட இருப்பாங்கன்னு எனக்கு தோனுது. அடுத்தடுத்து போறது கூட உங்க டீம்ல இருந்து தான் போவாங்க, என விஷ்ணு பூர்ணிமாவிடம் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் ஆடியன்ஸ்சை பிரதிபலிப்பதாக இருந்தது.
“ ஒட்டு மொத்தமாகவே பிக்பாஸ் டீம் ரொம்ப சோர்வடைந்து விட்டது போல, டாஸ்க்குகளும் சரி, அவர்கள் யோசிக்கு புதிய கண்டண்டுகளும் சரி தற்போதெல்லாம் ரொம்ப போர் அடிக்க்கிறது ”
மீண்டும் நாளைய பிக்பாஸ் ரிவ்யூவில் சந்திப்போம். இப்படிக்கு இடம்பொருள் இல்லத்தில் இருந்து உங்கள் லெ. ரமேஷ் !