Bigg Boss Tamil 7 | Day 47 | Review | ‘தான் செய்ய நினைக்கும் ஒன்றை அடுத்தவர்களை பயன்படுத்தி செய்கிறாரா மாயா?’
பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், நாற்பத்து ஏழாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம்.
ஹைலைட்ஸ்: மாயா பத்த வச்சிங் – விசித்ரா, நிக்ஸன், அர்ச்சனா Argument – ஷாப்பிங் ரீபேமெண்ட் டாஸ்க், ஒரு கலர் சொல்லட்டா சார் – பெஸ்ட் பெர்பாமர் – வொர்ஸ்ட் பெர்பாமர் – கேப்டன்சி டாஸ்க் – ஜெயில் மறுப்பு
மாயா ஒவ்வொருவரிடமும் நட்பு பழகுவதை போல பழகி விட்டு அவர்களிடம் இருந்து தகவல்களை எடுத்துக் கொண்டு அதை சம்பந்தப்பட்டவர்களிடம் சென்று பற்ற வைக்கிறார். அது போல தான் விசித்ரா ஐஷூ பற்றி பேசிய ஒரு சில விடயங்களை எடுத்துக் கொண்டு நிக்ஸனிடம் போட்டு உடைக்கிறார். அதாவது ஐஷூ போனதுக்கு நீங்க எல்லாரும் தான் காரணம் என்று விசித்ரா சொல்லிய வார்த்தைகளை, ஐஷூ போனதுக்கு நிக்ஸன் நீ மட்டும் தான் காரணமாம் என மாயா திரித்து கூறிக் கொண்டு இருந்தார்.
மாயா ஒப்பித்ததை அப்படியே விசித்ராவிடம் பேசி சண்டையிட்டு ஸ்கோர் செய்து விடலாம், டேமேஜ் கண்ட்ரோல் செய்து விடலாம் என நினைத்து வந்த நிக்ஸனுக்கு மேலும் டேமேஜ் தான் மிஞ்சியது. ’ஆமா அவ உன்னால தான் வெளில போனா இப்ப என்ன உன்கிட்டயே டைரக்டா சொல்லனுமா, சரி சொல்லுறேன் அவ உன்னால தான் வெளில போனாடா’ என விசித்ரா ஒரு பக்கம் நிக்ஸனை போட்டு வதைக்க, இன்னொரு பக்கம் அர்ச்சனாவும், ‘அவ ஏன் 40 நாள் எதுவுமே பண்ணல தெரியுமா, அவன் உன் கூட இருந்ததுனால தான், அதுனால தான் அவ வெளிலயும் போனா’ என போட்டு உடைக்க அங்கிருந்து தப்பித்தால் போதுமென நடையை கட்டினார் நிக்ஸன்.
‘ஒரு கலர் சொல்லட்டா’ டாஸ்க், இது ஒரு ஷாப்பிங் ரீபேமெண்ட் டாஸ்க், 5 பேர் மட்டும் விளையாடலாம், அந்த 5 பேரை ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும். இந்த 5 பேர் உள்ளே சென்று டாஸ்க்கில் தோற்கும் பட்சத்தில் டாஸ்க்கில் பங்கேற்காத அந்த 10 பேருள் ஒருவரை அடுத்த வாரம் டைரக்ட் நாமினேசனுக்குள் அனுப்பலாம். மொத்தம் ஆறு கலர் பிளேட்கள், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கலர் ஆர்டர்கள் ரகசியமாக கொடுக்கப்படும். அதை அவர்கள் நியாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். அதை ஒருவர் சொல்ல இன்னொரு போட்டியாளர் அதை சரியாக வரிசைப்படுத்த வேண்டும். 5-யில் நான்கு சரியாக அடுக்கினால் போதும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவர்.
பூர்ணிமா, மணி, விக்ரம், ரவீனா மற்றும் விஷ்ணு ஆகியோர் டாஸ்க்கில் கலந்து கொண்டனர். ஐந்தில் ஐந்துமே சரியாக நியாகப்படுத்தி டாஸ்க்கில் எளிதாக வெற்றி பெற்றனர். ஆனாலும் மாயாவிற்கும் பூர்ணிமாவிற்கும் டாஸ்க்கில் தோற்று யாரையாவது நாமினேட் செய்து இருக்கலாம் என்ற ஐடியா இருந்து இருக்கும் போல. அவர்களுக்கு தினேஷ் உறுத்திக் கொண்டே இருக்கிறார் போல, ஒரு வேளை அப்படி செய்யுறேன்னே வச்சுப்போம், அப்படி செஞ்சா எங்க மேல இருக்கிற ட்ரஸ்ட் தானே உடையும், அடுத்து எங்கள நம்பி எப்படி அடுத்த டாஸ்க்கிற்கு அனுப்புவாங்க என மணி மாயாவிடம் கேட்டதும் சரி தான்.
இந்த வாரத்தின் பெஸ்ட் பெர்பாமர்களாக தினேஷ், கூல் சுரேஷ், நிக்ஸன் உள்ளிட்டோர் போட்டியாளர்களால் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்து எடுக்கப்பட்டனர். இந்த மூவரும் அடுத்தவாரத்திற்கான கேப்டன் பொறுப்பிற்கு வைக்கப்படும் கேப்டன்சி டாஸ்க்கில் கலந்து கொள்ளலாம்.
டாஸ்க் ஒன்றும் பெரிதாக இல்லை, ஒரு சீட்டுக்கட்டை அடுக்கி வைத்து சரித்து விடுவோமே அது போல கொடுக்கப்பட்ட பிளேட்களை ரேம்பில் அடுக்கி வைத்து ஒரு எண்டில் இருந்து சரித்து விட வேண்டும். இன்னொரு எண்டில் ஒரு பால் இருக்கும் பிளேட்கள் அந்த பாலின் மீது விழுந்து அந்த பால் கீழே வைக்கப்பட்டு இருக்கும் கூடையில் சரியாக விழ வேண்டும் என்பது தான் டாஸ்க். யார் முதலில் விழ வைக்கிறார்களோ அவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். ஒவ்வொருவரும் மாற்றி மாற்றி சரித்துக் கொண்டெ இருந்தனர். ஒரு கட்டத்தில் தினேஷ் சரியாக செயல்பட்டு பாலை கூடையில் விழ வைத்தார்.
இரண்டாவது முறையாக மீண்டும் தினேஷ் பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக தேர்ந்து எடுக்கப்பட்டார். மாயாவிற்கும், விஷ்ணுவிற்கும் தினேஷ் கேப்டன் ஆகின வயிற்றெரிச்சலை அவர்களின் முகத்திலேயே பார்க்க முடிந்தது. விஷ்ணுவிற்கு தினேஷ் கேப்டன் ஆனது செம்ம காண்டு போல, இருக்க தானே செய்யும், அவரின் ஆக்ரோஷ குரலுக்கு அடங்கி போகிறவர்கள் மத்தியில் எதிர்த்து நிற்கிறார் அல்லவா, மாயாவிற்கு தினேஷ்சை இந்த வீட்டை விட்டு எப்படியாவது வெளியில் அனுப்பிட வேண்டும், வெளியே அனுப்ப பல முயற்சிகளை எடுத்தும், தொடர்ந்து அதில் தோற்றுக் கொண்டு தான் இருக்கிறார்.
இந்த வாரத்தின் வொர்ஸ்ட் பெர்பாமர்களாக விசித்ராவும், அர்ச்சனாவும் தேர்ந்து எடுக்கப்பட்டனர். போட்டியாளர்களே அவங்களுக்குள்ள சொல்லிக்கிறாங்க அக்ஷயாவும், விக்ரமும் செட் பிராபர்ட்டின்னு, ஆனா அவங்க வொர்ஸ்ட் பெர்பாமர் இல்லையாம், விசித்ராவும் அர்ச்சனாவும் தான் வொர்ஸ்ட் பெர்பாமராம். இருவருமே தாங்கள் வொர்ஸ்ட் பெர்பாமர் என்பதை மறுத்து ஜெயிலுக்கும் செல்ல மறுத்தனர்.
ஜெயிலுக்கு செல்ல வேண்டும் என்பது ரூல், செல்ல மறுத்தீங்கன்னா நீங்க எங்க உக்காந்து இருக்கீங்களோ அங்கயே உட்கார்ந்துகோங்க, அங்க இருந்து நகலுறதா இருந்தா டைரக்டா ஜெயிலுக்கு தான் போனும், வீட்டுக்குள்ள வர கூடாது என ஆர்டர் போட்டார். மத்தவங்க மாறி ஓயாம பிக்பாஸ்கிட்ட போயிட்டு கம்பிளைண்ட் பண்ணாம, சுயமா அதும் டெமோகிரேட்டிக்கா தினேஷ் எடுத்த முடிவு பாராட்டத்தக்கது. விஷ்ணு சாப்பாடு கொடுக்க வேண்டாம் என்று கூறிய போது, அதெல்லாம் வேணாம் கொடுப்போம், என தினேஷ் கூறியதும் பாராட்டிற்குரியது.
” மாயா, பூர்ணிமா இந்த வாரம் முழுக்க அமைதியாக இருந்தார்கள் என்றெல்லாம் நினைக்க வேண்டும், இந்த வாரமும் நீடித்த பல கலகங்களுக்கு அவர்களே அமைதியான காரணம், அவர்கள் ஆடவில்லை ஆனால் ஒரு சிலரை ஆட்டுவிக்கிறார்கள், அதன் மூலம் அவர்களும் ஆடுகிறார்கள் “
மீண்டும் நாளைய பிக்பாஸ் ரிவ்யூவில் சந்திப்போம். இப்படிக்கு இடம்பொருள் இல்லத்தில் இருந்து உங்கள் லெ. ரமேஷ் !