Bigg Boss Tamil 7 | Day 48 | Review | ‘டைரக்ட் நாமினேசன் பவரை தட்டி தூக்கிய விஷ்ணு, யார் இருவரை நாமினேட் செய்ய போகிறார்?’

Bigg Boss Tamil 7 Day 48 Vishnu Got Double Nomination Power Idamporul

Bigg Boss Tamil 7 Day 48 Vishnu Got Double Nomination Power Idamporul

பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், நாற்பத்து எட்டாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம்.

ஹைலைட்ஸ்: மாயா, பூர்ணிமா காஸிப்ஸ்கள் – மரியாதை – Most Respectful Person In House – ஸ்டார் பகிர்தல்

Bigg Boss Tamil 7 Day 48 Maya Poornima Conversation Idamporul
Bigg Boss Tamil 7 Day 48 Maya Poornima Conversation Idamporul


மாயாவிற்கு விஷ்ணு மீது காண்டு தினேஷ் ப்ளேயிங் மீது கொஞ்சம் ஈர்ப்பு, பூர்ணிமாவிற்கு தினேஷ் மீது காண்டு, விஷ்ணு பிளேயிங் மீது கொஞ்சம் ஈர்ப்பு, இரு முரண்பாடுகளும் ஒன்றாக சந்திக்கும் போது சற்றே இருவருக்குள் ஒரு முரண்பாடு வந்து விடுகிறது. மாயா விஷ்ணுவை வளர்த்து விடுவதை விரும்பவில்லை. பூர்ணிமாவிற்கு தினேஷ் என்ற கேரக்டரே பிடிக்கவில்லை போல. மாயா யாருக்கு ஆதரவாளர்கள் இருக்கிறார்களோ அவர்கள் பக்கம் தொற்றிக் கொண்டு அவர்களை பற்றி புரிந்து கொண்டு அவர்களை சாய்ப்பது தான் அவருடைய கேம். அது பூர்ணிமாவிற்கு புரிய வாய்ப்பில்லை.

Bigg Boss Tamil 7 Day 48 Vichithra Ma About Mariyathai Idamporul
Bigg Boss Tamil 7 Day 48 Vichithra Ma About Mariyathai Idamporul


மரியாதை குறித்து பலமுறை பேசிவிட்டாலும் கூட இந்த வாரம் பேசுவதற்கு அந்த ஒரு தலைப்பு தான், அதனால் அதையே மறுபடியும் எடுத்துக் கொண்டு கமல் அவர்கள் பேசிக் கொண்டு இருந்தார். மரியாதை என்பது கொடுத்தால் திரும்ப கிடைக்கும், அது போல ஒருவர் எப்படி நடந்து கொள்கிறார் என்பதை பொறுத்தும் அவருக்கு மரியாதை கிடைக்கும், என்பது பெரும்பாலானோரின் கருத்தாக இருந்தது. ஆனாலும் இந்த பிக்பாஸ் வீட்டில் மரியாதை இருப்பதாக தெரியவில்லை. மரியாதையாக இருப்பது போல காட்டிக் கொள்கிறார்கள் என்பது தான் பெரிய மரியாதையாக படுகிறது.

Bigg Boss Tamil 7 Day 48 Most Respectful Person In House Idamporul
Bigg Boss Tamil 7 Day 48 Most Respectful Person In House Idamporul


இந்த வீட்டில் மிகவும் மதிக்கப்படும் நபராக நீங்கள் பார்க்கும் நபர் யார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இந்த வீட்டைப் பொறுத்த வரை இது ரொம்ப கடினமான கேள்வி தான் , ஆனாலும் ஹவுஸ்மேட்ஸ் விசித்ரா, மாயா, கூல் சுரேஷ் அவர்களை பெரும்பாலும் மதிக்கப்படும் நபராக தெரிவு செய்தனர்.

Bigg Boss Tamil 7 Day 48 Star Pagirthal Idamporul
Bigg Boss Tamil 7 Day 48 Star Pagirthal Idamporul


ஸ்டார் கணக்குகள் ஆல்மோஸ்ட் ஒவ்வொருவரிடமும் சமநிலையில் இருப்பதால், விசித்ரா, விஷ்ணு, மணி, ரவீனா என நான்கு பேரையும் ஒன்றாக பேசி முடிவு செய்து அவர்களுக்குள் அவரவர் விருப்பப்படுபவரிடம் ஸ்டாரை கொடுக்கலாம் என பிக்பாஸ் அறிக்கை விடுத்தார். இரண்டு பேரை டைரக்ட் நாமினேசன் செய்ய வேண்டும் என்பதால் இந்த ஸ்டார் முக்கியமாக கருதப்பட்டது. வெளியில் இருந்து நிக்ஸனுக்கு சப்போர்ட் செய்வது போல நடிக்கும் மாயா, விஷ்ணுவிடம் நிக்ஸன போட்டு விடுங்க என கேட்டுக் கொண்டார். என்ன தான் நிறைய கருத்து வேறுபாடு இருந்தாலும் கூட விசித்ரா நிக்ஸன நாமினேட் செய்ய வேண்டாம். அப்படி பண்ணா என் ரெண்டு ஸ்டாரையும் விஷ்ணுவுக்கு கொடுக்கிறேன்னு சொன்னாங்க. இது தான் மாயாவிற்கும் விசித்ராவிற்குமான வேறுபாடு.

Bigg Boss Tamil 7 Day 48 Cricket Task Idamporul
Bigg Boss Tamil 7 Day 48 Cricket Task Idamporul


கிரிக்கெட் டாஸ்க், யார்க்கர், 12த் மேன், வைடு பால், ஓவர் த்ரோ, ஹிட் விக்கெட், ரன் அவுட் போன்று கிரிக்கெட்டில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளை பயன்படுத்தி ஹவுஸ்மேட்ஸ் இருவரை தகுந்த காரணங்களோடு கூற வேண்டும். ஓவர் த்ரோ, அவங்க ஒன்னு பண்ணனும்னு நினைச்சு அது அவங்களுக்கே வினையா வந்து முடியும் என்ற பெயரில் மாயாவிற்கு அதிகமாக வழங்கப்பட்டது. வைடு பால், வந்த நோக்கத்தில் இருந்து திசை மாறுதல் என்ற பெயரில் ஜோவிகாவிற்கு அதிகம் வழங்கப்பட்டது. 12த் மேன் வெளியில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பது என்ற பெயரில் அக்‌ஷயா, விக்ரமிற்கு அதிகமாக வழங்கப்பட்டது.

Bigg Boss Tamil 7 Day 48 Vishnu Got Double Nomination Power Idamporul
Bigg Boss Tamil 7 Day 48 Vishnu Got Double Nomination Power Idamporul


“ விஷ்ணு யார் இருவரை நாமினேட் செய்ய போகிறார் என்பது நாளைக்கு தெரிய வாய்ப்பு இருக்கிறது, மாயா மற்றும் ஜோவிகாவாக இருக்கலாம், நால்வருக்குள் முடிவெடுத்தது அது தான், இல்லை வித்தியாசமாக வேறு ஏதும் யோசிப்பாரா, இல்லை மாயா சொன்னதை செய்வாரா இல்லை விசித்ரா சொன்னதை செய்வாரா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் “

மீண்டும் நாளைய பிக்பாஸ் ரிவ்யூவில் சந்திப்போம். இப்படிக்கு இடம்பொருள் இல்லத்தில் இருந்து உங்கள் லெ. ரமேஷ் !

About Author