Bigg Boss Tamil 7 | Day 5 | ‘என்ன பத்தி நீ பேசுறதா இருந்தா பேசு, என் பேக்கிரவுண்ட் பத்தி பேசாத’
பிக்பாஸ் தமிழின் இன்றைய நாளில் விசித்ரா மற்றும் ஜோவிகா இடையே நடந்த ஒரு சிறு விவாதம் பற்றிக்கொண்டு பயங்கரமாக தற்போது வெடித்துக் கொண்டு இருக்கிறது.
விசித்ரா பெரிய அளவில் ஒன்றும் தப்பாக கூறிவிடவில்லை. ஒரு குறைந்த அளவு கல்வியானது அனைவருக்கும் வேண்டும் என்று பொதுவாக சொன்ன ஒரு வார்த்தையை, தன்னை நோக்கி கூறியதாக எடுத்துக் கொண்டு, நீ வா போ என ஜோவிகா, விசித்ராவை கண்டமேனி சொல்லுவதையெல்லாம் எப்படி சக போட்டியாளர்கள் கை தட்டி விசில் அடித்து கொண்டாடுகிறார்கள் என்பது புரியவில்லை.
” ஒரு கருத்தை சொன்னால், எதிர்கருத்து வைக்கலாம். ஆனால் ஒருமையில் பேசுவதை எல்லாம் யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதில் வேறு மாயா உள்ளிட்ட சக போட்டியாளர்கள் ஜோவிகா ஒருமையாக பேசுவதை விசில் அடித்து கொண்டாடுகின்றனர் “